Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

டெல்லி திகார் சிறையில் ரகசியமாகவும், அவசரமாகவும் தூக்கிலிடப்பட்ட அப்சல் குரு மரண தண்டனையினை மக்கள் சிவில் உரிமைக்கழகம் வன்மையாக கண்டிக்கின்றது.மேலும் அப்சல் குரு குடும்பத்தினருக்கு கூட முறையாக தகவல் தெரிவிக்காது நிறைவேற்றப்பட்ட இந்த தண்டனை மற்றும் சிறை வளாகத்திற்குள்ளேயே அப்சல் குரு உடலை புதைத்தது போன்றவை சட்ட விரோதமான,மனிதாபிமானமற்ற நடவடிக்கை என கருத வேண்டியுள்ளது. அப்சல் குருவுக்கு குடும்பம் உள்ளது. அக்குடும்பத்தினர் தங்கள் மத வழிபாட்டு முறைப்படி இறந்த உடலை அடக்கம் செய்யும் உரிமை பெற்றவர்கள். ஆனால் இந்த அடிப்படை  உரிமைகளை கூட டெல்லி ஆட்சியாளர்கள் புறக்கணித்துள்ளனர்.

தேர்தலுக்கு தன்னை தயார்படுத்தி வரும் காங்கிரஸ் கட்சி  மரண தண்டனையினை தனது செல்வாக்கினை கூட்ட ஒரு வடிவமாக கருதுவது சனநாயக விரோதமானது.தொடர்ந்து கருணை மனுக்களை நிராகரிப்பது,தூக்கு மரத்தை தயார் படுத்த்வது என்ற மத்திய ஆட்சியாளர்களின் போக்கு உலக அரங்கில் மனித உரிமை பண்பாட்டுக்கு எதிரான நாடு என்ற அவப்பெயரையே பெற்றுத்தரும். மரண தண்டனையினை ஒழிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை அரைகூவல் கொடுத்துள்ள நிலையில் அப்சல் குருவின் மரண தண்டனை கண்டிக்கத்தக்கது.

அரசியல் போராட்டங்களை அரசியல் வழி வழியே மாத்திரம் தீர்வு காண முடியும் .காஷ்மீர் மக்களின் போராட்டம் என்பது ஒரு அரசியல் போராட்டம் என காண தயாராக இல்லாத ஒரு நிலையிலிருந்தே அப்சல் குரு தூக்கு நிகழ்ந்துள்ளது.மரண தண்டனை சமூகத்தில் குற்றத்தை குறைக்கவோ,தடுக்கவோ எந்த வகையிலும் பயன்படாது.அது சொல்லும் ஒரே செய்தி பழிவாங்கல் என்பது மட்டுமே.இப் பழிவாங்கல் நடவடிக்கைகளால் சமூகத்தில் அமைதியினை நிலை நாட்டமுடியாது.

மரண தண்டனை கொடூரமானது, மனிதாபிமானமற்றது,நாகரீக சமூகத்தை வெட்கி தலைகுனிய செய்வது ,அந்த தண்டனையினை தங்களின் சாதனை என பறைசாற்றும் அரசை கண்டிப்பது சனநாயக சமூகத்தின் கடமை. 

- ச.பாலமுருகன், மாநிலச் செயலர்,பியூசிஎல்             பேரா.சரஸ்வதி, மாநிலத் தலைவர், பியூசிஎல்

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 ஆனந்தன் 2013-02-10 23:19
அப்சல் குருவுடன் சேர்த்து, ஹேமந்த் கர்கரே மேட்டரும் ஓவர்
Report to administrator
0 #2 raghava raj 2013-02-12 12:05
பொதுவாக எல்லா மரண தண்டனையையும் எதிர்ப்பது என்பது தவறானது.மரண தண்டனையால் சமூகத்திலிருந்த ு அப்புறப்படுத்தப ்பட வேண்டியவர்கள் நிறைய பேர்வழிகள் சமூகத்தில் திரிந்துகொண்டிர ுக்கிறார்கள்.ஆன ால், அஃப்ஸல் குரு நாடாளுமன்றத் தாக்குதல் நிகழ்வில் சற்றும் தொடர்பற்ற நிரபராதி.அதனால் அவரை தூக்கிலிட்டது அயோக்கியத்தனமான து.இதற்குக் காரணமான உச்ச வழக்கு மன்ற தீர்ப்பு ஜனநாயகவிரோதமானத ு,எனவே அக்கிரமமானது.கூ ட்டு மனசாட்சி என்பது சட்டத்தின் ஆட்சி என்பதன் அடிப்படையையே தகர்க்கிறது,அதா வது ஜனநாயகத்தின் அடிப்படைகளை மறுதலிக்கிறது.எ னவே அஃப்ஸல் குருவை தூக்கிலிட்டதை எதிர்ப்பவர்கள் இத்தகைய சட்டங்களையும் நீதிமன்ற நடைமுறைகளையும் மாற்றியமைப்பதற் கு போராட வேண்டியது அவசியம் என்பதை எப்போது உணர்வார்கள்.இறு தி ஆய்வில், இந்தியாவுக்கு ஒரு முழுமையான சமூக,பொருளாதார, அரசியல் மாற்றம் தேவைப்படுகின்றத ு என்பதே பலரது உறுதிப்பாடு!
Report to administrator

Add comment


Security code
Refresh