இருக்கைக்கான சண்டையில் 
முதலில் துண்டு போட்டவனே 
வென்றான் ஓரிருக்கையில்

வசைச் சொற்கள்
பேசியவனே வென்றான்
மற்றொன்றில்

சில்லறை பாக்கி
தராத நடத்துனரை
நொந்தபடியே சென்றான்
இன்னொன்றில்

சாலையில் தவறுதலாய்
குறுக்கே சென்ற சிறுவனின்
தாயை ஏசியபடியே
இழுத்தான் ஆறுசக்கரத் தேரை
ஓட்டுனரிருக்கையில்

இன்னும் பலர்
சொல்லக்கூடாதவைகளை
செய்தபடியே சென்றார்கள்
முன்னும் பின்னும்

வேர்க்கடலை தோல்,
காய்ந்த மல்லி,
தண்ணீர் பாக்கெட்,
கிழிந்த காகிதங்களுடன்
பயணிக்கிறது பேருந்து
பல உயிருள்ள 
குப்பைகளை சுமந்தபடி.

- ப.பார்த்தசாரதி (parthasarathy.balaraman@gmail.com)

More articles by ப.பார்த்தசாரதி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.