Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

தொடர்புடைய படைப்புகள்

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமை!!!

மண்ணை மலடாக்கி, நீரை உப்பாக்கி, நம் கனிம வளங்களை ஏகபோக முதலாளிகள் கொள்ளையிட வருகிறார்கள். ஹைட்ரோ கார்பன் திட்டம். மூவாயிரம் அடி ஆழத்தில் இருந்து பத்தாயிரம் அடி ஆழம் வரை பூமியைத் தோண்டி ஹைட்ரோ கார்பன் எடுக்கின்ற திட்டத்திற்காக, புதுக்கோட்டை மாவட்டம் இன்று பலியிடப்படுகிறது. உலகின் பல நாடுகளில் தடை செய்யப்பட்ட நீரியல் விரிசல் (HYDRAULIC FRACKING) முறையில் 600க்கும் மேற்பட்ட ஆபத்தான ரசாயனப் பொருட்களை பூமிக்குள் செலுத்தி மீத்தேன் வாயுவை வெளியில் எடுக்கும்போது உட்செலுத்தப்பட்ட ரசாயனங்கள் நிலத்தோடும் நீரோடும் கலக்கும். ரசாயனக்கலவை, அதீத உப்புநீர், மணல் ஆகியவைகளை நிலத்தின் மேற்பரப்பில் கொட்டப்படும். நிலம் பாலையாகும். விவசாயம் அழியும். குடிநீர்வளம் அழியும். உணவு உற்பத்தி முற்றாக அழியும். நமது எதிர்காலத் தலைமுறை உணவுக்காக சோமாலியா போல ஏங்கி பட்டினிச் சாவுக்குத் தள்ளப்படும்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகையில் நிலக்கரிப் படிமங்களில் இருந்து எடுக்கப்படும் நிலக்கரி-மீத்தேன் (COAL BED METHANE), வண்டல் பாறைகளில் இருந்து எடுக்கப்படும் ஷேல் மீத்தேன்(SHALE GAS /SHALE METHANE) திட்டங்களும் நாசகார அழிவுத்திட்டங்களே. நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, கள்ளிக்கொல்லை, கனியான்கொல்லை, வாணக்கன் காடு, கோட்டைக்காடு என்ற ஐந்து இடங்களில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் சுமார் 10000 அடி ஆழத்தில் ஆழ்துளைக்கிணறுகள் அமைத்துள்ளனர். நெடுவாசலில் மயானத்திற்கு அருகில் ஆழ்துளைக்கிணறுகள் அமைக்கத் திட்டமிடுகின்றனர்.

மேற்கு வங்கம், சகர்மாலா தொடங்கி, குளச்சல், இணையம் கடற்கரை வரை வணிகத் துறைமுகங்கள், சுற்றுலா விடுதிகள், பன்னாட்டு மீன் பிடிக் கப்பல்களுக்கான அனுமதி ஆகியவை மூலம் வங்கக்கடற்கரையில் இருந்து மீனவர்களை அப்புறப்படுத்தும் செயல் நடந்தேறுகின்றது. இலங்கையின் அடாத தாக்குதல் செயல்களை இந்திய அரசு தடுத்து நிறுத்தவில்லை.

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புள்ளானி உள்ளிட்ட 22 இடங்களிலும், சிவகங்கை மாவட்டம், வேலூர் மாவட்டம் லாலாப்பேட்டை முதலிய இடங்களில் குறிவைத்து ஹைட்ரோ கார்பன் எடுக்க நிலங்களை ஒதுக்கியுள்ளனர்.

இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட துணநின்ற அதே இந்திய அரசுதான் இன்று தமிழ்நாட்டைக் குறிவைத்து 8.5 கோடி தமிழர்களை புலம் பெயர்ந்து அகதிகளாக்கவும், கொன்றொழிக்கவும் நயவஞ்சகமாகத் திட்டமிடுகின்றது.

1997 ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டின் கயோட்டா நகரில் உலக நாடுகள் கூடி எடுத்த தீர்மானம் கயொட்டா வரையரைகள் எனப்படுகின்றன. இந்த வரையரைகள் உலகம் வெப்பமயதாலால் வர இருக்கும் பேரழிவைத் தடுக்க உலக நாடுகள் அனைத்தும் ஒன்றுபட்டு நிலக்கரி, எரிவாயு, பெற்றோலியம் ஆகிய நிலத்தடி படிம எரிபொருட்களை பயன்பாட்டை குறைக்கவேண்டும். மாற்று ஏற்பாடுகளை செய்து கொண்டு அடியோடு படிம எரிபொருட்களை நிறுத்த காலக்கெடு தருமாறு ஒவ்வொரு நாடும் கேட்டுக்கொள்ளப்பட்டது. 190 நாட்டு உலகத்தலைவர்கள் 1916 பிப்ரவரியில் பிரான்சு நாட்டில் கூடி இந்த வரையறைகளை மேலும் உறுதிப்படுத்தினர். மோடியும் பங்கேற்ற கூட்டம் இது.

மாற்று எரிசக்தியாக காற்றாலை, சூரிய ஒளி, சூரிய வெப்பம், கழிவுகளில் இருந்து மீத்தேன், கடல் அலை, என பலவகை மாற்று சக்திகளை உலக நாடுகள் பயன்படுத்துகின்றன. இவை மலிவானவை.சுற்றுச்சுழலை மாசுபடுத்தாதவை. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தீர்ந்தோ, வறண்டோ போகாதவை. நிலைத்து நீடிக்க வல்ல சக்தி ஊற்றுகள். நீண்ட ஆண்டுகள் கண்ணோட்டத்தில் இவையே வளர்ச்சியின் அடிப்படை. நாம் வாழும் உலகின் பாதுகாப்புக்கு உத்திரவாதமானவை.

ஆனால் மோடி அரசு தமிழ்நாட்டின் பெருஞ்சமவெளியான பாலாறு முதல் ராமநாதபுரம் வரை உள்ள பெருநிலப்பரப்பை மீத்தேன், பெற்றோலியம், நிலக்கரி எடுக்க அன்னிய கம்பெனிகளுக்கு ஏலமிடத் திட்டமிடுகின்றது. வளர்ச்சி என்ற சொல் ஒரு கேலிக்கூத்து. ஏனெனில் இந்த மாபெரும் சமவெளியே அழிய உள்ளது.

கெயில் நிறுவனம் மூலம் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகம், குஜராத், அரியானா, யு, பி. மேற்குவங்கள், ஒடிஸ்ஸா, ஆந்திரா, சென்னை, பெங்கலூரு, திருநெல்வேலி வரை இந்தியாவின் பல மாநிலங்களை இணைத்து எரிவாயுக்குழாய் போடுகிறார்கள். இது அமெரிக்கா, ஆசுதிரேலியா, கட்டார் நாட்டு திரவ எரிவாயுவை இந்தியாவின் வீட்டுப் பயன்பாடு, அனல்மின்நிலையம், உரத் தொழிற்சாலை ஆகியவைகளுக்கு பயன்படுத்தவே.
மாற்று எரிசக்திகளை எப்போது இந்திய அரசு பயன்படுத்தப் போகின்றது? இந்திய அரசின் தேசவிரோத, தரகு துரோகச் செயல்களை முறியடிக்க ஒன்றுபட்டு செயல்பட வாரீர் என உங்களை அழைக்கின்றோம்.

- காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம்

கூட்டியக்க உறுப்பு அமைப்புகள்:

தமிழக மக்கள் முன்னணி
மே17 இயக்கம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாலெ(விடுதலை
SUCI
மக்கள் சனநாயக குடியரசுக்கட்சி
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
தமிழக மக்கள் புரட்சிக்கழகம்
தமிழக மக்கள் வாழ்வுரிமைக்கட்சி
சோசியல் டெமாக்ரடிக்பார்ட்டி ஆஃப் இந்தியா.
தமிழர் உரிமை இயக்கம்
தமிழக நில உரிமைக்கூட்டமைப்பு
தமிழர் விடியல் கட்சி
மெய்ச்சுடர், பேராவூரணி
திராவிடர் விடுதலைக்கழகம்
தமிழ்தேசமக்கள் கட்சி
தமிழக மக்கள் சனநாயக கட்சி
தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்.
தளாண்மை உழவர் இயக்கம்
விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி
தமிழர் தன்மானப்பேரவை
உழக்கும் மக்கள் விடுதலை இயக்கம்
தமிழ்ப்புலிகள் இயக்கம்
சோசலிச மையம்-தமிழ்நாடு
அம்பேத்கர் பெரியார், காரல் மார்க்ஸ்
பண்பாட்டு இயக்கம்
புரட்சிப் பாரதம் கட்சி 

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 Govindasamy Thirunavukkarasu 2017-03-09 14:10
ஐயா,பதிப்பித்தம ைக்கு மிக்க நன்றி.
அன்புடன்
கோ.திருநாவுக்கரசு
Report to administrator
0 #2 Manikandan 2017-03-10 18:41
அனைத்து இயக்கங்களையும் பாருங்கள் எல்லாம் தமிழக மக்களின் நலனை புறக்கணித்து இலங்கை தமிழர்களுக்காக செயல்பட்டவர்கள் , இவர்களால் யாருக்கும் நன்மை கிடையாது.... எதற்கு எடுத்தாலும் போராட்டம் என்ற பெயரில் தமிழகத்தின் வளர்ச்சியை நாசம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
Report to administrator
0 #3 Gowrikanthan 2017-03-18 18:16
தேர்தல் ஆணையத்தில் பதியப்பட்ட கட்சிகள் எதுவும் ஒப்பமிடவில்ல்லை : அக்கட்சிகள் அணுகப்படவில்லைய ா? அல்லது பாரளுமன்ற ஜனநாயகத்தில் பங்குபற்றுவது தொடர்பான கருத்து முரண்பாடுகளால் அவர்கள் மறுத்து விட்டார்களா? காவேரி மேலாண்மை வாரியத்தை உடனே அமை என்பதை மட்டும் முன்வைத்து இம்முன்னணிக்கான ஒப்புதல் கையொப்பம் பெறப்பட்டதாகத் தெரியவில்லை. அதற்கும் அப்பால் அல்லது அதற்க்கு உட்பட்டு வேறு ஏதாவது காரணங்கள் இருந்தால் அவற்றை பகிரங்கமாக அறிவிக்கவும்.
Report to administrator

Add comment


Security code
Refresh