மாடுகளைத் தெய்வமாக்கி
மனிதனை இழிவாக்கிய
மடமை உலகத்தை மாற்றிய
மாமேதை அம்பேத்கர்

கொடுமைகளைக் கொளுத்தி
அடிமைத் தனம் புதைத்து
மனிதனுக்கு மனிதனைக் கற்பித்த
மாமேதை அம்பேத்கர்

சாத்திரத்தைப் பொய்யாக்கிச்
சூத்திரன் எனும் சொல் நீக்கி
ஆத்திரம் கொண்டெழுந்த அறிவாளி
அண்ணல் அம்பேத்கர்

இழிவிலாத ஒரு சுத்த மதம்
புவியில் புனிதம் புத்த மதம் எனப்
புரிய வைத்த புரட்சித் தலைவன்
மாமேதை அம்பேத்கர்

விடிய விடிய விழித்திருந்த
கொடியவரைப் படித்தறிந்து
சத்தம் போடாமல் சட்டம் போட்ட
மாமேதை அம்பேத்கர்.

– பூங்கணியன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.