விரகம்...

Indian Ladyஉறவுகள்
நடத்தும்
நாடகங்களால்
உணர்வுகள்
மேடையில்
அந்தரித்து
தவிக்கிறதது

உறவில் எழுதி
நாட் குறிப்புக்களை
உரத்தே வாசிக்கிறது
பிரிவின் விரகம்

ரணம்பட்டு
அலையும்
உயிரிலிருந்து
வடிகிறது
வார்த்தைகள்
வக்கிரமாகி.

குழம்பிய நாட்குறிப்பிலிருந்து...

மொழிக்கும்
சிந்தனைக்கும்
தீராத வாக்குவாதம்
பாதுகாப்புத்தேடி
அலைகிறது
வார்த்தைகள்
எழுதமுயல்கையில்
அழுகிறது கவிதை

மனதின் வலிகளுக்குள்
கனவுகள் கொல்லப்பட
கற்பனையும்
வெற்றுத்தாளும்
ஒன்று கூடல்
நடத்துகிறது ..


மைன் நதியில்..

மங்கிய மின் ஒளியில்
நனைந்து கொண்டிருக்கும்
மைன் நதியில்
உறங்கிக் கொண்டிருக்கும்
நகரத்தை
படம் பிடிக்கும்போது

எங்கிருந்தோ வந்து
தழுவிய பனிக்காற்று
நதியுடன் போராடி
என் நினைவுகளை
மீட்டுச்செல்கிறது

கலங்கிய நதியில்
அதிர்கிறது நகரம்
கலைந்து போகிறது
புகைப்படக் கனவும்..

Pin It