நுனி இலைகளின் ஆரம்பம் ஒரு விதையாக இருக்கிறது
நரைத்த முதுமையின் ஆரம்பம் ஒரு விந்தாக  இருக்கிறது
பெருத்த  காற்றாற்றின்  ஆரம்பம் ஒரு மிடறு நீராக இருக்கிறது

முடிவில்லாத ஏதோ ஒன்றின் ஆரம்பம் என்னவாக இருக்க முடியும்?

வானமாக இருக்கலாம்
மற்றும்
அன்பாகவும் இருக்கலாம்.

- ரஞ்சித் பிரேதன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.