தமிழ்வழிக்கல்வி, ஆற்றுநீர்ச்சிக்கல் குறித்து தமிழக அரசினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

தீர்மானம் - 1

சிந்தனையாளன் இதழுக்கான கட்டண மாற்றங்கள் 2012 செப்டம்பர் முதல் நடைமுறைக்கு வரும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த மாற்றத்துக்கு உரிய ஆயத்தப் பணிகளைச் செய்வ தற்குப் போதிய காலம் தேவைப்படுவதால் - ரூ.180, ரூ.500, ரூ.1500 என்கிற கட்டண மாற்றங்களை 2013 சூன் திங்களுக்கான இதழிலிருந்து நடைமுறைப் படுத்துவது என்று ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம் - 2

ஏற்கெனவே நடந்த பொதுக்குழுவில், தமிழ்நாடு மாநிலம் அமைந்த நாளான நவம்பர் 1 ஆம் நாளன்று ஒரு பெருவிழா நடத்துவதென்று முடிவு செய்யப் பட்டது. அதனைச் செயல்படுத்தும் வகையில், வரும் 2012 நவம்பர் 1 வியாழன் அன்று “தமிழ்நாடு தனி மாநிலமாக அமைந்த நாள் பெருவிழா” என்கிற பெயரில், எல்லா மாவட்டங்களிலும் சிறப்பானதொரு விழா எடுப்பது என்று இப்பொதுக்குழு முடிவு செய் கிறது. இந்த விழாவுக்குத் தோழமை அமைப்பின ருக்கும், தமிழ்ப் பெருமக்களுக்கும் கட்சி வேறுபாடு கருதாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டு கோள் விடுத்து, எல்லாப் பெருமக்களின் ஆதரவோடு இவ்விழாவைச் சிறப்பாக நடத்த வேண்டும் என்று மா.பெ.பொ.க. தோழர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறது.

கருநாடக மாநிலத்தில் அம்மாநில அரசே முன் னின்று கர்நாடாக ராஜோத்சவ விழா என்ற பெயரில் 1956 நவம்பர் 1 முதலே அரசு விழாவாகக் கொண்டாடி வருவதைத் தமிழ்ப் பெருமக்களுக்கு இப்பொதுக்குழு அன்புடன் சுட்டிக்காட்டுகிறது.

தீர்மானம் - 3

1. தமிழ்நாடு அரசு தமிழ்வழியில் அனைத்து நிலையிலும் கல்வி கற்பிக்கிற ஏற்பாட்டில் கொஞ்சமும் அக்கறை இல்லாததாக இருக்கிறது. மேலும் இதைப் புறந்தள்ளும் வகையில், 158 அரசுத் தொடக்கப் பள்ளி களில் ஆங்கில வழிக் கல்வியைத் தொடங்யிருப்பது கண்டனத்திற்குரியது. மேலும் இதைப் புறந்தள்ளும் வகையில் 158 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்கியிருப்பது கண்டனத்திற்குரியது. இப்போக்கைத் தமிழக அரசினர் உடனடியாகக் கைவிட்டு, முதற்கட்டமாகப் பனிரெண்டாம் வகுப்பு வரையில் எல்லாக் கல்வியும் தமிழ் வழியிலேயே கற்பிக்கப்பட ஆவன செய்ய வேண்டும் என்றும்; பாழடைந்து போயுள்ள தமிழ்நாட்டுக் கலவித் தரத்தை உயர்த்துவதற்கு ஏதுவாகத் தொடக்கப் பள்ளி களில் வகுப்புக்கு ஓர் ஆசிரியர் அமர்த்தம், உயர் நிலை-மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு பாடத்துக்கும் ஓர் ஆசிரியர்கள் அமர்த்தம், தமிழ்மொழிப் பாடத்தைக் கற்பிக்க முறையாகத் தமிழ்ப் பட்டம் பெற்ற ஆசிரியர் அமர்த்தம் ஆகியவற்றை, வரும் இரண்டு மூன்று கல்வியாண்டுகளில் தமிழக அரசினர் நிறை வேற்ற வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

2.            காவிரி, முல்லைப் பெரியாறு ஆற்று நீர்ச் சிக்கல்களில் தமிழ்நாட்டு அரசுக்கென்று ஒரே ஒரு நிலைபாடுதான் இருக்கமுடியும்; இருக்க வேண்டும். அப்படியில்லாமல், தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. கட்சிகள் மாறிமாறி ஆட்சிக்கு வரும்போதெல்லாம், தங்களுக் கிடையே உள்ள கட்சிக் கசப்புகளை முன்வைத்து, ஒரு கட்சியினர் இன்னொரு கட்சியினர் பேரில் குறைகூறிக் கொண்டு, கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட பொதுவான தெளிவான தமிழ்நாட்டரசு நிலைப்பாடுகளை முன் வைக்கத் தவறிவிட்டனர். இது உண்மை, இது வருந் தத்தக்கது. இதில் தொடர்புடைய அண்டை மாநிலத் தார் கட்சி வேறுபாடுகளைக் கருதாமல் ஆற்று நீர்ச் சிக்கல்களிலும் மற்ற சிக்கல்களிலும் ஒன்றுபட்டே போராடுகிறார்கள். தில்லிக்கு ஒரே குழுவாக நேரில் சென்று நடுவண் அரசுக்கு நல்ல அழுத்தம் தருகி றார்கள்.

இவற்றை மனதில் கொண்டு இன்றையத் தமிழக அரசினர்-குறிப்பாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், எதிர்க்கட்சிகளின் தலைவர்களையும் தமிழகத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள 59 பேர்களையும் ஒரு குழுவினராகத் திரட்டிக் கொண்டு, தாமே தலைமையேற்று தில்லிக்குச் சென்று இந்தியத் தலைமையமைச்சர், நடுவண் அரசின் பாசனத்துறை அமைச்சர் ஆகியோரைக் கண்டுபேசிப், போதிய அழுத்தம் தர வேண்டும் என்றும்; காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பை உடனடியாக இந்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்று வற்புறுத்த வேண்டும் என்றும், காவிரி நடுவர் மன்றத்துக்கு உட னடியாகத் தலை வரை அமர்த்த வேண்டும் என்றும் அழுத்தம் தர வேண்டும் எனத் தமிழக முதலமைச்சர் அவர்களை இப்பொதுக்குழு வேண்டிக் கொள்கிறது. அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எல்லாக் கட்சியினரும், தமிழ்ப் பெருமக்களும் ஆதரவு தரவேண்டுமென்றும் இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

3. தமிழ்வழிக்கல்வி, ஆற்று நீர்ச்சிக்கல்கள் ஆகிய இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து, 2012 செப்டம்பர் திங்கள் 3 அன்று மா.பெ.பொ.க. சார்பில் மாவட்ட மட்டங்களில் பெரிய அளவில் கோரிக்கை ஆர்ப்பாட்டங்கள் நடத்தவேண்டும் என்றும் இப்பொதுக் குழு முடிவு செய்கிறது.

தீர்மானம் - 4

மா.பெ.பொ.க. பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்களிலும் பெரியார் பிறந்தநாள் விழாக் கூட்டங்கள் நடைபெறும் இடங்களிலும் கட்சி உறுப்பினர்களின் வீடுகளிலும், தவறாமல் கட்சிக்கொடி ஏற்றப்பட வேண் டும் என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது. இதற்குத் துணை செய்கிற வகையில் கட்சிக் கொடிகள்-கட்சித் தோரணக் கொடிகள்-கட்சிக் கொடி பொறித்த இலச் சினைகள் (பேட்ஜ்) இவற்றைப் போதிய அளவில் ஆயத்தம் செய்துதர, வேலூர் மா.பெ.பொ.க. கிளையினர் முன்வந்துள்ளனர். மா.பெ.பொ.க. மாவட்ட-ஒன்றிய-சிற்றூர் கிளையினர் வேலூர் மாவட்டச் செயலாளர் மோ.சி.சங்கர், 1/6 சர்க்கார் மண்டித் தெரு, வேலூர் - 632 001 என்ற முகவரிக்கு உடனடியாகத் தொடர்பு கொண்டு, அவரவர்க்கு வேண்டிய கட்சிக் கொடிகளையும், தோரணக் கொடிகளையும் இலச்சினைகளையும் உரிய விலை கொடுத்துப் பெற்றுக் கொள்ளுமாறு இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் - 5

1.            அண்மையில் கிருட்டிணகிரி மாவட்டப் பெரியார் திராவிடர் கழக அமைப்பாளர் தோழர் பழனி என்கிற பழனிச்சாமியைத் திட்டமிட்டுக் கொடூர மனிதர்களைக் கொண்ட ஒரு குழுவினர், வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது துப்பாக்கி யால் சுட்டுக் கொன்று, தலையை வெட்டியெடுத்து வெறியாட்டம் ஆடினர். இது கடும் கண்டனத் துக்குரிய, காட்டுமிராண்டித்தனமான கொடிய செயலாகும். தமிழக அரசினர் உடனடியாக நடிவக்கை எடுத்திருந்தாலும், இன்னமும் குற்றஞ்சாட்டப்பட்ட வர்களில் சிலர் தலைமறைவாக உள்ளனர். விரைவில் இதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து வழக்குத் தொடுத்துக், கொலை காரர்களுக்கு உரிய தண்டனை வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டுமென அரசினை இப் பொதுக்குழு வேண்டிக் கொள்கிறது.

2.    முதுபெரும் தன்மான வீரரும் திராவிடர் கழக முன்னோடிச் செயல்வீரரும் ஆன திருவாரூர் தோழர் எஸ்.எஸ்.மணியம் அவர்கள் தன் 97ஆம் அகவையில் 7-7-12 அன்று மறைவுற்ற செய்தி கேட்டு, மா.பெ.பொ.க. பொதுக்குழு மனவேதனை அடைகிறது. அன்னாரை இழந்து துயருறும் சுயமரியாதை உலகுத் தோழர்களுக்கும் அன்னாரின் குடும்பத்தாருக்கும் இப்பொதுக்குழு ஆழ்ந்த இரங் கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

Pin It