இருள் விலகும் வேளையில்
முதுகில் செந்நிற இறகுகள்
அவை மழைக் காலத்தின்
தூர தேசத்து விருந்தாளிகள்
மெட்ரோ ரயிலின்
புலம்பெயர் பணியாளர்கள்
அந்த ஈசல்களின்
உறவு என சொல்ல
மழையைத் தவிர யாருமில்லை

- பகல்நிலவன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.