யாருமற்ற தனிமையில்..
பூட்டப்பட்ட வீடுகள்
துயரத்தை வெளிப்படுத்த
துர்வாடை வீசுகின்றன..!

அறைகளின் சுவாசத்தை மறுத்து
அடைத்து வைக்கப்பட்ட ஜன்னல்கள்
தூசிகளை சுவாசிக்கின்றன..!

தூசிகள்-
காற்றின் வருகையை
அறிவிக்கும்
நினைவுத்தடங்கள்..!

வசிப்பிடம் அற்றவர்களின்
பெருமூச்சு
அங்கே உறங்குகின்றன..!

சில நேரங்களில்
உறங்க மறுத்து
ஆவியைப் போல அலைகின்றன..!

குழந்தைகளின் சப்தம் கேட்டு
குதூகலிக்கும் சுவர்கள்

அவர்கள் வெளியூர் செல்ல
நேர்கிற போதேல்லாம்..
தன்னை
சமாதியாக உணருகின்றன..!

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.