சலனமற்ற நீரில் தெரியும்
பிரதிபலிப்புகளாகவும்
நிஜமென்று மயங்க வைக்கும்
பிம்பங்களாகவும்
காண்கின்ற யாவும்.

வாய் எழுப்பும் ஒலிகளாலும்
கட்டமைத்த உருவகங்களாலும்
உருவாகிக் கிடக்கிற இவ்வுலகின்
எத்திக்கிலும்
சொற்களின் விளையாட்டு
மொழிகளின் இராஜ்ஜியம்.

அவை அற்றுப்போகிற
சிறு இடைவெளியில்
வீழநேரும்
இருள் சூழ்ந்த
மெளனப் பள்ளத்தாக்கில்..
அபூர்வமாய்க் கிட்டக் கூடும்
மெய்யெனப்படுபவை மெய்யாக.

- ராமலக்ஷ்மி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.