மாநில அரசு நெல்லுக்கான ஆதரவு விலை - சன்னரக நெல்லின் ஆதார விலை ரூ.70/-; பொது ரக நெல்லின் விலை ரூ.50/- உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மத்திய அரசும் சன்னரக மற்றும் பொது ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு தலா ரூ.65/- ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என அண்மையில் அறிவித்தது. இதன்படி ஒரு குவிண்டால் சன்னரக நெல் ரூ.1905/- ஆனது. பொது ரக நெல்லின் விலை ரூ.1865/- ஆனது. நெல்லுக்கான இந்தப் புதிய கொள் முதல் விலை 2019 அக்டோபர் 1-ஆம் தேதி முதல் செப்டம்பர் 2020 வரை நடைமுறைப் படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. மத்திய, மாநில அரசுகளின் இந்த அறிவிப்பு விவசாயிகளிடையே பெரும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது.

விவசாயத் தொழிலாளர்களின் கூலி, டீசல் விலை, இயந்திர தளவாடங்களின் வாடகை, டி.ஏ.பி. உரம் விலை ஏற்றம்; யூரியா தட்டுப்பாடு, தண்ணீர்த் தட்டுப்பாடு ஆகியவற்றை மத்திய மாநில அரசுகள் கருத்தில் கொள்ளாததுதான் நெல்லுக்கான விலை நிர்ணய குளறுபடிகளுக்குக் காரணம். மேலும் சந்தையில் பொன்னி அரிசியின் விலை ஒரு கிலோ ரூ.50/- என விற்பனை யாகின்றது. இதன்படி கணக்கிட்டால் ஒரு கிலோ நெல்லுக்கு அரசு விலை ரூ.25/- என நிர்ணயிக்க வேண்டும். ஆனால் தற்போது ஒரு கிலோ நெல்லுக்கு ரூ.19/- மட்டுமே விலையாக நிர்ணயிக்கப்பட்டிருப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை.

agri rates 600மேற்கண்ட செலவில், 4 மாதங்கள் அறுவடை வரை வயலுக்கு நீர் பாய்ச்சுவது, எலித் தொல்லையைக் கட்டுப்படுத்துவது, வரப்பு புல்லறுப்பது இதில் நடவில் இருந்து 3 மாதங்கள் மட்டும் நாளொன்றுக்கு ரூ.100/- கூலி நிர்ணயம் செய்து கணக்கிட ரூ.9000/- ஆகும். இதில் விவசாயக் கூலியாள்களுக்கு குறைந்தபட்ச கூலியே கணக்கிடப்பட்டுள்ளது.

நெல் சாகுபடி செலவு ரூ.24,625/- + விவசாயியின் கூலி ரூ.9000/- ஆக ரூ.33,625/- ஆகிறது. தமிழக அரசின் பண்ணை நிர்வாகத்தில் ஒரு கிலோ நெல்லுக்கான உற்பத்திச் செலவு ரூ.27.50 என குறிப்பிடப்படும் நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கர்நாடகம், கேரளம் மற்றும் ஆந்திர மாநில அரசுகளைப் போல தமிழக அரசும் நெல்லுக்கான ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.

பயிர்க் கடன் 1 ஏக்கர் நெல் சாகுபடிக்கு ரூ.33,500/- இதனை பொதுத் துறை வங்கி மற்றும் கூட்டுறவு விவசாயச் சங்கங்கள் வழங்குகிறது. 20 குவிண்டால் நெல் மகசூல் கிடைக்கப் பெறின் ரூ.38,100/- கிடைக்கும். எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையின்படி உற்பத்திச் செலவுடன் 50 சதவீதம் இலாபம் சேர்த்து கொள்முதல் விலை நிர்ணயிக்க வேண்டும். மத்திய அரசாவது ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என எதிர்பார்த்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளோம்.

மேற்கண்ட அனைத்துச் செலவுகள் செய்தும், ஒரு ஏக் கரில் 25 முதல் அதிகபட்சமாக 30 மூட்டை நெல் (77 கிலோ எடை கொண்டது) கிடைக்கும். சற்றொப்ப 20 குவிண்டாலாகக் கணக்கிட்டாலும் அரசு விலைப்படி ரூ.38,100/- கிடைக்கும். வேளாண் அறிஞர் எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கை விவசாய உற்பத்திச் செலவை விட விவசாய விளைபொருள்களுக்கு 50 விழுக்காடு கூடுதலாக விவசாயிகளுக்குக் கிடைக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறது.

நெல்லுக்கான ஊக்கத் தொகை அறிவிப்பை மறு பரிசீலனை செய்து, மத்திய, மாநில அரசுகள் உயர்த்திட வேண்டும். நெல் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3000/- வழங்க வேண்டும் என மிக்கப் பணிவுடன் வேண்டுகிறோம்.

Pin It