வெறுங் காற்று கும்மாளமிடும் ஓர் பின்னிரவொன்றில்
அக்குரலை நீங்கள் உணர்ந்திருக்கக் கூடும்
உங்கள் பிடரி வழியாய் உள்ளுக்கிறங்கிய சில அபாயங்களை
பெரு வெளியொன்றின் மத்தியப் பகுதிக்குட்பட்ட இறகொன்றாய்
உச்சத்தில் உலாவும் உங்கள் சாமத்துக் கனவுகளை
சில காலங்களுக்கு முந்தைய உங்களுக்குட்பட்ட அல்லது
உங்களுக்கருகாமையிலான உங்கள் வசிப்பு தேசத்தை
அப்பின்னிரவோரக் குரல் நினைவு படுததிக் கொண்டிருக்கலாம்
முற்றுமாய் உங்களுக்கான ஒரு கனவுத் தூதுவனாகவும்
உங்கள் சிந்தனைகளுற்ற உங்கள் வேறு உருக்களாகவும்
அக்குரல் அமையப் பெற்றிருக்கக்கூடும்
நலமாயுண்டு உலவிய தருணங்களை துதித்த படியாயும்
வேண்டாப் பிணியை வசைந்த படியாயும்
இன்னொரு இருதமாய் இயங்கிக் கிடக்கும் அக்குரல் உங்களுடனே.
தலைவிரிக் கோல மூதாட்டியின் அவலங்களைப் போலும்
பெரு வியாதிக் காரனின் இரவு நேர முனகலாகவும்
மெல்ல அதை நீங்கள் உணரும் வேளை
முற்றுமாய் பேசும் தன்மைய இழந்திருப்பீர்கள் நீங்கள்.

- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It