inmai_logo

சென்ற 21 ம் தேதியன்று (ஜன, 2008) சிரீஹரிகோட்டாவிலுள்ள துணைக்கோள் ஏவுதளத்திலிருந்து (Satellite Launching Station) இஸ்ரேலின் டெக்சார் என்னும் துணைக்கோள் விண்வெளியில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. ஆண்டு முழுவதும், மேகம் சூழ்ந்த பொழுதுகளிலும் கூட படம் எடுக்க வல்லது டெக்சார் என அறிவிக்கப்பட்டது.

இஸ்ரேலுக்கென இப்படியான ஒரு துணைக்கோளை ஏவுவதற்கு இந்தியா உதவப் போகிற செய்தி அதற்கு முன் இந்திய மக்களுக்கு தெரியாது. அடுத்தடுத்த நாட்களில் பத்திரிக்கையாளர் சீமா முஸ்தஃபா இது குறித்த மேலும் சில தகவல்களை வெளிப்படுத்தியிருந்தார் (டெக்கான் க்ரானிகல், ஜன, 24). இஸ்ரேலின் மேலும் இரு உளவுத் துணைக்கோள்களை (Spy Satellites) இந்தியா ஏவி உதவவுள்ளது தெரிய வந்தது. இந்த மூன்று துணைக்கோள்களையும் விண்வெளியில் ஏவ உதவி செய்கிற முடிவு மூன்றாண்டுகளுக்கு முன்னரே, மன்மோகன்சிங் தலைமையிலுள்ள ஐக்கிய அரசால் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கென இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புத்துறை தலைமை இயக்குனர் அமோஸ் யாரோஸ் மூன்றாண்டுகட்கு முன்னர் புதுடெல்லிக்கு வந்துபோயுள்ளார்.

எனினும் மக்களுக்கு இது குறித்து எந்தத் தகவலும் இல்லை. அறுதிப் பெரும்பான்மையற்ற கூட்டணி அரசாகிய மன்மோகன்சிங் அரசு, ஆதரவை நம்பியுள்ள இதர கட்சிகளுக்கும்கூட இதைத் தெரிவித்ததா என்பது தெரியவில்லை. (காபினெட் ஒப்புதல் பெறப்பட்டதா என்பது கூட ஐயமே).

ஒப்பீட்டளவில் இஸ்ரேல் அரசு தன் மக்களுக்கு யோக்கியமாக இருந்துள்ளது. இஸ்ரேல் இதழ்கள் இது குறித்து அதிகச் செய்திகளைத் தந்திருந்தன. ஏவப்பட்ட துணைக்கோளின் நோக்கம் ஈரான் மற்றும் சிரியா ஆகிய இரு எதரி நாடுகளை உளவறிவதே என்பதை அவை வெளிப்படுத்தியிருந்தன. பாகிஸ்தான் குறித்து அதன் மூலம் அறியப் பெறும் தகவல்கள் இந்தியாவுக்கு கூடப் பயன்படுமாம். ஈரான் மற்றும் சிரியா ஆகியவற்றை இஸ்ரேல் எதிரி நாடு என வரையறுப்பதில் இந்தியாவிற்கு உடன்பாடுண்டா என்பது தெரியவில்லை. இஸ்ரேலுக்குச் செய்துள்ள இந்த உதவியால் பாரம்பரியமான நட்பு நாடுகளாகிய மேற்காசிய நாடுகளிடமிருந்து இந்தியா இதன் மூலம் அந்நியப்பட நேர்ந்தது பற்றி அது கிஞ்சித்தும் கவலை கொள்ளவில்லை.

இந்தியத் தரப்பில் மேற்படி உதவிக்குப் பொருளாதார நியாயம் ஒன்று கற்பிக்கப்பட்டது. தனது ஏவுதளத்தை வாடகைக்கு விடுவதால் கிடைக்கிற லாபத்தைப் பற்றி அது பேசியது. இத்தாலிக்கும் கூட இவ்வாறு அது தனது தளத்தை வாடகைக்கு விட்டதைச் சுட்டிக் காட்டியது. பிற நாடுகளைக் காட்டிலும் இந்தியா வசூலிக்கும் வாடகை 70 சதம் குறைவாக உள்ளது இன்னொரு துணைத் தகவல்.

இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்டுள்ள தலைகீழான மாற்றத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு இது. ஒரு காலத்தில் இஸ்ரேலுடன் எந்தவிதமான தூதரக உறவுகளும் (Diplomatic RElationship) வைத்துக் கொள்வதில்லை என்பதே இந்தியாவின் முடிவாக இருந்தது. 1990 களில் இந்திய அரசின் பொருளாதாரக் கொள்கை பெரிய அளவில் மாற்றமடைந்தபோது அதற்கிணையாக அதன் அயலுறவுக் கொள்கையும் தர்க்கபூர்வமான மாற்றங்களை அடைந்தது. எனினும் கூட இஸ்ரேலுடன் இந்திய உறவு உடனடியாக சுமூகமாக்கப்படவில்லை. வாஜ்பேயி தலைமையில் தேசிய ஜனநாயக் கூட்டணி அரசு மத்தியில் பதவி ஏற்ற போது அதிவேகமாக இஸ்ரேலுடன் பல இராணுவ ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. முஸ்லிம் வெறுப்பை அடிப்படையாகக் கொண்ட பாரதிய ஜனதா கட்சி இஸ்ரேலை நட்பு நாடாகக் கருதுவது புரிந்து கொள்ளக்கூடியதே. நெருக்கடி நிலைக்குப் பிந்திய ஜனதா ஆட்சியில் (1978) பா.ஜ.க தனது முந்தைய வடிவில் (பாரதீய ஜனசங்கம்) பங்கேற்றிருந்தபோது இஸ்ரேலின் அன்றைய பாதுகாப்பு அமைச்சர் மோஷே தயான் ரகசியமாக இந்தியா வந்து சென்றதாக ஒரு பேச்சு உண்டு.

ஆனால் இஸ்ரேலுடன் இன்று இந்தியா தனது உறவை நட்பு ரீதியானதாக மாற்றியமைத் துள்ளதற்கு பா.ஜ.கவைக் குற்றஞ் சொல்ல இயலாது. மன்மோகன்சிங் அரசு மேற்கொண்டுள்ள அமெரிக்கச் சார்பின் ஒரங்கமாகவே இதை நாம் காண வேண்டும். மேற்கு ஆசியா குறித்த இந்தியாவின் புதிய கொள்கையின் ஒரு பக்கம் இப்படி இஸ்ரேல் ஆதரவு என்றால் இன்னொரு பக்கம் பாலஸ்தீனிய மக்களின் உரிமைகளை ஆதரிப்பது என்கிற அதன் பாரம்பரியமான கொள்கையைக் கைவிடுதல் அமைகிறது. யாசிர் அராபத் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ளாத உலகத் தலைவர்களில் ஒருவர் மன்மோகன்சிங் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாண்டுகளுக்கு முன்பு ஹிஸ்புல்லாக்கள் சில இஸ்ரேலிய வீரர்களைக் கடத்தியிருக்கத் தேவையில்லை என இந்தியா மொழிந்தது நினைவிருக்கலாம். இன்று காஸாவிலுள்ள 50 லட்சம் பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் முற்றுகையிட்டு உணவுக்கும், மருந்துக்கும் கூட வழியின்றி அவர்களைச் சாகடிக்க முனைந்த போதும் இந்தியா அதைக் கண்டிக்கவில்லை.

உலக முதலாளியத்தின் உலகமய நடவடிக்கைகளுக்கு ஏற்ப இந்தியா தனது சந்தையைத் திறந்துவிட்ட போது அதற்கிணையாக அதன் அயலுறவுக் கொள்கையில் ஏற்பட்ட மாற்றங்களைக் கீழ்க்கண்டவாறு பட்டியலிடலாம்.

(1) பாரம்பரியமான அணிசேராக் கொள்கை (Non Alignmentt) என்பதைக் கைவிட்டுவிட்டு அமெரிக்காவுடன்/மேற்கு நாடுகளுடன்/வடக்கு உலகுடன்/பணக்கார நாடுகளுடன் அணிசேரும் கொள்கையை அது மேற்கொண்டது. ன்றைய சூழலுக்கு அணிசேராக் கொள்கை பொருத்தமற்றது, தேச நலனுக்கு எதிரானது என்கிற கருத்து அயலுறவுக் கொள்கையை உருவாக்கும் அதிகாரிகள் மற்றும் மேட்டிமைச் சக்திகளின் (Elite Groups) கருத்தாக முன் வைக்கப்பட்டது.

(2) இந்தியா உலகுக்கு அளித்த ஒரு தத்துவக் கொடையாக அணிசேராக் கொள்கையைக் கருதலாம். ஒரு பெரும் அறிவு ஜீவியாகவும், தொலைநோக்குள்ள வரலாற்றறிஞராகவும் உலக அளவில் மதிக்கப்பட்ட ஜவஹர்லால் நேரு முன்மொழிந்தது அது. பவுத்த சிந்தனைகளில் ஒன்றான பஞ்சசீலம் முதலானவற்றை அவர் பேசிக் கொண்டிருந்த காலம் அது. ஒரு அறப் பின்புலத்துடன் (Ethiical Basis) அது முன்வைக்கப்பட்டது. நீண்ட வரலாறு, பண்பாட்டுச் சாதனைகள் (Civilizational Achievements), அளவிலும் மக்கள் தொகையிலும் பெரிய நாடு என்கிற பலங்களில் நின்று தனது அறம் சார்ந்த அணுகல் முறையை முன்வைத்தது இந்தியா.

காஷ்மீர் மற்றும் எல்லைப் பிரச்சினைகளில் நேருவிய அணுகல் முறையை நாம் ஏற்றுக் கொள்ள இயலாவிடினும் உலகளாவிய அரசியலில் தனது சொந்த நலன்களைத் தாண்டிய பார்வையுடன் அது செயல்பட்டு வந்தது. 1947-1962 காலகட்டத்தை இவ்வகையில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இந்த வகையில் ஒருவகை அற இறுமாப்புடன் அதன் அணுகல்முறை அமைந்ததெனலாம். காலனீயம், இன அடிப்படையிலான வேறுபடுத்தல்கள் ஆகியவற்றை எதிர்ப்பது, சர்வதேச அளவில் சமச்சீரற்ற அதிகாரக் குவியலையும், ஜனநாயக விரோதச் செயற்பாடுகளையும் கண்டிப்பது, அதிகளவில் இராணுவத்திற்குச் செலவிடுவதையும் அணு ஆயுதப் பரவலையும் கண்டிப்பது ஆகியவற்றில் இந்தியா முன் நின்றது.

இந்திய - சீன போருக்குப் பிந்திய கால கட்டத்தில் (1962-1971) சற்றே தற்காப்பு நோக்கில் கொஞ்சம் அடக்கி வாசிக்க நேர்ந்தபோதும் அணிசேராமையை அது விட்டுவிடவில்லை. 1974ல் முதல் அணுகுண்டு வெடிப்புச் சோதனையை இந்தியா நிகழ்த்திய பின் அது தன்னை ஒரு பெரு வல்லரசாகக் கற்பித்துக் கொண்டு அண்டை நாடுகள் மத்தியில் மேலாதிக்கத் தன்மையுடன் செயல்படத் தொடங்கிய போதும் அது அணி சேராமையை விட்டுவிடவில்லை. 1990களில் சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பின் ஒற்றைத் துருவ உலகமொன்று (Uni - Polar World) இங்கு கட்டமைக்கப்பட்ட போது, அது இந்தக் கட்டமைப்புடன் தன்னைத் தகவமைத்திக் கொண்டது.

1998ல் இந்தியா இரண்டாவது முறையாக அணுகுண்டு வெடிப்புச் சோதனை நிகழ்த்திய போது (பொக்ரான் II ), இந்தியாவின் போர் தொடர்பான உலகப் பார்வை அறச்சொல்லாடலிலிருந்து எதார்த்த அரசியலுக்கு (Real Politik) இடம் பெயர்ந்துள்ளது என வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது. எதார்த்த அரசியலில் அறத்திற்கு இடமில்லை என்கிற இந்தக் கருத்தியல் விலகல் இந்திய அயலுறவுக் கொள்கை மாற்றத்தின் இரண்டாவது அம்சம் எனலாம். மன்னராட்சிக்கு எதிரான சமீபத்திய நேபாள மக்களின் ஜனநாயகப் போராட்டத்திலும், இன்று பர்மாவில் நடைபெற்றுக் கொண்டுள்ள ஜனநாயகப் போராட்டத்திலும், இந்திய அரசு ஜனநாயகப் போராட்டங்களுக்கு எதிராக இருந்ததும் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

3. இந்த விலகல்கள் பாரம்பரியமான நட்பு நாடுகள் குறித்த அணுகல் முறையில் மாற்றங்களை விளைவித்தது. அமெரிக்க ஆணையை ஏற்று ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் இருமுறை அது வாக்களித்தது, பாலஸ்தீனத்திற்கு எதிரான அடக்குமுறைகளைக் கண்டிப்பதில் தயக்கம் காட்டுவது, சென்ற ஆண்டு நடைபெற்ற அணிசேரா நாடுகளின் மாநாட்டில் இயற்கையாக வெளிப்பட்ட அமெரிக்க-இஸ்ரேல் எதிர்ப்பைத் தணிப்பதற்கு முயன்றது, சிறிய ஆயுதங்கள் மற்றும் எளிய போராயுதங்களுக்கான ஒப்பந்தத்தை (Smaal Arms and Light Weapons) எதிர்த்தது, க்யோட்டோ ஒப்பந்தம் குறித்த நிலைபாட்டில் அமெரிக்க ஆதரவு நிலை எடுத்தது ஆகியவற்றைச் சொல்லலாம்.

இதன் விளைவாகப் பாரம்பரியமாக நட்புடனிருந்த மூன்றாம் உலக நாடுகள் இன்று இந்தியாவிலிருந்து அன்னியப்பட்டுள்ளன. சென்ற ஆண்டில் ஐ.நா. அவையின் பாதுகாப்புக் குழுவில் (UNSC) இந்தியா உறுப்பினராக முயற்சித்தபோது வழக்கமாக ஆதரவளித்து வந்த மூன்றாம் உலக நாடுகள் இம்முறை அந்த உற்சாகத்துடன் ஆதரவளிக்காதது குறிப்பிடத்தக்கது. மூன்றாம் உலக நாடுகளுடன் இதுவரை மேற்கொள்ளப்பட்டு வந்த கூட்டு நடவடிக்கைகள் இப்போது குறைத்துக் கொள்ளப்படுகின்றன. ஆறு இருதரப்பு கொடையாளிகள் (DFID, EC, Germany, Japan, USAID, Russian Federation) தவிர பிறவற்றுடன் மேற்கொள்ளப்பட்டு வந்த அரசு மட்டத்திலான (Govt. to Govt Development Co-operation) கூட்டுறவுச் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன.

4. வெளியுறவுக் கொள்கையில் வெளிப்படையாக இருந்த நிலைமை போய் எல்லாம் மக்களிடமிருந்து மறைக்கப்பட்டு இரகசியமாக்கப்பட்டுவிட்டது. வெளியுறவுக் கொள்கையில் இதுகாறும் கடைபிடிக்கப்பட்டு வந்த தேசியக் கருத்தொற்றுமை (National Consensus) என்பதும் இப்போது புறக்கணிக்கப்பட்டுவிட்டது. பாராளுமன்றமும் ஏன், பரந்துபட்ட கட்சி அணிகளும் கூட கருத்து மாறுபடுவது குறித்துக் கவலைப்படாமல் இப்போது முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அமெரிக்காவுடன் இன்று மேற்கொள்ளப்பட்ட 123 ஒப்பந்தத்தைப் பொருத்தமட்டில் இடதுசாரிக் கட்சிகள் தவிர, முக்கிய எதிர்க்கட்சியும் இன்று அதை எதிர்க்கிறது.

வாக்கெடுப்பு நடத்தினால் ஒப்பந்தம் தோல்வியுறுவது உறுதி. எனினும்கூட, ஒப்பந்தத்தை எப்படியேனும் நிறைவேற்றி விட அரசு துடிப்பாக உள்ளது. 123 ஒப்பந்தம் பேச்சுவார்த்தையிலிருந்த போது கசிந்து வந்த செய்திகள் அனைத்தும் அமெரிக்கத் தரப்பிலிருந்தும் அமெரிக்கப் பத்திரிக்கைகளிலிருந்தும்தான் என்பதும் நினைவிற்குரியது. இந்தியாவை ஒரு சூப்பர் பவர் ஆகக் கட்டமைப்பதிலும், அதன் மூலம் லாபம் பெறுவதிலும் அக்கறையுள்ள ஒரு சிறு மேட்டிமைக் குழுவே இன்று வெளியுறவுக் கொள்கையை நிர்ணயிக்கிறது. மக்களை அதிகாரப்படுத்துவது என்பதைக் காட்டிலும் உலகளவில் இந்திய அரசு அதிகாரம் செலுத்துவது, அதன் மூலம் தாம் அதிகாரம் பெறுவது என்பதே இவர்களின் நோக்கம்.

5. ஐக்கிய நாடுகள் அவையை ஜனநாயகப்படுத்துவது குறித்துத் தீவிரமாகப் பேசி வந்த இந்தியா இன்று அதைப் பேசுவதில்லை. மாறாகப் பாதுகாப்புக் குழுவில் (Security Council) தான் உறுப்பினராவது பற்றி மட்டுமே பேசுகிறது.

1990 களில் ஏற்பட்ட பல மாற்றங்கள் - (ஒற்றைத் துருவ உலகம் / உலகமயம் / சந்தைத் திறப்பு) இந்திய அயலுறவுக் கொள்கையில் ஏற்படுத்திய மாற்றங்கள் பற்றிப் பேசிக் கொண்டுள்ளோம். 1998ல் இந்தியா மேற்கொண்ட இரண்டாவது அணு வெடிப்புச் சோதனைக்குப் பின்பு அது தன்னை ஒரு சூப்பர் பவர் ஆகவே கற்பனை செய்து கொள்ளத் தொடங்கியது. உலகமயத்தை ஒட்டி இங்கே எல்லாவிதமான கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு வெளிநாட்டு நேரடி மூலதனம் முதலில் சிறிய அளவிலும் பின்பு பெரிய அளவிலும் குவியத் தொடங்கியது. இதன் மூலம் கார்ப்பரேட்கள் பெரு வளர்ச்சி பெற்றன. மொத்த தேசிய உற்பத்தி (GDP), பொருளாதார வளர்ச்சி முதலியன குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்தன. பொருளாதார வளர்ச்சி 6.9 சதத்தைத் தாண்டியது. வரலாறு காணாத அளவில் சென்செக்ஸ் குறியெண்கள் எகிறின.

இன்னொரு பக்கம் மனித வளர்ச்சி எண் (HDI) அளவில் பின்னோக்கிச் செல்வது, ஏற்றத் தாழ்வுகள் அதிகரிப்பது, விவசாயிகள் தற்கொலை செய்வது என்பதெல்லாம் நடந்த போதிலும் முதலாளிப் பொருளாதார அளவுகோல்களின்படி இந்தியா பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்தது. பொருள்களை வாங்கும் திறனுள்ள மிகப்பெரிய மத்திய தரவர்க்கம் இந்தியாவின் இன்னொரு பலமாகக் கருதப்பட்டது. உலகமயத்தை ஒட்டி உயர் கல்வியில் ஏற்பட்ட மாற்றங்களின் விளைவாக பல மூன்றாம் உலக நாடுகள் கல்வி, மருத்துவம் முதலானவற்றிற்கு இந்தியாவை நோக்கி வரவேண்டிய நிலை ஏற்பட்டது, கால் சென்டர், அவுட்சோர்சிங் முதலானவற்றினூடாக இங்கே சேவை சார்ந்த உற்பத்தி அதிகரித்தது. இன்னொரு பக்கம் அணுவல்லமையும், இந்து மகா சமுத்திரப் பகுதியிலும், இஸ்லாமிய நாடுகளுக்கு மத்தியிலும் உள்ள இராணுவ வல்லமை உள்ள நாடாகவும் இருந்த நிலை அண்டை நாடுகளுடன் ஒப்பிடும் போது முறைப்படி தேர்தல் மூலமான அதிகார மாற்றங்கள் நடைமுறைப்படுதல் என்பன இந்தியாவின் பெருமைகளாகக் கருதப்பட்டன. இந்தப் பின்னணியில்தான் இந்தியா தன்னை ஒரு சூப்பர் பவர் ஆகக் கருதிக் கொண்டு செயல்பட ஆரம்பித்தது.

மூன்றாம் உலக நாடுகளுடனான தொடர்புகளைச் சுருக்கி கொண்டு G8 முதலான சூப்பர் பவர் கூட்டமைப்புகளில் முறையான உறுப்பினர் நிலை இல்லாத போதும் ஒட்டிக்கொண்டு செயல்படத் தொடங்கியது. தென் ஆசியப் பிராந்தியத்தில் அமெரிக்கத் தலையீடு கூடாது என்று இதுகாறும் கடை பிடித்து வந்த தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு அமெரிக்காவுடன் பல்வேறு விதமான இராணுவக் கூட்டு நடவடிக்கைகளுக்கான ஒப்பந்தங்களைச் செய்து கொண்டது. 2005-2006 ஆண்டில் மட்டும், இராணுவ தளவாடம் வாங்குதல் தொடர்பாக, இந்தியாவுக்கும் - அமெரிக்காவிற்கும் இடையில் 21 சந்திப்புகள் நடைபெற்றுள்ளன.

இதுவரை உதவி பெறும் நாடாக இருந்து வந்த இந்தியா பிற நாடுகளுக்கு உதவி செய்தல் என்கிற நிலையையும் எடுத்தது. ஆப்பிரிக்க நாடுகளில் வளர்ச்சித் திட்டங்களுக்கு எக்ஸிம் வங்கி மூலமாக உதவும் பொருட்டு அடுத்த ஐந்தாண்டுகளுக்கு 1.5 பில்லியன் டாலர் தொகையை இந்திய வளர்ச்சி முனைவு (IDI – Indian Development Initiative) ஒதுக்கியுள்ளது. டஜிகிஸ்தானில் உள்ள அயினி விமானத்தை இந்தியா ஒத்திக்கு (Lease) வாங்கியுள்ளது. இராணுவமல்லாத நோக்கங்களுக்கு என இந்தியா சொல்லிக் கொண்ட போதிலும் இராணுவ நோக்கில் மத்திய ஆசியாவில் கால் பதிக்கும் ஒரு முயற்சியே இது என்றே பிறநாடுகள் இதைப் பார்க்கின்றன. போருக்குப் பிந்திய ஆப்கானிஸ்தானத்தின் மறு உருவாகத்திலும் இந்தியா பங்கு பெற்றது. சாலைகள் அமைத்தல், மருத்துவமனைகள் கட்டுதல் முதலான பணிகளை இந்தியா மேற்கொண்டது.

பல நாடுகளால் சட்ட விரோத அரசு (Outlawed Regime) எனக் கருதப்படும் மியான்மர் (பர்மா) அரசுக்கு 100 மில்லியன் டாலர் கடன் கொடுத்துள்ளது. ரயில் பாதை அமைத்துத் தரும் பணியையும் ஏற்றுள்ளது. நேபாளம், மாலத்தீவு, ஸ்ரீலங்கா முதலான அண்டை அரசுகளுடன் இந்தியா வகிக்கக்கூடிய மேலாண்மை உறவு யாவரும் அறிந்ததே. முன்னர் குறிப்பிட்ட G 8 தவிர G 4, G 15, G 20, G 33 முதலான பல குழுக்களில் முக்கிய பங்கு வகிக்கும் இந்தியா அதே நேரத்தில் வேறு பல தெற்குலக குழுமங்களிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டுள்ளது.

இந்தியா - பிரேசில் - தென் ஆப்ரிக்கா (IBSA), ஆசியா பசிபிக் பொருளாதாரக் கூட்டமைவு (APEC), பல்முனை தொழில் மற்றும் பொருளாதாரக் கூட்டுறவிற்கான வங்கக் கடல் முனைப்பு (BIMSTEL) முதலான பல பிராந்தியக் கூட்டமைப்புக்களை உருவாக்குவதிலும் இந்தியா முக்கிய பங்கு வகித்துள்ளது. பிற ஆப்பரிக்க நாடுகள் இந்தக் கூட்டமைப்புகளில் தம்மை ஏன் சேர்த்துக் கொள்ளவில்லை எனக் கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேற்குலக நாடுகளைப் போலவே இந்தியாவும் தான் செய்கிற கடனுதவிகளை தனது மூலதனத்திற்கான வெளிநாட்டுச் சந்தைகளை உருவாக்கும் வழிமுறையாகவே மேற்கொள்கிறது.

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்குமிடையே உருவாகியுள்ள இன்றைய உறவு குறித்துச் சற்று விரிவாகப் பார்ப்பது அவசியம். இந்த உறவு மிகச் சமீபத்திய கதை என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானே அமெரிக்காவின் நெருக்கமான நட்பு நாடாக இதுவரை இருந்து வந்துள்ளது. இந்தியாவின் பாரம்பரியமான அயலுறவுக் கொள்கையையும், வளர்ச்சித் திட்டங்களையும் குறிப்பாக சோவியத் மாதிரியில் அது உருவாக்கிய ஐந்தாண்டுத் திட்டங்களை - அது என்றைக்கும் ஏற்றுக் கொண்டதில்லை. கென்னடி அமெரிக்கத் குடியரசுத் தலைவராக ஆனபோது இந்திய வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவுவதாக ஒரு முடிவு எடுக்கப்பட்டது. பதிலாக அன்றைய வெளியுறவுத் துறை அமைச்சர் வி.கே. கிருஷ்ணமேனனை அப்பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்கிற நிபந்தனை மறைமுகமாக வற்புறுத்தப்பட்ட போது அன்றைய பிரதமர் நேரு ஒரு இலக்கியத் தரமிக்க கடிதம் எழுதி அமெரிக்க உதவிகளை மறுத்தார். ஆனால் இன்று ஈரானிலிருந்து எரிவாயுவை பாகிஸ்தான் வழியாகக் குழாய் மூலம் கொண்டு வரும் திட்டத்தை அமெரிக்க ஆணையை ஏற்று நிறுத்தி வைத்துள்ள மன்மோகன்சிங் இதற்குத் தடையாக இருந்த மணி சங்கர அய்யரை அந்தத் துறைப் பொறுப்பிலிருந்து பதவி இறக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

மாறியுள்ள உலகச் சூழலில் இந்தியாவைக் கைக்குள் போட்டுக் கொள்ள வேண்டிய அவசியம் அமெரிக்காவுக்கும் உள்ளது. சூப்பர் பவர் ஆக நினைக்கும் இந்தியாவின் ஆசையையும், இந்தியாவின் யுரேனியப் பற்றாக்குறையையும் பயன்படுத்தி அதைத் தன்னை நோக்கில் ஈர்ப்பதில் அமெரிக்கா இன்று வெற்றி பெற்றுள்ளது. அமெரிக்காவில் குடியேறியுள்ள இந்திய NRI களும் இதில் முக்கிய பங்காற்றியுள்ளனர். ஒரு உலக வல்லரசாக ஆவதில் இந்தியாவிற்கு நாங்கள் உதவி செய்யத் தயாராக உள்ளோம். ஆனால் அது தனது சிந்தனைகளிலும் செயல்களிலும் தனது பழைய வழிமுறைகளை உதறித் தள்ள வேண்டும் என்று கோண்டலிசா ரீஸ் வெளிப்படையாக அறிவுரை கூறினார்.

இந்தியா அமெரிக்காவுடன் செய்து கொண்டுள்ள 123 ஒப்பந்தம் குறித்துத் தனி நூல் எழுதியுள்ளதால் இங்கு அதை தவிர்க்கிறேன். இந்தியாவுக்கும், அமெரிக்காவிற்குமிடையே இன்று பல்வேறு நிலைகளில் ஏற்பட்டுள்ள ஒத்துழைப்பின் ஒரங்கமாகவே இது இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதும் அமெரிக்காவின் உலகளாவிய விரிவாக்க அரசியலில் இதன் பங்கையும் அதில் விரிவாக எழுதியுள்ளேன். இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால் அயலுறவுக் கொள்கைகளில் இந்தியா தனது இறையாண்மையை முழுமையாக இழக்க நேரிடும்.

அமெரிக்காவைப் பொருத்தமட்டில் பாகிஸ்தானையும் இந்தியாவையும் சமநிலைப்படுத்துவது (Balancing) இன்று அதன் நோக்கமல்ல. அல்குவேதாவையும், தலிபான்களையும் கட்டுக்குள் வைப்பதற்கு இன்றும் கூட பாகிஸ்தானின் உதவி அதற்குத் தேவையான போதிலும் பாகிஸ்தானால் அமெரிக்காவிற்கு எதிராகச் செல்ல இயலாத நிலை உள்ளதால் அதை 'Balance' செய்வது பெரிய விஷயமல்ல. மாறாக இந்தியாவையும் சீனாவையும் Balance செய்வதே இன்று அதன் பிரதான நோக்கம். பொருளாதார ரீதியிலும் இராணுவ ரீதியிலும் பெரு வளர்ச்சி பெற்று வரும் சீனா இன்று அமெரிக்காவிற்கு ஒரு மிகப் பெரிய சவால்.

தய்வான், வடகொரியா, மனித உரிமைகள், ஜனநாயகம் குறித்த பார்வை ஆகிய அம்சங்களில் இரண்டு நாடுகளுக்குமிடையில் பிரச்சினைகள் உள்ளன. இன்னொரு பக்கம் புடின் காலத்திய இன்றைய ரசியாவும், அமெரிக்காவிற்கு ஒரு பெரிய சவால். பழைய சோவியத் யூனியலிருந்த நாடுகள் அனைத்தின் எண்ணை வளத்தையும் இன்று ரசியா கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இந்த நாடுகளில் அமெரிக்கா உருவாக்க முனைந்த ஊதாப் புரட்சிகள் (Violet Revolutions) மற்றும் NATO அமைப்புக்குள் இவற்றை வளைத்துள்ள தந்திரம் ஆகியவற்றால் ரசியா ஆத்திரமடைந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான எண்ணை விநியோகமும் இன்று ரசியாவின் கையில் வந்துள்ளது. இதைக் கைப்பற்ற முனைந்த அமெரிக்க முயற்சிகளை அது வீழ்த்தியுள்ளது. சீனா உருவாக்கியுள்ள SSO கூட்டமைப்பு, ரசியாவின் CSTO கூட்டமைப்பு, SCO வும் SCTO வும் இணைந்துள்ள நிலை ஆகியனவும் அமெரிக்கா இன்று எதிர்கொண்டுள்ள மிகப் பெரிய நெருக்கடிகள் (பார்க்க : எனது உலக மயத்துக்குப் பின் இந்தியா மற்றும் இந்திய - அமெரிக்க அணு ஒப்பந்தம் ஆகிய இரு நூல்கள்). ஐரோப்பிய ஒன்றியத்துடனும் கூட ஈராக், ஆக்ரமிப்பைத் தொடர்தல், விவசாய மானியங்கள், க்யோடோ ஒப்பந்தம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முதலான அம்சங்களில் அமெரிக்காவிற்குப் பிரச்சினைகள் உள்ளன.

இந்தப் பின்னணியில் தான் இன்று இந்தியாவைத் தன் கைப்பிடிக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற அமெரிக்க ஆசையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அமெரிக்காவின் வரிவாக்க முயற்சிகள் அனைத்தையும் இன்று இந்தியா அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளது. அமெரிக்காவின் உலகப் பங்காளியாக (Global PArtnership) அது தன்னை அறிவித்துக் கொண்டுள்ளது. உலகில் ஜனநாயகத்தை நிலை நாட்டும் முயற்சிக்கு (Global Democratic Initiative) இந்தியாவும் அமெரிக்காவும் ஆண்டொன்றுக்கு 10 மில்லியன் டாலர் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் முழுவீச்சு ஆதிக்கம், எல்லாப் புலங்களிலும் செயல்படும் உரிமை, ஒற்றைத் துருவ உலகம் (Full Spectrum Dominance/ Freedom to Operate in All Domains/ Uni polar World) ஆகிய கருத்துக்களை இந்தியா மௌனமாக ஏற்றுக் கொண்டுள்ளது.

அமெரிக்கச் சட்டம் சர்வதேசச் சட்டத்திற்கு மேலானது. கட்டாய உலகமயம், ஆட்சி மாற்றம், (Regime Change) முன்கூட்டிய தாக்குதல் (Pre-emtive Strike), ஜனநாயகத்தை நிலை நாட்டும் உரிமை முதலியன அமெரிக்காவின் ஒற்றைத் துருவக் கருத்தாக்கத்தில் அடக்கம். பல்வேறு அதிகார மையங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், வேறுபட்ட வளர்ச்சி மாதிரிகள், பன்மைக் கலாச்சாரங்கள் என்கிற தனது நேரு காலம் முதல் நடைமுறையிலிருந்த பலதுருவ அணுகல் முறையை இன்று இந்தியா கைவிட்டுள்ளது.

ரசியா, வெனிசூலா முதலான நாடுகளை ஜனநாயகப் பற்றாக்குறை உடைய நாடுகளாகவே அமெரிக்கா கருதுகிறது. ஆனால் இவை பாரம்பரியமாக மட்டுமல்ல, இன்றளவும் இந்தியாவுக்கு பல வழிகளிலும் ஆதரவளித்து வரும் நாடுகள். அமெரிக்காவைப் பொருத்தமட்டில், இன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதாயினும் ஹமாஸ் ஒரு பயங்கரவாத இயக்கம். ஈரான் ஒரு எதிரி நாடு. இந்த அம்சங்களில் இந்தியாவின் கருத்து என்ன? ரசியா, மேற்கு ஆசியா, மத்திய ஆசியா முதலான அதன் பாரம்பரியமான நட்பு நாடுகளுடன் அதன் உறவு குறித்த பார்வை என்ன? இந்தியா இது குறித்தெல்லாம் வெளிப்படையாக எதையும் பேசாத போதும் நடைமுறைகளைப் பார்க்கும் போது இந்த அம்சங்களிலும் அமெரிக்காவின் கருத்தே இந்தியாவின் கருத்து என்பது விளங்குகிறது.

இனி நாகரிகளுக்கிடையேதான் முரண்கள் அமையும் (நாகரீகம் என்பதை மதம் என வாசிக்கவும்) என்கிற Clash of Civilization கோட்பாடு, தீமைகளின் அச்சு (Axis of Evil/ Rogue States), மனித உரிமைகளுக்கு எதிராக தேசியப் பாதுகாப்பை நிறுத்துதல் (National Security X Human Rights) ஆகிய அமெரிக்கக் கருத்தியல்களையும்கூட இன்று மௌனமாக இருப்பதல் மூலம் இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது.

அறிவுத்துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, தன்னிடமுள்ள மனித வளஆற்றல், ஜனநாயக நடைமுறைகள் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தித் தனது பாரம்பரியமான அறம் சார்ந்த அயலுறவுக் கொள்கையினூடாகவே உலக அளவில் தனது முக்கியத்துவத்தை இந்தியா நிலை நாட்ட முடியும். ஆனால் இந்திய மேட்டிமைச் சக்திகளைப் பொருத்தமட்டில் இத்தகைய மென்மையான ஆற்றல்களை (Soft Power Capacities ) க் காட்டிலும் இராணுவம், அணு ஆற்றல் முதலான வன்மையான ஆற்றல்களே(Hard Power Capacities) முன்னிலைப்படுத்தத் தக்கவையாக உள்ளன.

மாற்றுச் சிந்தனைகளை முன் வைத்தல், மனித உரிமைகளுக்கான சொல்லாடல்கள், பெண்ணியச் சிந்தினைகள் முதலான அரசு சாராத முயற்சிகளில் உலக அளவில் ஓரளவிற்கு மரியாதை பெற்றுள்ள இந்தியா இன்னொரு பக்கம் இதுநாள் வரை அது எத்தகைய நாடுகளை விமர்சித்து வந்ததோ அதே நாடுகளைப் பின்பற்றும் நடவடிக்கைகளினூடாக உலக அளவில் மரியாதை இழந்தே உள்ளது. ஐ.நா.வின் பாதுகாப்புக் குழுவில் அங்கத்துவம் பெற இயலாமை, APEC, SAARC, BIMSTEC முதலான பிராந்தியக் கூட்டமைப்புகளின் தனது தலைமை நிறுவன இயலாமை முதலியன இதற்குச் சான்றுகள். உலக வர்த்தக அமைப்பிலும் (WTO) கூட எதிர்மறையான சில அம்சங்களை பிற நாடுகளின் உதவியோடு அதனால் தடுத்து நிறுத்தத்தான் முடிந்ததே ஒழிய தனது கோரிக்கைகள் எதையும் அங்கே நிறைவேற்ற இயலவில்லை.

இந்தியாவின் அமெரிக்கச் சார்பும் சந்தர்ப்பவாத நடைமுறைகளும் யாரும் அதனை ஐயத்திற்குரியதாக நோக்கும் நிலைக்கே வழி வகுத்துள்ளது. துணைக் கண்டத்தில் ஆயுதப் போட்டி (Arms Race) ஒன்று உருவாவதற்கே இது வழி வகுக்கும். 123 ஒப்பந்தத்தின் படி இனி அணு வெடிப்புச் சோதனை செய்ய இயலாது என்கிற நிலை வந்தால் சோதனை செய்யாமலேயே அணு ஆயுதங்களைக் குவிக்கும் நிலையை இந்தியா எடுக்கலாம். இந்நிலையில் பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகள் சமஅளவில் அணு ஆயுதங்களைப் பெருக்க முனையும். இதனால் விளையும் போர்ச் சூழலைக் காரணம் காட்டி மேலும் அதிக அளவில் இராணுவச் செலவுகளுக்கு நிதி ஒதுக்குதல், தேசப் பாதுகாப்பின் பெயரில் ஜனநாயக உரிமைகளைப் பறித்தல் ஆகியனவே உடனடி விளைவுகளாக இருக்கும்.

இந்திய மக்களைப் பொருத்தமட்டில் அவர்களை உடனடியாகப் பாதிக்கும் பொருளாதார, கலாச்சாரப் பிரச்சினைகளைத் தவிர வெளியுறவுக் கொள்கை மாற்றங்களை அவர்கள் சீரியசாக எடுத்தும் கொள்வதில்லை. மாநிலக் கட்சிகள் தமக்குத் தொடர்பற்ற விஷயமாகவே இவற்றைப் பார்க்கும். லல்லு பிரசாத் யாதவ், கருணாநிதி ஆகியோரின் சமீபத்திய முடிவுகள் மன்மோகன் - சோனியாவின் இத்தகைய அயலுறவு வழிவிலக்கங்களை ஏற்றுக் கொள்வதாக உள்ளன. ஏகாதிபத்தியச் சுரண்டல், அமெரிக்க மேலாண்மை என்பதெல்லாம் இன்று காலத்திற்கு ஒவ்வாத பழைய கருத்துகளாகிவிட்டன என கருணாநிதியின் புத்ரி கனிமொழி தனது மாநிலங்களவைக் கன்னிப் பேச்சில் முத்துதிர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது. இடதுசாரிகள் எதிர்ப்புகள் எல்லைக்குட்பட்டதாகவும், அடையாள பூர்வமாகவுமே உள்ளன. அயலுறவுகள் கொள்கையின் வழிவிலக்கங்களால் அதிருப்தியுற்றிருக்கக் கூடிய இடதுசாரிகளையும், ஜனநாயக சக்திகளையும், முஸ்லிம் மக்களையும் தனிமைப்படுத்தும் முயற்சியையே இன்று ஆளும் வர்க்கம் மேற்கொண்டுள்ளது.

Pin It

இருப்பிடம் இழந்த குருவுக்கு குடல் அழுதது.

அம்மனைக் கும்பிடவோ அப்பன் முருகனை நேரவோ என்று அழுதுகொண்டு திரியும் ஆடுகள் மாடுகள் ஆகிய அறிவுள்ள ஜீவன்களுக்கு மத்தியில்
இந்த ஆடுகள் மாடுகள் பிடித்துண்ணும் காண்டா மிருகமொன்றின் (காண்டா மிருகம் மச்சம் தின்னாது என்போரை வெறுப்போம்). உறுமலில் பிறந்தது கணீரென்ற சண்டித்தனம்.

கடகம் கீறிய காதாவடியில் விழுந்தது பளார் என்றொரு அறை.
கயிரும் கம்பியும் கண்ட கண்ட மனிதற்ற வாயும் கடித்த கை காண்டாமிருக (சாணி) பிசைந்தது.

அம்மாவென நம்புவேன் அவர்கள் கதைகளை.
மூண்றுகால் முயலோடு வந்த முற்போக்கு என் பிடரியை குத்தி வருடியது.

என் முட்டி தட்டி முதுகில் பல்லக்கிறக்க சவுக்கெடுப்பர்.
இந்த காலிடப்பா அவர்தம் கால்களில் இடறி கீறி கிழியும்.

பருப்புகளுக்கும் பறவை இனத்துக்குமே ஒரு கேடு.

கட்டை விழ மறுக்கும் நித்திரை வெறியனின் கையிலிருக்கும் புனித புத்தகங்களின் வசனங்களை காலை ஓதி மாலை ஓதி காலம் இறக்கும் வரை ஓதி கடைசியில் எம் கழுத்திலும் கழிப்பர். குறைபாடுகளற்ற மந்திரம் இயற்றுவர்.

இரவிலும் இருட்டிலும் பல் நறும்பி கதிரை குரைக்கும்.
..எம் குடலுருவி கதிரை குரைக்கும்.
மில்லியன் தலைகள் உருண்டதால் தவளைக்கென்ன கவலை?
ஒரு கொக்கரிப்பில் கூரை கவிழும் - நம்பர்கள் தெறிக்கும்.

குரல்வரும் குரல்வளை அவர்தம் அரசுடமை.

வரலாறு அறும் அறும் என்று காத்திருந்தபின் பிடரியில் விழும் கோடரி.
எம் வரலாறு அறுந்து நிசக்கும்.
உம் மதம் பிறந்து உலுப்ப கண் மறைக்கும்.

தூரத்திருந்த பாயில் கிடக்கும் முள் துண்டு மேலும் மெலியும்.

பொறுக்கிகள் எம் குரல்களில் பேசுவர்.
எம் கனவுகள் வாழ்வர். உயிரில் வரி எடுப்பர். நுகர்வர்.
எம் பாட்டனுக்கு நடந்த கதை சொல்லி புதிய கதையில் எம் புகழை குடிப்பர்.

மூண்றுகால் முயலுக்கு எல்லாம் கண்மறைக்கும்.
கரும்பேரிருட்டு சுவைக்கும் மூளை
வரிக்கு வரி கண்கெட்ட முறையை வாந்தியெடுக்கும்.
-அது மொக்கு.

அது அப்படியிருக்க ஒரு கூட்டம் ‘கட்டிடம் வளர்க்கும்’ கண்கான மறுத்த கேள்விகள் தெறிக்க பைப்படி இருந்து பல்லடி வரையும் வீணே சிந்தி தெறிக்கும்.

மரம் மாடு ழூன்றுகால் முயல் என்று அன்பு செய்தல் நல்லது.
அன்பை உயிர் சொருகி உரசிப் பழகுவது ஓசியில் கிடைக்கும்.

மனிதவெள்ளம் மயக்கும் கருத்துத்தாகம் மௌனம் இருந்து பிறக்கும்.
நல்லது தோழர்கள்.
கண்ழூடி நன்மைக்கும் நட்புக்கும் உடன்படுவோம்.
உள்நெருப்பு கத்தும் வறுமைக்கும் உடன்படுவோம்.
நெருக்கி நொறுக்கி பற்களின் இடுக்கில் தப்பித்தவறி கிடக்கும் ஒருசொட்டு இரத்தத்துடன் நட்பும் நன்மையும் தவிர நெருப்பில் கூடி நிரப்பவா முடியும்?

நியாயமான கேள்வி.
நாமென்ன கட்டிடம் வளர்க்கவா உம் கைகளை கேட்டோம்.
ழூக்கிலடிக்கும் உங்கள் எதிரியின் பகலை கடித்து அவர்தம் முத்திய தடிப்பை உறிஞ்சத்தான் பங்கு கேட்டோம்.
வரலாறு கொண்டு காது குடைவதில் கண்கள் இருளும்.
நெருப்பின் பகுதிகள் கரம் நீட்டி அணைப்பது ஒரே ஒரு புரட்சிதான்.

Pin It
நேர்காணல்
சரஸ்வதி (மலேசிய சோசலிசக் கட்சி - PSM)

பொதுவா உலகம் முழுவதும் சொல்லுவாங்க தமிழர்கள் உலகத்தை ஆண்டார்கள், வாணிபம் செய்தாங்க, கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தில எல்லாம் இருந்தாங்க என்று. ஆனால் இன்று உலகத்தில் எவ்வளவோ முன்னேற்றங்கள். மனிதர்கள் இடம்பெயர்ந்து வாழ்கிறாங்க. உதாரணமாக மலேசியத் தமிழர்களை 100 ஆண்டுகளுக்கு முன்பு தோட்டங்களில் வேலை செய்வதற்கு வெள்ளையர்கள் கப்பம் கட்டி சஞ்சிக் கப்பலில் கொண்டுவந்தாங்க. இது history. அதே மாதிரி ஆபிரிக்காவுக்கும் கொண்டு போனாங்க. இப்படி வரும்போது அவர்களது வாழ்க்கை அடிமைச் சங்கிலிகளினால் அமுக்கப்பட்டு 3 தலைமுறைகளாக அடிமைக் கூலிகளாகத்தான் வாழ்ந்தார்கள்.

மலேசியா 1957இல் டீசவைளைடமிருந்து விடுதலைபெற்ற பிறகும் கூட உள்நாட்டு முதலாளிகளால் தோட்டங்கள் வளர்க்கப்பட்டு தமிழர்களின் வாழ்க்கை அப்படியே தான் இருக்கின்றது. ஆனால் நான் தமிழர்களுக்காக மட்டும் இங்கு பேசவில்லை. சோசலிசக் கட்சயில் உலகத் தொழிலாளரின் வாழ்க்கைக்காகத்தான் நாங்கள் போராடுகிறோம். சோசலிச அமைப்பில் தான் மக்களின் வாழ்வு மீட்சிபெற முடியும் என்று நம்புகின்றேன்.

தொழிலாளர்களின் நிலையை உயர்த்துவதற்காக நீங்கள் என்ன வெலைத்திட்டங்கள் முன்னெடுத்துள்ளீர்கள்?

60களில் சம்பந்தன் என்ற ஒருவர் வலதுசாரி இயக்கத்தின் (ஆளும்கட்சி) மனிதவள அமைச்சராக இருந்து தோட்டங்களைத் துண்டாடினார். (ஒரு பெரிய கம்பெனிக்கு விற்றுவிடுவார்கள்). அப்போது அதில் உள்ள தொழிலாளி அந்தத் தோட்டத்திலிருந்து விரட்டி அடிக்கப்படுவார். மலேசியாவுக்கு இந்தத் தொழிலாளிகளைக் கொண்டுவரும்போது அவர்களுக்கு வீடு, பாடசாலை, கோவில், கள்ளுக்கடை போன்றவற்றை அமைத்துக் கொடுத்ததினால் அவங்க அங்கேயே மூழ்கிக்கெடப்பாங்க. 40, 50 வருசம் தோட்டங்களை பிரிட்டிஷ்காரர்கள் அதன் லாபங்களை அனுபவித்தபிறகு விற்றுவிட்டு வெளியேறும்போது, அதாவது தோட்டங்கள் துண்டாடப்படும்போது சம்பந்தர் என்ன செய்கிறார் என்றால் 10 பர்ச்சஸ் படி எழுதிக்கொடுங்க தோட்டத்தை வாங்குகிறோம் என்ற சொல்லித் தோட்டத்தை வாங்கினார். 30 தோட்டங்களுக்கு மேல் வாங்கி மறுபடியும் இந்த பிரிட்டிஷ்காரங்க எப்படி தோட்டங்களை அடிமைமுறையில் வைத்து இருந்தாங்களோ அந்த மாதிரித்தான் இந்தக் கூட்டுறவுத் தோட்டங்களையும் அமைச்சு வச்சிருக்கிறாங்க.

93ல் இருந்து தோட்டத்தொழிலாளிக்கு மாதச்சம்பளம் கிடைக்கணும் என்று பெரிய போராட்டம் நடத்தினோம். 2 வருடப் போராட்டம். கடைசியில் 2002 ல் தான் தொழிலாளிக்கு 325 வெள்ளி (7 வெள்ளி - 1ஸ்டேர்லிங் பவுண்) கிடைக்கிறது. மலேசியாவில் utter poverty உள்ளது. ஒரு தொழிலாளி 12 மணிநேரம் factory யில் வேலை செஞ்சாத்தான் 600 வெள்ளிகளைப் பெற முடியும். மலேசியாவில் factory தொழிலாளிங்க 23 மில்லியன் ஆக உள்ளனர். மக்கள் தொகையில் 60% மலாய்காரர்கள், முஸ்லீம்கள். 30% சீனர்கள். 8% தமிழர்கள், 2ம% மற்றைய இனத்தவர்கள். So இதில் 30% மலாய்காரர்கள் கடை, எம்போரியம், அந்தமாதிரி வச்சுக்கிட்டு வாழ்க்கை நடத்திறாங்க. மலாய்க்காரர்களில் 40%க்கு மேல் factory தொழிலாளிங்க. மலேசியா வந்து பிரிட்டிஷ் மாதிரியில்லை. நம்ப வந்து Industrialisation தொழில்மயத்தை நோக்கிப் போகிறோம். British வந்து re-industrialisation நோக்கிப் போறாங்க.

10 மில்லியன் Work Force தொழிலாளர்கள இருக்கிறாங்க. அதில் 8% Union ல் இருக்கிறாங்க. மிகுதி 92% யூனியனில் இல்லை. அவங்க இன்னும் organize பண்ணுப்படல. 1957களில் 67% தொழிலாளர்கள் Union ல் இருந்தாங்க. இப்ப 2005 ல் less than 8% தான் யூனியனில் இருக்கிறாங்க. இது ஏன் இவ்வளவு குறைஞ்சுதுன்னா, காரணம் மலேசியாவில் உள்ள Law. Union அமைக்க முடியாது. உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தைக் காரணம்காட்டி உங்களப்புடிச்சு 2, 3 வருசம் உள்ளபோட்டு Court-க்கே கொண்டு வரமாட்டாங்க. மறியல் போராட்டம் செய்தா கைதுபண்ணுவாங்க. அரசாங்கம் குடிசைப்பகுதிகள் உள்ள நிலங்களை உடைக்கவந்தா அதற்கு எதிராக நாங்கள் மக்களோட சேர்ந்து மறியல் போராட்டம் செய்தா கைது பண்ணுவாங்க. இந்தமாதிரி பல விசயத்துல நம்ப 7 முறை கைதுசெய்யப்பட்டு உள்ளுக்கு போய், பிறகு வெளியில வந்திருக்கோம்.

மலேசியத் தமிழர்கள் இந்த யூனியனில் பங்குபற்றும் வீதம் எப்படி இருக்கின்றது? National Average-ஐ விடக் குறைவா?

ரொம்பக் குறைவு. National Average 8% தான். நாம் வந்து தமிழர் என்று பார்க்கல. மலேசியத் தொழிலாளிங்க என்றுதான் பார்க்கிறோம். ஆனா 1930,47,50 களில் வந்து தமிழர்கள், சீனர்கள் நிறையப் போராட்டம் செஞ்சு இருக்கிறாங்க. 3 லட்சம் தொழிலாளர்கள் போராட்டம் செஞ்சு இருக்கிறாங்க. இந்தப் போராட்டம் அவங்களுக்கு வீடு கொடுக்கவில்லை என்று நடந்தது. தோட்டப்புறத்தில் குடிசைதான் வீடாக இருக்கும். ஆட்டுக்கொட்டகை மாதிரி வீடுகள். இதைவிட, இனரீதியில் நீ கீழ்ஜாதி, நான் மேல்ஜாதி என்பதற்கு எதிராக, அதை எல்லாம் ஒடச்சு வீரசேனன், கணபதி, பாலா, நாதன் போன்றவர்கள் பெரிய மறியல் போராட்டங்கள் செஞ்சு இருக்கிறாங்க. அதன்மூலம் தான் இப்ப இருக்கிற Labour சட்டங்கள் கிடைத்தன. ஞாயிற்றுக்கிழமை வேலைசெஞ்சா சம்பளம் குடுக்கணும். 8 மணிநேர வேலை. இதெல்லாம் 30, 40களில் நடந்த போராட்டங்களால்தான் இப்போது நாங்கள் அனுபவிக்கிறோம்.

ஆனா 69க்கு பிறகு உள்நாட்டு பாதுகாப்பு சட்டம் வந்தபிறகு எல்லா யூனியன் நடவடிக்கைகளும் படுமோசமா தோல்வி அடைஞ்சிருச்சு. இப்ப நாட்டில் ஏதாவது பெரிய மறியல் நடத்துவது கஷ்டம். 93இல் நம்ப சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவங்க வந்து மாபெரும் மறியல் போராட்டம் செஞ்சோம். 3000 பேர் வந்து மக்களுக்கு அடிப்படை தேவைகளான தண்ணீர் வேணும், வீடு வேணும், என்று போராட்டம் செஞ்சிருக்கோம்.

மலேசியா தென்கிழக்காசியாவின் மைய Economy என்று சொல்லப்படுகின்றது. அங்கே மக்களின் வாழ்க்கைத்தரம் ஏற்றத்தாழ்வுகள் எப்படி இருக்கின்றன?

ரொம்ப மோசம். ஏன்னா 540 வெள்ளிக்கு குறைவாக சம்பளம் எடுத்தா ஏழை என்று அரசாங்கம் ஓர் குறியீடு வைச்சிருக்கு. ஆனா நம்மண்ணா 1000 வெள்ளிக்கு கீழ எடுத்தா ஏழை. அப்படி பார்க்கும்போது 10 மில்லியன் Work Force அந்தமாதிரி எடுக்கிறதால ரொம்ப ஏற்றத்தாழ்வு காணப்படுகிறது. விலைவாசி 200 மடங்கு ஏறிப்போயிருக்கு. இப்ப பார்க்கப்போனா Hospital வந்து Private ஆகப்போவுது. தண்ணி Private ஆகப்போகுது. தோல் Private ஆகிரிச்சு. 5 முறை இந்த வருசத்திலேயே பெற்றோல் விலை ஏறிடிச்சு. So இந்த நாட்டு வளர்ச்சியை ஒப்பிட்டுப் பார்க்கும்போது பாட்டாளி வர்க்கம் படுமோசமான நிலையில 1000 வெள்ளிக்கு கீழ எடுக்கிறாங்க. Bank ல கடன் வாங்கித்தான் அன்றாட வாழ்வை நடத்திறாங்க.

அங்கு அடிப்படைச் சம்பள நிர்ணயம் என்று ஒன்று உண்டா?

இல்லை. அப்படி ஒன்றும் இல்லை. அங்கு எல்லோருமே றப்பர் வேலை செய்யும் தொழிலாளர்கள். வறுமைக்கோட்டிற்குக் கீழ்தான் இருக்கிறார்கள். றப்பர் தோட்டங்கள் அழிஞ்சுக்கிட்டிருக்கு.

சாமிவேலு போன்ற அரசியல் தலைவர்கள் தானே அங்கு கூடுதலாக மலேசியத் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்?

ஆமாம். அவர்கள் இங்கு டோனி பிளையர் மாதிரி வலதுசாரிக் கட்சியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தங்களது வசதியைத் தான் பார்ப்பார்கள். ஆனால் கவர்ண்மென்ட் என்ன சொல்லுதன்னா இவங்கதான் 8% இந்தியர்களுக்கு தலைவர்கள் என்று. ஆனால் அவங்க எல்லாம் அடிப்படைப் பிரச்சினையை தட்டிக்கேட்க தைரியம் இல்லாத தலைவர்கள். பேருக்குத்தான் தலைவர்கள்.

மலேசியப் பாராளுமன்ற முறையினூடாக அங்கு சோஷலிசத்தை நிறுவலாம் என்று நம்பகின்றீர்களா?

மார்க்ஸ் அன்றே சொல்லிட்டார். அன்று UBBC ல் யாருடைய தத்துவம் உலகத்துக்கு ஏற்புடையதாக இருக்கிறது என்று பார்க்கும்போது லண்டன் மக்கள் மார்க்ஸ் தான் மிகச்சிறந்த சிந்தனையாளர் என்கிறார்கள். உலகம் முழுவதும் எந்த சோஷலிச வர்க்கமும் பாட்டாளி வர்க்கம் ஓர் நியாயமான வாழ்க்கையை வாழனும் அப்படீன்னு நினைக்கிறவங்க கண்டிப்பா சோஷலிசத்தை ஏற்றுக்கொள்ளுறாங்க. நம்ப கட்சி எலெக்ஷனை ஓர் யுக்தியாகப் பயன்படுத்தி நம்ப கட்சியை விளம்பரப்படுத்த ஆட்களைப் பாராளுமன்றத்துக்கு அனுப்புகின்றோம். நாம் மக்களால் எழுகின்ற புரட்சிதான் நிரந்தரமாக இருக்கும் என்று நம்புகிறோம். ஆனா. அதை பாராளுமன்றம் மூலம் செய்ய முடிஞ்சா கண்டிப்பா அதை சாதிப்போம்!

முதலில் வந்த அரசாங்கம் உங்கள் பெரும்பாலான போராட்டங்களை ஒடுக்கி இருக்கின்றதென்று கூறினீர்கள்?

ஆமாம். அதற்கு ஒரு உதாரணம் நாலுபேர் கூடி இப்படி பேசிக்கொண்டிருக்கும்போது பொலிஸ் நினைத்தால் something wrong என்று நம்பள arrest பண்ண முடியும். அப்படி ஒரு பொலிஸ் சட்டமே இருக்கு. பயங்கரமான சட்டம். ஒரு மறியலும் செய்ய முடியாது. சட்டவிரோதம். நம்முடைய பேரணி பூரா சட்டவிரோத பேரணின்னுதான் வரும். Illegal Demonstration என்று தான் வரும். ஆனால் மக்கள் இதுதான் சரி என்று வீதிக்கு வரும்போது அரசாங்கம் யார். நம்பளை சட்டவிரோதம் என்று சொல்வதற்கு? இதுதான் எங்களுடைய stand. Very clear point. People want to do this, so we go ahead with them.

அண்மைக்காலமாக மலேசியாவில் வெளிநாட்டில் இருந்து குடிவந்த, குறிப்பாக இந்தோனேசியாவிலிருந்து வந்த தொழிலாளர்களை Illegal Immigrant என்று சொல்லி வெளியேற்றுகிறார்கள். இது சம்பந்தமாக உங்கள் நிலைப்பாடு என்ன?

Ult is very sad. எப்படி இந்தியர்கள் அல்லது சீனர்கள் அந்தக்காலத்தில் கொண்டுவரப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டாங்களோ அதைவிட மோசமா இருக்கு. Factory உள்ளுக்கே வீட்டைக் கட்டிக் கொடுத்து Very unhealthy condition. அவங்க agreement போடுறது ஒரு சம்பளம். பிறகு வந்து அதைவிட பாதியாய் குடுக்கிறது. நம்ப முடிந்தவரை Immigration Workers உடன் வேலைசெய்யப் பார்க்கிறோம். உலகத் தொழிலாளர் எங்க இருந்தாலும் நம்ப வந்து help பண்ணனும். அதுதான் நம்ம கோட்பாடு. ஆனா இப்ப நாடுவிட்டு நாடு வருவது Globalisation TEchnique. அதை நம்ப வெறுக்கிறோம். குடும்பம், பிள்ளைகள், எல்லோரையும் பிரிந்துவந்து கடைசியாக ஒன்றும் கொண்டுபோறதில்லை. அந்த நடுவருக்குத்தான் பணத்தை அள்ளிக் கொட்டிட்டுப் போறாங்க. நிறையப்பேர் நம்மகிட்ட வந்து அழுதிருக்காங்க. So இந்த Policy யை நான் வெறுக்கிறேன். ஆனா அந்த Workersஐ நான் வெறுக்கல்ல.

இலங்கைத் தமிழர்களுக்கும் மலேசியத் தமிழர்களுக்குமிடையே உள்ள பிரச்சினையைப்பற்றிச் சற்றுத் தெளிவுபடுத்துங்கள்.

முரண்பாடுகள். அப்படி ஒண்ணும் ரொம்ப ஓப்பனாக இல்ல. இலங்கைத் தமிழருக்கும் மலேசியத் தமிழர்களுக்குமிடையேயான வேறுபாடு ரொம்பப் பெரிய அளவில் இல்லை. ஆனா, இலங்கைத் தமிழருக்கு என்ன feelings ன்னா, Doctors, Lawers என்று பெரிய பெரிய அளவில் அவங்க வேலை செய்யிறதால மலேசியத் தமிழர்கள் வந்து அடிமைக் கூலிகள் என்ற எண்ணம் அவங்களுக்க உண்டு. அந்த இணைப்பு வந்து ரொம்ப வித்தியாசம். அப்புறம் சங்கங்கள். இலங்கைத் தமிழர்கள் மட்டுமல்ல, If I am not mistaken 68க்கும் மேற்பட்ட சங்கங்கள் இருக்குது. உதாரணமாக நாடார் சங்கம், இலங்கைத் தமிழர் சங்கம், மலையாளி சங்கம், தெலுங்கு சங்கம், செட்டியார் சங்கம், அப்படி இனச் சங்கங்கள், மலேசியாவில் 8% தமிழர்கள், only 8% of the total population of the Malaysian country. But they are divided.

இப்ப Indian Progressive Party வந்து சொல்லுவான் நாங்க பறையர்கள் என்று. Which is break away from MIC (Malaysian Indian Congress). It’s not doing anything. இந்தியாவில் இருந்து ஏன் ஒரு நல்லதைக் கொண்டுவரவில்லை. முன்னேற்றத்தை, புரட்சியைக் கொண்டுவரவில்லை. Why use the caste name? to oppress and make profit. தமிழர்களை போராட்டத்திலிருந்து பிரித்து அவர்களை ஒன்றுபடவிடாமல் ஆக்குவது இந்த caste naming. நீ பறையன் என்றால் பச்சை, கவுண்டன் என்றால் மஞ்சள், வெள்ளையன் என்றால் வெள்ளை. அந்த மாதிரிப் பிரிச்சு. 60% மலாயர்கள், 30% வீதம் சீனர்கள் இருக்கிற இடத்தில் 8% தமிழர்கள். இது இன்னும் வர வர 1% ஆகிவிடும். தமிழர்கள் மலேசியாவில் இருக்க மாட்டோம். இதுல உன்னோட சொந்த லாபத்துக்காகத்தான் ஜாதியை வச்சிருக்கு. It’s not for the working class. So we are totally against it.

மலேசியத் தமிழர்களின் எதிர்காலம் எங்கு நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது?

இனவாரியாகப் பிரித்துப் பதில் சொல்வது ரொம்பக் கஷ்டம். ஏன்னா, மலாய்க்காரங்க சோஷியல்லி ரொம்ப டெரிபிள். அவங்கதான் மெஜாரிட்டி 60% முஸ்லிம் மலாய்க்காரங்களின் பிள்ளைகள் தான் Magority Drugs -ல் போவது அவங்கதான். Social Illness அவர்களிடம்தான் நிறைய இருக்கின்றது. நம்ப தமிழ் பிள்ளைகள் வாழ்விடம் எஸ்டேட்டை ஒட்டிய வீடாக இருந்தது. அவங்கள் தோட்டங்கள் துண்டாடப்படுகின்றது. தோட்டம் வந்து 5 storey building கட்டிறதுக்கு or Golf Course கட்டிறதுக்கு. இதில் 25,000 மலிவு விலையில் வீடுகள் கட்டலாம். அந்தமாதிரி தோட்டங்கள் விற்பனைக்குப் போகும்போது இந்தத் தொழிலாளி ஒன்றும் குடுக்கப்படாம மாற்றுவீடு கொடுக்காம விரட்டியடிக்கும்போது அவங்க பையன்கள் Town ல் போய் குடிசை கட்டிக்கொண்டு சொந்தமாக வாழ்றாங்க. So அங்க வந்து சில social problems இருக்கு. மலேசியாவில் என்ன பிரச்சினைன்னா, மலேசியர்கள் அவங்க இனத்துப் பிரச்சினையை அவங்க அவங்க Propaganda பண்ணுவாங்க. சீனர்கள் அவங்கட பணப்பலத்தைக் கட்டிக்காக்கணும் என்று அவங்க பிரபலப்படுத்துவாங்க. தமிழர்கள் வந்து சிறையில் சாகிறார்கள் என்பது பிரச்சினை. பிரச்சினை இருக்கு. But we voice for everybody.

மலேசியாவில் குறிப்பிடக்கூடிய அளவில் புரட்சிகர இலக்கியவாதிகள் இருக்கிறார்களா?

நம்முடைய அன்றாடத் தமிழ்ப் பத்திரிகைகளைப் பார்த்தால் தமிழ் நேசன், தமிழ் நண்பன். அதிலும் ஒருசில தமிழ் மலர்தான் தமிழ் நண்பனாக மாறியது. அதில் இனத்தைப் பற்றிக் கொஞ்சம் எழுதினதாலும் இஸ்லாம் இனத்தைப்பற்றி எழுதினதாலும் மூடிட்டாங்க. எங்களுடைய பிரிண்டிங் policy is very bad. அது மலாயோ, தமிழோ, சீனமோ, எதுவாயினும் கவர்ண்மெண்டைப்பற்றிக் கொஞ்சம் சென்சிட்டிவ்வாக அட்டாக் பண்ணி எழுதினால் அந்தச் செய்தியைப் புடுங்கிடுவாங்க. இதுக்கு பயந்துக்கிட்டு எல்லா பேப்பர்ஸ்சும் உதாரணம் நம்முடைய தமிழ்ப் பத்திரிகைகள் 4. 5 பக்கங்கள் இருக்கும். இதில் நடுப்பக்கத்து பேஜும் புல்லாக இந்தியன் ஸ்டோரி. தேவையில்லாத இந்தியன் கதை, இந்திய அரசியல், அது இது சினிமாக்கள். இவைதான் வரும். நம்ம போராட்டம் பற்றி எதுவும் வராது.

இலக்கியம் என்று சொல்லும்போது சாமிவேலு காலகட்டத்தில இருந்து அடிவருடியாத்தான் இருக்கு. 1960களில் எனக்குத் தெரிந்து கல்யாணப் பரிசாக ஏதாவதொரு பெரியார்களின் புத்தகமோ, படமோ இருக்கும். நிறைய நூல்நிலையங்கள் தோட்டங்களில் இருக்கும். நிறைய விவாதங்கள் நடக்கும். ஆனால் 1970-80க்குப் பிறகு நத்திங். முன்பு நிறைய சீர்திருத்தk குழுக்கள் இருந்தாங்க. பாரதி இலக்கிய மன்றம், நூலகம், இப்ப எல்லாம் அழிஞ்சிருச்சு. தமிழ் இலக்கியம் இப்போ மலேசியாவில் மானம்கெட்டுப் போச்சு. நாங்கள் அந்த இலக்கியத்தை விட்டு விலகி நிற்கின்றோம். நாங்கள் மக்கள் இலக்கியத்துக்கு ஆதரவு. ஆனால் இங்கு இவர்களின் இலக்கியம் வெறும் குப்பை.

மலேசியத் தமிழர்கள் ஆரம்பங்களில் தமது பிரச்சினைகளை இலக்கியங்கள் ஊடாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அதை ஏற்றுக்கொள்கிறீர்களா?

எந்த ஓர் அடக்குமுறையும் மனிதனின் சிந்தனையை அடக்கமுடியாது. அந்த ஸ்பீடை உருவாக்கவதற்கு இலக்கியங்களாலும், எழுத்தாலும் உதவி செய்யமுடியும்.

முதலாவது தமிழர்களின் புலம்பெயர்வு மலேசியாவில்தான் நடந்தது. அந்தப் பதிவுகள் முழுக்க மலேசியக் கிராமப்புற இலக்கியங்களிலும், தோட்டத் தொழிலாளர்களின் இலக்கியங்களிலும் தான் இருக்கின்றன. அந்தக்காலத்தில் ஆநனயை வளரவில்லை. மலேசியாவின் சுதந்திரத்தின் பிறகும் பத்திரிகைகள் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டதால் அவர்களின் கஷ்டதுன்பங்கள் எல்லாம் இலக்கியங்கள் ஊடாகத்தான் வெளிவந்துள்ளன.

இல்லை. அந்த இலக்கியம் எப்ப வந்தது. 1957இல் இருந்தது. இப்ப இல்லை. தற்கால மலேசிய புரட்சிகர இலக்கியவாதியென்று யாரையாவது உங்களால் கூறமுடியாது. மலேசியத் தமிழ் அரசியலில் மலேசிய இந்திய காங்கிரஸ், மலேசிய மணிமன்றம், மலேசிய இந்து சங்கம் எல்லாம் அரசியல் கட்டுக்கோப்புக்குள் அடங்கிவிட்டது. இப்ப இவை எல்லாம் வலதுசாரி அரசின் வாயாகத்தான் (ஊதுகுழல்) இருக்கின்றன.

மலேசியாவிலுள்ள Illegal Immigrant இன் பங்களிப்பு (2 லட்சம்) மலேசியாவின் பொருளாதாரத்தில் உள்ளது. அவர்களைத் திருப்பி அனுப்பினால் மலேசியாவின் பொருளாதாரம் பாதிக்கப்படாதா?

இல்லை. ஏனென்றால், அவ்வளவு ஆட்பலம் மலேசியாவிலேயே உள்ளது. அதற்காக அவர்களைத் திருப்பி அனுப்பவேண்டும் என்று கூறவில்லை. அந்த Immigrant Workers சுரண்டப்பட்டு மிகவும் அடிமைத்தனமாக நடத்தப்படுகிறார்கள். இதற்கு எதிராகத்தான் நாங்கள் கதைக்கின்றோமே தவிர வேறு இல்லை. அவர்கள் காலை 7 மணிமுதல் இரவு 12 மணிவரை வேலை செய்கிறார்கள். ஞாயிறு விடுமுறை இல்லை. வேலை. இது explotation. இதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்களும் வேலைசெய்கிறோம். அவர்களும் Human beings.

அவர்களுக்கு என்ன தீர்வு என்று நினைக்கிறீர்கள்?

சட்டப்படி அவர்களுக்குரிய உரிமைகளை வழங்கவேண்டும். எங்களுக்கு இன்றுவரை minimum wages கிடையாது. இதற்காகப் பெரிய போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அடுத்தவருடம் 10000 பேர் பார்லிமென்ட் போய் இதற்காகப் Protest பண்ணப்போகின்றோம்.

நீங்கள் கூறுவதில் ஒரு முரண்பாடு தெரிகின்றது. வெளிநாட்டுத் தொழிலாளர்கள் செய்யும் வேலைகளுக்கு மலேசியத் தொழிலாளர்கள் காத்திருக்கின்றனர் என்று. ஆனால் அதே வேளை இந்த வெளிநாட்டுத் தொழிலாளர்களை இங்கு தொழில்புரிய அனுமதிக்கவேண்டும் என்றும் சொல்கிறீர்கள்.

இதைச் சற்றுத் தெளிவாக நோக்கவேண்டும். முதலாளிகள் எப்படி இதை மனேஜ் பண்ணுகிறார்கள் என்றால், ஆயிரக்கணக்கில் வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருப்பது உள்நாட்டுத் தொழிலாளர்களுக்கும் பாதிப்பு. அதேவேளை வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கும் பாதிப்பு. உள்நாட்டுத் தொழிலாளி வேலையில்லாமல் இருக்கின்றான். வெளிநாட்டுத் தொழிலாளி அடிமட்டச் சம்பளத்திற்கு வேலை செய்கிறான். நாம் என்ன சொல்ல வருகிறோம் என்றால், உள்நாட்டுத் தொழிலாளிக்கும் வேலை வழங்கப்படவேண்டும். அதே வேளை வெளிநாட்டுத் தொழிலாளிக்கும் சரியான உரிமை வழங்கப்படவேண்டும். எந்த ஒரு தொழிலாளியையும் புறக்கணிக்கக்கூடாது. அவர்களுக்குரிய அனைத்து உரிமைகளும் வழங்கப்படவேண்டும். நாம் தொழிலாளர்களைப் பிரிக்கும் இந்த முதலாளித்துவச் சூழ்ச்சிக்கு உடன்படுவதில்லை.

இலங்கையில் நடக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன?

உலகத்தில் எங்கே தேசியப் போராட்டம் நடக்கின்றதோ «¾üÌ நாம் தடையில்லை. எல்லோருக்கும் அவர்களது சுயநிர்ணய உரிமை முக்கியம்.But Sri lanka ல் நடக்கும் போராட்டத்தில் அவர்களின் இராணுவரீதியான போராட்டம் - அவர்கள் முன்வைக்கும் கோரிக்கை எமக்கு கேள்விக்குறியாக இருக்கின்றது. தமிழ்நாடு (தமிழீழம்) கேட்கும் கோரிக்கையில் எல்லா மக்களுக்கும் விடுதலை கிடைக்கக்கூடிய சமதர்மப் போராட்டத்தை முன்வைச்சாங்கண்ணா எமது கட்சி உலகநிலையில் இருந்து அதை ஆதரிப்போம். விடுதலைப் புலிகள் அந்த நிலையை வைக்காததால் நாம் அதை ஆதரிக்கமுடியாது. அதேநேரம் இதனை முழுமையாக நிராகரிக்கவும் முடியாது. ஏனென்றால் மக்கள் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.

மக்களின் சுயநிர்ணய உரிமை இதில் சம்பந்தப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் மட்டும் தான் தமிழ் மக்களின் தனிப்பிரதிநிதி என்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. இதேவேளை விடுதலைப்புலிகள் ஓர் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கும்போது அவர்களுடன் ஓர் உரையாடலை மேற்கொள்வதையும் தவிர்க்கமுடியாது. அதேநேரம் அவர்களின் கோரிக்கைகள் சிலவற்றை நாம் critise பண்ணுகின்றோம். முற்றுமுழுதாகப் புலிகளை நிராகரிக்கிறோம் என்று கூறுவது சர்வதேசரீதியில் மிகவும் தவறான வார்த்தை. ஏனென்றால் புலிகளை முழுதாக நிராகரித்தால் அது தமிழிமக்களை முழுதாக நிராகரிப்பது போல் ஆகிவிடும். நாம் கூறுவதைப்போல எல்லாருக்கும் சமவுடைமை போராட்டத்தை முன்வைத்தால் நாங்கள் 100 வீதம் ஆதரவு வழங்குவோம்.

நீங்கள் இங்கு வந்த நோக்கம் பற்றிக் கூறமுடியுமா?

இங்கு சோசலிச அடிப்படையில் மார்க்சிசம் என்ற கருத்தரங்கிற்குத்தான் நான் வந்தேன். அப்புறம் மற்றைய சோசலிச, மார்க்சிச நண்பர்களைச் சந்தித்து உரையாடுவதற்கும் இது நல்ல வாய்ப்பு. அத்துடன் மற்றைய ஆசிய நாடுகளுடன் இங்குள்ள சோசலிச முறையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஐரோப்பிய நாடுகளில் சோசலிச சித்தாந்தம் ஒர் தெளிவான பாதையை நோக்கிப் போய்க்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பலம்வாய்ந்த அமைப்புமுறை ஐரோப்பிய நாடுகளில் உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த வரலாற்றுபூர்வ நம்பிக்கையைக் கொண்டுதான் நான் மலேசியாவுக்குச் சென்று அங்குள்ள மக்களை பலப்படுத்துவதற்கு இந்த அனுபவம் உதவும் என்று நான் நினைக்கிறேன். இது அனுபவபூர்வ நம்பிக்கை. சர்வதேச நிலையில் சோசலிச சமுதாயம் உருவாகுவதற்கும் அகில உலகப் போராட்டத்தை நாம் பலப்படுத்துவோம் என்னும் நம்பிக்கை உண்டு.

Pin It

(ஆரிய மொழியினரின் புலப்பெயர்வு குறித்த சமகால விவாதங்கள் பற்றிய ஆய்வு)

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடிகள் பற்றிய கண்டறியாத கதையாடல்களின் மிதப்பால் எம் தலை கனக்கிறது. ஜெர்மனிய பாசிசம் இந்துத்துவப் பாசிசம் சிங்கள இனத்துவேசம் என்று கண்ணை மூடிக்கொண்டு ஆதிக்கம் தம் நலிந்த தர்க்கம் கொண்டு எம் தலைகளில் இடிக்கிறது. இந்த வரிசையில் திராவிட தேசியமும் இணைக்கப்பட வேண்டியதே. திராவிடம் என்ற கட்டுக்கதையை காவிக் கொண்டு இன்று தமிழ் நாட்டில் லட்சாதிபதிகளாயும் கோடீஸ்வரர்களாயும் லாபம் ஈட்டிக் கொண்டிருக்கும் தமிழ் கூட்டங்கள் மேற்கூறிய ஒடுக்குமுறை வரிசைக்கு ஒன்றும் பின்தங்கியவை அல்ல.

திராவிட தேசியமும் திராவிட இனத்துவமும் ஏழை/விளிம்பு மக்களுக்கு ஒரு சதத்திற்கும் உதவாது என்பதை அழுத்தம் திருத்தமாக கூறும் அதே தருணத்தில் இன்று இந்தியாவில் மிகமிக முக்கியமாக ஓரங்கட்டப்பட வேண்டியிருப்பது அளவுக்கதிகமாக நடந்துகொண்டிருக்கும் ஆரியக்கூத்து என்பதை நாம் வலியுறுத்த வேண்டியுள்ளது. பச்சைப் பொய்யும் புரட்டும் சுரண்டலும் கொண்டு ஏற்கனவே ஒடுங்கி நாடி வதங்கிப் போயிருக்கும் பெரும்பாலான ஏழைத் தலித்துக்களின் தலைவிதியை தங்கள் கைகளில் வைத்து உருட்டி விளையாட இவர்கள் இன்னமும் திட்டம் தீட்டுகிறார்கள்.

பிராமணியத்தின் கொடுமை இன்றைக்கு நேற்று உருவானதல்ல என்று எமக்குத் தெரியும். ஆனால் இந்துத்துவ சக்திகள் வெளிநாட்டு ஆதரவுடன் வெளிப்படையாக செய்யும் அட்டூழியம் கொஞ்ச நஞ்சமல்ல. இதை ஒத்தூத சில பிராமணர் இல்லாத ஆதிக்க சக்திகளும் இன்று வெளிப்படையாக கிளம்பியிருப்பது கவனிக்கப்பட வேண்டியது. யாழ்ப்பாணத்து வசதிபடைத்த வெள்ளாளரும் வெளிநாட்டு முதலாளிகளும் இன்று கண் சிமிட்டிக் கொண்டு சிரித்துக் கொண்டு இந்தியா வருகிறார்கள். அடிக்கிற கொள்ளையில் அஞ்சோ பத்தோ தந்தால் போதும் நானும் ஆடுவேன் ஆரியக் கூத்தென்று இவர்களும் கூட்டுச் சேர்ந்துள்ளார்கள். பசுத்தோல் போர்த்தி தலித் இறைச்சி உண்ட காலம் போய் இன்றைக்கு வெளிப்படையாகவே ஒடுக்கப்பட்ட ஏழை மக்களுக்கு எதிராக இவர்கள் இயங்குகிறார்கள். இதற்கு தலித்துகள் மத்தியில் இருந்து கிளம்பியிருக்கும் எதிர்ப்பும் ஒரு காரணம்.

தமிழ் நாட்டில் இன்று பிராமணியத்துக்கு எதிராக கிளம்பியிருக்கும் போராட்ட இயக்கத்தின் வெக்கையில் வெந்த இந்த பிராமண நஞ்சுகள் எந்தவித கூச்சமும் இன்றி வெளிச்சத்தில் வைத்து விசத்தை துப்புகிறார்கள். இந்த குறை மனிதர்களை இன்று சிரமமின்றி அடையாளம் காண முடிகிறது.

இந்த ஆரியக்கூத்துக்கு தத்துவார்த்த சமூக விஞ்ஞான பொருளாதார முற்போக்குத்தனங்கள் என்று எதுவுமில்லை. இருப்பினும் சில கத்துக்குட்டி முனைவர்கள் பேராசிரியர்கள் பொறுக்கிகள் என்று மூக்கைப் பொத்தினால் வாயைத் திறக்கத் தெரியாதவர்கள் எல்லாம் கதையாடல்களில் இறங்கியுள்ளது மிகக்கேவலம். இவர்களுக்கு செம்மை அடி கொடுப்பது சுலபமான விடயம். அ.மார்க்ஸ் சிரமப்படாமல் அந்தப்பக்கம் பார்த்து ஒரு சவுக்கை வீசியிருக்கிறார். இன்றைக்கு இருக்கும் இக்கட்டான சூழ்நிலையில் இவர்கள் மேல் தொடர் தாக்குதல் செய்வது அவர்களின் குழந்தைப்பிள்ளைக் கருத்துக்களைத் தவிடு பொடியாக்குவது கட்டாய தேவையாக உள்ளது. ஆரியக்கூத்துப் போல் ஆயிரம் புத்தகம் வரவேண்டியுள்ளது.

பிராமணியத்திற்கு எதிரான அடிதடிகளுக்கு அ.மார்க்ஸ் புதியவரல்ல. பெரியாருக்கு பின்பு மழுங்கடிக்கப்பட்டுக் கொண்டிருந்த தலித் போராட்டத்துக்கு இன்று தமிழ்நாட்டில் மீண்டும் உயிர் கொடுக்க முன்னணியில் நிற்பவர்களில் அவர் ஒருவர். அ.மார்க்ஸ் எப்படி தன் கருத்துக்களை வைக்கிறார் என்பது பற்றி பல்வேறு விதமான துவேசங்கள் குட்டிக் கதைகள் நடமாடி வருகின்றது. இதற்குள் எழும்பும் சில நியாயமான கேள்விகளில் ஆங்கிலப் புத்தகங்களைப் படித்துவிட்டு சுருக்கி ஒரு கட்டுரை எழுதிவிடுகிறார் என்பதும் ஒன்று. இன்றிருக்கும் சூழலில் எப்படி எழுதினால் தான் என்ன? இருப்பினும் ஆரியக் கூத்தை எதிர்ப்புத் தெரிவித்த ஆங்கிலக் கட்டுரை ஆசிரியர்களுக்கு அர்ப்பணித்தது மட்டுமன்றி ஆதாரபுர்வமான தகவல்களுடன் மிகவும் கவனமாக எழுதியுள்ளார் அ.மார்க்ஸ்.

எம்மைப் பொறுத்தவரையில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பது தான் எமக்கு முக்கியம். ஆதிக்க சக்திகளுக்கு எதிராக ஒடுக்கும் வர்க்கத்துக்கு எதிராக யார் எப்படிப்பட்ட வித்தைகளைப் பாவித்தாலும் எமக்கு கவலையில்லை. முடிந்தால் நீங்களும் எழுதுங்கள் எங்களுடன் சேர்ந்து. சுரண்டலுக்கு எதிராக கிளம்புங்கள். பாராட்டி தலையில் வைத்து கொண்டாடுவோம். உமக்கு மத்தியில் பெரும்பான்மையான மக்கள் பட்டினியாலும் அநாவசிய அடக்குமுறையாலும் செத்து அழிந்துகொண்டிருக்கும் பொழுது நாற்காலி வாதம் பேசிக்கொண்டிருக்க நமக்கு நேரமில்லை.

ஆதிக்க வர்க்கம் கட்டமைக்கும் பிரமைகளை உடைப்பதற்கு அ.மார்க்ஸ் செய்யும் எழுத்தோ நடையோ நடனமோ உதவியாக இருக்கும் பொழுது அதற்கு கண்மூடி ஆதரவு கொடுக்கும் உங்கள் பார்வையில் முட்டாள் ஆக இருக்கவே நாம் விரும்புகின்றோம். அந்தச்சூட்டில் அ.மார்க்ஸ் வெளியிட்டிருக்கும் புத்தகம் மிக முக்கியமான புத்தகம் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் என்று கூறுகிறோம். ஆரிய புத்தியில்லா ஜீவிகளின் திருகுதாளங்கள் சிந்துவெளி நாகரீகத்தைச் சூறையாட அவர்கள் படும்பாடுகள் முதற்கொண்டு இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் நடக்கும் பிராமணியச் சூழ்ச்சிகள் பல்வேறு தகவல்களை சுருக்கி சுவைபடத் தந்துள்ளார் அ.மார்க்ஸ். இதை படிக்க விரும்புபவர்கள் பின்வரும் விலாசத்தில் எதிர்வெளியீட்டை தொடர்பு கொள்ளலாம்.

எதிர்வெளியீடு, 305, காவல் நிலையம் சாலை, பொள்ளாச்சி 642 001, இந்தியா
தொலைபேசி (04259) 226012 மின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இங்கிலாந்தில் பெற்றுக்கொள்ள : சேனன் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

இந்தியாவுக்கு வெளியே அதிகளவு இந்தியர்கள் வாழும் இடமான இங்கிலாந்திலும் இதைப் படிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இங்கும் இடம்பெயர்ந்த பிராமணியம் ஆதிக்கத்தை நிறுத்தவில்லை. பிராமண கிளப்புகள் ஹரேகிருஷ்ணா கோஷ்டிகள் பல்வேறு வகை சாமியார்கள் சுத்த சைவ சாப்பாட்டுக் கடைகள் என்று பிராமணிய மேலாண்மையை இந்தியக் கலாச்சாரமாக இங்கு கட்டியெழுப்பியுள்ளார்கள். இங்கிலாந்து ஆதிக்க ஆளும் வர்க்கம் எதுவித எதிர்ப்பும் இன்றி இந்துத்துவ மேலாண்மை கட்டமைப்பை ஏற்றுக் கொள்வதோடு மட்டுமின்றி அதை ஊக்குவித்தும் வருகிறது. இங்கு பாடசாலைகளில் மதம் பற்றிய புத்தகங்களில் இந்துமதம் பற்றி கற்பிக்கப்படுவதெல்லாம் மேலாதிக்க தன்மை உள்ளனவாகவே உள்ளது.

இங்கிலாந்து இளவரசன் (21ம் நூற்றாண்டிலும் இப்படி எழுத கை கூசுகின்றது) சார்லஸ் மற்றும் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று ஆளும் வர்க்கம் மாலை அணிந்து இந்துக் கோயில்களில் இடைக்கிடை வலம் வருவதன் மூலம் இங்கிலாந்து வாழ் இந்திய மக்களை வழிக்கு கொண்டு வந்து விட முடியும் என்று நம்புகின்றனர். அதற்கேற்றாற் போல் இங்கிருக்கும் இந்துக் கோயில்களின் தொகை கொஞ்சநஞ்சமல்ல. இங்கு கோயில் வியாபாரம் லாபமீட்டும் ஒரு பெரிய வியாபாரமாக வளர்ந்து வருகின்றது. கோயில் தொடங்கும் போது அதை ஒரு வியாபாரமாக பதிவுசெய்து பின் அதை லாபகரமானதாக முன்னேற்றி அறாவிலைக்கு விற்பது சகஜமாக நடக்கிறது. எல்லாக் கோயில்களும் பிராமணர்களாலும் ஆதிக்க வெள்ளாளர்களாலுமே நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. இதில் வரும் லாபத்திற்காக அடிபடும் உயர்சாதி தமிழர்களின் அட்டகாசம் அதிகரித்துக் கொண்டே போகின்றது. லண்டனில் சில கோயில்களில் ஐயர்மார் பெண்களுடன் விடும் சேட்டைகள் எல்லோருக்கும் தெரிந்ததே.

பல வருடங்களுக்கு முன்பு நான் நங்கநல்லூரில் இருந்த போது அருகில் இருந்த ஒரு கோயில் ஐயருக்கும் எனக்கும் அடிக்கடி பிரச்சனை வரும். என்னை அவர் காணும் போதெல்லாம் கோயிலுக்கு வரும்படி கட்டாயப்படுத்துவதும் கதைக்கும் போது அவர் கூறும் முட்டாள் வாதங்களும் தான் எனக்கும் அவருக்கும் பிரச்சனை வருவதற்கு காரணம். அவர் தன் மனைவியை அடித்து துன்புறுத்துவதாகவும் அயல் வீடுகளில் உள்ள பெண்களுடன் அவர் சேட்டைகள் விடுவதாகவும் கேள்விப்பட்டு நாம் அவருடன் கதைப்பதையே நிறுத்திவிட்டோம். பின்னர் இதே ஐயர் எப்படியோ ஒரு வழியாக லண்டன் வந்து சேர்ந்து முருகன் கோயிலில் பூசை செய்கிறார் என்று கேள்விப்பட்டதும் எமக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவர் இங்கும் கோயிலில் ஐயராக இருந்து கொண்டு தனது லீலைகளை தொடர்ந்திருக்கிறார். இறுதியில் முறையாக ஒரு பெண்ணிடம் மாட்டிய இவர் கற்பழிக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு இன்று கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றார். இவர் ஒரு உதாரணம் மட்டுமே. இது போல் கம்பி எண்ண வேண்டியவர்கள் நிறைய பேர் இன்னும் வெளியில் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.

அர்ச்சகர்களின் பாடு இப்படியிருக்க இங்கு இலங்கைத் தமிழர்கள் மத்தியில் புசையில் ஈடுபடாத ஒரு ஐயரும் உலாவி வருகிறார். பத்மநாப ஐயர் என்ற இந்த ஐயர் இலக்கியத்துக்கான சர்வதேச பரிசு ஒன்றை கனடாவில் பெற்றவர். ஆனால் இவரது நீண்ட கால இலக்கிய வரலாற்றில் இவர் ஒரு இலக்கியமும் படைத்ததில்லை. இலக்கியம் எதுவும் படைக்காமல் இலக்கியவாதியாக உலாவும் ஒரே ஒரு நபர் இவர் தான். இவர் மேல் அன்பும் பண்பும் கொண்டு பல்வேறு முன்னணி அரசியல் நிர்வாகிகள் ஆளுமைகள் அவர் பற்றி கண்ணியமான கருத்துக்களை வைக்கின்றனர். எமக்கு காதல் சார்ந்து சிந்தித்தல் வராது என்றபடியால் இவர்மேல் கடும் விமர்சனம் வைக்கும் துணிவு உண்டு. இவர் ஐயர் என்ற பெயரை பாவிப்பது பற்றி ஏற்கனவே பல தடவை நாம் விமர்சித்துள்ளோம். லண்டனில் நடந்த பல கூட்டங்களில் பங்குபெற்று உரையாடும்படி பல தடவைகள் கேட்டிருந்தோம். அவர் மறுத்துவிட்டார். புலிக்கு மிஞ்சி வேறு எந்த விலங்கினத்திலும் நம்பிக்கை அற்ற இந்த சைவக்காரரின் உட்கிடப்பு கடந்த இலக்கியச் சந்திப்பு நடந்த போது கொஞ்சம் வெளிவந்தது.

இலக்கியச் சந்திப்பு நடத்தியவர்கள் அதற்காக சிலரை இலங்கையில் இருந்து அழைக்க முடிவு செய்திருந்தார்கள். அதில் ஒருவர் பௌசர். இதை அறிந்த ஐயர் மனித உரிமைகளை மீறிய பௌசரை அழைக்கக் கூடாது என்று கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார். அதற்காக நிதர்சனத்தில் வாசித்த சில செய்திகளை காரணங்களாக சுட்டிக் காட்டினார். ஆனால் அவர் எதிர்ப்புக்குப் பின்னால் இருந்தது முஸ்லீம் எதிர்ப்புணர்வு என்பது பலரும் அறிந்ததே. முஸ்லீம் எதிர்ப்புணர்வு என்ற புயல் கிளம்பியவுடன் இவரது படம் ஒன்றை தமிழர் தகவல் வெளியிட்டு பிரபலப்படுத்தியது. அதில் அவர் படுத்துக் கொண்டு இஸ்லாம் புத்தகம் வாசித்துக் கொண்டிருக்கிறார்.

புத்தகத்தில் இஸ்லாம் என்று எழுதியிருப்பது படத்தில் தெளிவாகத் தெரிந்தது. ஆக்கப்புர்வமான அறிவுள்ள புத்தகங்களை படிக்க மறுப்பவர் ஐயர் என்பது அவர் நண்பர்களுக்குத் தெரியும். அண்மையில் இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் குறிப்பிடத்தக்க இதழான தேசத்தை தான் இனிமேல் படிக்கமாட்டேன் என்று தன் நண்பர்களுக்கு அறிவித்திருக்கிறார். இந்தியப் பார்ப்பனருடனும் (காலச்சுவடு etc) இலங்கை இலக்கிய அரசியல் ஆதிக்க சக்திகளுடனும் நல்ல உறவைப் பேணும் இவரை நாமும் தடுத்தாற் கொள்வோம்.

இவர்கள் எல்லாம் இலங்கை இந்தியா மட்டுமின்றி அவர்கள் வாழும் இங்கிலாந்திலும் நடக்கும் ஒடுக்குமுறை அட்டூழியங்கள் பற்றி அக்கறையற்றவர்கள். இங்கு ஆசிய ஏழைகள் படும் துன்பம் பற்றி துளியும் அறிவற்றவர்கள். இங்கு தலித்தியத்திற்கான தேவை இல்லை என்றும் வாதாடுகிறவர்கள்.

இவ்விடத்தில் எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வேண்டியுள்ளது. சரேய் பல்கலைக்கழகத்தில் நடந்த ஆசிய மாணவர்களின் ஒன்றுகூடல் ஒன்றில் எனக்கொரு வடக்கிந்திய மாணவர் அறிமுகமானார். அவரை பல்வேறு தடவைகள் இதுபோன்ற கூட்டங்களில் சந்தித்த நான் ஒரு தடவை அவரின் குடும்பம் பற்றி விசாரித்தேன். அவர் ஒரு தலித் ஆக இருந்தமையினால் நான் கேட்காமலேயே பேச்சு தலித்துக்கள் பற்றி தாவியது. இங்கிலாந்திலே பிறந்து வளர்ந்த அவர் தான் முதன் முதலாக இந்தியா சென்ற போது தனக்கேற்பட்ட அவமானம் திரும்பிவந்த பின்பு தான் புதிதாக அவதானிக்கத் தொடங்கிய ஒடுக்குமுறைகள் எல்லாம் சொல்லி அழுதார். மிகவும் இளவயதிலேயே அவர் மேல் அநாவசியமாக திணிக்கத் தொடங்கி இருந்த அதிகாரம் வளரவளர இன்னும் எப்படி எல்லாம் அவரை வாட்டப் போகிறது என்று எண்ணி நானும் வாயடைத்துப் போனேன். ஐயர்மாரால் இவருக்கு ஆறுதல் சொல்ல முடியுமா?

இங்கிலாந்து மேலாதிக்க கலாச்சாரத்துக்கு இந்துத்துவ மேலாதிக்கம் கேட்காமல் கிடைத்த வரம். எந்தவித எதிர்ப்புச் சக்தியுமற்ற பிராமணத்துவம் ஒடுக்கப்படுபவர்களுக்காக கதைத்து அவர்களுக்கு பிரச்சனை உண்டாக்கப் போவதில்லை என்பது அவர்களுக்குத் தெரியும். தகுதியற்ற பல பிராமணர்கள் இந்த சமரச பண்பு காரணத்தால் மட்டுமே பல்வேறு தலைமைப் பொறுப்புக்களில் இருக்கிறார்கள்.

இந்தியர்கள் சார்ந்த ஊடக உரையாடல்களுக்கு இவர்களை அழைப்பது இவர்களிடம் கொள்கை நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை பெறுவது மூலமாக இங்கிலாந்து பொதுக்கலாச்சாரத்துக்குள் உயர்த்தப்பட்ட இந்த உயர் சாதியினரை வைத்துக் கொண்டு முழு ஆசிய குறிப்பாக இந்திய சமுதாயத்தையுமே கட்டி ஆழலாம் என்று ஆதிக்க வர்க்கம் கனவு காணுகிறது. ஹிந்து கவுன்சில் UK (Hindu council UK) என்னும் அமைப்பில் இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து பிராமணர்களையும் இந்த சமரச ஆதிக்க ஒன்றுபடலுக்கு உதாரணமாக காட்டலாம்.

இலண்டன் குண்டுவெடிப்பிற்கு பிறகு தீவிரவாதத்துக்கு எதிரான என்ற பாசாங்கில் இங்கிலாந்து அரசு பல அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது. சமீபத்தில் தீவிரவாதத்துக்கு எதிரான நடைமுறைகள் பற்றிய விவாதம் ஒன்றை ஒழுங்கு செய்திருந்த இங்கிலாந்து காவல்துறை தலைமையகம் எல்லா மதத் தலைவர்களையும் பேச அழைத்திருந்தது. (இங்கிலாந்து வாழ் ஆசிய ஆப்பிரிக்க சிறுபான்மையினரை கட்டுப் பாட்டில் வைத்திருக்க ஆதிக்க சக்திகள் படும்பாடும் அவர்கள் உபயோகிக்கும் உத்திகள் பற்றியும் இன்னுமொரு கதையில் விபரமாக பார்ப்போம்)

சுராஜ் சேகல் (Suraj Sehgal) ‘தீவிரவாதம் பற்றிய இந்துத்துவ கருத்துக்கள்’ என்ற கருத்தில் பேசிய இவர் 9.11 (நியுயோர்க் குண்டுவெடிப்பு) 7.11 (லண்டன் குண்டுவெடிப்பு) போன்ற தீவிரவாத நடவடிக்கைகளை நிறுத்தி அந்த நடவடிக்கைகளுக்கு எதிராக காவல்துறைக்கு உதவுவது இங்கிலாந்து வாழ் முஸ்லீம் மக்களின் கடமை என்றார் (!!). இவர் கூறியவற்றில் சிலவற்றை இணையத்தில் இருக்கும் அவரது வாக்குமூலத்தின் படி கீழே தருகிறோம்.

1. தீவிரவாதத்தை ஆதரிக்கும் மதம் மதமல்ல அது வெறும் கருத்து மட்டுமே.

2. தீவிரவாதம் முஸ்லீம்கள் சார்ந்த பிரச்சனை. ஒரு ஈயைக் கூட கொல்ல மறுக்கும் இந்து மதத்திற்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

3. ஏஷியன் என்ற சொல்லை பொதுப்படையான சொல்லாக பயன்படுத்த வேண்டாம். ஏனென்றால் ஏஷியன் என்ற சொல் தீவிரவாதத்தால் பாதிக்கப்படும் இந்துக்களையும் சேர்த்த
சொல்லாக இருக்கிறது.

4. இந்த நாட்டுக்கு தங்களை மேம்படுத்த வந்தவர்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் படி நடந்தால் அவர்கள் இங்கு வாழ அனுமதிக்கப்படக் கூடாது.

5. இங்கு Criminalகளுக்கான உரிமை பாதிப்படைந்த victim ஐ விட அதிகமாக இருக்கிறது. இதை அவர்கள் தவறாக பயன்படுத்துகிறார்கள்.

6. ஒருவரை ஒருவர் கொன்று தள்ளும் மற்ற மதங்களைப் போலன்றி இந்து மதத்தில் நாம் ஒருவரை ஒருவர் மதித்து நடக்கின்றோம்.

பாபர் மசூதி இடித்த கதை தலித்துக்களை சூறையாடும் கதை சமீபத்தில் குஜராத் நிலநடுக்கத்துக்காக சேகரிக்கப்பட்ட பணத்தை பறித்த கதை போன்று எத்தனை நடந்திருக்கின்றன. இவையெல்லாவற்றையும் மறந்துவிட்டார்களா?

இந்த கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்த இன்னொருவர் Taric Ramadan. இவரது ஏகாதிபத்திய உறவும் வர்க்க உணர்வு என்ற எடுப்புச் சாய்ப்பும் பற்றி விபரிக்க இங்கு இடமில்லை. இருப்பினும் முஸ்லீம்களுக்காக சத்தம் போடுபவர்களில் இவரும் ஒருவர். இவர் அங்கிருந்தவர்களை கிண்டல் செய்து முஸ்லீம்கள் தீவிரவாதத்தை நிறுத்த இந்துக்கள் ஏன் உதவக்கூடாது? என்று கேட்டுவிட்டு கூட்டத்தை விட்டுச் சென்றுவிட்டார்.

இவைகளை நீங்கள் இணையத்தில் பார்க்க வேண்டும் என்றால் Hindu Council UK இணையத்தை பார்க்கவும். அண்மையில் நிகழும் இந்துத்துவ மேலாண்மை செய்யும் முஸ்லீம் எதிர்ப்புகளையும் ஜாதிய ஒடுக்குமுறைகளையும் எழுத ஆரம்பித்தால் எழுதிக் கொண்டே போகலாம். காவல்துறை இவர்களை அழைத்து உரையாடியது அவர்களின் நடைமுறை உத்திகளை வகுப்பதற்காகவே. இவர்களிடம் ஆலோசனை பெறும் காவல்துறையில் நம்பிக்கை அற்று கல் எறியும் தொழிலாளர்களுக்கு நாம் ஆதரவு கொடுக்க வேண்டும்.

மேலே வந்த குறிப்பு 3ல் வரும் ஏஷியன் என்ற சொல்லிற்கான பிராமண எதிர்ப்பு நல்ல நகைச்சுவையான விடயம். நாங்கள் பாகிஸ்தானிகள் பங்களாதேசிகள் போன்று இல்லை. எங்களுக்கு முதலிடம் தாருங்கள் என்று ஆதிக்க வர்க்கத்திடம் கையேந்தும் விடயம் இது. ஆனால் இங்கிலாந்து இனத்துவேச ஆதிக்கத்துக்கு எல்லா ஆசியர்களும் ஒரே நிறம் தான் என்று இவர்களுக்குப் புரிவதில்லை. தாடி வைத்த பஞ்சாபி சிங்குகளைப் பார்த்து பின்லாடன் என்று கூறும் இனத்துவேசிகளுக்கும் இவர்களுக்கும் வித்தியாசமில்லை.

இந்த பிராமணர் கேட்பதெல்லாம் ஆதிக்கம் தான். தான் கூட வெள்ளை என்று என்னதான் சொன்னாலும் இனத்துவேசத்தின் கண்ணில் இவர்களும் ஆசியத்தூசு தான் என்பது இவர்களுக்குப் புரிவதில்லை. கருத்தளவில் தங்களை வெள்ளையர்களாக மாற்றும் அவாவில் இவர்கள் இங்கிலாந்து இனத்துவேசிகளின் அளவுக்கு கீழ்த்தரமான கருத்துடையவர்களாக உருவாகியிருக்கிறார்கள். மற்ற இனத் தொழிலாளர்கள் (கறுப்பின வெள்ளையின) இவர்கள் மேல் வெறுப்பும் அருவருப்பும் கொண்டுள்ளதற்கு காரணமும் இது தான்.

ஆரியக் குறியீடான சுவாஸ்திக அடையாளம் இந்தியாவிலும் சரி ஜெர்மனியிலும் சரி ஒரு அடக்குமுறையின் அடையாளமாக காலம் காலமாக இருந்து வருகின்றது. இந்த அடையாளத்தின் உபயோகத்தை ஐரோப்பாவில் தடைசெய்ய ஜெர்மனி அண்மையில் முயற்சித்தது. இதற்கு இங்கு வாழும் பிராமணர்களிடம் இருந்து பெரும் எதிர்ப்பு கிளம்பியது. ஹிந்து கவுன்சிலின் ஒரு கதை சொன்னார். உங்களுடைய குழந்தை விளையாடப்போன இடத்தில் யாரோ சேறடித்து விட்டார்கள் என்பதற்காக அக்குழந்தை வீட்டுக்குத் திரும்பி வந்ததும் யாரோ உனக்குச் சேறடித்திருக்கிறார்கள் நீ வேண்டாம் போ என்று விரட்டி விடுவீர்களா? அவனை (கவனிக்க ஆண்பால்) குளிப்பாட்டி வீட்டுக்குள் எடுப்பீர்கள் தானே. அதே போல் தான் ஜெர்மனியர்கள் (கவனிக்க இக்கதை ஜெர்மனியர்களுக்கு சொல்லப்படுகிறது) சுவாஸ்திகாவின் உண்மையான முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள வேண்டும். இது என் அறிவிப்பல்ல. மனித குலத்தின் மேம்பாட்டை ஊக்குவிப்பது.

இதைத்தான் 70 வருடங்களுக்கு முன்பு கிட்லர் சொன்னான் என்று நீங்கள் கூறலாம். ஆனால் அது இவர்களுக்கு விளங்காது. இப்படிப்பட்டவர்கள் மேல் சேறடிக்காமல் என்ன செய்வது. இந்தியாவில் பிராமணர் வாழும் இடங்களுக்கு போனால் சிலர் இந்த அடக்கு முறை அடையாளத்தை தங்கள் வீட்டின் வெளிச்சுவரில் பெரிதாக பொறித்து உள்ளதைப் பார்க்கலாம். இந்த வீட்டில் மனித குலத்தை மேம்படுத்துபவர்கள் வாழ்கிறார்கள் என்ற அறிவிப்பல்ல அது. அது ஒரு பிராமண வீடு என்ற அறிவிப்பே அது. இப்படிப்பட்ட வீடுகளுக்கு சேறடித்து இந்தியாவிலும் இந்த அடையாளப் பாவனைக்கு முடிவு கட்ட வேண்டி இருக்கும் பொழுது ஐரோப்பாவில் விட்டு வைப்போம் என்று இவர்கள் கனவு காண்கிறார்கள்.

மனித மேம்பாடும் மனித உரிமை பற்றிய அக்கறையும் பார்ப்பணியத்துக்கு தேவைக்கேற்றபடி பாவிக்க உதவும் உத்திகள் மட்டுமே. இதற்கான பலத்த எதிர்ப்பை நாம் கண் மூடிச் செய்வோம். பார்ப்பனிய எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது எமது போராட்டத்தின் பகுதிகள் மட்டுமே. ஒடுக்குமுறைகள் எந்த வடிவத்தில் வந்தாலும் எதிர்க்கவே நாம் இருக்கிறோம். இதனால் தமிழ் தேசியத்தில் திராவிட இனத்துவத்தில் குளிர்காய நினைக்கும் கனவான்கள் பார்ப்பனர் அல்லாத உயர்சாதியினர் (முக்கியமாக இலங்கை வெள்ளாளர்கள்) ஆகியோரின் நிம்மதியையும் நாம் குலைப்போம் என்பதையும் நினைவுட்டுகிறோம். கல் தோன்றி மண் தோன்றா என்று தொடங்கி நீங்கள் இடிக்கும் உலையை கனகாலத்துக்கு வேகவிட மாட்டோம். கண்மூடி எழுதிக்கிழிக்கும் தமிழ் நாட்டின் இன்னுமொரு முனைவர் கு. அரசேந்திரன் விட்ட ‘கல்’ என்ற நூலை ஒரு தமிழ் திராவிட மொக்குத்தனத்தின் உதாரணமாக சொல்லலாம். இவரின் மாமனார் ஈழவேந்தன் இலங்கையில் செய்யும் அநியாயங்களையும் அவரது மூதாதையர் செய்த கொடுமைகளையும் சொல்ல மீண்டும் நாம் வருவோம்.

அ. மார்க்ஸ்களைப் பாராட்டி ஐயர்களை எதிர்த்து எழுதிய கதை
அ. மார்க்ஸ்
வெளியீடு : எதிர்வெளியீடு, டிசம்பர் 2006
          விலை 60 இந்திய ரூபாய் (5 இங்கிலாந்து பவுண்கள்)
Pin It

2007 மே 14 அன்று சட்டீஸ்கரில் கைது செய்யப்பட்ட மருத்துவர் டாக்டர் பினாயக் சென் இன்றும் சிறைகளில். சென்ற ஜனவரி 17 அன்று ராய்பூர் மாவட்ட நீதி மன்றம் சென் மற்றும் நாராயண் சன்யால், பியுஸ் குஹா என்னும் இரு மாவோஸிஸ்டுகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அனுமதி அளித்தது. பின்னவர் இருவரும் தடை செய்யப்பட்டுள்ள மாவோயிசப் பொதுவுடமைக் கட்சியினர். டாக்டர் சென் சட்டீஸ்கர் மாநில மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் (PUCL) துணைத் தலைவர். அரசு சாரா நிறுவனம் ஒன்றின் பெயரை வைத்துக் கொண்டு மேற்படி இரு நக்சலைட்டுகளுக்கு இடையில் செய்தி கொண்டு செல்பவராக (Courier) செயல்பட்டார் என்பது சென் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு. தேசத்துரோகம், சதி, அரசுக்கு எதிரான யுத்தம் புரிந்தது முதலான குற்றங்கள் (இந்தியக் குற்றவியல் சட்டப்பிரிவுகள் 124பு, 121, 121பு) சென் மீது சுமத்தப்பட்டுள்ளன. இந்தச் சாதாரண சட்டங்கள் தவிர 1967ம் ஆண்டு சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA 1967). 2005ம் ஆண்டு சட்டீஸ்கர் சிறப்புப் பொதுப் பாதுகாப்புச் சட்டம் (CSPSA 2005) ஆகிய இரு அசாதாரணச் சட்டங்கள் (Extra- ordinary) அடிப்படையிலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். எனவேதான் அவரைப் பிணையில் எடுக்க இயலவில்லை.

இந்திய அரசு அது தோன்றிய நாள் முதல் இன்று வரை இது போன்ற சிறப்பு அதிகாரங்களை அளித்துக் கொள்ளும் தடுப்புக் காவல் சட்டங்களின்றிச் செயல்பட்டது இல்லை. இந்தியா குடியரசாக அறிவிக்கப்பட்ட அதே ஆண்டிலேயே (1950) முதல் தடுப்புக் காவல் சட்டத்தையும் அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் படேல் அறிவித்தார். பின் UAPa (1967), மிசா (MISA 1971) பொதுப்பாதுகாப்புச் சட்டம் (PSA 1978), தேசியப் பாதுகாப்புச் சட்டம் (NSA 1980 இது இன்று வரை அமுலில் உள்ளது), அவசியப் பணிகள் செயல்பாட்டுச் சட்டம் (ESMA 1980 1981), தடா (1985), பொடா (2001)... என தொடர்ந்து இத்தகைய சட்டங்கள் இயற்றப்பட்டன. அரசியல் சட்டம் மக்களுக்கு வழங்கும் அடிப்படை உரிமைகள் பலவற்றை இச்சட்டங்கள் பறித்தன. இதன் மூலம் அரசியல் சட்ட விரோத நடவடிக்கைகளைச் சட்ட பூர்வமாகவே மேற்கொள்ளக் கூடியவைகளாக அரசுகள் தம்மை அதிகாரப்படுத்திக் கொண்டன.

சட்டபூர்வமான சட்டங்களால் (Regular Law) கட்டுப்படுத்த இயலாத சூழலின் விளைவாக இத்தகைய சட்ட விரோதச் சட்டங்களை இயற்ற வேண்டிய அத்தியாவசியம் (Rational of supreme necesity) உள்ளதாக அரசுகள் வாதிட்டன. இந்தச் சட்டங்களை எதிர்த்து தனிமனிதர்களும் மனித உரிமை அமைப்புகளும் நீதிமன்றங்களுக்குச் சென்ற போது, அவை இத்தகைய அத்தியாவசியம் (Supreme necesity) அரசுக்கு உண்மையிலேயே இருந்ததா என்கிற கேள்விகளுக்குள் செல்லாமல் பாராளுமன்றத்திற்கு இத்தகைய சட்டங்களை இயற்ற அதிகாரமுண்டா இல்லையா (Question of legislative competence) என்பதாகப் பிரச்சினையை மாற்றி, அத்தகைய அதிகாரமுண்டு எனக்கூறி இத்தகைய சட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கின (எ.டு : பி.யூ.சி,எல் வி இந்திய அரசு ரிட் மனு 129/2002).

பொது ஒழுங்கு கெட்டுவிட்டது, தேசப் பாதுகாப்புக்கு ஆபத்து, அரசுடன் போர்ப்பிரகடனம், அரசுக்கு எதிராகச் சதி, பயங்கரவாதம் ஆகிய காரணங்களைச் சொல்லி இத்தகைய சட்ட விரோதச் சட்டங்களுக்கான அத்தியவாசியத்தை அரசுகள் வற்புறுத்தியதை நீதிமன்றங்கள் அப்படியே ஏற்றுக் கொண்டன. அரசின் சட்டம் இயற்றும் அதிகாரத்தை நீதிமன்றங்கள் இவ்வாறு விரிவுபடுத்தின. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் அரசு தனது அவசிய அதிகாரம் (Necessary Power) என எதைக் கருதுகிறதோ அதை ஏற்று உண்மையிலேயே அரசியல் சட்டத்தால் அவற்றுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை மீறுவதற்கு நீதிமன்றம் உதவி செய்தது ஏற்பு வழங்கியது.

இத்தகைய ஏற்பு வழங்குவது மூலம் அசாதாரணச் சட்டங்களுக்கு அரசியல் சட்ட அங்கீகாரம் அளிப்பது மட்டுமின்றி, இத்தகைய அசாதாரணச் சூழல்களைக் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை (measures) அரசு நிர்வாகம் மேற்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளில் அரசு மேற்கொள்கிற சட்ட விரோத நடவடிக்கைகளும் அடங்கம். சட்டீஸ்கரில் மாவோயிஸ்டுகளை எதிர்கொள்ள அரசே நிறுவியுள்ள ஆயுதம் தாங்கிய கூலிப்படையாகிய சல்வா ஜூடும் (பார்க்க : எனது உலகமயத்திற்குப் பின் இந்தியா) தொடங்கி கைது செய்யப்பட்டவர்கள் மீது மேற்கொள்ளப்படும் போதைப் பகுப்பாய்வு (Narco - analysis) எனும் மெய்யறிவும் சோதனை உட்பட அடக்கம்.

கடும் எதிர்ப்புகளின் விளைவாக தடா, பொடா முதலான சட்டங்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்ட போதிலும், அல்லது அதன் காலக்கெடு முடிந்தவுடன் மறுபடி நீடிக்காமல் விடப்பட்ட போதிலும் தேசியப் பாதுகாப்புச் சட்டம், (NSA) அவசிய பணிகள் செயல்பாட்டுச் சட்டம் (ESMA), சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA) முதலியன தொடர்ந்து அமுலில் உள்ளன. தற்போது ஆட்சியிலுள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2004ல் பதவி ஏற்றவுடன் முன்பே அறிவித்தபடி பொடா சட்டத்தை அது நீக்கிக் கொண்டது. ஆனால் அதே நேரத்தில் ஏற்கனவே இருந்து வந்த சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்து, பொடா சட்டத்தின் சில மோசமான கூறுகளை அதில் இணைத்து அறிவித்தது. அது சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (திருத்தப்பட்டது) 2004 என்றழைக்கப்படுகிறது. தற்போது அமுலில் உள்ள அச்சட்டத்தைப் பயன்படுத்தியே இன்று பினாயக் சென் போன்ற மனித உரிமைப் போராளிகள் மட்டுமின்றி இதர பல அரசியல் கைதிகளும், மாவோயிஸ்டுகளும் கைது செய்யப்படுகின்றனர். இந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை இன்று மெதுவாக மேலெழத் தொடங்கியுள்ளது.

இந்தச் சட்டங்கள் தவிர கொடூரமான பிரிவுகளை உள்ளடக்கிய இதுபோன்ற அசாதாரணச் சட்டங்கள் மாநில அளவில் இயற்றப்பட்டு நடைமுறைப் படுத்தப்படுவதும் குறிப்பிடத்தக்கது. மணிப்பூர் மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி பிடிவாதமாக நடைமுறைப் படுத்தப்படும் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச்சட்டம் (AFPSA) 1958, அமைப்பு ரீதியான குற்றங்களைக் கட்டுப்படுத்தும் மஹாராஷ்டிரச் சட்டம் (MCOCA), சட்டீஸ்கர் சிறப்புப் பொதுப் பாதுகாப்புச் சட்டம் (CSPSA)" முதலியன இவ்வகையில் அடக்கம். அமைப்பு ரீதியான குற்றங்களைக் கட்டுப்படுத்தும் கோகா (COCA) சட்டம் இப்போது மாநில வாரியாக இயற்றப்படக் கூடிய நிலை உள்ளது. பினாயக் சென் மீது இந்த மாநில அளவிலான (CSPSA) சட்டமும் பாய்ந்துள்ளது. இந்தச் சட்டத்தின்படி சட்டீஸ்கர் அரசு எந்த இயக்கத்தையும் சட்ட விரோதமானது என அறிவிக்க முடியும். ஆயுதப் படையில் அந்த இயக்க உறுப்பினர்களை மூன்று ஆண்டுகள் வரை காவலில் வைக்கலாம். எந்தப் பேச்சையும், பொதுக்கூட்டத்தையும் சட்ட விரோதம் என அறிவித்து ஏழு ஆண்டுகள் வரை தண்டனை வழங்கலாம். இவ்வாறு அமைப்பு ரீதியாகத் திரள்வது, பேச்சுரிமை முதலான அடிப்படை அரசியல் சட்ட உரிமைகள் பறிக்கப்படுகின்றன. இந்தச் சட்டத்தின் அடிப்படையிலேயே பினாயக் சென்னுக்குக் பிணை மறுக்கப்பட்டது.

இத்தகைய சட்ட விரோத அசாதாரணச் சட்டங்கள் குறித்து இன்னொன்றையும் இங்கே குறிப்பிட வேண்டும். இந்தச் சட்டங்கள் காலாவதியான பின்னும்கூட தொடர்ந்து செயல்படும் உரிமைகளை (Norm of Continuity) தன்னகத்தே கொண்டுள்ளன. தடா சட்டத்தின் s1(4) மற்றும் பொடாவின் s(16) பிரிவுகளின்படி, தண்டனை, சட்டக் கடப்பாடு (liabitity), உரிமைகள் (rights & Privileges) ஆகியவற்றோடு இந்தச் சட்டத்தின்படி தொடங்கப்பட்ட புலனாய்வுகள், வழக்கு நடவடிக்கைகள் ஆகிய இச்சட்டம் காலாவதியான பின்னும் கூட காலாவதி ஆகாதது போலவே கருதித் தொடரப்படும். எனவே ஒரு முறை தடா, பொடாவில் சிக்கியவர்களுக்கு அச்சட்டம் நீக்கப்பட்டாலும்கூட எந்தப் பயனும் இல்லை. தவிரவும் அதே வழக்கில் தொடர்புடையவர்கள் என யாரை வேண்டுமானாலும், சட்டம் காலாவதியான பின்னும் கூட எப்போது வேண்டுமானாலும் இணைத்து இச்சட்டத்திற்குள் கொண்டு வர இயலும். ஒரு சமீபத்திய எடுத்துக்காட்டு : சென்ற செப்டம்பரில் (2007) தேனி, போடி, வருசநாடு பகுதிகளில் மாவோயிஸ்டுகள் சிலர்கைது செய்யப்பட்டனர். சுமார் 14 பேர் இன்று இந்த அடிப்படையில் சிறைகளிலுள்ளனர். இவர்களில் முக்கியமானவராகப் போலீஸ் தரப்பில் கூறப்படுபவர் சுந்தரமூர்த்தி.

தர்மபுரி மாவட்டத்தில் 1992ம் ஆண்டு ஒரு பாலத்திற்கு வெடிகுண்டு வைத்ததாக தடா வழக்கொன்று அவர் மீது சென்னை தடா நீதி மன்றத்தில் நிலுவையிலுள்ளது. எனவே இவர் தடா நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்ட ஒரு குற்றவாளி (Proclaimed Offender). இன்று இவர் கைதானவுடன் அவர் தடா வழக்குக் குற்றவாளியாகக் கருதப்படுகிறார். முன் குறிப்பிட்ட பிரிவுகளின் படி இந்நிலை அவருக்கு ஏற்படுகிறது. ஆனால் இன்று கைதாகியுள்ள மன்மதராசா (35), ரத்தினவேலு (38), பெருமாள் (33), திருப்பதி (36) ஆகிய நால்வர் மீது இதுவரை எந்தத் தடா வழக்குமில்லை. தடா காலாவதியாகி இன்று பன்னிரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. எனினும் இந்த நால்வரும் முன்குறிப்பிட்ட சுந்தரமூர்த்திக்கு அடைக்கலம் கொடுத்ததாகச் கூறப்பட்டு அவர்கள் இன்று தடா சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர். 1985 முதல் 1995 வரை உயிருடனிருந்த தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 76,000 பேர்களில் 1.5 சதத்தினர் மீதான குற்றச்சாட்டுகளை மட்டுமே காவல்துறையால் நிரூபிக்க முடிந்ததது. மீதியுள்ள 98.5 சதத்தினரும் பிணையில் விடுதலையின்றிப் பல ஆண்டுகள் சிறையிலேயே கழிக்க நேர்ந்தது. அதே நிலைமை இன்று இந்த நால்வருக்கும் ஏற்பட்டுள்ளது.

பினாயக் சென் கதைக்குத் திரும்புவோம். வேலூரிலுள்ள மருத்துவக் கல்லூரியில் 1970ல் எம்.பி.பி.எஸ்., பட்டம் பெற்ற சென், சட்டீஸ்கார் பழங்குடி மக்கள் மத்தியில் மருத்துவப் பணி ஆற்றியவர். மாற்று மருத்துவம், நீரிழப்பு, காசம், மலேரியா, தொழுநோய் முதலானவற்றிற்கு எளிய மருத்துவங்களைச் செய்தல், வறுமையின் விளைவான நோய்களை எதிர்கொள்ளல் எனப் பணி செய்து வந்தவர். பி.யு.சி.எல் அமைப்பில் செயல்பட்ட அவர் சட்டீஸ்கர் சிறப்புப் பொதுப் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்ட போது அதை எதிர்த்துப் போராடினார். வழக்குத் தொடர்ந்தார். பஸ்தார் மாவட்டத்தில் ஏழு பழங்குடியினர் கொல்லப்பட்ட பிரச்சினையை அவர் முன்னெடுத்தது காவல்துறைக்கு பெரும் தலைவலியாக இருந்தது. விளைவு : எந்த சட்ட விரோத தடுப்புச் சட்டத்தை அவர் எதிர்த்தாரோ அதே சட்டத்தின் கீழ் இன்று அவர் கைது செய்யப்பட்டு பிணையுமின்றி (bail) கடந்த ஏழு மாதங்களாகச் சிறையிலுள்ளார். அமார்த்திய சென், நோம்சோம்ஸ்கி, அருந்ததிராய் முதலானோர் சென் கைது செய்யப்பட்டதைக் கண்டித்துள்ளனர். முந்தைய மாநில அரசு 60,000 பெண் நல ஊழியர்களைப் பயிற்றுவிக்கும் திட்டம் ஒன்றை நிறைவேற்றியபோது அந்தக்குழுவில் அதிகாரப்பூர்வமாகப் பங்கேற்றுச் செயல்பட்டவர் சென் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறை வைக்கப்பட்டுள்ள இன்னொருவர் மாவோயிச இதழான பீப்பிள்ஸ் மார்ச் ஆசிரியர் கோவிந்தன்குட்டி. கொச்சின் அருகிலுள்ள ஒரு ஊரிலிருந்து டிசம்பர் 19, 2007 அன்று அவர் கைது செய்யப்பட்டார். குட்டியின் இதழ் வெளிப்படையாக மாவோயிசச் சிந்தனைகளை ஆதரிப்பது. உந்தரகாந்த் பகுதியில் 17 ஆண்டுகள் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வந்த பிரஷான்த் ராஹி டிசம்பர் 2007ல் டெஹ்ராடூனில் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட சரியான தேதி குறித்து காவல்துறை பொய் சொல்கிறது. ஹிமாசல் டைம்ஸ், ஸ்டேட்ஸ்மென் ஆகிய இதழ்களில் பணியாற்றிய ராஹியை மாவோயிச அமைப்பொன்றின் படைப் பிரிவுத் தலைவர் என அரசு குற்றம் சாட்டியுள்ளது.

கோவிந்தன்குட்டியை முறையான எந்த சட்ட ஆவணமும் இன்றி ஆந்திர மாநில போலீசார் கேரளத்தில் வந்து கைது செய்துள்ளனர். வழக்கம் போல இ.பி.கோ 134, 124பு, 133ய முதலான பிரிவுகள் தவிர UAPA சட்டமும் அவர் மீது பிரயோகிக்கப்பட்டுள்ளது. சிறையில் மிக மோசமாக இவர்கள் நடத்தப்படுகின்றனர். வழக்குரைஞருடன் பேசவேண்டுமானால்கூட சிறை அதிகாரிகள் முன்னிலையில் தான் பேச வேண்டும். கைதான நாள் முதல் அவர் சிறையில் உண்ணாவிரதமிருக்கிறார். கட்டாயாமாக அவருக்கு சலைன், குளுகோஸ் முதலியன ஏற்றப்படுகின்றன. பிரஷாந்த் ராஹியைப் பற்றி ஹிமாசல பிரதேஷ் முதல்வர் பி.சி.கந்தூரி, அந்த ஆள் ஒரு பத்திரிக்கையாளன் என்பதெல்லாம் சும்மா. தேசப் பாதுகாப்புக்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருந்த நபர் அவர் என எடுத்தெறிந்து பேசியுள்ளார். கோவிந்தன்குட்டி குறித்து மிக மோசமான தகவல்களை காவல்துறை பத்திரிக்கைகள் மூலமாக வெளியிட்டது. இவர்களின் கைது குறித்து எப்போதாவது அங்கொன்றும் இங்கொன்றுமாகவே பத்திரிக்கைகள் செய்தி வெளியாகியிருக்கின்றன. சஞ்சய் தத் பிரச்சினைக்கு பத்திரிக்கைகளில் அளிக்கப்படும் முக்கியத்துவத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய விஷயம் இது. இத்தனைக்கும் குட்டியும் ராஹியும் பத்திரிக்கையாளர்கள். சென் எல்லோராலும் மதிக்கப்படும் ஒரு மக்கள் மருத்துவர்.

சென்ற ஆண்டு இவ்வாறு கைது செய்யப்பட்ட மேலும் இரு மக்கள் பணியாளர்களைப் பற்றியும் இங்கே குறிப்பிட வேண்டும். உத்திரப் பிரதேசத்திலுள்ள மிர்ஸாபூர் பகுதியில் பழங்குடியினர், தலித்துகள் மற்றும் பெண்கள் மத்தியில் பணியாற்றிக் கொண்டிருந்த ரோமா என்கிற பெண் ஊழியர் ஆகஸ்ட் 2007ல் கைது செய்யப்பட்டார். தேசியப் பாதுகாப்புச் சட்டம் இவர் மீது பிரயோகிக்கப்பட்டுள்ளது. வனப்பகுதி மக்கள் மற்றும் தொழிலாளர் அமைப்பு என்னும் இயக்கத்தில் பணி செய்து கொண்டிருந்தவர் ரோமா.

பாக்ஸைட் தாதுவைக் கொள்ளையிட முனையும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக ஒரிசாவிலுள்ள காசிபூர் பகுதி மக்கள் போராட்டத்தில் கடந்த 13 ஆண்டுகளாகத் தன்னை இணைத்துக் கொண்டு செயல்பட்டு வந்த ஒரியக் கவிஞரும், இலக்கிய இதழ் ஒன்றில் பணியாற்றியவருமான சரோஜ் மொஹந்தி சென்ற ஜூலை 2007ல் ராயகாடாவில் கைது செய்யப்பட்டார். கொள்ளை, கொலை முயற்சி வழக்குகள் இவர்கள் மீது போடப்பட்டுள்ளன. மத்தியப் பிரதேசத்திலுள்ள பேருல், ஹர்தா மற்றும் கந்த்வா மாவட்டங்களில் பழங்குடியினர் மத்தியில் பணி செய்து வந்த ஷ்ரமிக் ஆதிவாசி சங்காதனா மற்றும் சமாஜ்வாதி ஜன்பரிஷத் அமைப்புகளைச் சேர்ந்த ஷமீம், அனுராக் என்னும் இரு மக்கள் பணியாளர்களுக்கு மாநில பாதுகாப்புச் சட்டத்தின்படி மாவட்ட மாஜிஸ்ட்ரேடால் சென்ற ஜூன் மாதம் Externment Notice வழங்கப்பட்டது.

இவர்கள் அனைவரும் யாராலும் கண்டு கொள்ளப்படாத, ஆக ஒதுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்கள் மத்தியில் பணி செய்தவர்கள். தலித்துகள், ஆதிவாசிகள் முதலான அடித்தள மக்களின் மிகவும் அடிப்படையான மனிதத் தேவைகளுக்கான போராட்டங்களில் துணை நின்றவர்கள். அதற்காகவே கடுமையான கண்காணிப்புகள், கைதுகள், சொல்லொனா சித்ரவதைகள், பிணையில் விடுதலை செய்ய இயலாத சட்டங்களின் தாக்குதல்கள், நீண்ட சிறை வாசகங்கள், ஊடகங்களின் வழியான கடுமையான அவதூறுப் பிரச்சாரங்கள் ஆகியவற்றை இன்று சந்தித்துக் கொண்டுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்புவோரை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

உலகமயம் என்ற பெயரில் உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நாட்டு மக்களின் நில, நீர், கனிமவளங்களை எல்லாம் திறந்துவிடுகிற நடைமுறைகள் அதிகமாகிற போது அமைதி வழியில் சட்டபூர்வமாகப் போராடும் இத்தகைய மனித உரிமைப் போராளிகளும் தமது கொள்கைகளின் அடிப்படையில் சமரசமின்றித் தம் வழியில் நின்று போராடும் மாவோயிஸ்டுகளும் குறி வைத்துக் தாக்கப்படுகின்றனர். உலகெங்கும் மனித உரிமைகளைக் காப்பதற்காகப் போராடி வரும் செயல் வீரர்களின் நிலை குறித்து ஆய்வு செய்ய ஐக்கிய நாடுகள் அவை பொதுச் செயலாளரின் சார்பில் சிறப்புப் பிரதிநிதி ஒருவர் நியமிக்கப்பட்டார். ஹினா ஜிலானி என்றும் இப் பிரதிநிதி சென்ற ஜனவரி 24, 2007 அன்று தன் அறிக்கையை வெளியிட்டார். நில உரிமைகள், இயற்கை வளங்கள், சுற்றுச் சூழல் முதலான பிரச்சினைகளைக் கையிலெடுக்கும் மனித உரிமைப் போராளிகளே இன்று அதிக ஆபத்திலுள்ளனர் என்பதை இவ்வறிக்கை சுட்டிக் காட்டியது.

பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகளுக்காகப் போராடுகிற இப்போராளிகளின் மனித உரிமைகள் அரசால் மட்டுமின்றி அரசுக்கு அப்பாற்பட்டவர்களாலும் தாக்குதல்களுக்கு உள்ளாகின்றன. எல்லா விதமான வடிவங்களிலும் இந்தத் தாக்குதல்கள் அமைகின்றன. எனக் கூறிய இவ்வறிக்கை இவர்களது பணிகள் மனித உரிமை சார்ந்தது என்பதே ஏற்கப்படாமல் தேசப் பாதுகாப்பு முதலான பெயர்களில் இவர்கள் குற்றம் சாட்டப்படுவதையும் சுட்டிக் காட்டியது. அரசின் விரோதம், பொருளாதாரக் பற்றாக்குறை, ஊடகப் புறக்கணிப்பு எனப் பல மட்டங்களில் இவர்களின் உரிமைகளும் செயல்பாடுகளும் பறிக்கப்படுகின்றன. தாக்குதல்கள் நிகழ்த்தப்படுகின்றன. மோதலில் கொல்வது, ஆளையே தலைமறைவாக்குவது முதலான வடிவங்களையும் இப்போராளிகள் சந்திக்க நேரிடுகிறது.

பல்வேறு அரசியல் காரணங்களின் விளைவாக ஆயுதம் தாங்கிய போராட்டங்கள், பயங்கரவாதச் செயற்பாடுகள் ஆகியன மிகுந்துள்ள ஒரு காலகட்டத்தில் இன்றைய மனித உரிமைப் பணியாளர்கள் பணி செய்ய வேண்டிய நிர்பந்தத்திலுள்ளனர். இத்தகைய நடவடிக்கைகளின் பின்னணியிலுள்ள அரசயில் பிரச்சினைகளைத் தீர்க்காமல் மேலும் மேலும் அடக்கு முறைகள், உரிமை பறிப்புகள், சட்ட விரோதச் சட்டங்கள் ஆகியவற்றின் மூலம் இவற்றை ஒடுக்க முனைகிறது அரசு. இதன் மூலம் வரலாறு காணாத அளவில் மனித உரிமைகள் பறிக்கப்படக்கூடிய அவலம் ஏற்படுகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்காக, அவர்களின் சிவில் உரிமைகளுக்காக நிற்கும் மனித உரிமைப் போராளி எளிதில் தேசப் பாதுகாப்புக்கு எதிரானவராகக் குற்றம் சாட்டப்படுகிறார். தேசப் பாதுகாப்பு என்கிற பெயரில் அடிப்படை மனித உரிமைகளைப் பறிக்கும் நிலையை நியாயப்படுத்தும் போக்கு இன்று உலகெங்குமுள்ளது. செப்டம்பர் 11க்குப் பின் இது மோசமாகிறது. மனித உரிமைகளைப் பேசுவதென்பதே பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பது என்பதாகப் பேசக் கூடியவர்கள் அதிகமாகிறார்கள்.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எல்லாவற்றையும் திறந்துவிடுகிற இன்றைய சூழலில் பொருளாதார மற்றும் அரசியல் உரிமைகளைப் பேசுகிறவர்கள் அரசின் மிகப் பெரிய எதிரியாகக் கருதப்படுகின்றனர். இந்த வகையிலேயே இன்று பினாயக் சென் முதலானோர் மீதான தாக்குதல்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கனிவளமும் நீர் வளமும் மிகுந்துள்ள இடங்களில் மாவோயிஸ்டுகள் வளர்வதை எம்மால் சகிக்க முடியாது என மன்மோகன் சிங் ஒரு முறை கூறியதை நாம் அவ்வளவு எளிதாக மறந்துவிட இயலாது.

1998ம் ஆண்டு மனித உரிமைப் போராளிகளின் பாதுகாப்பிற்கான பிரகடனம் ஒன்றை (Declaration on Human Right Defenders) ஐ.நா சபை வெளியிட்டது. இதற்கான ஒரு சிறப்புப் பிரகடனமும் 2000த்தில் வெளியிடப்பட்டது. மனித உரிமைகளைப் பாதுகாக்கும் இவர்களின் பாதுகாப்பை அரசு உத்தரவாதம் செய்ய வேண்டுமென இப்பிரகடனம் கோருகிறது. மனித உரிமைகளுக்காகப் போராடும் உரிமை, அமைப்பு உருவாக்கும் உரிமை, உரிமை மீறல்களை ஆவணப்படுத்தும் உரிமை, இத்தகைய பணிகளுக்காக நிதி திரட்டும் உரிமை, அரசு நிறுவனங்களின் செயல்பாடுகளை விமர்சிக்கும் உரிமை, சர்வதேச அளவிலான பாதுகாப்பு அமைப்புகளிடம் உதவி கோரும் உரிமை ஆகியவற்றை இப்பிரகடனம் அங்கீகரிக்கிறது.

என்ன பிரகடனங்கள், ஒப்பந்தங்கள் இருந்து என்ன பயன். மனித உரிமை தொடர்பான விருப்ப ஒப்பந்தங்கள் பலவற்றில் இந்தியா இதுவரை கையெழுத்திடவில்லை. கையெழுத்திட்ட போதும் அவற்றை மீறுவதற்கு தயங்கியதுமில்லை.

இதுதான் இந்தியாவில் இன்றைய மனித உரிமைகளின் நிலை.

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான ஓர் இயக்கம்

இந்தியாவெங்குமுள்ள சிறைகளில் அடைபட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் நோக்கில் அகில இந்திய அளவில் ஒரு இயக்கத்தைக் கட்டுவதற்கான தயாரிப்புக் கூட்டமொன்று டெல்லியிலுள்ள மனித உரிமைப் போராளிகளின் முன் முயற்சியில் சென்ற டிசம்பர் 20 அன்று புது டெல்லியில் கூட்டப்பட்டது. பேராசிரியர் எஸ்.ஏ.ஆர். கீலானி (டெல்லி), பேரா. அமித்பட்டாசார்யா (மே.வ), ரோனாவில்சன் (ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்) முதலானோர் முன் முயற்சி எடுத்துள்ளனர். டெல்லி, ஜம்மு, காஷ்மீர், நாகலாந்து, அஸ்ஸாம், பஞ்சாப், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கேரளா, மேற்கு வங்கம், பிஹார், ஜார்கர்ன்ட், ஹரியானா ஆகிய மாநிலங்களிலிருந்து சுமார் 50 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டிலிருந்து அ.மார்க்ஸ¨ம், புதுச்சேரியிலிருந்து கோ.சுகுமாரனும் கலந்து கொண்டனர். முன்னாள் மத்திய அமைச்சர் சுரேந்திர மோகன், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ரஜிந்தர் சச்சார் முதலானோர் வந்திருந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர். எழுத்தாளர் அருந்ததிராய் ஒப்புதல் அளித்தும் கலந்து கொள்ள இயலவில்லை.

பேராசிரியர் அமித் பட்டாச்சார்யாவை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு (வரலாற்றுத்துறைத் தலைவர், ஜாதல்பூர் பல்கலைக் கழகம், மேற்கு வங்கம்) ஒரு குழு ஒன்று உருவாக்கப்பட்டது. வரும் மார்ச் 31, ஏப்ரல் 1 தேதிகளில் டெல்லியில் இது தொடர்பாக அகில இந்திய மாநாடு நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. பிப்ரவரி 28ல் சிறை நிலைமைகளை குறித்த ஒரு கவன ஈர்ப்பாக நாடெங்கும் ஆர்ப்பாட்டம், சிறைப் போராட்டங்கள் ஆகியவற்றை மேற்கொள்வது பற்றியும் பேசப்பட்டது.

அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், மரண தண்டனையை ஒழித்தல், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்தல், சிறை நிலைமைகளை திருத்துதல் சிமி அமைப்பின் மீதான தடையை நீக்குதல், நார்கோ அனாலிசிஸ் எனப்படும் மெய்யறியும் சோதனைகளை தடை செய்தல் முதலான பல தீர்மானங்கள் இயற்றப்பட்டன.

இந்திய அளவில் சிறையிலுள்ள அரசியல் கைதிகள் குறித்த ஒரு தகவல் தொகுப்பு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. தமிழகத்தைப் பொருத்தமட்டில் பல ஆண்டுகளாக சிறையில் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட முஸ்லீம் கைதிகள், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நால்வர், பொழிலன் உள்ளிட்ட த.ஒ.வி இயக்கத்தினர் மூவர், சமீபத்திய தேனி பகுதியில் கைதான மாவோயிஸ்டுகள் சுமார் 15 பேர் ஆகியோர் பற்றி முதற்கட்டமாக தகவல்கள் அளிக்கப்பட்டன.

அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மான வடிவங்கள் முதலியன விரிவாக அடுத்த இதழில் இடம் பெறும். இது தொடர்பாக தொடர்பு கொள்ள விரும்புவோர் அ. மார்க்ஸ், கோ. சுகுமாரன் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

Pin It

உட்பிரிவுகள்