என் அனுமதியிராது
அவர் மீசை முடிகளை
பிய்த்தெறிகிறாய்
தெருமுனை வரை அவருடனான
உன் பைக் பயணத்தைக்
கையூட்டாய் பெற்றுக் கொண்டே
அனுமதியளிக்கிறாய்
அவரது வெளிப்பிரவேசத்திற்கு.
பயணத்தின் இறுதியில்
உனக்கான ஒரு கன்னத்தோடு
எனக்கான இன்னொன்றிலும்
சேர்த்தே முத்தமிடும்
உன் அத்துமீறலில்
கவனம் கொள்ளச் செய்கிறாய்
எங்களுக்கிடையேயான இருப்பை.

- சோமா

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.