தேர்தல்முடிந்தபின்னே

தேடமாட்டார்அண்ணே!

டாஸ்மாக்கில்தண்ணியடிச்சி

அம்மாகடையிலேவயித்தைநிரப்பி

வாழ்க்கைமுடியுதுரோட்டிலே - குடும்பம்

வாடிக்கிடக்குதுவீட்டிலே!

வயலும்வரப்பும்மாளிகையாச்சு

நஞ்சையும்புஞ்சையும்தரிசாப்போச்சு

என்னடாபெரியமாற்றம் - இங்கே

எல்லாமேவெறும்ஏமாற்றம்!

பொறியியலைப்படிச்சுப்புட்டு - கடையிலே

பொரியல்பண்ணுறான்

பட்டப்படிப்புபடிச்சவனெல்லாம்

பட்டம்விடுகிறான்!

ஓட்டுவாங்குங்கட்சியெல்லாம்

ஒண்ணுகூடுறான்

கூட்டணிண்ணுபேரைச்சொல்லி

கும்பிடுபோடுறான்!

போடாதிங்கஓட்டு - இது

போக்கிரிகளின்கூட்டு

தேர்தல்முடிந்தபின்னே - உங்களைத்

தேடமாட்டார்அண்ணே!

- வேலுசதானந்தம்

Pin It