கீற்றில் தேட...

சாவிக் கொடுத்து ஓடி நின்ற

பொம்மையாய்

அலுவல் முடிந்து வீட்டிற்குள்

நுழைகையில்

கட்டி அணைக்க வருகிறான்

அன்பு மகன்.

 

அழுக்காய், வியர்த்துப்போய்

இருக்கிறேன்;

குளித்து விட்டு வருகிறேன்

என்றேன்;

அணைத்தக் கைகளை

விலக்கிய படி !

 

சற்று நேரத்திற்குள்...

குனிந்த தலை நிமிராமல்

வீட்டுப் வீட்டுப் பாடத்திற்குள்

மூழ்கி விட்டான்.

ஆசிரியர் கொடுத்த சாவியின் படி !

 

-எஸ்.எஸ்.ஜெயமோகன்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.