‘சட்டங்களை உடைப்போம்’ எனச்

சண்டமாருதம் செய்கிறார் மோடி

எதற்கு?

எங்குள முதலாளிகளும்

இங்குவந்து பொறுக்க!

மூச்சுமுட்டும் தொழிலாளி

முதுகெலும்பை நொறுக்க!

ஆட்சி ஏற்ற நாள்முதலாய்

ஆலாய்ப் பறக்கிறார்

வெளிநாடுகளுக்கு!

ஆப்பு வைக்கிறார்

தொழிலாளிக்கு!

ஆரத்தழுவி

உலகத்

தலைவர்களை

அழைக்கிறார்!

வாரீர் வாரீர் என

வரவேற்புக்

கொடுக்கிறார்!

ஆரிய மூளைகளின்

அடிமையாய் மாறி

நேரத்தில்-காவி

நெருப்பாய்

வெடிக்கிறார்!

வலைத்தளங்கள் வழி

இந்தியின் வால்நுழைப்பு

குருஉற்சவ் கொண்டாடும்

வடமொழிக் கொழுப்பு

அறிவியல் அரங்கின்

உரையிலே கூட

பாரத காந்தாரி

கருக்கலைப்புப் பற்றிப்

பத்தாம்பசலி விளக்கம்!

புராணக் குப்பையைப்

பெருக்கக் கையில்

புதுசாய் எடுக்கிறார்

துடைப்பம்!

பிள்ளையார் தலையின்

‘பிளாஸ்டிக்’ அறுவை

பெரும்புளுகும் இதில்

அடக்கம்!

செத்த வடமொழிக்கு

உயிர்வளி செலுத்த

மொத்த அரசுமே

முண்டியடிக்கிறது!

சமற்கிருதம் வளர்க்கச்

சண்டை பிடிக்கிறது!

தில்லைக் கோயிலிலே

தேவாரம் பாடினால்

நெருப்படி கொடுக்கும்

நெய்ச் சோற்றுத் தீட்சதர்

உருப்பட என்றும்

உருப்படியாய் உழைக்கும்

தெருப்படி நாய்களுக்குச்

செருப்படி கொடுத்தால்

திருந்துமோ இந்தத் தேசம்

சிந்திப்போம்!

- தமிழேந்தி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.