2017 புத்தகத் திருவிழா சிறப்புப் பகுதி:

vaadivasal

கடந்த பத்தாண்டுகளில் வெளிவந்து விற்பனையில் சாதனை படைத்த காலச்சுவடு பதிப்பக புத்தகங்கள்:

1. சி.சு. செல்லப்பாவின் 'வாடிவாசல்'. 2003ஆம் ஆண்டு வெளியானது. இதுவரை 17 பதிப்புகள் வெளிவந்துள்ளன. 18ஆவது பதிப்பு புத்தகச் சந்தைக்கு வெளியாகியுள்ளது. இதுவரை 23,000 பிரதிகள் விற்றுள்ளது.

2. மா.கிருஷ்ணனின் 'மழைக்காலமும் குயிலோசையும்' 2002ஆம் ஆண்டு வெளியானது. ஐந்து பதிப்புகள் வெளிவந்துள்ளன. 3500 பிரதிகள் விற்றுள்ளது.

3. தொ.பரமசிவனின் 'பண்பாட்டு அசைவுகள்' 2001இல் வெளிவந்தது. இதுவரை 14 பதிப்புகள் வெளியாகியுள்ளன. 15,000 பிரதிகளுக்கு மேல் விற்றுள்ளது.

4. சுகிர்தராணியின் 'இரவு மிருகம்' 2004ஆம் ஆண்டு வெளிவந்தது. ஐந்து பதிப்புகள் வெளியாகி 3000 பிரதிகளுக்கு மேல் விற்றுள்ளது.

5. அருந்ததிராயின் 'சின்ன விஷயங்களின் கடவுள்' 2012இல் வெளிவந்தது. ஆறு பதிப்புகள் வெளியாகியுள்ளன. 4000 பிரதிகளுக்கு மேல் விற்றுள்ளது.

kamala doss

கடந்த ஆண்டு வெளிவந்து அதிக வரவேற்பைப் பெற்ற காலச்சுவடு பதிப்பக நூல்கள்:

1. கமலாதாஸின் 'என் கதை'. 2016 மே மாதம் வெளியானது. ஆறுமாதத்தில் மூன்று பதிப்புகள் வெளியாகியுள்ளன. 1200 பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளது.

2. தமிழினியின் 'ஒரு கூர்வாளின் நிழலில்' பிப்ரவரி 2016இல் வெளியானது. மூன்று பதிப்புகள் வெளியாகியுள்ளன. 2000 பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளது.

- ஷாலினி, காலச்சுவடு பதிப்பகம்

Pin It