எழுதுவேன்
தொடர்ந்து எழுதுவேன்..
நீ சலனமுறும்  வரை..
நான் அமைதியுறும் வரை..
*

அமைதியிழந்த என் இரவுகளை
ஆற்றுப்படுத்தும் வழி
நீ மட்டுமே அறிந்தது..
ஆதலால் வந்துவிடு அன்பே
என் இரவுகளை உயிர்ப்பிக்க..

*
உன் காதலிலிருந்து
மரணத்தைக் கண்டேன்..
என் மரணத்திலிருந்து
காதலைக் காண்பாய்..
*
இன்னும்
சில நாட்களில்
அறியத் தருவேன் உனக்கு
உயிர்த்திருத்தலின்
வலி பற்றி...
*
என் விதியை நிர்ணயிக்கிற
ஆயுதத்தை
காலம்
உன்னிடம் தந்திருக்கிறது
நீ எதுவும் செய்யலாம்
ஆயுதத்தால்
தாக்கவோ
காக்கவோ..
*

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.