Ramnath and modi

காவி பயங்கரவாதிகள் சொன்னது போலவே ஒரு அக்மார்க் ஆ.எஸ்.எஸ் காரரான ராம்நாத் கோவிந்தை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்து இருக்கின்றார்கள். மோடி அரசு நிச்சயமாக ஒரு ஆர்.எஸ்.எஸ் காரரைத் தான் அறிவிக்கும் என்று எல்லோரும் எதிர்ப்பார்த்தார்கள். அப்படித்தான் நடந்துள்ளது. ஆனால் ஒரு தலித் சமூகத்தைச் சேர்ந்தவரை அறிவித்து, தங்களது தலித்துகள் மீதான பாசத்தை உலகறியச் செய்வதன் மூலம் ஆர்.எஸ்.எஸ்-பிஜேபி எப்போதுமே தலித்துகளுக்கு எதிரானது கிடையாது என அது நம்பவைக்க முயற்சி செய்துள்ளது. அத்தோடு ஒரு தலித் வேட்பாளரை நிறுத்தி இருப்பதன் மூலம் எதிர்க்கட்சிகள் அதை விமர்சனம் செய்வதற்கான வாய்ப்புகளையும் சமார்த்தியமாக இல்லாமல் செய்துவிட்டதாக தன்னுடைய அரசியல் சாணக்கியத்தனத்தை நினைத்து அது மார்தட்டுகின்றது. வேறு யாரையாவது அத்வானி உட்பட ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தின் மனித உருவான நபர்களை முன்னிறுத்தியிருந்தால் எதிர்க்கட்சிகள் இந்நேரம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கும், அவையும் அதற்காகத்தான் காத்துக்கிடந்தன. ஆனால் பிஜேபியின் பார்ப்பன மூளை பொதுவாக சாதி என்கின்ற அமைப்பை எப்படி பயன்படுத்திக் கொள்கின்றது என்கின்ற உத்தியை அவர்கள் இன்னும் அடையாளம் கண்டுகொள்ளவில்லை என்று தெரிகின்றது.

நாம் பொதுவாக பார்ப்பனனுக்கும், சாதி இந்துக்களுக்கும்தான் சாதி ஆதிக்க மனோபாவம் இருக்கும், ஆனால் தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களான தலித்துகளுக்கு சாதி ஆதிக்க மனோபாவம் இருக்காது என்று கருதிக்கொள்கின்றோம். ஆனால் அது முற்றிலும் தவறு. எப்படி பொதுவுடமை சித்தாந்தத்தையோ, பெரியாரிய, அம்பேத்கரிய சித்தாந்தத்தையோ கடைபிடிக்கும் ஒருவன் சாதிய சிந்தனைகளில் இருந்து விடுபட்டு மனிதனை மனிதனாக மட்டுமே பார்க்கும் மனநிலைக்கு வந்தடைகின்றார்களோ அதே போல ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனிய சனாதன சித்தாந்தத்தை கடைபிடிக்கும் ஒரு நபர் அவர் தாழ்த்தப்பட்டவராக இருந்தாலும், பழங்குடியினராக இருந்தாலும் இல்லை சூத்திர இந்துக்களாக இருந்தாலும் அவர்கள் தங்களை பார்ப்பனியத்தால் வஞ்சிக்கப்பட்டவர்களாக, அவமானபடுத்தப்பட்டவர்களாகக் கருதுவதில்லை மாறாக தங்களுடைய சாதிய இழிவை கடவுளால் ஏற்படுத்தப்பட்ட ஒன்றாகக் கருதுகின்றார்கள். பார்ப்பன வேதங்களையும், தர்ம சாஸ்திரங்களையும், தீவிரமாக கடைபிடித்துப் பார்ப்பனனை தொழுது வாழ்வது மட்டுமே வாழ்க்கையில் மோட்சம் அடைய ஒரே வழி என்று தங்களைப் பார்ப்பனியத்துக்குச் சித்தாந்த ரீதியாக ஒப்புவித்துக் கொள்கின்றார்கள்.

அதனால் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனிய சித்தாந்தத்தைக் கடைபிடிக்கும் ஒருவனிடம் நாம் சாதி ஒழிப்பைப் பற்றி பேசுவதோ, இல்லை இந்துமதம் ஒரு மானங்கெட்ட பார்ப்பனிய மதம் என்று நிரூபிக்க முயல்வதோ அடிப்படையில் வீண்வேலையாகும். ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தைக் கடைபிடிக்கும் நபருக்கு அடிப்படையில் சூடு, சுரணை, தன்மான உணர்வு, சுயமரியாதை உணர்வு என்ற எதுவுமே இருக்காது. அடிமைத்தனத்தையே தனது சுயகெளரவமாக கருதும் இழி நிலையில் தான் அவர்கள் இருப்பார்கள். அதனால் தான் நாடார் சாதியைச் சேர்ந்த தமிழிசை போன்றவர்கள் தமிழ்நாட்டில் ராமராஜ்ஜியம் கொண்டுவருவோம் என சூளுரைக்க முடிகின்றது. ஒருவேளை தமிழ்நாட்டில் ராமராஜ்ஜியம் வந்து அந்த ராமராஜ்ஜியத்தில் தமிழிசையின் முன்னோர்கள் தங்களுடைய பெண்களின் முதல் இரவை நம்பூதிரியுடன்தான் கழிக்கவேண்டும் என்ற சட்டத்தை மீண்டும் கொண்டுவந்தாலும், இல்லை ரவிக்கை அணியாமல் தான் நாடார்சாதி பெண்கள் பொதுவெளியில் நடமாட வேண்டும் என்று மோடி அரசு உத்திரவிட்டாலும் அதை உடன் பணிந்து செய்யும் மானங்கெட்டவர்களாகத்தான் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்ததைக் கடைபிடிக்கும் நபர்கள் இருப்பார்கள்.

அவர்களுக்கு தங்களது இழி நிலையைப் பற்றி எந்தப் பிரக்ஞையும் கிடையாது. பார்ப்பனியத்தால் ஆண்டு ஆண்டுகாலமாக தங்களுடைய இனம் நாயைவிடக் கேவலமாக நடத்தப்பட்டதைப் பற்றி அவர்கள் பெருமித உணர்வு அடைகின்றார்கள். தங்களுடைய இனம் இப்படியே சமூகத்தில் கீழ்சாதி என்ற பெயரில் ஊருக்கு வெளியே குடிவைக்கப்பட்டு பீயை அள்ளவும், செத்த மாட்டை தூக்கவும், இழவு செய்தி சொல்லவும் நிர்பந்தப்படுத்தப்படுவதைப் பற்றி அவர்களுக்கு எந்தக் கவலையும் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் ஆர்.எஸ்.எஸ்.இல் இருக்கும் ஒரு தலித் இதைப் பெரிதும் விரும்புகின்றார். அந்த இழி தொழில்களை புனிதமான ஒன்றாக கடவுளின் சேவையாகப் பார்க்கின்றார். காந்தியை தாழ்த்தப்பட்ட மக்களை அரிஜனங்கள் என்று பெயர்வைக்கத் தூண்டியதும் அர்ஜுன் சம்பத்தை தாழ்த்தப்பட்ட மக்களை திருக்குலத்தோர் என அழைக்கவேண்டும் என கேட்க வைத்ததற்குமான மன உந்துதலைக் கொடுத்தது பார்ப்பனிய சிந்தனையே ஆகும். அந்தப் பார்ப்பனிய சிந்தனைதான் பனியாவையும், தலித்தையும் ஒரே முகமாக அடிமைத்தனத்தை, சாதிய இழிவை ஒன்றுபோலவே புனிதமான ஒன்றாகப் பார்க்க வைக்கின்றது.

அந்த அடிப்படையில் இருந்துதான் நாம் ராம்நாத் கோவிந்தைப் பார்க்கவேண்டும். அவர் சாதியால் தலித்தாக இருந்தாலும் அவர் சிந்தனையால் ஒரு பார்ப்பனர். தன்னைச் சுற்றி மலக்குவியல்கள் கொட்டிக்கிடந்தாலும் தனது மூக்கில் மட்டும் நறுமணம் பரவுவதாக போலியான மன உணர்வில் வாழ்பவர். அந்த உணர்வை அவருக்குப் பார்ப்பனிய சிந்தனா முறை வழங்கியுள்ளது. பல்வேறு அரசு பதவிகளில் அவர் இருந்ததாக பத்திரிக்கைகள் பட்டியல் இடுகின்றன. எம்.பி, வழக்கறிஞர், ஆளுநர் இன்னும் பிஜேபியில் தலித் அமைப்பான தலித் மோர்ச்சாவின் தலைவர் என பல பதவிகளை அவர் வகித்திருக்கின்றார். ஆனால் இதெல்லாம் அவரை மதிப்பிட போதுமா என்றால் நிச்சயம் இல்லை. அவர் எந்தப் பதவியை வேண்டும் என்றாலும் அலங்கரித்து இருக்கலாம். அதற்காக அவரை இந்திய மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயமில்லை. அவர் எந்த மாதிரியான சிந்தனை கொண்டவர் என்பதுதான் மிக முக்கியமானது. அடிப்படையில் இஸ்லாமிய மக்களுக்கும் கிருஸ்தவ மக்களுக்கும் எதிரான வன்மமான ஆர்.எஸ்.எஸ் கருத்துக்களை பிரச்சாரம் செய்பவராகவும், இடஒதுக்கீட்டிற்கு எதிரான சிந்தனை கொண்டவராகவும் இருக்கும் ராம்நாத் கோவிந்தை நாம் எப்படி ஒரு தலித்தாகப் பார்க்க முடியும்? இப்படி ஒரு நபரை அதுவும் தலித் என்ற அடையாளத்துடன் மோசடியாக ஆர்.எஸ்.எஸ்-பிஜேபி கும்பல் அறிவித்ததன் மூலம் ஆதிக்க சாதிகளின் கருத்தியலுக்கு ஒத்தூதவும், சிறுபான்மையின மக்களின் உரிமைகளை குழிதோண்டிப் புதைக்கவும், தலித்துகள் மீது கட்டற்ற வன்முறையை எதிர்ப்பின்றி நடத்தவும் வழி ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.

ஆளும்வர்க்கம் கொண்டுவரும் மக்கள் விரோத சட்டங்களுக்கும் திட்டங்களுக்கும் எந்தவித எதிர்ப்பும் இன்றி ஒப்புதல் வழங்கும் ஒரு டூபாக்கூர் பதவிதான் குடியரசு தலைவர் பதவி. அப்படிப்பட்ட ஒரு மொன்னையான பதவிக்குப் பார்ப்பனன் வந்தாலும், முஸ்லிம் வந்தாலும், தலித் வந்தாலும் எந்தவித மாற்றமும் சமூகத்தில் நடந்துவிடப் போவதில்லை. ஆனால் ஒரு தலித்தை அந்தப் பதவிக்கு நிறுத்தியதன் மூலம் தங்களை தலித்துக்களின் தோழனாக காட்டிக் கொள்ள முயற்சிக்கும் காவி வானரங்களின் ஏமாற்று முயற்சியை தலித் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ராம்நாத் கோவிந்த் ஒரு தலித் விரோதி, ஆர்.எஸ்.எஸ் கும்பலால் நாடுமுழுவதும் தாழ்த்தப்பட்ட மக்கள் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டபோது அதை மெளனசாட்சியாக நின்று வேடிக்கை பார்த்த ஒரு கேடுகெட்ட நபர். அப்படி ஆர்.எஸ்.எஸ் கும்பல் தலித்துகளை தாக்குவதையும், அவர்களை கீழ்சாதி என முத்திரைகுத்தி கட்சியிலேயே SC அணி என்ற ஒன்றை தனியாக வைத்து கேவலப்படுத்துவதையும் ஆதரிப்பவர். இவர் குடியரசு தலைவராக வந்தாலும், இல்லை பிரதமராகவே கூட வந்தாலும் அதனால் இந்தியாவில் இருக்கும் கோடிக்கணக்கான தலித் மக்களுக்கு ஒரு தம்படி பிரயோசனமும் கிடையாது. அவர்கள் மேலும் மேலும் பார்ப்பனியத்தால் கொடுமை படுத்தப்படவும், உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கவுமே இது போன்ற நபர்கள் நிச்சயம் பயன்படுவார்கள்.

வெட்கம், மானம், சுரணை உள்ள எந்த ஒரு நபரும் ஆர்.எஸ்.எஸ் இல் இருக்கமாட்டான் அதுவும் பார்ப்பனியத்திடம் இருந்து வேசிமகன் பட்டம்(சூத்திரன்) வாங்கியவனும், பஞ்சமன் பட்டம் வாங்கியவனும் நிச்சயம் இருக்க மாட்டான். அப்படி இருந்தான் என்றால் அவனை இழி பிறவியாகவே பார்க்கவேண்டும். அந்த வகையில் வருபவர்தான் ராம்நாத் கோவிந்த். அவர் பைசா பிரயோனம் இல்லாத குடியரசு தலைவர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவரும் ஆவார்.

- செ.கார்கி

Pin It