அசுத்தத்தை
அருவருப்பை
ஆபத்தை
மிதிக்க ,

கிருமிகள் தொற்றை
முள், கல் ,ஆணி
குத்தும் கொடுவலி
தடுக்க ,
நாம் கண்டிருக்கும்
நல்லதோர் கருவி

கற்றோர் மற்றோர்
நாடிடும் உதவி

நாகரீக மாந்தர்
நடையின் அறிகுறி

வீதிதோரும் கடைவிரித்து
கொள்வீர் கொள்வீரென
கூவி விற்கும்  நற்பொருள்

எவனோ சொல்கிறான்
காலிலே போட்டு
நடக்காதே என் தெருவில்

ஆகட்டும் ஆண்ட
இனி ..
காலிலே போடலே.
கையிலே எடுக்கிறேன்
செருப்பை

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.