கீற்றில் தேட...

 

எனது மௌனத்தை குலைக்கும்
வாகனங்களின் பேரிரைச்சல்கள்

தென்றலைத் தடுக்கும்,
நிலவினை மறைக்கும்-
உயரிய சிமென்ட் மரங்கள்...

இவையெல்லாவற்றையும் விட,
என் வரவைப் பார்த்திருக்கும்...
என் கவனமீர்க்கக் காத்திருக்கும்...

கன்னிப் பெண்ணில்லாத-
என் வீடிருக்கும் தெரு...