தலைவெட்டும் இயந்திரம் ஒன்று
வாங்கி வந்தேன்..!
கருத்து வேறுபாடு கொண்டவர்களின்
கழுத்தையெல்லாம்..
முதலில் வெட்டியெறிந்தேன்..!

பழுதுபட்டு விடக்கூடாதென
இயந்திரத்தின் பயன்பாடு கருதி
இப்போதெல்லாம்..
நம்பியவர்களின் தலையைக்கூட
வெட்டி எறிகின்றேன்..!

புனிதத்தின் பெயரால்..
இயங்கிக்கொண்டிருக்கும்
இந்த இயந்திரம் தான்
எனக்கு முக்கியம்..!
மனித உயிர்கள் குறித்த
மதிப்பீடு எனக்கில்லை..!

வெறியூட்டப்படும்
சாத்தியம் உள்ள
தருணங்களில் மட்டும்..
மத அபிமானம் கொண்டவர்களுக்கு
இந்த இயந்திரம்..
இலவசமாய் தரப்படும்..!

மனிதாபிமானம் கொண்டவர்கள்
இந்த இயந்திரத்துக்கு..
எதிரானவர்கள்..!

இறைவனின் திருப்பெயரால்
பொங்கிப் பெருகிய..
இந்த குருதிப்பெருக்கை
கழுவித்துடைப்பதற்கான
கண்ணீர் மட்டும் என்னிடம்
எப்போதும் சுரப்பதில்லை..!

- அமீர் அப்பாஸ்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.