அன்பில்லாத பெருவெளியில்
அவள்
தனித்துப் பயணித்தாள்
கட்டுப்பாடுகள்
கலாசாரம் பேசிக்கொண்டு
திரைமறைவில்
தேடியணிகின்றன
முகமூடிகளை..
அன்புக்காக ஏங்கி அழுகின்ற
கண்ணீர் விழிகளுடன்
அன்பில்லாத
பெருவெளியில்- அவள்
தனித்துப் பயணித்தாள்
அழுத கண்கள்
குருடாவதற்குள்-அவள்
விழித்தாக வேண்டும
அன்பில்லாத
அப்பெருவெளியில்
அவளைப்போலவே
இன்னும் பல அவள்கள்
அலைவதைக் கண்டாள்
அவள்களுக்காக அவளும்
அவளுக்காக அவள்களும்
அழுவதென்று
அறுதியானது
இப்போது
அவள் மனவெளியெங்கும்
குளிர்கின்ற கண்ணீர்    

- அமானுஷ்யா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.