மில்லர்!
எதிரியை எரிக்க
நீயே
தீயானாய்.

எதிரியைத் தகர்க்க
நீயே
வெடியானாய்.

எதிரியின்
முனை மழுங்கக்
கூர் தீட்டினாய்.

உன்னை அழித்து
உன்னை
வடித்தாய்.

முடித்து வைப்பதைத்
தொடங்கி
வைத்தாய்.

முடிந்தும்
தொடரும்
வரலாறு ஆனாய்.

எதிர்காலத்தில்
கடந்த காலம் வாழ
நிகழ்காலம் தந்தாய்.

மண் விழிக்க
உன்
உறக்கம்.

- தமிழ்நன் (7299325363, இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

More articles by தமிழ்நன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.