Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

நவம்பர் 2011 மற்றும் ஜனவரி 2012 மாதங்களில் வெளிவந்த சங்க முழக்கம் இதழ்களில் கூடங்குளம் அணு உலை திட்டதிற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்து வெளியிடப்பட்டுள்ள கருத்துகளுக்கு மறுப்பு தெரிவிக்கும் வண்ணமும் வாசகர்கள் உண்மை நிலையை அறிந்து கொள்ளும் விதமாகவும் இந்த கடிதத்தை எழுதுகிறேன். முதலில் போராட்டத்தின் தன்மைகள் குறித்தும், இரண்டாவது அணு உலையின் அவசியம் குறித்தும் தாங்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கள் மீதான விளக்கங்களை இப்போராட்டத்தை துவக்கம் முதலே உற்று நோக்கி வருபவன் என்ற முறையில் தர விரும்புகிறேன்.

kudankulam_340இது மீனவர்களின் போராட்டம் என்று அடையாளப்படுத்தி பிற சமூகத்தினர் இப்போராட்டத்தில் கலந்து விடாமல் பார்த்து கொள்ள ஒரு பொய் பரப்பல் நடந்தது. ஆனால் உண்மை என்னவென்றால் திருநெல்வேலி மாவட்ட கடற்கரை கிராமங்களில் வாழும் கிறிஸ்தவம் தழுவிய மீனவர்களான பரவர்களும், கிறிஸ்தவம் தழுவிய மற்றும்(அய்யா வழி மற்றும் அம்மன் வழி பிரிவுகள் ) ஏனைய நாடார் சமூகத்தவர்களும், ஒடுக்கப்பட்ட சமூகத்தினரும் வாழும் கூடங்குளம், செட்டிகுளம், வைராவிக்கிணறு, எஸ்.எஸ்.புரம் போன்ற உள்நாட்டு கிராமங்களை சார்ந்தவர்களும் விஜயாபதி போன்ற கிராமங்களில் வாழும் இசுலாமியர்களும் இடிந்தகரை லூர்துமாதா ஆலயத்திற்கும் சித்தி விநாயகர் திருக்கோவிலுக்கும் இடைப்பட்ட மைதானத்தில் பந்தல் அமைத்து சாதி, சமய வேறுபாடு கருதாமல் "இது தமிழர் போராட்டம்" என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு போராடி வருகிறார்கள். இது யாரும் எந்த நேரமும் நேரடியாக போய் பார்த்தால் புரிந்து கொள்ள முடியும் உண்மை நிலையாகும். இது மீனவர்களின் போராட்டம் என்ற பொய் பரப்பலுக்குப் பின்னணியில் இருந்த இன்னொரு காரணம் இதை கிறிஸ்தவர்கள் போராட்டமாக சித்தரிக்க தயாரிக்கப்பட்ட சூழ்ச்சி திட்டமாகும்.

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட கடலோரத்தை தங்கள் பூர்வீக வாழ்விடமாகக் கொண்ட பாரம்பரிய மீனவர்களான பரவர்களும், முக்குவர்களும் முழுக்க முழுக்க கிறிஸ்தவம் தழுவியவர்கள் ஆவர். எனவே மீனவர் போராட்டம் என்றாலே அது கிறிஸ்தவர் போராட்டம் என்று அடையாளம் காட்ட விரும்பும் சூழ்ச்சியாகும். அதன் பின்னர் இது அந்நிய நாடு தூண்டுதல் என்பதும், வெளிநாடுகளில் இருந்து பணம் வருகிறது என்பதும், பணத்திற்கும் பிரியாணிக்கும் மக்கள் போராட வருகிறார்கள் என்பதும், கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களை குறி வைத்து ஆய்வு என்ற பெயரில் நெருக்கடிகள் கொடுப்பதும் மெல்ல மெல்ல விரியும் ஒரு பெரிய சதி திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

போராட்டத்தின் நியாயங்களை நேரடியாக சந்திக்க முடியாத காரணத்தால் போராட்டத்தை களங்கப்படுத்துவது என்ற மோசடி திட்டத்தை அரங்கேற்றி வருகிறது காங்கிரஸ் அரசு. அயல் நாடுகளிலிருந்து நிதி பெறும் தொண்டு நிறுவனங்கள் இந்திய அரசின் அனுமதி பெற்று, ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டு இயங்கி வருவது இங்கு ஒன்றும் புதிதில்லையே. இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ, சமயம் சாராத நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் இருக்க போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள சில கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களில் மட்டும் வெளிநாட்டு பணம் வந்துள்ளதாக கூப்பாடு போடுவதேன்? வேறு எந்த நிறுவனங்களும் வெளிநாட்டு நிதி பெறவில்லையா? அவை பற்றி பேசாதது ஏன்? ஆதரவாக போராடும் தொண்டு நிறுவனங்களுக்கு போராட்டத்திற்காக வெளிநாட்டு பணம் வந்ததிற்கு ஆதாரம் ஏதும் இருக்கிறதா? அப்படி ஒன்றும் இதுவரை கிடைத்ததாக செய்திகள் இல்லையே. பொய்ச் செய்திகள் மட்டும்தான் வருகின்றனவே தவிர ஆதாரங்கள் முற்றிலும் இல்லை.

எளிய மீனவர்கள், விவசாயிகள், சிறு வணிகர்கள் தங்கள் அன்றாட வருமானதிலிருந்து தரும் பங்களிப்புகள்தான் போராட்டத்தின் பொருளாதாரப் பின்னணி என்று உண்மையை விளக்கினால் அதற்கு கணக்கு காட்ட வேண்டாமா என்கிறார்கள். அந்த கணக்கை காட்ட சொல்லும்போது இதுவரை நாங்கள் சொன்னதெல்லாம் தவறுகள் என்று மன்னிப்பு கேட்பதல்லவா நாகரீகம். வெளிநாட்டு பணத்தில் போராட்டம் நடக்கவில்லை என்பதை அந்த கருத்தை பரப்பியவர்கள் நாட்டு மக்களுக்கு உண்மையை அறிவிப்பதுதானே நேர்மை. தங்கள் வாழ்வுரிமை மற்றும் வாழ்வாதாரங்களை காக்க ஈகங்கள் செய்து பெரும் எழுச்சியுடன் எளிய தமிழ்ச்சமுகத்தினர் நடத்தி வரும் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க போராட்டத்தின் நியாயங்களுக்கு பதில் சொல்ல முடியாத இந்திய அரசு, ஒன்றுபட்டு நிற்கும் சமுகத்தை சாதி, சமய அடிப்படையில் பிளவுப்படுத்தி அப்பகுதியில் பெருவாரியாக வாழ்ந்து வரும் கிறிஸ்தவர்கள் மீது "தேசவிரோதிகள்" என்ற முத்திரையை குத்த முயற்சிக்கும் சூழ்ச்சிதான் இது.

இதுவரை வகுப்புவாத சக்திகள் செய்து வந்த இந்த பொய் பரப்பலை இப்பொழுது காங்கிரஸ் கட்சியும் அதன் தலைமையிலான அரசாங்கமும் செய்கிறது. அடிப்படையில் இது மதவாதம் கூட இல்லை, இது ஆதிக்க சாதித் திமிர். ஏனெனில் தென் தமிழகத்தில் அதுவும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் செறிந்து வாழும் நாடார், ஒடுக்கப்பட்டவர், பரவர், முக்குவர் கிறிஸ்தவம் தழுவியது ஆதிக்க சாதி மற்றும் ஆதிக்க வர்க்கத்தினரின் கொடுமையிலிருந்து தங்களை தற்காத்து கொள்ளத்தானே. இச்சமுகங்களின் மீதான தங்களின் சுரண்டலும், மேலாதிக்கமும் தளர்ந்து போன ஆத்திரத்தை தீர்துக்கொள்ளத்தானே இன்று கிறிஸ்தவர்கள் மீது இந்த பாய்ச்சல். வகுப்புவாத சக்திகளுக்கு மாற்றாக இந்த மக்கள் காங்கிரசினைக் கருதியதால் அல்லவா இன்றைக்கு அக்கட்சிக்கு தமிழக சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவமானது மிஞ்சி இருக்கிறது. இப்பொழுது காங்கிரசின் வகுப்பு, வர்க்க நலன்கள் அம்பலமாகிவிட்டதால் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையோர் நடுவில் சாயம் வெளுத்த நரியாகி நிற்கிறது காங்கிரஸ்.

யாருக்குப் பின்னால் அந்நிய நாடுகள் உள்ளன? சில்லறை வர்த்தகம் வரை நேரடி அந்நிய முதலீட்டை கொண்டு வரத்துடிக்கும் காங்கிரசின் பின்னணியிலா? இல்லை அன்றாட வருவாயில் போராட்டத்தை மட்டுமல்ல நாட்டின் பொருளாதாரத்தையே தாங்கும் விவசாயிகள், வணிகர்கள், மீனவர்கள் பின்னணியிலா? ரஷ்யா, பிரான்ஸ், அமெரிக்கா என்று அந்நிய நாட்டின் பின்னணியில் இயங்குகிறது இந்திய அணுசக்தி துறை. அவர்களின் பின்னணி இல்லாமல் இந்த அலம்பல், புலம்பல் விஞ்ஞானிகள் நாட்டு மக்களுக்காக அவர்களது நல்வாழ்விற்க்காக ஒரு சிறு துரும்பைக் கண்டுபிடித்து தந்தார்கள் என்று சொல்ல முடியுமா? கூடங்குளம் அணு உலையை மூடும் கோரிக்கையில் வென்றால் நாட்டின் பிற பாகங்களில் உள்ள அமெரிக்க, பிரான்ஸ் கூட்டு அணுஉலை திட்டங்களுக்கு எதிரான போராட்டங்களும் உத்வேகமடையும் என்று அமெரிக்காவிற்குத் தெரியும் என்பது இங்கே உள்ள உலக மகாஞானிகளுக்கு தெரியாமல் போனதேன். பிறகு எப்படி அவர்கள் அணு உலைகளுக்கு எதிரான போராட்டத்தை தூண்டி விட முடியும்?

கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்வை காத்துக் கொள்ள போராடக்கூடாது என்று என்று இந்தியாவில் ஏதேனும் சட்டமிருக்கிறதா? இல்லை கிறிஸ்தவ மக்கள் பங்கேற்கும் போராட்டங்களுக்கு ஆயர் பேரவை, பாதிரியார்கள் உள்ளிட்ட கிறிஸ்தவ திருச்சபை அமைப்புகள் தங்கள் ஆதரவைத் தருவது எந்த விதத்தில் ஒரு சனநாயக நாட்டில் தவறாகும்? தாங்கள் வெளியிட்டுள்ள கருத்துக்களை பார்க்கும்பொழுது இந்த வகுப்புவாத முதலாளித்துவ கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சூழ்ச்சிகளுக்கு தாங்களும் இரையாகிருப்பதைக் கண்டு வருந்துகிறேன். இது வருந்தத்தக்கதும் திருத்தப்பட வேண்டியதுமாகும். 2011 செப்டம்பர் 11 ஆம் தேதி தொடங்கிய அணுஉலை எதிர்ப்பு போராட்டம் குறித்து அடுத்த மாதம் 24 -26 தேதிகளில் தங்கள் கட்டுரையில் குறிப்பிடும் திருச்சியில் கூடிய தமிழக ஆயர் பேரவை போராடும் மக்கள் தரப்பு நியாயங்களை தாங்கள் அங்கீகரிப்பதாக கருத்து தெரிவித்தது. ஆனால் தங்கள் கட்டுரையோ மேற்கண்ட ஆயர் பேரவை தீர்மானத்தையே கூடங்குளம் பகுதி மாதாகோவில்கள் நடைமுறைப்படுத்துவதாக குறிப்பிடுகிறது. அப்படியானால் பேரவை கூட்டத்திற்கு பிறகல்லவா போராட்டம் ஆரம்பித்திருக்க வேண்டும்? சங்க முழக்கத்தில் இது போன்ற தவறான தகவல் பதிவாக நேர்ந்தது துரதிர்ஷ்டமே!

ஒடுக்கப்படும் சமுகத்து மக்கள் தங்கள் அரசியல், பொருளாதார, சமுக உரிமைகளை காத்துக்கொள்ள கிறிஸ்தவம் தழுவினார்கள் எனில் இன்றும் அதே உரிமைகளை நிலை நாட்ட மக்கள் போராடும்போது கிறிஸ்தவம் எப்படி ஒதுங்கியிருக்க முடியும்? தயவு செய்து வரலாற்றை உன்னிப்பாக கவனியுங்கள். அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்களின் கண்னசைவுக்கேற்ப அரசாங்கம் நடத்துகின்ற பா.ஜா.க, காங்கிரஸ் கட்சிகள் உள்ளிட்ட ஏனையோரின் ஆதிக்கசாதி மனோபாவமும் முதலாளித்துவ கருத்தாக்கங்களும் கொண்ட தேச விரோத சக்திகள்தான் இன்றைக்கு தங்கள் உழைப்பால் இந்த நாட்டை தாங்கும் விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்கள், மீனவர்களின் வாழ்வை, வாழ்வாதாரங்களைப் பிடுங்கி ரஷ்ய, பிரெஞ்சு முதலாளிகளின் பணப்பையை நிரப்ப கூலி வாங்கிக் கொண்டு அடியாள் வேடம் பூண்டு நிற்கிறார்கள். கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தில் அந்நிய தூண்டுதல் இல்லை என்று ரஷ்ய நாட்டு தூதுவரே தனது நேர்காணலில் சொன்னாரே, அதற்கு ஏன் பதிலே இல்லை?(13-12 -2011 - இந்தியன் எக்ஸ்பிரஸ்)

Koodankulam_370போராட்டம் பற்றி பேசும்போது "உற்பத்தி துவக்கும் நேரத்தில் எதிர்ப்பு என்பது சற்றே உதைக்கிறது" என்று எழுதி இருக்கிறீர்கள். மேலும் "கல்பாக்கம் கண்டு அச்சம் இல்லை, கூடங்குளம் கண்டு நேற்று வரை அச்சம் இல்லை" என்று போராட்டத்தின் நேர்மை குறித்து சந்தேகத்தை எழுப்பி இருக்கிறீர்கள். 1998-இல் இந்திய -ரஷ்ய ஒப்பந்தம் செய்யப்பட்ட நாளிலிருந்தே இந்த திட்டதிற்கு எதிரான போராட்டங்களும் துவங்கிவிட்டன என்பதுதான் உண்மை. அடிக்கல் நாட வரவிருந்த பிரதமரும், முதல்வரும் மக்கள் எதிர்ப்பின் காரணமாகவே வருகையை ரத்து செய்தனர். 1989 மே 1 இல் கன்னியாகுமரியில் நடைபெற்ற எதிர்ப்புப் பேரணியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் கூட நடைபெற்று இருக்கிறது. அதன் பின்னர் அணு உலை எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கேற்பதற்கு மக்கள் அஞ்சிய காரணமும் அதுதான். ஆனாலும் சின்ன சின்ன அளவிலான போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருந்தன. ஊடகங்கள் அவற்றை வெளிக்கொணரவில்லை. பின்னர் சோவித் யூனியன் சிதறுண்டதால் இங்கே திட்டம் கிடப்பில் போடப்பட்டதும் போராட்டங்களும் ஓய்ந்தன. சுமார் 10 ஆண்டு இடைவெளிக்குப் பின் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்ட பின் மீண்டும் போராட்டங்களும் தொடங்கின. பேச்சிப்பாறை தண்ணீரை எடுக்கப்போவதில்லை என்ற வாய்மொழி உறுதியை நம்பி கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பு குறைந்தது. இது குறித்து ஒப்பந்தந்தில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வேலைவாய்ப்பு என்னும் ஏமாற்று வித்தையாலும் மக்கள் பெருமளவில் ஏமாற்றப்பட்டனர். ஆனால் அதெல்லாம் எவ்வளவு ஆபத்தான படுகுழியில் தள்ளிவிடும் பித்தலாட்டம் என்பதை மக்கள் உணர, ஜப்பான் நாட்டில் புகுஷிமாவில் அணுஉலைகள் வெடித்துச் சிதறியதை தொலைகாட்சிகளில் மக்கள் நேரில் கண்ணால் கண்டதே போதுமானதாக இருந்தது. ரஷ்யாவின் செர்நோபில் அணு உலை வெடித்துச் சிதறியபோது ஊடக வசதிகள் இத்தனை தூரம் மேன்மையுற்று இல்லாததால் மக்கள் போதிய அளவு விழிப்புணர்வு பெற முடியாமற் போனது. வெப்ப நீர் சோதனை, விபத்து பாதுகாப்பு ஒத்திகை போன்றவை மக்களை விழிப்புணர்வின் உச்சத்திற்கே கொண்டு சென்றது. இனி எதுவாகினும் இதை அனுமதிப்பதில்லை என்று போராட்ட களம் கண்டனர் மக்கள். ஆறு மாதங்களுக்கு மேலாகத் தொடரும் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தின் உண்மைத்தன்மை இதுவாகும்.

மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி பொதுமக்கள் ஒப்புதலைப் பெற்று இருந்தால் இப்போது போராடுகிறார்களே என்ற விமர்சனம் நியாயமானதாக இருந்திருக்கும். கருத்து கேட்பே நடத்தாமல் சனநாயக மரபுக்கு விரோதமாகவும், விதிமுறைகளை மீறியும், அரச வன்முறையை ஏவிவிட்டும், பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசியும் மக்கள் மீது சுமத்தப்பட்டதுதான் இந்த திட்டம். இந்தப் போராட்டதிற்கு மட்டுமல்ல எந்த போராட்டத்திற்கும் மக்களின் விழிப்புணர்வு மிக முக்கியம். கிழக்கிந்திய கம்பனி எப்போதே வந்துவிட்டதே, அப்போது ஏன் போராடவில்லை, இப்போது போய் வெள்ளையனே வெளியேறு என்று போராட்டம் நடத்துவது சரியா என்று யாரவது கேட்பார்களா? கேட்டால்தான் அது சரியாகுமா அல்லது அறிவுடைமை ஆகுமா ? அணுசக்தி ஆணையத்தலைவர் ஸ்ரீகுமார் பானர்ஜி கூட போராட்டத்தின் நிஜமான காரணமாக இருக்கும் நியாயமான அச்சத்தை அல்லது போரட்டத்தின் நேர்மையை சந்தேகப்படவில்லை (18 -10 -2011 -தினமணி).

இப்போது அச்சம் குறித்து அத்தனை பேரும் மேதைகள் போல வியாக்கியானங்கள் செய்து வருவது வியப்பை தருகிறது. கல்பாக்கத்தினால் எந்த பாதிப்பும் இல்லை என்பது தவறு. அப்பகுதியில் இருக்கும் பாதிப்புகளை மருத்துவர் புகழேந்தி ஆதாரத்துடன் தெளிவாக விளக்கியுள்ளார். சென்ற மாத இந்தியா டுடே இதழ் இது குறித்து விரிவாக செய்தி வெளியிட்டுள்ளது. அங்கே போராடுவதற்கு காவல்துறை அனுமதி மறுத்தும் நீதிமன்றம் போய் அனுமதி பெற்று போராட்டங்கள் துவங்க போவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. உண்மை நிலையை மூடி மறைப்பதற்கு அணுசக்தித் துறை முழு முயற்சியும் செய்து வருகிறது. முறைகேடான வழிகளிலும், சதி வேலைகளிலும் ஈடுபட்டு மக்களை ஏமாற்றியும் வருகிறது என்பதுதான் உண்மை. வெறும் 450 மெகாவாட் தயாரிக்கும் கல்பாக்கத்திலேயே இந்த அளவிற்கு பாதிப்பு என்றால் இப்போதைக்கு 2000 மெகா வாட் தொடர்ந்து பல உலைகள் என்று திட்டமிடப்படும் கூடங்குளம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சுடுகாடாக்கும் சக்தி கொண்டதாக இருக்கும் என்றால் அது மிகையல்ல.

விமான, ரயில், பேருந்து விபத்துக்கள் நடப்பதால் யாரும் பயணங்கள் செய்ய வேண்டாம் என்று முடிவு செய்வதில்லை என்று ஒரு தவறான ஒப்பீட்டை அணுஉலை விபத்தோடு பொருத்தியுள்ளீர்கள். வாகன விபத்துக்கள் நடந்தால் அதன் பாதிப்பு அந்த விபத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு மட்டும்தான். அணு உலை விபத்து என்பது அணுகுண்டு வெடிப்பிற்கு ஈடானது மட்டுமல்லாமல் தொடர்ந்து வெளிப்படும் கதிர்வீச்சால் பல ஆண்டுகளுக்கு ஆபத்துகளை விளைவிக்கக் கூடியதாக இருக்கும். பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு வாழும் லட்சக்கணக்கான மக்களை மீள்குடியமர்வுக்கு வாய்ப்பே இல்லாமல் அவர்களின் பூர்வீக வாழிடங்களை விட்டு இடம்பெயரசெய்து மறு வாழ்விற்குத் தேவையான நிவாரணங்களை செய்ய வேண்டியிருக்கும். உயிருள்ள எதுவும் வாழ முடியாத நஞ்சூட்டப்பட்ட பாலை நிலமாக மாறும். இத்தகைய கடும் விளைவுகளை கொண்ட அணு உலை விபத்தினை பயண நேர விபத்துகளுடன் ஒப்பீடு செய்வது மிக மிகத்தவறான ஒரு போக்கு. அணு உலை விபத்து ஏற்பட்டால் இழப்பீடு தருவதிலிருந்து பன்னாட்டு முதலாளிகளே பின்வாங்குவதும், தாங்கள் எந்தவிதமான பொறுப்பையும் ஏற்க முடியாது என்று கூறுவதும், அணுஉலை கழிவுகளையும் தாங்கள் திரும்பப் பெற முடியாது என்று ஒப்பந்தங்கள் போடுவதையும் இங்கே கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும். அணு உலை வெடிப்பின் பாதிப்புகளுக்கு யாராலும் இழப்பீடு செய்ய முடியாது என்பதும் அதன் விளைவுகளை யாராலும் தடுக்க முடியாது என்பதும் பேருண்மையாகும்.

செர்நோபில் விபத்திற்குப் பின் ரஷ்யா இன்று வரை புது அணுஉலைகள் எதுவும் நிறுவவில்லை. இத்தாலியில் பொது வாக்கெடுப்பில் 95% மக்கள் அணு உலைகள் வேண்டாம் என்று முடிவு செய்துள்ளனர். மூன்று மைல் தீவு அணு உலை விபத்துக்குப் பின் கட்டி முடித்து இயக்கிய சோர்ஹம் அணு உலையை எரிபொருள் மாற்றி இயற்கை எரிபொருள் கொண்டு இயக்கினர். வேறு அணு உலைகள் அமைக்கப்படவே இல்லை. 2022இல் அனைத்து அணுஉலைகளையும் மூடிவிட ஜெர்மனி முடிவு செய்துள்ளது. புகுஷிமா விபத்திற்குப் பின் 28 பழைய அணு உலைகளை ஜப்பான் மூடிவிட்டது. கட்டப்பட்டுக் கொண்டிருந்த 10 அணுஉலைகளையும் கை விட்டு விட்டது. சுவிட்சர்லாந்த், மெக்ஸிகோ போன்ற நாடுகள் இருக்கும் அணு உலைகளை மூடுவது என்றும் புதிய அணு உலைகள் வேண்டாம் என்றும் முடிவு செய்துள்ளன‌. இந்தியாவில் மேற்கு வங்கம் அணு உலைகளே வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது. ஏன் கூடங்குள‌ம் திட்டமே ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களினால் துரத்தப்பட்டு தமிழர் தலையில் வஞ்சகமாகக் கட்டபட்டதுதானே.

மின்சாரம் தேவையில்லையா?

தொடரும் மின்வெட்டால் தமிழகம் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறதே என்னும் கேள்விகளை முன்வைத்து அதற்காக அழிவுசக்தியான அணுமின்சாரம்தான் வேண்டும் என்று அடம் பிடிப்பது போராட்டத்திற்கு எதிராக தூண்டப்படும் ஓர் அரசியல் சூழ்ச்சி என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் மின்தேவையை ஈடுகட்ட மத்திய தொகுப்பில் இருந்து நிறுத்தப்பட்ட 1000 மெகா வாட் மின்சாரத்தை திரும்ப வழங்க வலியுறுத்துவது, திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டின் மூலம் மின்சாரம் வீணாகாமல் தடுப்பது, மின்தேவைகளுக்காக மத்திய அரசினை வலியுறுத்துவது போன்ற வகையில் போராட்டங்கள் நடைபெற வேண்டுமே அன்றி தங்கள் வாழ்வையும், வாழ்வாதாரங்களையும் காத்துக்கொள்ள போராடும் எளிய மக்களுக்கு எதிராக மின்வெட்டால் அவதியுறும் பொது மக்களையும், பாதிக்கப்படும் சிறுகுறு தொழில் முனைவோரையும் தூண்டிவிடுவது மிகப்பெரிய சதிவேலையாகும். மின்சாரமும் தராமல், தமிழ்நாட்டின் மின்திட்டங்களுக்கான நிதியையும் தராமல் இருந்துவிட்டு, மின்வெட்டினால் எழும் மக்களின் ஆத்திரம் தங்கள் மேல் திரும்பாமல் பார்த்துக்கொள்ளவே மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு தனது கட்சியினையும், சாதி சமய அமைப்புகளையும் தூண்டிவிட்டு அணுஉலைக்கு ஆதரவான போராட்டங்களில் இறக்கியும், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை உருவாக்கும் விதத்தில் வன்முறைசெயல்களில் ஈடுபடுத்தி வருகிறது.

கூடங்குளம் திட்டத்தைப் பொருத்தவரை அதை யுரேனியும் எரிபொருளால் இயங்கும் தொழில்நுட்பத்தை மாற்றி அமெரிக்காவின் ஷோர்ஹாம் உதாரணத்தை பின்பற்றி இயற்கை எரிவாயுவால் இயங்கச் செய்தால் மின்சாரமும் கிடைக்கும். இதுவரை செலவிட்ட பணமும் வீணாகாது, மக்களுக்கும் பாதிப்பில்லை என்ற நிலை ஏற்படும். போராட்டங்களும் ஓய்ந்து சுமூக நிலை திரும்ப வழி ஏற்ப்படும். அதை விடுத்து அணுஉலைகள் இல்லாவிட்டால் மின்சாரமே இல்லை என்பதைப் போன்ற ஒரு மாயபிம்பத்தை உருவாக்குவது விஞ்ஞானத்திற்கு முரணானது. கழிவு மேலாண்மை, அணுஉலை ஆயுள் முடிந்த பின்னர் அதனைப் பிரித்து எடுக்க, அதன் பின்னர் அதனை பாதுகாக்க ஆகும் செலவீனங்களை சேர்க்காமல் அணுமின்சாரத்திற்கான செலவு குறைந்தது என்று கூவி கூவி விற்கப் பார்க்கிறார்கள். மேற்சொன்ன செலவுகளைச் சேர்க்கும்போது அணுமின்சாரம் பலமடங்கு கூடுதல் செலவு பிடிக்கக்கூடியது என்பது புரியும்.

 நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் 97% சதத்திற்கு மேல் அணுமின்நிலையங்கள் இன்றி நம்மால் இயங்க முடியுமெனில் 3% குறைவான மின்னுற்பத்திக்கு இத்தகைய பாதிப்பு உள்ள அணு உலைத் திட்டங்களை சுமப்பது அவசியமா? அனைத்தையும் ஆராய்ந்து பார்த்தால் ஒன்று மட்டும் மிகத் தெளிவாகப் புரியும். அணு உலைகளைத் திணிப்பவர்கள் அந்நிய நாட்டு முதலாளிகளின் லாப வேட்கைக்கு நமது வளங்கள் கொள்ளை போக அயராது உழைக்கும் உள்ளூர் தரகு முதலாளிகள் ஆவர். இவர்கள்தான் இன்று காங்கிரஸ், பா.ஜா.க என்று மத்தியில் ஆளும் எந்தக் கட்சியாக இருந்தாலும் நாட்டை கொள்ளை அடிக்கும் கொள்ளைக்காரர்கள். இவர்களுடன் கூட்டாளியாகவும் உள்ளூர் இடைத்தரகர்களாகவும் இருப்பது மாநில அரசுகள், கட்சிகள் ஆவர். இவர்களுக்கு உதவி செய்து காலைப் பிடித்து எலும்புத் துண்டுகளை பொறுக்கிக் கொள்பவர்கள்தான் மதவாத, சாதிய குழுக்கள்..

இடிந்தகரை-கூடங்குளம் எழுச்சி

இவர்கள் அத்தனை பேரின் தொடர் தாக்குதல்களுக்கு ஈடுகொடுத்து முன்னோக்கி செல்கிறது இடிந்தகரை-கூடங்குளம் எழுச்சி. இவர்களுக்கு ஆதரவாக புரட்சிகர மக்கள் சார் இடதுசாரி அமைப்புகள், தமிழ்த்தேசிய அமைப்புகள், சுற்றுச்சூழல் அமைப்புகள், ஆர்வலர்கள், உண்மையை சீர்தூக்கி பார்க்கும் சமய-சமுக அமைப்புகள், அரசின் அடக்குமுறைக்கு அஞ்சாத தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் எல்லாவற்றிற்கும் மேலாக போராடும் மக்களுக்கும், இயக்கங்களுக்கும் ஆதரவு காட்டும் பொதுமக்கள் ஆகியோர் இணைந்த இந்த போராட்டமானது இன்றைக்கு ஒரு புதிய வரலாற்றினை எழுதிக் கொண்டிருக்கிறது. இத்தகைய வரலாற்றினை படைக்கும் மாபெரும் மக்கள் இயக்கத்திற்கு நாமும் தோழமை சக்தியாக மாறுவதுதான் காலம் நமக்கு இடும் கட்டளை......

- அன்ரனி க்ளாரெட்

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #31 மனோகரன் 2012-02-22 17:31
22டிசம்பர்2011.

//முடிந்தால் ஒரு முது நிலை மருத்துவ பட்டதாரியான அவரை எந்த மருத்துவக் கழகம் அல்லது மருத்துவ இதழிலாவது அதை வெளியடச்செய்யவு ம்முடிந்தால் ஒரு முது நிலை மருத்துவ பட்டதாரியான அவரை எந்த மருத்துவக் கழகம் அல்லது மருத்துவ இதழிலாவது அதை வெளியடச்செய்யவும்//.
ஏதாவது ஒரு மருத்துவ இதழில் வந்தால் மட்டும் எதுவும் உண்மை ஆகிவிடாது. மருத்துவர் புகழேந்தி சொன்னால் அது பொய்யாகிவிடாது. இதற்கே மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டிருகிற து.
மாநில அரசும் மத்திய அரசும் ஒரு மிக பெரிய வல்லுநர் குழு நியமிக்கட்டும். அந்த குழு பொது மக்கள் முன்னிலையிலோ அல்லது தொலைகாட்சியியோ கூடங்குளம் மக்கள் நியமித்த வல்லுநர் குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்தலாமே.
Report to administrator
0 #32 durai ilamurugu 2012-02-25 18:21
அரசு என்றைக்கு உண்மை பேசி இருக்கிறது ? சரி உதயகுமார் பேசுவது எல்லாம் உண்மை என்பதற்கு சான்றூ?

இடிந்த்கரைக்கு பலர் வந்து இருக்கிறார்கள் அது ஜைதபூர் போராட்டத்தை பற்றிய உண்மைகளை சொல்லியது ஆகாது அரசிடம் கூலி வாங்கும் அதிகாரி என்கிறீர்கள் ?உதயகுமார் யாரிடம் ப்ணம் வாங்குகிறார்? அரசு அதிகாரி தன்னுடைய உழைப்புக்கு ஊதியம் வாங்குகிறார் உ குமாரைப்பள்ளிகூ டம் நடத்தி பொருள் ஈட்டுவது இல்லை !
புகழெந்தியின் அறிக்கையைப் பற்றி எதுவும் அறியாமல் பேசுவது நான் இல்லை உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்? பார்க்கலாம் அவருக்கு வந்த கொலை மிரட்டலுக்கும் இதற்கும் என்ன தொடர்பு ? கொலை மிரட்டல் விட்டது யார்? தெளிவாக சொல்லுங்கள் பிறகு கச்சேரியை தொடரலாம்
சுனாமி வந்து பல மாதங்கள் நாகையும் கூட இருண்டு தான் கிடந்ததது சுனாமி வந்தால் அங்கு ஒரு அனல்மின் நிலயமிருந்தால் அதுவும் கெட்டுப்போய் இருக்கும் / 30ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த தொழில் நுடபம் தற்பொழுது மாறி இருப்பது உங்களுக்கு புரியவில்லையா?


மருத்துவ இதழில் வந்தால் நமப்லாம் சிறந்த மருத்துவ இதழ்கள் கட்டுரைகளின் உண்மையை ஆய்வு செய்த பிறகுதான் வெளியிடும் உ குமார் குழுவினர்தான் உண்மைக்கு மொத்த குத்தகை தாரர் என்பது போல் பேசுவது நல்ல் நகைச் சுவை
Report to administrator
0 #33 tamizhkumaran 2012-02-26 23:13
அடிப்படை உண்மைகளையும் அரசினையும் பற்றி கூட தெரிந்து கொள்ளாத ஒரு நபராக இருக்கிறீர்கள். வடிவேலு போன்று என்ன எப்படி?என்று கேள்விகள் கேட்டு கொண்டே போவதில் இருந்தே உங்களுக்கு பல விடயங்கள் தெரியாது என்பது தெரிகிறது.பணம் வாங்குகிறார் உதயகுமார் என்று நாராயணசாமி உங்களை போன்று கேட்டதற்குதான் உதயகுமார் நாராயணசாமி மீது அவதூறு வழக்கு போட்டு அதற்கு நாராயணசாமி மன்னிப்பு கேட்டார் உங்களுக்கு தெரியுமா? அதே காரணத்தை பேசும் மன்மோகன் சிங்கின் மீது வழக்கு தொடரப்போவதாக அறிவித்துள்ளார் .சொந்த தொழில் செய்பவர்கள் எந்த முதலாளிகளுக்கும ் அஞ்ச வேண்டியதில்லை.அ ரசு துறையில் இருப்பவர்கள் அரசு சொல்வதைத்தான் செய்ய முடியும். //அறியாமல் பேசுவது நான் இல்லை// எல்லாவற்றையும் என்னிடம் கேட்டு தெரிந்து கொள்ள முயற்சிக்கிறீர் கள்.இடிந்தகரைக் கு யாரோ பலர் வரவில்லை ,ஜைதாபூர் போராட்ட குழுவினர் மற்றும் அணு விஞ்ஞானிகள் தான் வந்திருந்தனர். இதுவரை மேலே நீங்கள் கூறிய விடயங்களையே உங்களால் சரி என்று கூற முடியவில்லை. இங்கே தொடரும் வாதத்தை நிறுத்தி விட்டால் எங்கே தோல்வி அடைந்துவிடுவோமோ என்று சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் பேசி வருகிறீர்கள் .நகைச்சுவையாளர் யார் என்று இங்கே தொடரும் வாதங்களை படிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள்.
Report to administrator
0 #34 மனோகரன் 2012-02-27 17:23
பின்வரும் சுட்டியை படித்து தெரிந்து கொள்ளவும்.
//கதிர்வீச்சு உண்மையைச் சொன்னால் என்கவுண்டர்!! - மருத்துவர் புகழேந்தி//
http://keetru.com/index.php?option=com_content&view=article&id=17689
Report to administrator
0 #35 durai ilamurugu 2012-02-28 12:24
உ குமார்வழக்கு தொடரப்போவதாக சொல்லி பல நாட்கள் ஆகிவிட்டது இன்னும் போடவில்லை அவர் சுவீடன் நட்டில் உள்ள ஏதோ ஒரு அமைப்பூடன் தொடர்பு கொண்டுள்ளர் என்பதை அவர் வாயால் சொல்லுவதற்கே இத்தனை காலம் ஆகிவிட்டது மற்ற செய்திகளும் வரும் பொறுங்கள் நீங்ககள் என்னை வடிவேலு என்று சொல்லுவதன்மூலம் யாரையவது அவமதிப்பாக நினைத்தால் உங்களுக்காக வருத்தப்படுகிறேன்
மனோகரன் அ ந்த கடிதத்தை நான் படித்துவிட்டெண் ஒரு காவல்துறை அதிகாரி மிரட்டியதக் எழுதி இருக்கிறார் அது அவருடைய தகவல் அவ்வளுவுதான். பெரிய அம்மையை ஒழித்ததல்தான் எய்ட்ஸ் பரவி விட்டது . எய்ட்ஸ் என்பது அமேரிக்கர்கள் கறுப்பர்களையும் மற்றவர்களையும் கொல்லுவதற்காக தங்களுடைய ஆய்வுக் கூடத்தில் தயார் செய்தார்கள்" என்று பலவாறு பேசும் அந்த " மருத்துவரையும் நம்புவதற்கு மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் விந்தை
Report to administrator
0 #36 மனோகரன் 2012-02-28 22:29
பல அணு உலை விபத்துகள் உலகில் நடந்து விட்டன. கைபுண்ணுக்கு கண்ணாடி தேவை இல்லை. ஆக அணு உலையின் சாராம்சங்களை நாம் விவாதித்து கொண்டிருக்கும்ப ொழுது அதை தவிர்த்து உதயகுமார் அந்த நாட்டுடன் தொடர்பு கொண்டுள்ளார் என்பதும் தொண்டு நிருவதினருடன் தொடர்பு கொண்டுள்ளார் என்பதும் அடிப்படையான விடயத்தை திசை திருப்ப பயன்படுமே தவிர வேறு ஒன்றுக்கும் உதவாது.
கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களில் பேர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வகை புற்று நோய்களால் பாதிகபட்டுளனர் என்று வெட்ட வெளிச்சமாக தகவல்கள் ஏற்கனவே வெளியில் வந்துள்ளது. (இந்தியா டுடே,ஜனவரி 18,2012) ஆக கல்பாக்கம் அணு உலை யால் ஒன்றுமே நேரவில்லை என்பதும் மக்கள் அதிக சுகதாரதுடன் உள்ளனர் என்பதும் வடிகட்டின பொய்யாகும்.
மேலும் அச்சுற்று வட்டார மக்களுக்கு பல்வேறு நோய்களும் நன்கொடையாக அணு உலை தந்திருக்கிறது. மேலும் கூடங்குளத்தில் அணு கழிவுகளை எப்படி மேலாண்மை செய்வீர்கள் என்று மக்கள் கேட்பதற்கு உரிமை இருக்கிறது. அதை கேட்டால் மற்ற நாடுகள் என்ன செய்யுமோ அதைதான் நாங்களும் செய்வோம் என்று பொறுப்பில்லாமல் பதில் சொல்லுவதும், நாட்டின் ரகசியத்தை வெளியிடமாட்டோம் என்று சொல்வதும் மக்களுக்கு இயல்பாகவே அச்சத்தை அதிகரிகின்றன. மேலும் நாடு முழுவது அணு சக்திக்கு எதிராக மக்கள் தன்னிச்சையாக போராடிவருகின்றன ர். இந்திய ஏகதிபதயத்தின் எரிசக்தி கொள்கை மாறும் வரை போராட்டம் நீடிக்கும்.
Report to administrator
0 #37 மகிழ்நன் 2012-03-01 12:34
1998-இல் இந்திய -ரஷ்ய ஒப்பந்தம் செய்யப்பட்ட நாளிலிருந்தே இந்த திட்டதிற்கு எதிரான போராட்டங்களும் துவங்கிவிட்டன என்பதுதான் உண்மை. அடிக்கல் நாட வரவிருந்த பிரதமரும், முதல்வரும் மக்கள் எதிர்ப்பின் காரணமாகவே வருகையை ரத்து செய்தனர். 1989 மே 1 இல் கன்னியாகுமரியில ் நடைபெற்ற எதிர்ப்புப் பேரணியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் கூட நடைபெற்று இருக்கிறது. அதன் பின்னர் அணு உலை எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கேற்பதற்கு மக்கள் அஞ்சிய காரணமும் அதுதான். //

1998 ஆ அல்லது 1988
Report to administrator
0 #38 Guest 2012-03-01 20:31
எண்ணித்துணிக கருமம் துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு அதர்க்ககதனே போராடுகிறோம் துரை தெரியமால எங்கள் வழியில் வந்துவிட்டிர்கள ் நன்றி
Report to administrator
0 #39 tamizhkumaran 2012-03-03 15:13
அணுஉலை விபத்தை சமாளிக்கும் நிலையில் இல்லை - இனி அணு உலையே வேண்டாம்!- ஜப்பான்
29 Feb 2012 01:00,

(29 Feb) டோக்கியோ: இனி புதிய அணு மின் நிலையங்களை அமைப்பதில்லை என்றும், படிப்படியாக மாற்று மின் திட்டங்களை செயல்படுத்தப் போவதாகவும் ஜப்பான் அறிவித்துள்ளது. மேலும் இனி ஒரு அணுஉலை விபத்து வெடித்தாலோ, ஏற்கெனவே சேதமடைந்த புக்குஷிமா உலையிலிருந்து மீண்டும் கதிர்வீச்சு வெளிப்பட்டாலோ அதைச் சமாளிக்கும் நிலையில் ஜப்பான் இல்லை எனவும் அந்நாட்டு அரசே அறிவித்துள்ளது. சர்வதேச அளவில் அணுஉலைகள் குறித்த மாயையில் சிக்கியிருக்கும ் நாடுகளுக்கு ஜப்பானின் இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. அணு மின் நிலையங்கள் பாதுகாப்பானவை என்று கூறிக் கொண்டு எக்கச்சக்கமாய் அணுஉலைகள் அமைத்த வளர்ந்த நாடுகள், இப்போது பயத்தின் விளிம்பில் நிற்கின்றன. செர்னோபில் கோரத்துக்குப் பிறகு தனது நாட்டில் அணு உலைகளையே அமைக்காமல் நிறுத்திவிட்ட ரஷ்யா, முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளில் மட்டும் அவற்றை உருவாக்கி வருகிறது. மேலும் இந்தியா போன்ற நாடுகளில் இந்த அணுஉலைகளை அமைக்கிறது. ஆனால் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் புதிய அணுஉலைகளை இனி நிறுவுவதில்லை என அறிவித்துவிட்டன . பீதியில் டோக்கியோவை காலி செய்ய தயாராக இருந்த ஜப்பான்..

ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி மற்றும் நில நடுக்கத்தின் காரணமாக புக்குஷிமா அணுஉலை சேதமடைந்த போது, அந்த மின் நிலையத்தின் அதிகாரிகளும், அரசும் பீதியடைந்துவிட் டார்களாம். இந்த அணுமின் நிலையம் முற்றாக சேதமடைந்து, அதன் விளைவாக பெரும் சீரழிவுகள் ஏற்பட்டு தலைநகர் டோக்கியோ முழுவதையும் காலி செய்ய வேண்டிய ஒரு சூழல் கூட கடைசி தருணத்தில் தான் தவிர்க்கப்பட்டத ாக இந்த பெரும் விபத்து குறித்த சுயாதீனமான அறிக்கையை தயாரித்துள்ள நிபுணர்கள் குழு கூறியுள்ளது. இந்த அறிக்கைய எழுதிய குழுவின் தலைவரே இதனை மீடியாவுக்கு தெரிவித்துள்ளார ். "அணு உலை பாதுகாப்பு எனும் மாயையயில் சிக்கியிருந்த அரசாங்கம் இப்படியான ஒரு பேரழிவை எதிர்கொள்ள தயாரான நிலையில் இல்லை," என்றும் அவர் தெரிவித்துள்ளார ். இந்த விபத்தில் பெரும் உயிரிழப்பு ஏற்படாவிட்டாலும ், நாட்டின் உணவுச் சங்கிலியில் கதிரியக்க பாதிப்பு இருக்கலாம் என்ற கவலை நீடிப்பதை ஜப்பான் அரசும் ஒப்புக் கொண்டுள்ளது. இந்த விபத்துக்குப் பிறகு புதிய அணுமின் நிலையங்களை அமைப்பதில்லை என்று ஜப்பான் முடிவுசெய்துள்ள து. இன்னும் கட்டுப்பாட்டுக் குள் வராத புக்குஷிமா! இதற்கிடையே, சுனாமி பாதிக்கப்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும் இன்னும் புக்குஷிமா அணுஉலையின் கதிர் வீச்சு பாதிப்பு அகலவில்லை. இந்த அணுஉலை மையத்துக்குள் பணியாற்ற பணியாளர்கள் தயங்கி வரும் நிலையில், அணு உலையைக் குளிர்விப்பதற்க ான நீரேற்றுப் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. வெப்பம் அதிகரித்தாலும், ஒரேயடியாகக் குறைந்தாலும் உடனடியாக கதிர்வீச்சு பெருமளவு தாக்கும் ஆபத்து இன்னும் நீடிக்கிறதாம். சர்வதேச பத்திரிகையாளர்க ள் குழு நேற்று இந்த நிலையத்தைப் பார்வையிடச் சென்றது. இந்த அணுஉலையின் இப்போதைய நிலை, இனி வரவுள்ள ஆபத்துகள் குறித்து இந்தக் குழு ஆய்வு செய்தது. அணுஉலை செயல்படாத நிலையிலும், வெப்பத்தை கட்டுக்குள் கொண்டுவர, தினசரி பல மில்லியன் கேலன் தண்ணீரை செலுத்தி வருகின்றனர் பணியாளர்கள். இன்னொரு பக்கம், உலையிலிருந்து கதிர்வீச்சு மிக்க 10000 டன் நீர் மாதந்தோறும் இந்த உலையிலிருந்து கசிந்தபடி இருப்பதாகவும், இதைச் சுத்தமாக்குவது தங்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருப்பதாகவும் அணுஉலை நிர்வாகத்தினர் வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளனர். குறிப்பாக இந்த மாதத்தின் ஆரம்பத்தில் மட்டுமே 4வது அணு உலையிலிருந்து ஒரே நாளில் 8 டன் கதிர்வீச்சு நீர் (radioactive water) வெளியேறியதாகவும ், இதுதான் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்திவிட்ட தென்றும் பணியாளர்கள் தெரிவித்தனர். அணுஉலையிலிருந்த ு எரிபொருளை முற்றாக அகற்றும் வரை இந்த அச்சமான சூழல் நிலவும் என அதன் புதிய மேலாளர் தெரிவித்தார். இந்த உலையின் கசிவுகளை முற்றாக அடைக்க 6 வருடங்கள் ஆகும் என்றும், எரிபொருளை முழுமையாக அகற்ற 25 ஆண்டுகள் ஆகும் என்றும் புகுஷிமா அதிகாரிகள் அறிவித்துள்ளனர் .
Report to administrator
0 #40 durai ilamurugu 2012-03-04 01:11
புகொஷிம பற்றிய தகவல்களுக்கு சான்று அளிப்பாரா திரு தமிழ்க்குமரன்
Report to administrator
0 #41 durai ilamurugu 2012-03-04 12:21
". ஆனால் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் புதிய அணூலைகளை இனி நிறுவுவதில்லை என அறிவித்துவிட்டன"
அப்படி என்றால் இப்போது இருக்கும் அணு உலைகள்? கெர்மனியில் 2022க்குப்பிறகு அணு உலைகளை மூடப்போவதாக சொல்லுகிறது ஆபத்து என்றால் 10 ஆண்டுகள் காத்திருப்பானேன ்? பிரான்சு நாட்டு யூரேனியம் வாங்குவதில் குளறுபடி லஞ்சம் ஏற்பட்டதால் சில அணு ஆலகள் இயங்குவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது100 விழுக்காடு ஆபத்தான அணு உலைகள் உலகில் மொத்தம் 443 இருக்கின்றன என்பதை அறிவீர்களோ ? அவை யாவும் இய்ங்கிக் கொண்டுதான் இருக்கின்றன அமெரிக்கா 3 புதிய அணு உலைகளை ஜியார்ஜியாமாகணத ்தில்தனியார் துறையில் அமைக்க உள்ளது
ருச்சியா 9அணுஆலைகள்கட்டி க்கொண்டு இருக்கிறது
பிரான்சு 2
இங்கிலாந்து 4
நண்பர் பொய் தவிர வேறு ஒன்றும் பேச மட்டார் போல
Report to administrator
0 #42 thomasrojar 2012-03-08 19:33
துரை முருகு, அந்த பகுதி மக்களின் கருத்தை ஏன் அரசு ஏற்க மறுக்கிறது. கருத்து கேட்பு முறையாக நடத்த்ப்படவில்ல ை. பேரிடர் பயிற்சி நடத்தப்படவில்லை , ஆனால், நடத்திவிட்டோம் என்று உண்மைக்கு புரம்பாக அரசு சொல்கிறது. எங்களை சந்திக்க மறுக்கிறது. ஏன்? ஒரு விபத்து நடந்தால், எங்களை எப்படி 24 மணி நேரத்தில், எங்கே தங்க வைப்பார்கள்? ஏன் நாங்கள் அமைத்த சயின்டிஸ்ட் குழுவை சந்திக்க மறுக்கிறார்கள்?
Report to administrator
0 #43 durai ilamurugu 2012-03-09 10:27
அணு உலைகளுக்கு தேவையான எல்லாபாதுகாப்பு ம் அமைக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை ஆனால் போராட்டத்தின் நொக்கம் அது இல்லையே அணு உலையே வேண்டாம் என்பது என்ன நீதீ?
Report to administrator
0 #44 tamizhkumaran 2012-03-09 12:48
துரை இளமுருகு முற்றிலும் நிதானம் இழந்து பேசுகிறார்.முதன ் முதலில் அவர் கேட்ட கேள்வியை போன்றே இப்போதும் கேட்கிறார். ஆபத்து நிறைந்த அணு உலையை நினைத்த மாதிரி மூடி விட முடியாது என்பதால் படி படியாக மூடத்தான் செர்மனி உள்ளிட்ட நாடுகள் திட்டம் இடுகின்றன. ஆபத்து மக்களுக்குத்தான ே அணு உலைகள் ஆயுதம் தயாரிக்க அரசுகளுக்கு தேவை .மக்களின் நலனை பற்றி எந்த அரசுக்கு கவலை இருந்திருக்கிறத ு.அமெரிக்காவிற் கு தற்போது மின்சாரம் அதிகமாக தேவைப்படவில்லை ஆனாலும் அனுமதி தருவது உலக சந்தையில் ஏற்ப்படும் கேள்விகளை சமாளிப்பதுதான். அமெரிக்கா அணு உலை தொடர்பாக விடுத்த டெண்டர்களுக்கு பெரிய வரவேற்பில்லை .ஏற்கனவே அனுமதி பெற்றவர்கள் கூட சிலர் தங்கள் உரிமத்தை திருப்பி கொடுத்து விட்டனர்.பிரான் ஸ் ,அமெரிக்க, ரஷ்ய போன்ற நாடுகள் நிதி பற்றாக்குறையில் சிக்கி இருப்பதும் அணு உலைகளால் விற்ப்பது மூலமாக பெரும் பொருள் ஈட்ட திட்டங்கள் வைத்திருப்பது உங்களை போன்றவர்களுக்கு தெரிந்தாலும் கண்ணை மூடி கொள்வீர்கள். உலகில் இயங்கும் 443 அணு உலைகளும் ஆபத்தானவைதான் .அவைகளில் பாதிக்கும் மேல் மூடப்படும் சூழல்கள் உள்ளது. இயங்கி கொண்டிருக்கும் ஆவிகளால் ஏற்ப்படும் பாதிப்பும் கடுமையாகத்தான் இருக்கிறது. அந்த பாதிப்புகள் அந்த அந்த அரசுகளால் மறைக்கப்பட்டு வருகிறது .சமீபத்தில் கூட பிரான்சில் அரேவா நிறுவனம் அணு கழிவுகளை சரியாக பராமரிக்காததால் நிலத்தடி நீரில் கதிரியக்கம் பரவி மக்கள் பாதிபுக்குலானார ்கள். புகுஷிமா ஆதாரத்திற்கு இதற்க்கு மேலே நான் போட்ட செய்திகள் நான் சொந்தமாக எழுதியதல்ல.அதிக ாரப்பூர்வமாக ஜப்பான் அரசு வெளியிட்ட தகவல்களில் இருந்து எழுதப்பட்ட செய்தி.அதனை நீங்கள் ஜப்பான் ஏடுகளில் கூட படித்து தெரிந்து கொள்ளலாம். இவ்வளவு பாதிப்புகள் ஏற்ப்படுத்தும் என்று தெரிந்தும் அணு உலை வேண்டும் என்று வாதாடுவது என்ன நியாயம் ?
Report to administrator
0 #45 durai ilamurugu 2012-03-12 15:12
நன்றி தமிழ்க் குமரன் மூடினால் அவர்களை பாராட்டு கிறார்கள் ஏன் உடணே மூடவில்லை என்றால் அவர்கள் மக்கள் நலனில் நாட்டம் இல்லதவர்கள் என்று கூறீகிறிர்கள் என்ன வாதமோ?அது செல்க> எந்த சப்பானிய இணயத்திலும் நீங்கள் சொன்னசெய்திகள் காணப்,படவில்லை ஒருவெளை சப்பானிலும் உங்களுக்கு மட்டும் தெரிந்த சப்பான் மொழியில் அணு எதிர்ப்பு பசெய்தி இதழ்களில் வந்து இருக்கலாம் சுனாமி வந்த உடனேயே சப்பான் மந்திரி சபையில் ஒருவர் ( அவர் பெயர் குறிப்பிடப்படவி ல்லை அணு உலைக்கு அபாயம் நேரிடும் அதை முதலில் மூடவேண்டும் என்று கூறீ இருக்கிறார் ஆனால் அரசு அதைக் கவனத்தில் கொள்ளவில்லை செய்தியே 1 வருடம் கழித்துதன் வெளியிடப்படப்டு கிறது அணு உலை போன்ற்வற்றில் பேரிடர் காலங்களின் போது செயலியழக்க செய்யவேண்டும் என்ற அடிப்படையைக் கூட பின்பற்றாமல் அணு உலையைக் குற்றம் கூறுவது என்ன நீதி? நான் கண்ணை மூடிக் கொண்டு படுத்து உறங்குவேன் அத்னால் எனக்கு அணு உலை தேவை இல்லை என்பது உங்கள் வழக்கமாக இருக்கலாம் அனல் அறிவியல் அதை ஏற்றுக் கொள்வதில்லை எசசரிக்கையுடன் இருப்பதே நம் அடையும் பலனுக்கு நாம் கொடுக்கும் விலையாகுமிந்து பத்திரிக்கை படிக்க இயன்றவர்கள் கூடங்குளம் பற்றீ வந்துள்ள நான்கு கட்டுரைகளையும் படிக்கும்படி வேண்டு கிறேன்11/3/2012
Report to administrator
0 #46 tamizhkumaran 2012-03-14 15:00
இந்து பத்திரிக்கைக்கு விளம்பரம் செய்யும் ,பா.ஜ .க.,இந்து முன்னணி போன்றவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் உங்களை போன்றவர்கள் ஜப்பானுக்கே அறிவுரை கூறும் அளவில் வளர்ந்திருப்பது மகிழ்ச்சி.உங்கள ை போன்றோர்கள் இல்லாமல்தான் அவர்களால் அணு உலை விபத்தை சமாளிக்க இயலாமல் போயிற்று.அடுத்த முறை பேரிடர்கள் வரும் போது நிச்சயமாக உங்களை ஆலோசனை கேட்பார்கள் என்றே நம்புகிறேன் .அணு உலை வேண்டாம் என்பது அறிவியல் அற்றது என்னும் உங்களது கண்டுபிடிப்புக் கு எந்த அளவிற்கு விருது தரலாம் என்று யோசித்து கொண்டிருக்கிறார ்கள்.உங்களது அறிவின் உயரம் கண்டு அந்த அளவிற்கு உலகத்திலே யாரும் இல்லை என்பதால் எல்லோரும் மண்டையை பிய்த்து கொண்டு இருக்கிறார்கள். இணையத்தில் செய்திகளை தேடி தெரிந்து கொள்ள தெரியாது என்று சொல்லி விட்டால் நல்லது அதை விடுத்து ஜப்பானிய இணையத்தளங்களிலே வரவில்லை என்று கூறுவது உங்களின் குறைவான அறிவுக்கு தக்க சான்றாக இருக்கிறது.இதில ் நக்கல் வேறு. அறிவியல் அறிவு கொஞ்சமும் அற்ற அணு விடயங்களை பற்றி எதுவும் தெரியாத(அறிவே இல்லாத) ஆங்கிலம் மட்டும் தெரிந்த ஒரு மூன்றாம் தர நிருபர் இந்து பத்திரிக்கையில் எழுதினால் கூட இந்து பத்திரிக்கையில் எழுதிவிட்டார்கள ் என்று உங்களை போன்ற மெத்த படித்த அறிவாளிகள் சிலாகித்து பேசுவது வழக்கமாக உள்ளது. உங்களுக்கு சாதாரண விடயங்களை புரிந்து கொள்ளும் அளவிற்கு கூட தகைமை இருப்பது போல் தெரியவில்லை. ஆனால் உங்களின் "எல்லாம் தெரிந்த" இந்த வெற்று தனத்தினால் அதனை வெளிப்படுத்தவும ் செய்கிறீர்கள். அணு சக்தியின் பாதிப்பினை இன்னும் அறிந்து கொள்ளாமல் அதனை ஆதரிக்கும் நீங்கள் பாதுகாப்பான அணு உலைகளை புனித நகரமாம் காசியில் வைத்து கொள்ளலாமே . உங்கள் புனித நகரம் மேலும் பாதுகாப்பாக இருக்குமே ? இதனை இந்து பத்திரிக்கையில் எழுத சொல்ல முயற்சி செய்யுங்கள். இந்த அணு உலை பிரச்சனையை முடித்து வாய்த்த பெருமை நம்மை சேரட்டும்
Report to administrator
0 #47 durai ilamurugu 2012-03-15 15:25
இந்து நாளிதழில்வந்த நான்கு கட்டுரைகளை நீங்கள் படிக்கவில்லை என்பது தெளிவகத்தெரிகிற து. அவ்ற்றில் 2 கட்டுரைகள் அணு மின் நிலயத்தை ஆதரித்தும் 2 எதிர்த்தும் வந்துள்ளன. ஒரு கட்டுரை கூடங்க்குளம் அணுமின் கழகத்தலைவர் திரு பாலாஜியவர்கள் எழுதியது மற்றும் ஒன்று அணுமின் நிலயத்தில்வேலை செய்யும் ஒருவரது மனைவி எழுதியது ., எதிர்கருத்துக் கட்டுரைகளில் ஒன்று 1978ல் ஆஸ்த்திரேலிய பெண்மருத்துவர் அணு உலைகளுக்கு எதிராக எழுதிய புத்தகத்தின் கருத்துகளை க் கொண்டது. எனவே அவற்றை படித்தால் நமக்கு உண்மை ஒரளவு தெளிவாக விளங்கும் . மற்றபடி இந்து முண்ணணி , ப ச. க பற்றியசெய்திகள் நகைப்புக்குறியன . என்னை இழிவு செய்வதாக எண்ணீக் கொண்டு தாங்கள் சொல்லும் கருத்துகள் உங்க்ளின் தரத்தையே காட்டுகிறது / அது செல்க சப்பான் பற்றிய செய்திகளில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது புகோசிமா அணு ஆலை பழுது உடையது என்பது அறிந்தும் அந்த அரசு அது குறித்து கவலை கொள்ளவில்லை என்பதே சுனாமி வந்த பிறகும் அமைச்சரவையில் ஒருவர் சுட்டிக்காட்டிய பின்னரும் அதை மூடுவதற்கு உரிய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே உரிய நடவடிக்கையை உரிய காலத்தில் எடுத்திருந்தால் கதிர் வீச்சு தடுக்கப்,பட்டு இருக்க்லாம் அல்லது குறைக்கப்,பட்டு இருக்கலாம் என்பதே
Report to administrator
0 #48 tamizhkumaran 2012-03-16 05:01
உங்களை இழிவு செய்வதற்கு உங்களை தாண்டி இன்னொருவர் அதை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. குறைக்க பட்டு இருக்கலாம் தவிர்க்க பட்டு இருக்கலாம் என்பதெல்லாம் சமீபத்தில் ஒரு அமெரிக்க விஞ்ஞானியின் அறிக்கையில் கூறப்பட்டிருக்க ும் செய்திகள்.காலம் தாழ்ந்து பேசுவதும் முடிந்த பின்னர் அப்படி செய்திருக்கலாம் இப்படி செய்திருக்கலாம் என்பதெல்லாம் வழமையாக நடப்பதுதான். அவருடைய சொற்களை நீங்கள் அப்படியே கூறுகிறீர்கள். இவ்வளவு ஆபத்துள்ள அணு உலையை தவிர்ப்பதுதான் அறிவுடைமை.
Report to administrator

Add comment


Security code
Refresh