கடந்த சில வருடங் களாகவே இந்திய அரசியல் அமைப்பு முறையில் நாற்றம் அதிகமாக வீசத் தொடங்கி விட்டது. நாற்றத்தை மூடி மறைக்க அமெரிக்க மாமாவும், அவர்களிடம் பாடம் கற்ற கொழுப்பேறிய மன்மோகன்சிங், பா.சிதம்பரம் கும்பலின் மோடிமஸ்தான் வேலைகள் பலிக்காமல் போய்க் கொண்டிருக்கிறது.

இந்திய தேசியச் சிறைச் சாலைக்குள் இரத்த நாற்றம், தாய்மார்களின் அழுகுரல், பசி, பட்டினி, பாலியல் வன்முறைகள் ஜனநாயகம் என்ற வார்த்தைக்கு உண்மையான அர்த்தத்தை சம காலம் மனிதர்களான நாம் புரிந்து கொள்ளா மல் போய் விடுவோமோ என்ற அச்சத்தை இந்திய பயங்கரவாத அரசு நடவடிக்கை தீவிரப் படுத்துகிறது.

மத்திய தர வர்க்கம் கடந்த சில நாட்களாக ஊழல் ஒழிப்பை தீவிரமாக பேசிக் கொண்டிருக்கிறது. லலித் மோடி, ஆ.ராசா, கல்மாடி, காமன்வெல்த், எடியூரப்பா போன்ற ஊழல் பெருச்சாளி களின் செயல்பாடு இவ் வாதத்தை மேலும் தீவிரப் படுத்துகிறது. இந்த விவாதத்தில் நாம் ஒன்றை மட்டுமே பதிவு செய்யவேண்டியிருக்கிறது. அடிப்படையில் எங்கள் வாழ்க்கை வளங்கள் முழுவதும் விற்கப்படும் நிலையில் ஊழல் என்பது எங்களை யாரிடம் விற்பது என்று மட்டுமே நடைபெறுகிறது.

ஆகையால் புறக்கணிக்கப் பட்ட மக்கள் ஊழலை எதிர்ப்பதை விட தன் வாழ்க்கை, வளம், உரிமை விற்பனையாவதை எதிர்த்து போராடுவதே முக்கியமானதாக அமைகிறது. அதனால்ஊழலை எதிர்த்து கொதித்து எழும் மத்தியத்தர வர்க்கத்தை நாம் உரிமைக்கான போராட்டத்தில் அணி சேர்க்க நிர்பந்திப்போமாக.

ஊழலை எதிர்த்து போர்க்குரல் எழுப்பும் அனைத்து எதிர்க்கட்சியும் சரி, ஆளும் கட்சிகளும் சரி, நம் உரிமைக்கான போராட்டத்தை எதிர்ப்பதில் ஓரணியில் நின்று விடுகின்றன. அது மத்திய இந்தியாவில் நடைபெறும் பழங்குடியினர் போராட்டமாக இருந்தாலும் சரி, காஷ்மீர் விடுதலைப் போராட்டமாக இருந்தாலும் சரி, வடகிழக்கு இந்தியாவில் நடைபெறும் தேசிய இனப் போராட்டமாக இருந்தாலும் சரி இவர்கள் தங்கள் கட்சிகளின் பெயர்களை மறந்து பாரத் மாதாவின் சீடர்களாக மாறி ஒடுக்குவதில் ஓரணியில் திரண்டு விடுகின்றனர்.

இந்தியா உருவாக்கத்தை மிகத் தீவிரமாக கேள்விக் குள்ளாக்கும் வடகிழக்கு இந்தியாவில் அமைந்து இருக்கும் தேசங்களில் ஒன்றான மணிப்பூரின் ஐரோம் ஷர்மிளா சிறப்பு ஆயுதப் படை அதிகார சட்டத்திற்கு எதிராக நடந்து வரும் காலவரையற்ற உண்ணாவிரதம் கடந்த நவம்பர் 3ந் தேதி பத்தாண்டுகள் நிறைவுற்றது. இது உலக அரங்கில் இந்திய பயங்கரவாத அரசின் மனித உரிமை மீறல்களை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறது.

ஆயுதப் போராட்டம் எந்த வகையிலும் பிரச்சனைக்கு தீர்வு ஆகாது என்று கூக்குரல் எழுப்பும் நவீன கால மகாத்மாக்களின் காதுகளில் ஐரோம் ஷர்மிளாவின் ஒற்றைக் கோரிக்கை விழாதது ஏனோ? மணிப்பூர் தேசத்தின் வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது இந்த மகாத்மாக்களின் வன்முறையை காண முடிகிறது.

பிரிட்டிஷார் இந்தியத் துணைக் கண்டத்தை விட்டு வெளியேறிய அதே நாளில் ஆகஸ்ட் 11, 1947ல் மணிப்பூர் மகாராஜா போத் சிந்த்ராவும், இந்தியாவின் கவர்னர் ஜெனரல் மவுண்ட் பேட்டனும் உடன்படிக் கையில் கையெழுத்திட்டனர். அதனடிப்படையில் ஆகஸ்ட் 15,  1947ல் மகாராஜா தலைமையில் மணிப்பூர் சுதந்திர பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டது. பிரிட்டிஷ் கொடிகள் இறக்கப்பட்டு அதற்குப் பதிலாக மணிப்பூரில் பாகன்பா முத்திரை பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. மணிப்பூருக்கான புதிய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது.

1948ல் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு அரசியல் அமைப்புச் சட்ட மகாராஜா முன்னிலையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பதவியேற்கப்பட்டது. இதற்கிடையில் இந்திய பயங்கரவாத இருகிய மனிதர்களின் மிரட்டலுக்குப் பயந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ஆலோசிக்காமலே மகாராஜா 1949, அக்டோபர் 15ல் இந்தியாவுடன் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கலைக்கப்பட்டது. இந்திய அரசு அமைப்புச் சட்டம் அமலுக்குக் கொண்டு வரப்பட்டது.

1950 களிலிருந்து இந்தியாவின் சீர்கேடு மாநிலமாக மணிப்பூர் இருந்து வந்தது. பல்வேறு எதிர்ப்புக்குப் பின் 1956ல் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. 1968ல் மணிப்பூர் மாநில கோரிக்கை கமிட்டி உருவாக்கப் பட்டு பல்வேறு போராட்டங்களை நடத்தியது. இறுதியில் 1972ல் தனி மாநிலமாக மணிப்பூர் அங்கீகரிக்கப்பட்டது.

இந்தியத் துணைக் கண்டத்தில் வலுக்கட்டாயமாக இணைத்த முதல் நாளிலிருந்தே மணிப்பூர் மக்கள் தொடர்ச்சியாக புறக்கணிக் கப்பட்டு வருகின்றனர். 14ம் நூற்றாண்டின் பார்ப்பன ஆதிக்கம் தலைத் தூக்கி 18ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆதிக்கம் வளர்ந்து மீண்டும் பார்ப்பனப் பேய்க் கூட்டம் கபளீகரம் செய்து கொண்டிருக் கிறது. சுய பொருளாதார சமூகமாக இருந்த தேசத்தை உணவுக்காக வெளி உலகத் திடம் கையேந்தும் நிலைக்கு ஆளாக்கி விட்டனர். யுரேனி யம் போன்ற கனிம வளங்கள் மட்டுமே கார்ப்பரேட் பார்ப் பனிய கண்களுக்கு தெரிகிறது.

அங்கு ரத்தமும், சதையுமாகத் திரியும் மனிதக் கூட்டம் நடைபிணமாகவே கருதப்படுகிறது. பெண்களை முன்னிருத்தும் சமுதாயம் என்பதை மணிப்பூர் உணர்த்துகிறது. பிரிட்டிஷாருக்கு எதிராக நடத்திய போராட்டத்தை ஒருங்கிணைத்ததும் பெண்களே ஆனால் இன்றோ பாரத் மாதாவின் சிப்பாய்கள் மணிப்பூர் பெண்களின் சதைகளை ஆராய்ச்சி செய்கிறது.

எந்த விதத்திலும் இந்திய பார்ப்பனிய அரசிடம் சம்பந்தமில்லாத மணிப்பூர் மக்கள் தங்கள் தேசிய உரிமைக்காக வெகுண்டு எழுவதற்கு முன்னரே 1958ல் ஆயுத சிறப்புப்படை காவல் சட்டம் சில இடங்களில் அமுலுக்கு கொண்டு வரப்பட்டது. ஆயுதப் போராட்டம் தீவிரம் அடைந்ததையொட்டி 1980 களில் பெரும்பான்மை இடங்களில் இச்சட்டம் பரவலாக் கப்பட்டது.

இச்சட்டத்தில் சாராம்சம் என்னவெனில் சிவில் உரிமையை முழுமையாக மக்களிடம் இருந்து பிரிப்பது சட்டத்தை முழுமையாக இருட்டறையில் பூட்டி வைப்பது, கடந்த 50 ஆண்டு காலமாக மணிப்பூர் மக்களின் சாதாரண வாழ்க்கையை கேள்வி குறியாக்கிக் கொண்டிருக்கிறது இச்சட்டம். இதன் விளைவாக வரைமுறையின்றி பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றன. இளைஞர்களும் அப்பாவிப் பொதுமக்களும் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். இந்தியாவை எதிர்த்துக் கேள்வி யெழுப்பிக் கொண்டி ருக்கின்றனர். இச்சட்டத்தை எதிர்த்துதான் வீரமங்கை ஷர்மிளா கடந்த 10 ஆண்டுகளாக காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து கொண்டிருக்கிறார்.

1972ம் ஆண்டு மார்ச் 14ந் தேதி ஷர்மிளா பிறந்தார். விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர் இந்திய அரசின் பாடப் புத்தகங்களை அதிகமாகப் படிக்க முடியவில்லை. 12ம் வகுப்புடன் தன் படிப்பை முடித்துக் கொண்டார். இந்தியப் பாடப் புத்தகங்களில் அதிக புளுகு மூட்டைகள் இருப்பதனால் என்னவோ அவரால் அதிக ஆர்வம் காட்ட முடியவில்லையோ! என்னவோ? 1991ல் தன் பள்ளிப் படிப்பை முடித்த பின் பல்வேறு சமூக அமைப்புகளில் பணி யாற்றத் தொடங்கினார். மனித உரிமை அமைப்புகளுடன் மிக நெருக்கத்துடன் செயல்படத் தொடங்கினார். பல்வேறு மனித உரிமை அமைப்புகள் நடத்தும் பயிலரங்கம், கருத்தரங்கம் ஆகியவற்றில் கலந்து கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அவ்வாறு 2000 செப்டம்பர் மாதம் மனித உரிமை கழகம் நடத்திய இரண்டு மாத பயிலரங்கத்தில கலந்து கொண்டார். அம்மாதத்தில் சிறப்பு அதிகார சட்டத்தையும், மணிப்பூரில் நடக்கும் மனித உரிமை மீறல்களை ஆய்வு செய்ய பம்பாய் உயர்நீதிமன்ற முன்னால் நீதிபதி ஹெச். சுரேஷ் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அவ்விசார ணைக் குழுவுக்கு உதவி செய்யும் வண்ணமாக அவர்களின் மகிழ்வுந்துக்கு பின்னால் மிதிவண்டியில் பயணம் செய்து இரத்தச் சாட்சியங்களைக் கேட்டு அறிந்துக் கொண்டார்.

பயிலரங்கம முடிந்து இரண்டே நாட்கள் ஆன நிலையில் நவம்பர் 2, 2000 ஓங்காய் அருகில் கர் என்ற இடத்தில் கலாச்சார சம்பந்தமான ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டு மாலையில் ஒரு மிதிவண்டியில் வீடு திரும்பிக் கொண்டு இருந்த போது இடிபோல் ஒரு செய்தி அவரைத் தாக்கியது. மகுலர் கிராமத்தில் 10 அப்பாவி பொதுமக்கள் பாதுகாப்பு படையினரால் வரைமுறையற்று சுட்டு கொல்லப்பட்டனர். இச் செய்தி அவரை முற்றிலும் பாதித்தது. அன்று இரவு முழுவதும் அவரால் தூங்க முடியவில்லை.

நவம்பர் 3ல் ஏராளமான அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. மணிப்பூர் தேசமே அதிர்ச்சியில் உறைந்துபோனது. பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டன. இவை அனைத்தையும் தாண்டி ஒரு புதுவிதமான போராட்டத்தை நடத்த வேண்டுமென்று முடிவெடுத்த சர்மிளா ஒற்றை கோரிக்கை சிறப்புக் காவல் அதிகார சட்டத்தை நீக்கக் கோரி காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போவதாக முடிவெடுத்தார். அவர் போராட்டத்தை துவக்கிய நாளில் இருந்து பல தடவை தற்கொலைக்கு முயற்சித்ததாகக் கைது செய்து 6 மாதம், 1 வருடம் என்று தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தாலும் அவரது உறுதி மேலும் மெருகேறிக் கொண்டுதான் இருக் கின்றது. மேலும் 10 ஆண்டு களாக அவருக்கு செயற்கை (டியூப்) வழியாக மட்டுமே உணவு அளிக்கப்பட்டு வருகிறது.

சர்மிளாவை கைது செய்து விசாரணை என்ற பெயரில் நீதிமன்ற காவலில் காலவரையின்றி வைத்துவிட்டு திடீர் என்று ஒருநாள் விடுவிப்பது திடீரென்று கைது செய்வது வாடிக்கையாகி விட்டது. நீதிமன்றக் காவலில் இருந்து நிபந்தனை இன்றி தன்னை விடுதலை செய்யுமாறு சர்மிளா சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது.

மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் 2006 அக்.3ல் அவரை விடுதலை செய்தது. போராட்டத்தைத் தீவிரவப்படுத்த எண்ணிய சர்மிளா போலி பெயரில் விமானம் மூலம் டில்லி சென்று ஜெண்டர் மந்தர் தன் போராட்டத்தை தொடர்ந்தார். விஷயம் விபரீதம் அடைவதை அறிந்த டில்லி காவல் துறை இரவில் அவரை கைது செய்தது. தெற்கு டில்லியில் உள்ள அகில இந்திய விஞ்ஞான் மருத்துவ கழகத்திற்குக் கொண்டு சென்று பின்னர் சிகிச்சைக்காக வார்டு எண் 57 என்ற புதிய பிரிவில் தங்க வைக்கப்பட்டார். ஒரு வருட தில்லி போராட்டத்தின் பிறகு 2007 மார்ச் 4 மணிப்பூருக்கு மீண்டும் பயணம் செய்தார். அன்று இரவே மணிப்பூர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். அந்நாளிலிருந்து தனிமைச் சிறையில் காலத்தைக் கடத்திக் கொண்டு இருக்கிறார். பின்னர் மீண்டும் விடுதலை கைது என்று போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது.

அமைதி தத்துவத்தை ஏற்றுக் கொண்ட இந்திய மகாத்மா காதுகளில்  ஷர்மிளாவின் ஒற்றைக் கோரிக்கை விழ வில்லை. ஆனால் போராடும் அமைப்புகளிடையே இன மோதலை ஊக்குவித்துக் கொண்டு இருக்கும் குள்ள நரி வேலையை ஈடுபட்டுக் கொண்டவிருக் கின்றனர்.

அதாவது மணிப்பூர் தேசத்தை பொதுவாக மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒவ்வொரு பிரிவுகளும் பல உட் பிரிவுகளைக் கொண் டிருக்கிறது. மல்மத், நாகா, குக்கி போன்ற இனங்களிடம் திட்டமிட்டு இந்திய அரசு முரண்பாடு உருவாக்குகிறது. மக்கள் விடுதலையை முன்வைத்துப் போராடும் போது அவர்களை நிலை குலையச் செய்ய பாலியல் வன்முறையை இராணுவத்தார் ஒரு உக்தியாகக் கையாளப்படுகின்றது. இவைகளை மணிப்பூர் பெண்கள் தவிடு பொடியாக்குகின்றனர்.

 உதாரணமாக 2004ம் வருடத்தில் மனேரம்மா என்ற பெண் இராணுவத் தால் பலமுறை பாலியல் வன்முறை செய்யப்பட்டு, படுகொலை செய்யப் படுகிறாள். இதை கண்டித்து மெயிரா பைபிஸ் குழுவைச் சேர்ந்த பெண்கள் முழு நிர்வாணமாகஇந்தியா இராணுவ முகாம் முன்சென்று இந்திய இராணுவமே எங்களையும் கற்பழி, எங்களையும் கொலை செய், எங்கள் சதைகளையும் எடுத்துக் கொள் என்று மனேரம்மா படுகொலையைக் கண்டித்து அவர்கள் முழங்கியது அனைவர் நெஞ்சைம் உறைய வைத்தது. தமிழகம் போன்ற அமைதி பூங்காக்கள்தான் மணிப்பூர் போன்ற தேச விடுதலையை முட்டுக் கட்டையாக தடுத்து நிறுத்துகிறது. நம்மை பொறுத்தவரையில் பாரத் மாதாவையோ அல்லது இந்திய கட்டமைப்பையோ சுத்த தமிழால் புகழ்ந்து பேசினால் போதும், அவர்கள் எழுத்துக்களையும் பேச்சுக்களையும் பின் தொடர்ந்து விடுகிறோம்.

மணிப்பூர் போராட்டம் இந்திய கட்டமைப்பு எவ்வளவு கொடுமையானது என்பதை நமக்கு உணர்த்துகிறது. ஆகையால் ஷர்மிளா போன்ற மனித உரிமை போராளிகள் உறுதியை நம் நெஞ்சில் ஏந்துவோம்! மணிப்பூர் வீர பெண்களின் மன உறுதியை நம் படைக் களத்தில்  பெண்களிடம் பரப்பி விடுவோம். இந்திய ஆளும் கும்பல் எதைக்கொண்டு நம்மை ஒடுக்குகிறதோ அவைகளை கையில் தறித்து மனித உரிமையை மீட்கப் போராடுவோம்.

Pin It