தமிழீழ விடுதலைக்காக தமிழகம் தழுவிய மாணவர்களின் தொடர் போராட்டங்கள் 39 நாட்களையும் தாண்டி சென்று சென்று கொண்டிருக்கிறது. இந்த போராட்டங்கள் மூலம் இனப்படுகொலைக்கு ஆளான ஈழத்தமிழர்களுக்கு தனித் தமிழீழமே ஒரே தீர்வு என்ற் கோரிக்கையை தமிழகம் முழுவதும் சென்று சேர்த்து மக்கள் மனதில் அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர் மாணவர்கள்.

தமிழீழ விடுதலையின் பாதையில் தடைகற்களாக பல அரசியல், பொருளாதார சிக்கல்கள் வழி நிற்கின்றன. தொடர்ந்து .நா மன்றத்தினை வலியுறுத்தியும், தமிழர் விரோத அமெரிக்காவின் அயோக்கிய தீர்மானத்தை எதிர்த்தும் அறப்போராட்டங்களை முன்னெடுத்து வந்த மாணவர்களாகிய நாம் சரியான புரிதலும் திட்டமிடலும் இருந்தால் மட்டுமே வரவிருக்கும் நாட்களில் தமிழீழ விடுதலையை ஒரு படி முன்னெடுத்து செல்லவியலும்.

மாணவர்களின் அடுத்த கட்ட போராட்டம்

2009-ல் நடந்த இனப்படுகொலையின் பிண்ணனியினை சற்று ஆராய்ந்து பார்த்தால் பன்னாட்டு மற்றும் இந்திய உள்நாட்டு நிறுவனங்கள் போரின் போதும் போருக்கு பின்பும் இலங்கையில் நிகழும் அசாதரணமான சூழலை மறைக்க சிங்கள அரசுக்கு உதவுவது புலப்படுகின்றது. அதில் சில நிறுவனங்கள் சிங்கள-இந்திய-அமெரிக்க கூட்டு அரசாங்கங்கள் ஈழத்தமிழர்கள் மீது நடத்திய திட்டமிட்ட இனப்படுகொலைக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் துணைப்போயுள்ளன.

போரின் போது சிங்கள ராணுவத்திற்கு இந்தியா, அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் அதன் பிராந்திய முக்கியத்துவத்தை உணர்ந்து அதனோடு இணக்கமாக செல்லவும், வருங்காலத்தில் இலங்கையோடு பொருளாதார ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொள்ளவும் ஆயுத உதவிகளையும், போர்ப்பயிற்சிகளையும் போட்டி போட்டு வழங்கி ஈழத்தமிழர்களின் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையில் பங்கெடுத்துள்ளன. போர் முடிந்த பிறகு அந்த நாடுகளை சேர்ந்த நிறுவனங்களுக்கு இலங்கையில் முதலீடு செய்ய சிங்கள அரசு முன்னுரிமை அளித்தது. இப்படியாக ஈழவிடுதலைப்போராட்டத்தில் இலட்சகணக்கான தமிழர்கள் பலிகொடுக்கப்பட்டதற்கு இந்த வர்த்தக நலன்களும் ஒரு முக்கிய காரணம்.ஆகவே நாம் போராட வேண்டியது வெறும் அரசாங்கங்களை எதிர்த்து மட்டுமல்ல, பிணங்களின் மீதும் வர்த்தகம் நடத்தும் இந்த குள்ள நரிகளையும் எதிர்த்து போராடுவது அவசியம்.

கோடிகளை கொட்டி கொலை செய்த ஏர்டெல்:

இதில் முக்கியமாக ஈழத்தமிழர்களின் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையில் ஏர்டெல்லுக்கு முக்கிய பங்கு இருப்பதை நாம் அறிதல் அவசியம். மே 15, 2007 சிங்கள இராணுவம் தமிழர்களை அழித்தொழிக்கும் போருக்கு தயாராகிக் கொண்டிருந்த காலத்தில் இலங்கையில் தன் சேவையையை தொடங்குவதற்கு ஒப்புதலை பெற்றது ஏர்டெல். இந்திய அரசு நிறுவனமான (BSNL) பி.எஸ்.என்.எல் லையும், இந்திய அரசின் கொள்கை முடிவுகளை நிர்ணயிக்கும் அளவுக்கு ஆதிக்கம் செலுத்தும் ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களின் போட்டியை மீறி ஏர்டெல்லுக்கு இந்த ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றிய இலங்கை அரசின்தமிழர்களுக்கு எதிரான போருக்குநிதியாக முதலீடு என்ற போர்வையில் 1500 கோடியை ஏர்டெல் நிறுவனம் கொட்டி கொடுத்தது.

1)http://www.lankabusinessonline.com/news/Sri_Lanka_attracts_$150_mn_investment_from_Indias_Bharti_Airtel_for_mobile_network/1930081308
2) http://paidcontent.org/2007/05/16/419-bharti-airtel-gets-approval-for-sri-lanka-foray-to-invest-150-million/

ஏர்டெல்-சீனா-இலங்கை கூட்டு: 

இந்தியாவை மையமாக கொண்டு செயற்படும் ஏர்டெல் நிறுவனம் சுதேசி நிறுவனமல்ல. ஏர்டெல் நிறுவனத்தின் 30.43% பங்குகளை சிங்டெல் என்ற சிங்கப்பூர் நிறுவனத்திடம் உள்ளது. மேலும் ஏர்டெல் நிறுவனத்தின் 5% பங்குகளில் சிங்கப்பூர் அரசு முதலீடு செய்து உள்ளது.இந்த சிங்டெல் நிறுவனம் சீனாவின் கைகூலியாக செயற்பட்டு கொண்டிருக்ககூடியது. சிங்டெல்லில்ஹூவாவெய்”(Huwaei) என்ற சீனாவின் முண்ணனி தகவல் தொடர்பு கட்டமைப்பு நிறுவனம் பங்கு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்திற்கு சீன உளவு நிறுவனங்களுடன் தொடர்பு இருப்பதாக கடந்த 2001ல் இந்திய உளவு நிறுவனங்கள் எச்சரித்தன. பா.. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உள்துறை அமைச்சராக இருந்தபோது இந்த நிறுவனத்தின் போக்கு குறித்து கடும் எச்சரிக்கை தெரிவித்த செய்தி பல ஏடுகளில் வந்திருந்தது. இந்தஹூவாவெய்நிறுவனம் பாதுகாப்பு காரணங்களுக்காக பல வளர்ந்த நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 2005ல் இந்நிறுவனம் டாடாவின் டெல்கோவில் 60 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யவிருந்ததை இந்திய அரசு தடுத்தது.இப்படியாக இதன் பிண்ணனியை ஆராய்ந்ததில் கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றது.

1)http://wirelessfederation.com/news/tag/singtel/
2) http://www.news.com.au/breaking-news/spy-fears-on-broadband-frontrunner/story-e6frfkp9-1111118351614
3) http://ridingtheelephant.wordpress.com/2012/10/15/huawei-poses-risks-for-india-50-years-after-chinas-himalayan-victory/

உள்ளே நுழைந்த சீன உளவாளி:

இலங்கையில் ஏர்டெல்லுக்கு கிடைத்த ஒப்பந்தம் மூலமாக சீன நிறுவனமான ஹூவாவெய் இலங்கையில் கால் பதித்தது. 2007 செப்டம்பரில் இலங்கையில் தகவல் தொடர்புக் கட்டமைப்பை மேற்கொள்வதற்காக 750 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தத்தை ஹூவாவெய்க்கு ஏர்டெல் அளித்தது. 1)http://www.dnaindia.com/money/1220873/report-airtel-starts-mobile-services-in-sri-lanka

இதன் மூலம் சீன உளவாளிகள் இலங்கைக்குள் பின்வாசல் வழியாக ஊடுருவி சிங்கள, சீன அரசாங்களுக்காக உளவு பார்த்தனர்.இந்த ஒப்பந்தத்தின் வழியாக கிடைத்த சீன தொடர்புகளின் மூலம் சீனாவுடனான உறவை பலப்படுத்திக்கொண்டு இராணுவ உதவிகளையும், ஆயுதங்களையும் சிங்கள அரசு பெற்றது. இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த இந்திய காங்கிரஸ் அரசின் மெத்தனத்தால் சீனாவின் கட்டுபாட்டுக்குள் இலங்கை அரசு சென்றது. தற்போது ஆயிரக்கணக்கான சீனப்பொறியாளர்கள் இலங்கை முழுவதும் பரந்து கிடக்கிறார்கள் என்றுசீனாவின் முற்றுகையில் இந்தியாஎன்ற நூல் ஆதாரத்தோடு விளக்குகின்றது.2008 சனவரி மாதம் தமிழீழ விடுதலைப்புலிகளிடமிருந்து சிங்கள இராணுவம் கைப்பற்றியபோது ஏர்டெல்லின் சேவை இலங்கையில் தொடங்கியது.தற்போது அங்கு ஏர்டெல் நிறுவனத்திற்கு 12 இலட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். தனது உயர்தர தகவல் தொழிற்நுட்பங்களால் புலிகளின் நகர்வுகளையும் மக்கள் பதுங்கியிருக்கும் இடங்களையும் இன அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் சிங்கள இராணுவத்திற்கு ஏர்டெல் நிறுவனம் தெரியப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. போருக்கு பின்பு சிங்கள அரசுக்கு இனப்படுகொலை குற்றச்சாட்டுகளால் ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களை சமாளிக்க ஏர்டெல் நிறுவனம் வரிந்து கட்டிக்கொண்டு உதவியது.

கொழும்புவில் ஃபிக்கி நடத்திய நாடகம்:

ஃபிக்கி(FICCI-Federation of Indian Chambers of Commerce & Industry) - இந்திய தொழில் வர்த்தக நிறுவனங்களின் கூட்டமைப்பானது இந்தியாவின் பொருளாதார, வணிக மற்றும் நிறுவன்ங்கள் சார்ந்த அரசின் முடிவுகளை நிர்ணயம் செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது.இதன் ஒப்புதல் இல்லாமல் அரசு முடிவுகளை நிர்ணயம் செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது. இதன் ஒப்புதல் இல்லாமல் எந்த கொள்கை முடிவுகளையும் நிறைவேற்றுவதில்லை. இந்த ஃபிக்கி அமைப்பானது பன்னாட்டு தனியார் நிறுவனங்களின் இலாபத்திற்காக பொதுமக்களுக்கு விரோதமான செயல்களை செய்ய தயங்குவதில்லை.இதன் பிண்ணனியை ஆராய்ந்தால் இந்த ஃபிக்கி அமைப்பின் தலைவர் தான் ஏர்டெல் நிறுவனத்தலைவர் ராஜன் பாரதி மிட்டல். இந்த ஃபிக்கி அமைப்பின் ஊடக பொழுது போக்கு துறை தலைவராக இருப்பவர் நடிகர் கமலஹாசன்.

கடந்த 2010 ஜூன் 3, 4, 5 தேதிகளில் கொழும்புவில் ஃபிக்கி அமைப்பு இந்தி திரைப்பட உலகத்துடன் இணைந்து ஐஃபா விருது (IIFA – India International Film Academy Awards) வழங்கும் விழா, உலக வணிக மாநாடு, சிங்கள கிரிக்கெட் அணிக்கும் பாலிவுட் நட்சத்திரங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி என மூன்று நிகழ்சிகளை தொடர்ச்சியாக நடத்தியது.இதில் இரண்டாவது நாள் நடந்த உலக வணிக மாநாட்டிற்காக (Global Business Conclave) தனது வலைதளத்தில் இலங்கையை வர்த்தக முதலீடுகளுக்கு உகந்த நாடாகவும், இனவெறி கொண்டு 1,50,000 தமிழர்களை கொன்று குவித்து இரத்தகறை படிந்துள்ள இலங்கையைபுதிய இலங்கைஎன்று வர்ணித்திருந்தது ஃபிக்கி அமைப்பு. (http://www.ficci.com/events-page.asp?evid=20374). இந்த மாநாடு உலக நாடுகளின் இனப்படுகொலை குற்றச்சாட்டுகளால் பொருளாதார சிக்கல்களுக்கு உள்ளாகியிருந்த இலங்கை அரசை மீட்டெடுக்கவும், தனது நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்ளவும் உதவியது. ஐஃபா திரைப்பட விருது வழங்கும் விழாவில் தென்னிந்திய திரைப்பட அமைப்புகள் பங்கேற்காமல் புறக்கணித்தன. மனிதாபிமான பார்வை சற்றும் இல்லாமல் தமிழின இனப்படுகொலைக்கு தொடர்ந்து துணைப்போய் கொண்டிருக்கிறது ஏர்டெல் நிறுவனமும், ஃபிக்கி அமைப்பும்.

உச்சகட்டம்:

மேலும் ஏர்டெல் நிறுவனம் ஈழத்தமிழர்கள் மீது கலாச்சார இனப்படுகொலையை நடத்திக்கொண்டிருக்கிறது. ஈழத்திலுள்ள நம் ஒத்த வயதுடைய தமிழ் இளையோர்களை கலாச்சார ரீதியில் சீரழிக்க தனது கைப்பேசி சேவையின் மூலம் ஆபாசக்காட்சிகளை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியினை அவர்களின் எண்களுக்கு இலவசமாக அளிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்படியாக தொடர்ந்து சிங்கள இனவெறி அரசுடன் கூட்டு சேர்ந்து தமிழர்களின் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலையை நடத்த உதவி செய்து பின் அதனை உலகத்தின் கண்களிலிருந்து மூடிமறைக்க உதவிய ஏர்டெல் நிறுவனத்தின் சேவைகளை தமிழர்கள் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் நாமும் அந்த இனப்படுகொலைக்கு துணைபோவதாக தான் அர்த்தப்படும்,

புறக்கணிக்க வேண்டும் - எதற்காக? எப்படி?

ஏர்டெல் நிறுவனத்திற்கு தமிழகம் ஒரு லாபம் கொழிக்கும் சந்தை. இந்தியா முழுவதும் 13 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ள ஏர்டெல் நிறுவனத்திற்கு தமிழகத்தில் மட்டும் 1.35 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படியாக இங்கே தமிழர்களின் பணத்தில் கொழித்து வளர்ந்து கொண்டே அவர்களுக்கு எதிரான இனஅழிப்பு நடவடிக்கைகளில் ஏர்டெல் நிறுவனம் ஈடுபட்டுள்ளதை நாம் அலட்சியப்படுத்த கூடாது. தமிழர் விரோத செயல்களில் ஈடுபடும் இந்த நிறுவனத்தின் செயற்பாடுகளை முடக்க இலங்கையை விட பெரிய சந்தையான தமிழகத்தில் தமிழர்களாகிய நாம் ஏர்டெல் சேவையினை புறக்கணிக்க வேண்டும்.தமிழக வாடிக்கையாளர்களை இழப்பது ஏர்டெல் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்தும்.இந்த புறக்கணிப்பு ஏர்டெல்லை போல் தமிழர் விரோத போக்கில் சிங்கள இனவாத அரசுக்கு ஆதரவாக செயற்படும் அத்துனை நிறுவனங்களுக்கும் தமிழர்கள் விடுக்கும் எச்சரிக்கையாக அமையும்.

இங்கே தமிழர்கள் பணத்தில் பிழைப்பு நட்த்திக் கொண்டு ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை மறைக்க சிங்கள இனவாத அரசுக்கு ஆதரவாக செயற்படும் ஏர்டெல் நிறுவனத்தின் சேவைகளான சிம்கார்டு, இணையம், டி.டி.ஹெச் முதலிய அனைத்து சேவைகளையும் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மானவர்களாகிய நாம் புறக்கணிக்க வேண்டும்.மேலும் தமிழகம் முழுவதும் தமிழின இனப்படுகொலைக்கு துணைப்போன ஏர்டெல்லின் நடவடக்கைகளை விளக்கி அதன் சேவைகளை சக மாணவர்களும், பொதுமக்களும் என அனைத்து சாரரும் புறக்கணிக்க வலியுறுத்தி தொடர் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும். ஏர்டெல்லின் சேவையை தொடர நாம் செலுத்தும் ஒவ்வொரு காசும் தமிழின அழிப்புக்கு பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. அதன் சேவையை நாம் தொடர்ந்து பயன்படுத்தும் ஒவ்வொரு நொடியும் தமிழின இனப்படுகொலைக்கு நாமும் துணை போவதாகவே அர்த்தம். இனி சிங்கள அரசுடன் ஒப்பந்தம் போட துவங்கும் அல்லது ஒப்பந்தம் செய்திருக்கும் எந்த்வொரு வணிக நிறுவனத்திற்கும் இது ஒரு பாடமாக அமையும்.

எங்கள் பணத்தைக் கொண்டு எங்கள் இனத்தை கொல்வதென்பது, எங்கள் கண்களை எங்கள் கைகளால் குத்திக்கொள்வதற்கு சமம். இதை மாணவர் சமுதாயம் வேடிக்கை பார்க்காது.

இரத்தம் குடிக்கும் டிராகுலாக்களைப் போல் பிணங்களின் மீது பிழைப்பு நடத்தும் தமிழின துரோகிகளை நம் தாய்மண்ணிலிருந்து இருந்து விரட்டியடிப்போம்!!

பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைவித்தால் சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு

- .ஆனந்த், ஒருங்கிணைப்பாளர், தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு

 

Pin It