காசு, பணம் வேண்டி
கடல் கடந்து நாங்கள்...
காலம் கழிக்கிறோம்.
உறவுகளை ஊரில் விட்டு
வேரறுந்த மரம்போல...
ஆனால், விழாமல் நிற்கிறோம்.
வேதனைகளை நெஞ்சில் புதைத்து
போலிப்புன்னகை முகத்தில் தவழவிட்டு...
வாலிப பருவத்தை
பாலைவன வெம்மை சுட்டெரிக்க...
வயோதிக பருவத்தை
உறவுகளுடன் கழித்திட
காலம் எப்போது கனியும் என்ற
ஏக்கத்துடனும்...
செய்ய வேண்டிய கடமைகள்
முடிவுறுமோ என்ற
சோகத்துடனும்...
தொலைந்து போன புன்னகையைத் தேடி.

- வி.களத்தூர் நிலாப்ரியன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.