கடக்கும் பாதையில்
நித்தம் ஒரு நெருடல்...
பக்கத்து இருக்கையில்
நடுத்தரவயது பெண்மணி.
ஈரமான விழிகளுடன்!!
பேருந்து நிறுத்தத்தில்
ஒவ்வொருவராய் கைபிடித்து உலுக்கும்.
காசுக்காக பச்சிளம்பிஞ்சு!
குரைத்துக் கொண்டே பின்வந்து
வாரியெடுக்கவா கோரிக்கை?.
தெருவோர நாய்க்குட்டி!
சொகுசான மாடி வீட்டினுள்ளும்
எட்டி பார்க்கத்தான் செய்கிறது!!
மெல்லியதொரு விசும்பல்!
வீசி எறியப்பட்ட
மல்லிகை மலர்கள் அனைத்தும்
காய்ந்து உலர்ந்தவை தானா??
தொடர்புடைய படைப்புகள்
ஈனஸ்வரம்
More articles by தேனப்பன்
- நான் முழுக்க நீ.. நீ.. நீ.. (18 பிப் 2015)
- யாருமற்ற க்ரீச் க்ரீச் ஒலியின் அடர்த்தி (26 ஜன 2015)
- கனவுகளின் கிழிந்த ஒற்றை சிறகு (08 ஜன 2015)
- பயணிக்கும் காற்புள்ளிகளின் உருவமற்ற கூட்டுச்சொல் (05 ஜன 2015)
- நினைவுகளின் கூர்மையில் பகிராது நீர்த்த வன்மம் (31 டிச 2014)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.