சிறகுகளில் இருந்துதிர்ந்த வண்ண துகள்கள்...
கடல்களுக்கு அப்பால்
ஒரு சிறு ஓடையின் ஓரமாக
அறுவடை செய்யப்பட்டுக் கொண்டிருந்தது
ஒரு தலை...
கழுத்தின் வழி வழிந்த
உதிரம்
ஓடை நீர் கலந்து
பாய்ந்தோடி நீர் பாய்ச்சிய
தோட்டத்து ரோஜா
சிவந்து பூத்திருக்க...
அதன் இதழ் தேன் உறிந்து முடித்து
நாணி சிவந்து
சில வண்ணத் துகள்களை தூவிவிட்டு
பறந்து சென்றது
ஒன்றுமறியா வண்ணத்துபூச்சி...
More articles by கிறுக்கன்
- மீளாத்துயில்.. (15 ஏப் 2010)
- தூரத்திடிமுழக்கம்…! (15 ஏப் 2010)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.