இவன்யாரய் யாஎன்றா கேட்டீர்? அய்யா
 இவன்தானை யாதமிழன்! கயிலை நாதன்
சிவனிவன்றன் தெய்வமெனச் சொல்லிக் கொள்வான்
 தென்னாட்டை உடையசிவன் என்பான்! ஆனால்
இவனுக்கென் றொருநாடிங் குளதா என்றால்
 இல்லையெனக் கைவிரிப்பான்! வடக்கே யுள்ள
எவனையெலா மோயிவன்றன் தலைவ னாக
 ஏற்றுக்கொண் டவனுக்குத் தொண்டு செய்வான்!

இவனுக்கோர் நாடில்லை யென்று கண்ட
 எல்லோரும் இவனைமிகத் தாழ்த்து கின்றார்!
எவராண்டால் என்னவென நிறைவு கொள்ளும்
 இவனையடி மைப்படுத்திப் பிறராள் கின்றார்!
இவன்மொழியின் சிறப்பையிவன் உணர்ந்தா னல்லன்!
 இழிமகனென் றிவனையெவர் இகழ்ந்த போதும்
கவலையிலா தவர்க்கேபோய் அடிமை செய்வான்!
 கடிதிவனை மீட்டெடுத்து மாந்த னாக்கல்!

இவன்மூதா தையர்தானே குறள்யாத் துள்ளார்!
 இவனுமவர் வழித்தோன்றல் என்றா சொல்வோம்?
எவரோவந் திடைப்புகுந்து தாழ்த்தி யுள்ளார்!
 இழிசாதி யிவனென்றார் ஏற்றுக் கொண்டான்!
எவரவரென் றினங்கண்டு பழிதீர்த் தற்கும்
 யாருமிலை இவனைவழி நடத்து வோருள்!
அவரவரும் அவரவர்தம் நலத்தை நாட
 அவலநிலை யில்தமிழன் கிடக்கின் றானே!

எவனோவோர் பொடியன்இரா குல்என் பான்தான்
 இவனுக்குத் தலைவனென வரப்போ றானாம்!
அவன்படையில் இவன்சேரப் போகின் றானாம்!
 அடதமிழா! நமக்கிவன் யார்? சிந்தித் தாயா?
இவனைப் போன்றோரையெலாம் திருத்த வேண்டும்!
 இனம்மொழியை மீட்bடுக்கத் தக்க வெல்லாம்
இவன்செய்யத் தமிழரெலாம் அணிய மாவீர்!
 இனிநமக்கென் றொருநாட்டைப் படைப்போம் வாரீர்!

Pin It