இந்தியப் படைகள் ஈழத்தில் நிலை கொண்டிருந்த காலத்தில், கொடைக்கானல் தொலைக்காட்சி நிலையத்தின் மீது வெடிகுண்டு வீசிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மகன், தோழர் பொழிலன் 25.10.13 அன்று விடுதலை யானார். சிறைவாசலில் தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் அவருக்குப் பறைமுழக்கத்துடன் வரவேற்பளித்தனர்.

1987இல் ஈழத்தில் இந்திய அமைதிப்படை ஈழத்தமிழர்கள் மீது நடத்திய கொடிய அடக்குமுறையை இந்திய அரசுத் தொலைக்காட்சிகள், வானொலிகள் நியாயப்படுத்தி வந்த காலத்தில், 1988ல் இந்திய அரசு ஆதரவுச் செய்திகளை வெளியிட்டுவந்த கொடைக்கானல் தொலைக்காட்சி நிலையத்தின் மீது வெடிகுண்டு வீசப்பட்டது.

இவ்வழக்கில் முதன்மைக் குற்றவாளியாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்ட பொழிலன் அவர்களுக்கு 1997இல் திண்டுக்கல் அமர்வு நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கியது. பின்னர், 2007இல் மேல்முறையீட்டில் சென்னை உயர்நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளித்துத் தீர்ப்பு வழங்கியது.

பொழிலன் அவர்களை முன் விடுதலை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொழிலன் 25.10.13 புழல் சிறையில் இருந்து வெள்ளியன்று விடுதலை ஆனார்.

தோழர்கள் தமிழ்நேயன், நிலவன், செவ்வேள், தமிழ்மகன், புரட்சிநம்பி, வழக்கறிஞர் புகழேந்தி, வழக்கறிஞர் பாவேந்தன், நிலவழகன் மற்றும் தமிழ்த்தேச மக்கள் கட்சித் தோழர்கள் தமிழகத்தின் பல்வேறு கட்சிகள் இயக்கத் தலைவர்கள் தோழர்கள் பொழிலன் அவர்களை வரவேற்றார்கள்.

Pin It