கொக்கி: ஹலோ! டேய் ரூட்டு. எங்க இருக்க. எங்க வீட்டுக்கு வா.

ரூட்டு : சரி. இரு இதோ வரேன்.

வாடா ரூட்டு. உக்காரு. சும்மா தா கூப்டேன்.போர் அடிச்சிது. அதான் பேசலாம் னு.

சரி சரி! மச்சா! உன் கிட்ட ஒன்னு கேக்னும் நினைச்சேன் டா. இப்போ தா ஞாபகம் வருது. 

என்னது. கேளு டா.

அன்னிக்கு நீ என்கிட்ட பெண்கள் என்ன நகை மாட்டும் ஸ்டேண்டா னு பெரியார் கேட்டாரு னு சொன்னல.

ஆமா டா. சொன்னேன். அதுக்கு என்ன இப்போ.

அப்படி ஆனதுக்கு பெண்கள் தான்டா காரணம். பெண்கள் தான்டா அப்படி இருக்க விரும்புறாங்க. அவங்க மேல தான்டா தப்பு.

இல்லடா ரூட்டு. பெண்கள் காரணம் இல்ல. நல்லா சிந்திச்சி பார்த்தா. இந்த ஆணாதிக்க சமூகம் தான் காரணம். காலம் காலமாக பெண்களை அடக்கி, ஒடுக்கி, அவங்க மேல ஆதிக்கம் செலுத்துற இந்த ஆணாதிக்க சமூகம் தான் டா காரணம். ஆண் என்றால் வீரமா தைரியமா, கெத்தா இருக்கனும் னு. பெண்கள் னா அமைதியா, அழகா, நல்லா லட்சனமா இருக்கனும் னு போலியாக பெண்களை அப்படி ஆக்கிட்டாங்க.
ஒரு பையன் தைரியமா இருந்தா. பாரு மச்சா அவன் செம்ம கெத்து ல னு சொல்வோம். அதே ஒரு பெண் தைரியமா இருந்தா மச்சி அந்த பொண்ணுக்கு யின்னா திமிரி பாத்தியா னு சொல்வோம்.

மச்சா கொக்கி. சத்தியமா ஒன்னுமே புரியல டா. புரியிற மாதிரி சொல்லுடா.

ம்ம். சரி இரு. ஒரு உதாரணம் சொல்றேன். Kinder joy னு ஒரு சாக்லெட் இருக்கே தெரியுமா.

தெரியும் டா. அந்த பக்கத்து வீட்டு பையன் எப்ப பாத்தாலும் அதையே தா சாப்டிட்டு இருக்கான்.

ஆமா. பக்கத்து வீட்டு பையன் மட்டும் இல்ல. எல்லா குழந்தைகளுக்கு அது ரொம்ப புடிக்கும். முக்கியமா அதுல எதாவது விளையாட்டு பொருள் இருக்கும். அதுலயே இப்போ for boys, for girls னு தனி தனியா விக்குறான்டா. For boys னு இருக்கிறது ல சூப்பர் ஹீரோஸ், கார் போன்ற பொம்மைகளும், for girls னு இருக்கிறது ல Barbie doll அழுகு சம்பந்தம் பட்ட பொம்மைகளை வைச்சி இருக்கானுங்க. குழந்தைகளை வளர்க்கும் போதே அவங்களுக்கு பாலின வேறுபாடு இல்லாம வளர்க்கனும் டா. ஆண் குழந்தை, பெண் குழந்தை னு வேறுபாடு பார்க்க வே கூடாது. அப்படி இருக்கும் போது சின்ன குழந்தைங்க கிட்ட அவங்க வளரும் போது. நீ இப்புடி தா இருக்கனும், ஆண் குழந்தை னா இப்புடி இருக்கனும், பெண் குழந்தை னா இப்புடி இருக்கனும் னு இந்த சமூகம் அவங்க மேல திணிச்சிட்டு. அப்புறம் பெண்கள் தா நகை போட்டுக்க விரும்புறாங்க னு சொல்றது முட்டாள்தனமா இல்ல.

ம்ம்ம். புரியுது டா.

சரி உனக்கு இன்னொரு மேட்டர் சொல்றேன் கேளு. இப்போ ஒரு வீட்ல இரண்டு குழந்தைங்க இருக்கு. ஒரு பெண் குழந்தை, ஒரு ஆண் குழந்தை இருக்கு னு வைச்சிகோ. அந்த இரண்டு குழந்தையையும் ஒரே மாதிரியா வளர்ப்பாங்க.

ஆமா டா. ஒரே மாதிரி வளர்ப்பாங்க.

த்தூ. போடா லூசு. அந்த பையனுக்கு விளையாடுறதுக்கு பேட், துப்பாக்கி, பால் னு வாங்கி குடுப்பாங்க. அதே அந்த சின்ன பொண்ணுக்கு பார்ப்பி டால்,சமையல் செய்ற மாதிரி சொப்பு சாமான் வாங்கி குடுப்பாங்க. முன்னாடி சொன்னா மாதிரி தா சின்ன வயசுலயே அவங்க மேல இப்புடி திணிச்சிடுறாங்க டா. அது மட்டுமா அந்த பையன் யை கராத்தே.குங் பூ கிலாஸ் க்கு அனுப்பு வாங்க. ஆனா அந்த சின்ன பொண்ணை பாட்டு கிளால், பரத நாட்டியம் னு அனுப்புறாங்க. இப்போ இருக்கிற சூழ்நிலையில் ஆண்களை விட பெண்களுக்கு தா தற்காப்பு கலை ரொம்ப அவசியம். ஆனா பள்ளிகூடத்தில, வெளில, வீட்ல னு இப்புடி எங்க பாத்தாலும் சின்ன வயசுல இருந்தே இப்புடி பசங்களை பாலின வேறுபாடுடன் வளர்த்துட்டு இந்த சமூகம் கடைசில பெண்கள் தா விரும்புறாங்க னு சொல்றதை என்ன டா நியாயம். யோசிச்சி பாரு மாமு.

ம்ம்ம் புரியுது டா.

Pin It