பிக் பாஸ் சரி தவறு.... கலாச்சார சீர்கேடு, நம் நாட்டுக்கு தேவை இல்லாத ஒன்று... டி ஆர் பி... பிசினெஸ்.... பித்தலாட்டம்... விளம்பரம்.... என்று எது வேண்டுமானாலும் இருந்து கொள்ளட்டும். அதைப் பற்றி நான் பேசவில்லை. நான் பேச இருப்பது சக மனிதன் பற்றிய மானுடம் பற்றி தான். யாதும் ஊரே யாவரும் கேளீர் என சொன்ன நாட்டில் பக்கத்து வீட்டுக்கு என்ன மதிப்பு கொடுக்கிறோம். பேருந்தில்... ரயிலில் உடன் பயணிக்கும் மனிதனிடம் எந்த முகம் காட்டுகிறோம். திரையரங்கில், கோவிலில், ஆலயத்தில், காய்கறிக் கடையில்.. என்று நீளும் பக்கத்தில் நாம் கண்டடைவது எல்லாமே மௌனமோ... முறைத்தலோ அன்றி மிக சொற்பம் புன்னகை. அதுவும் எதிரெதிர் வாகனங்கள் ஏதோ பரம்பரை பரம்பரையாக பழி உணர்வோடு இருப்பது போலவே தான் கடக்க கடக்க நடக்கிறது.

bigg boss gaya kamal mainவாழ்வின் எல்லா தருணங்களையும் நாமே நம் அனுபவத்தில் இருந்து பெற முடியாது. அதற்கு தான் கதைகளும்.... கவிதைகளும்.. படங்களும்.. பக்கத்துக்கு வீடுகளும். கேள்விகளும்... சமுதாயமும்.... செய்திகளும்.... சித்திரங்களும்....நம்மை சுற்றி கட்டமைத்துக் கொண்டே ஒரு தன்னிச்சையான இயல்பாக தன்னை நிறுவிக் கொண்டிருக்கிறியாது.கிறது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி கூட... நம்மை நாமே பரிசோதிக்கும் ஒட்டு விதமான சுய அலசல் தான் என்று நம்புகிறேன். திட்டமிட்ட திரைக்கதையாக இருட்னஹாலு இருந்தாலும்.... அல்லது லைவாக இருந்தாலும்.. நாம் கிடைக்கப் பெரும் செய்தி என்ன... என்பதில் தான் நிகழ்வும்.. நிகழ்வின் இருந்தாலும் இருக்கிறது.

மனிதனின்.. மிகப்பெரிய பின்னடைவு இந்த புறங்கூறுதல். வள்ளுவன் என்றோ முகத்தில் காரி உமிழ்ந்து விட்டு சென்ற இச்சொல்.... இன்னமும்.. அலுவலங்கங்களில்.... வீதிகளில்.... பள்ளிகளில்... கல்லூரிகளில்.... விடுதிகளில்.... நண்பர்கள் மத்தியில்.....உறவினர் திருமணங்களில்.... வீட்டு விசேஷங்களில்... என்று எங்கெல்லாம் இரண்டு மூன்று பேர் கூடுகிறார்களோ அங்கெல்லாம் தலை விரித்தாடும் அபத்தத்தின் உச்சமென காண முடிகிறது. எந்த ஒரு நிகழ்வையும் லாஜிக் மீறாமல் யோசித்தால் அதனுள் இருக்கும் உண்மைத்தன்மை பாதிக்கு மேல் நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் எது பற்றியும் புரிதல் இன்றி சக மனிதன் மீதிருக்கும் காழ்ப்புணர்ச்சி மேலெழும் கணங்களில்.... அணுகுண்டை விட ஆபத்தான ஆழ் மனம் வெளிக்கொணரும் கத்திகள்....அருவருக்கத்தக்கவைகள். இட்டுக்கட்டி கூறுவது என்றொரு வாக்கியம் எப்போதுமே இருக்கிறது. அதாவது திரைக்கதை யுக்தி. அது கண்முன்னால் மோசமாக விரிகையில்.... அபத்தங்கள் எப்படி ஆடை இன்றி அசிங்கமாக திரிகிறது என்பதை உணர முடிகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சில குறிப்பிட பெண்களின் செயல்பாடுகள்... இன்னமும் நாம் நதிக்கரையில் நாகரிகத்தை தேடிக் கொண்டு தான் இருக்கிறோமா என்று சந்தேகமே வர வைத்து விட்டது. நான்கு பேர் சேர்ந்து மனதளவில் ஒருவரை வீழ்த்துவது என்பது பாவத்தின் மிகக் கொடிய செயல். அதைத்தான் ஆங்காங்கே நாம் செய்திகளில் கேட்டும் பார்த்தும்... கடந்துமிருக்கும் வன்முறையின் வரைமுறை. அதே தான் கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர்களும் செய்தார்கள் என்று நம்புகிறேன். ஆனால் ஒற்றை மனுஷியாக எதிர்த்து நிற்கும் வமும்... பார்வையும் அந்த சித்திரப்பெண்ணுக்கு இருப்பது நவீன பெண்ணியத்தின் பரந்துபட்ட பண்பட்ட வெளிப்பாடாகவே காண்கிறேன். ஒரு பெண்ணை பார்த்து கை நீட்டும் உரிமையை...எவனுக்கும் எவனும் கொடுக்கவில்லை. சகமனிதனை அடிப்பது சட்டப்படி மட்டுமல்ல மானுட தர்மப்படியும் தவறு. தன்னை விட எளியோரிடம் தன் வீரத்தைக் காட்டுதல் மிருக குணம்.

ஆயுதங்கள்..... மானுட குலத்தின் ஆகப்பெரிய தவறுகள். இங்கு ஆயுதம் என்பது வக்கிரமான வார்த்தைகளாக இருக்கலாம். தூங்க விடாமல் செய்யும் கீழ்த்தரமான தொந்தரவாக இருக்கலாம். தமிழ் கொலையாக இருக்கலாம். ஆதிக்க வர்க்கத்தின் ஆழ்ப் பதிந்து விட்ட அற்பத்தனமான அகங்காரமாக இருக்கலாம். அடிமைத்தனத்தின் உச்சமென கொட்ட கொட்ட குனிந்திருக்கும் வீர மங்கையின் முகமூடியாகக் கூட இருக்கலாம்.

மனித மனம் மெல்லிய திரைகளால் ஆனது. எப்போது வேண்டுமானாலும் அறுந்து விடும் ஆபத்துகள் நிறைந்தவை அது. கடைசி வரை இறுக பற்ற தனித்த பெருங்கனவு வேண்டும். நீலம் காணும் வெறித்த நுரை கடல் திண்ணம் வேண்டும். உயர பறக்கும் ஆசை இருந்தாலும்... உன்னதமான யோசனைகள் வேண்டும். அடுத்த வயிற்றின் பசி அறியும் ஆற்றல் வேண்டும். கொடுத்து பகிரவும் உயிர் தூவும் சரிகள் வேண்டும்.

கதவு வாங்கிய போது வெறித்துக் கொண்டிருந்த கண்கள்.. பூட்டு வாங்கியதும் தெறித்து விழுந்தன. நல்லவைகளும் கெட்டவைகளும் கலந்த வாழ்வின் ஒரு பகுதி தான் இந்த நகர்தல். அறிய அறிய குறைய வேண்டும் கோபம். தெரிய தெரிய அறிய வேண்டும் யாவும். சகாமனிதனை புரிந்து கொள்ளுதலே வாழ்வின் அடுத்த கட்டம். இந்த வாழ்வே கொடுத்து வாங்கும் மாற்றம்தான். இருப்பவன் இல்லாதவனுக்கு தா. அன்போ பண்போ... அறிவோ.....

நான்கு பேர் சேர்ந்து கொண்டு ஒருவனை ஒதுக்குதல் கொலைக்கு சமம். கொலை புரிந்து செத்து வீழவா இந்த நாகரிகம். வந்து போகும் பயணத்தில்... சகபயணிகள் தேவை. அது திறந்து விடும் சாளர பிரபஞ்சம். திறக்க திறக்க காற்று வரும்.. மூச்சு விடு. முகம் கொடு. பிக் பாஸ் நிகழ்விலிருந்து நாம் கற்றுணர வேண்டியவை..... பகிர்தல். இந்த உலகமே ஒரு வீடு என்று உணருதல். குறைந்த பட்சம்... அவரவர் வீட்டுக்குள்ளாவது அன்பை அளவில்லாமல் பகிர்வோம். மற்றபடி... வசைபாடுதல்.. இயலாமை. சேர்ந்து வாழ்தலே நிம்மதி.

நன்றி பிக்பாஸ்

- கவிஜி

Pin It