ஒரு
வெளிர்நீல மைதானத்தின் கீழ்
பனிக்குவியல்களை உரிமை கோர
நிதர்சனப்படுகிறது ஒரு புகைப்படம்!
கொஞ்சம் எடுப்பாகவும்
கொஞ்சம் மிடுப்பாகவும்
வண்ணம் பூசிக்கொள்கின்றன
அவள் அழகுகள்!
மிதமாய்
தூறல் விட்டுக்கொண்டே
அங்குமிங்குமாய்
சில புன்னகை மழைகள்...
ஆர்குட்டையோ
முக நூலையோ
இன்ன பிற சமூக வலைத்தளங்களை
கவர்ந்து விட எத்தனிக்க
முற்றிலுமாக
முடங்கிக்கொள்கிறாள்
ஒரு
குளிர் தாங்கும் மேலாடையில்!
- ரசிகன்
பனிப்பிரதேச பேரழகி!
More articles by ரசிகன்
- முடிவு அறிவிக்கப்பட்டவை! (22 மே 2011)
- பூங்கா ரணம்! (01 ஏப் 2011)
- அன்புள்ள கவிதைக்கு... (21 மார் 2011)
- ஒரு டைரி குறிப்பிலிருந்து! (10 மார் 2011)
- தற்செயலான சந்திப்பில்! (07 மார் 2011)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.