நேற்றைய பொழுதுகள்
கனத்துவிட்டன‌
சுமையேறிய மூளையில்
கடவுளைத் தொழுத கண‌ங்கள்
காயப்பட்டுக் கிடக்கின்றன‌

செல்லரித்த
என் வாழ்வின் மொத்த
பிரதிகளும் அர்த்தமற்றுப்போனாலும்
கடைசி பக்கத்தின்
இறுதி ஓரத்தில்
ஒன்றெழுத எண்ணுகிறேன்
"நான் இன்னும் சாகவில்லை"

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.