Homeomurasu Logo

பெரும்பாலான பெண்கள் கர்பப்பை இரத்த ஒழுக்குத் தொந்தரவுகளுக்கு உள்ளாகி இருக்கின்றனர். சாதாரண மருத்துவர்களும், பெண் பாலுறுப்புச் சிறப்பு வல்லுனர்களும் இந்த இரத்த போக்கை நிறுத்துவதற்கு பல்வேறு வகையான மருந்துகளைப் பயன்படுத்துகின்றனர். ஒழுக்கு நின்று விட்ட பின்னரும் மருந்தை விட்டு விடாமல் தொடர்ந்து உட்கொள்ளச் சொல்லுகின்றனர்.

இந்த மருந்துகளைக் கொடுத்தும் நிறுத்த இயலாமல் போகும்போது, பிறப்புறுப்பின் உள்ளே உட்காயம் இருப்பதாகக் கூறி அதற்காக, நோய் எதிர்ப்புக்காக என்று பாலுறுப்புக்கு உள்ளே செருகக்கூடிய மருந்தையும் கொடுத்து சிகிச்சை செய்கின்றனர்.

ஆனால் இதுவும் பயனளிக்காமல் போய் விடும்போது ஒரு ஊடுகதிர்ச் சிகிச்சை செய்வதற்கு சிபாரிசு செய்து அதன்படி செய்யவும் படுகிறது. இதுவும் பலனளிக்காமல் போய் விடும்போது முடிவாக அறுவை சிகிச்சை செய்து கர்பப்பையை நீக்கிவிட்டு, இனித் தொந்தரவு இருக்காது என்று மகிழ்வுடன் சிரித்துக் கொண்டு சொல்வார்கள் அறுவை மருத்துவர்கள். இதன் மூலம் பெண் தன் பாலுறுப்பை இழந்து விடுகிறாள். இது போன்ற அறுத்து நீக்கும் ஆயுத சிகிச்சையை அனுபவப்பட்ட ஹோமியோபதி மருத்துவர்கள் கடும் கண்டனம் செய்கிறார்கள்.இந்த இரத்த போக்கை நிறுத்துவதற்கு முறையான சிகிச்சையும், சிறந்த தீர்வும் ஹோமியோபதியில் இருக்கின்றன.

பெரும்பாலும் அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பப் பையை நீக்காமலேயே நலம் செய்விக்க முடியும். வீர்யப்படுத்தப்பட்ட, செயலாற்றல் மிக்க ஹோமியோபதி மருந்துகள் கொடுக்கப்படும்போது, அம்மருந்து மிக எளிதாகவும், மிகவிரைவாகவும் தன்னுடைய கடமையயை நிச்சயமாகச் செய்யும்.

சிறந்த சில ஹோமியோபதி மருந்துகள்:

இபிகாக்;

கர்பப்பையிலிருந்து தொடர்ந்து ஒழுக்கு இருக்கும், ஆனால் கொஞ்ச நேரத்திற்கு ஒரு முறை அதிகமாகப் பாய்ந்து வரும், அப்படி வரும்போது பிரகாசமான சிவப்பு இரத்தம் வெளி வரும். துயரர் தனக்கு உணர்விழப்பு ஏற்படுமோ என்று நினைப்பார், அல்லது மூச்சுத் திணறல் இருந்தால் மற்றும் இரத்தப் போக்கின் அளவு நெடுங்கிடையாக இருப்பதற்குத் தேவையான அளவு இல்லாதிருந்தால் குமட்டல் உணர்ச்சி, இரத்த அழுத்தக் குறைவினால் வரும் உணர்விழப்பு, வெளிறிய தோற்றம் இவற்றிற்கு சிறந்தது இபிகாக் மருந்து ஆகும்.

அகோனைட்;

பிரகாசமான சிவப்புஇரத்தம் பாய்ந்து வெளியேறி இதன் கூடவே மரண பயமும் இருந்தால் நல்ல பயன்தரும்.

பாஸ்பரஸ்;

கிட்டத் தட்ட எப்போதும் இரத்த போக்கிற்கு உதவும் மருந்தாகும் இது. வாடி வதங்கி இருக்கும் பெண் துயரர், மெலிந்து ஒல்லியாகி எப்போதும் வெப்பம் காரணமாக துன்பப் பட்டுக் கொண்டிருந்தால், போர்வையைப் போர்த்தாமல் எப்போதும் குளிர்ச்சியாக இருக்க விரும்பினால், கர்பப் பையிலிருந்து அடிக்கடி இரத்தப்போக்கு இருந்தால் சிறந்த முறையில் பயனளிக்கும் மருந்து பாஸ்பரஸ் ஆகும்.

இரத்தம் உறைந்து இருந்தால் அல்லது இரத்தப் போக்கு கறுப்பாக நீராக இருந்தால் சீகேல் கார்னூட்டம் நலமளிக்கும்.

நோயின் பெயருக்கு மருந்து என்கிற இயந்திரத்தனம் இல்லா மல், துயரரின் தொந்தரவுக்கான காரணம் என்ன என்றும், துயரரின் உடல்வாகு பற்றியும், மனப்பாங்கு பற்றியும், இரத்த ஒழுக்கானது என்ன நிறத்தையும், என்ன தன்மையையும். என்ன வகையையும் கொண்டுள்ளது என்றும் அத்துடன் கூடவே மாறுமைக் குறிகளையும் கணக்கில் கொண்டு அதே போன்ற முழுமைக் குறிகளை செயற்கையாகத் தோற்றுவித்த மருந்துப் பொருள் எது என்று தேடுகிறார் ஹோமியோபதி மருத்துவர்.

அவருக்கு நோயின் பெயர் பற்றி கவலை ஏதுமில்லை. அதற்கு அவசியமுமில்லை. வீர்யப்படுத்தப் பட்ட மருந்தை துயரரின் இயங்கும், தாங்கும் திறனுக்கேற்ப வழங்கும் போது கர்பப்பை இரத்த ஒழுக்கு நிறுத்தப்பட்டு நலமாக்கல் நிகழ்கிறது என்கிறார் மரு. ஜே.டி.கெண்ட்.

இது எப்படி செயல்படுகிறது என்பதை விட இந்த நுண்ணிய ஹோமியோ மருந்து உயிர் ஆற்றலில் வேலை செய்கிறது என்பது மட்டும் உண்மை!

-.அப்துல் அஜிஸ்

Pin It

ஜவஹர்லால் நேரு பிறந்த நவம்பர் 14 ம் நாள், அவர் குழந்தைகளின் மீது கொண்ட அளவற்ற அன்பின் காரணமாக, ஆண்டுதோறும் குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

குழல் இனிது யாழ் இனிது என்பர்

தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர் - என

தெய்வப்புலவர் திருவள்ளுவர், குழந்தைகளின் மழலைச் சொற்களை கேட்பதன் ஆனந்தத்தை நினைத்து, சிலாகித்து வர்ணித்துள்ளார்.

உண்மைதானே! பிறந்த குழந்தையின் அசைவு ஆனந்தம், கை-கால்களை நீட்டி மடக்கி முறுக்கிக் கொள்வதும், முகத்தைச் சுழித்துக் கொள்வதும், அதன் வாய் திறந்து சிரிப்பதும், இன்னும் சொல்லப் போனால் அது கொட்டாவி விடுவதும் கூட.... பார்க்கப்..., பார்க்க சலிக்காத ஆனந்தத்தை தரக்கூடியது. கொஞ்சம் வளர்ந்து விட்டால் அதன் ஆட்டமும், ஓட்டமும் நம்மையும் சேர்த்து ஒடவைத்து விடுகின்றன. இயல்பான வளர்ச்சியுடன், குழந்தை மகிழ்ச்சிகரமாக இருப்பதைத்தான் பெற்றோரும் விரும்புவார்கள்.

மாறாக, குழந்தைகள் இயல்புக்கு மாறான செயல்பாடுகளுடன், பல்வேறு உபாதைகளுடன் அவ்வப்போது அழுது, அடம் பிடித்துக் கொண்டிருந்தால் பெற்றவர்களும், உற்றவர்களும் பரிதவித்துப் போவார்கள்.

இதில் பெற்ற குழந்தை இயல்பாக இல்லாமல் வித்தியாசமாக இருந்து விட்டால் எத்தனை வேதனை. வேதனைப்பட்டுக் கொண்டே இருந்தால் பிரச்சினைத் தீர்ந்து விடுமா என்ன? சில குழந்தைகள் மனவளர்ச்சிக் குறைபாடு, உணர்வுரீதியான பிரச்சினை காரணமாக சமூக உறவில் குறைபாடு, பேச்சுத்திறன் குறைவு, காது கேட்பதில் குறைபாடு, பார்வைக் குறைபாடு, படிப்பதில் குறைபாடு என பல வகைகளில் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அவற்றுள் சில முக்கியமான பாதிப்புகளைப் பற்றி பார்ப்போம்.

டிஸ்லெக்சியா: இக்குறைபாடுள்ள குழந்தைகள் அதிக துருதுருப்பு, ஏராளமான ஞாபக சக்தி, அறிவுத்திறன், கேட்ட கேள்விக்கு சரியான பதில் சொல்வது எல்லாம் இருக்கும். பார்வை கோளாறு இருக்காது. ஆனால் எழுதும்போது போர்டைப் பார்த்து எழுதுவதில் சிரமம் ஏற்படும். தொடர்ந்து படிப்பில் கவனம் செலுத்த, படிக்க இயலாமை, வலது பக்கத்திலிருந்து இடது பக்கமாக படித்தல், படிக்கும்போது குழம்பிப் போகுதல், அடிக்கடி விழுவது, காயம்பட்டுக் கொள்வது போன்றவை இருக்கும்.

b என்ற எழுத்தை, d என்றும், was என்பதை, saw என்றும் மாற்றிக் குழப்பிக் கொள்வார்கள். ஆனால் இவர்கள் அறிவில் குறைந்தவர்கû இல்லை. உலகப் புகழ் பெற்ற ஐன்ஸ்டின், சர்ச்சில், (சார்லி) சாப்ளின் போன்றவர்கள் இக்குறைபாடு உடையவர்களே. இது போன்ற குழந்தைகள் ஓவியம்.

-Dr R.லோகநாயகி

Pin It

சில பெண்களுக்கு தொடர்ச்சியாக கருச்சிதைவு ஏற்பட பின்வரும் பிரச்சினைகளில் ஏதாவது ஒன்று காரணமாக அமையலாம்.

1. குரோமோசோம்கள் ஆரோக்கியமாக இல்லாமல் பிரச்சினையுள்ளதாக இருக்கலாம். குறையுள்ள குழந்தையை பிரசவிப்பதை விட குறையுள்ள கருவை சிதைத்து விடுவதே இயற்கையின் பாதுகாப்பு விதியாகும். குரோமோசோம்களில் உள்ள பிரச்சினையை கண்டுபிடிக்க காரியோடைப் பரிசோதனை முறை பலனளிக்கும்.

2. ஹார்மோன்களின் சமநிலையில் பாதிப்பு இருக்கலாம். கருமுட்டை வெளிப்பட்ட பிறகு புரொஜஸ்டிரான் ஹார்மோனின் அளவு குறைந்து விடுவது ஒரு காரணம். கருவானது கருப்பையினுள் ஊன்றி வளர்வதற்கு போதுமான புரொஜஸ்டிரான் சுரப்பு அவசியமாகும். இதை கருப்பையின் உட்சுவரை திசுப்பரிசோதனை செய்வதன் மூலம் அறிந்துக் கொள்ளலாம்.

3. சில பெண்களுக்கு கீழ் கண்ட நோயின் பாதிப்பினால் கருச்சிதைவு ஏற்படலாம். அவை

*- சாக்லேட் இரத்தக்கட்டிகள்

*-கட்டுப்படுத்த முடியாத நீரிழிவு குறைபாடு

*-கட்டுப்படுத்த முடியாத தைராய்டு சுரப்பி நோய்கள்

*-மோசமாக பாதிப்படைந்த இதயம், கல்லீரல் அல்லது சிறுநீரகங்கள்

*-உடல் திசுக்களுக்கு எதிராக எதிர்ப்புச் சக்தி உருவாதல் -தொற்று நோய்கள்

4.சினைப்பையில் நீர்க்கட்டிகள் ஏற்படுவது ஒரு காரணமாகலாம். சினைப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பதால் எல் எச் ஹார்மோன் அதிக அளவில் உற்பத்தியாகிறது. இதனால் கருமுட்டை யின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.

5.நோய் எதிர்ப்பு சக்தியில் பாதிப்பு ஏற்படுவதால் கருச்சிதைவு உண்டாகலாம்.

பாக்டீரியா, வைரஸ் போன்ற நோய்க்கிருமிகள் உடலைத் தாக்கும்போது தாயின் நோய் எதிர்ப்புச் சக்தி சரிவர வேலை செய்யாவிட்டால் கருச்சிதைவு ஏற்படலாம்,

கருத்தரிக்கும் போது, கருவிலுள்ள தந்தையின் ஜீன்கள், தாயின் நோய் எதிர்ப்புச் சக்திக்கு மாறாக இருந்தாலும் கருச்சிதைவு ஏற்படலாம்.

6. தாயின் உடல் எதிர்மியங்கள் காரணமாகவும் கருச்சிதைவு ஏற்படலாம். சில பெண்களுக்கு இரத்தம் உறைவதற்குக் காரணமாக இருக்கும் அணுக்களுக்கு எதிராக, உடல் எதிர்மியங்கள் தோன்றக்கூடும், இதன் காரணமாக தாய்க்கும் கருவிலுள்ள சிசுவிற்கும் இடையே உள்ள இரத்த ஓட்டத்தில் இரத்த உறைவுக்கட்டிகள் உருவாகி, சிசுவிற்கு வேண்டிய இரத்த ஓட்டம் பாதிப்படைகிறது. இதை இரத்தப் பரிசோதனை மூலம் அறிந்து கொள்ளலாம்.

7.கருப்பையில் ஏற்படும் சில பிரச்சனைகள் காரணமாக கருச்சிதைவு ஏற்படும்.

* கருப்பையில் நார்த்திசுக் கட்டிகளின் காரணமாக கருச்சிதைவு ஏற்படும்.

* பிறவியிலேயே ஏற்படும் கருப்பை பிரச்சினைகள். கருப்பை பிறவியிலேயே இரண்டு பகுதிகளாக பிரிந்திருக்கலாம்.

*கருப்பை உட்சுவர் சதைகள் மற்றும் கருப்பையின் உட்பாகத்தில் ஏதேனும் புண் ஏற்பட்டு அதன் சதை கெட்டியாக வளர்ந்திருந்தால், கருப்பையில் கரு ஊன்றுவதில் சிக்கல் ஏற்படலாம். இதை உள்நோக்கிக் கருவி மூலமோ அல்லது கதிர் வீச்சுப் படம் மூலமோ கண்டுபிடுக்கலாம்.

* பலவீனமான கருப்பை வாய்; இப்பிரச்சினை உள்ள நோயாளர்களின் வாய் எப்போதும் தளர்ந்தே இருக்கும். கருப்பையில் சிசு வளர்ந்து கருப்பை வாயினை அழுத்தும் போது பலவீனமான கருப்பையின் வாய் திறந்து கருச்சிதைவு ஏற்படுகிறது. இதை உள் நோக்கிக் கருவி அல்லது கதிரவீச்சுப் படம் அல்லது கேளா ஒலி பரிசோதனை மூலமோ அறிந்துக் கொள்ளலாம்.

8. சுற்றுப் புற சூழலில் உள்ள நச்சுக்களின் தாக்கம் காரணமாகவும் கருச்சிதைவு ஏற்படலாம். பெண்கள் தொடர்ந்து நச்சு வாய்ந்த இரசாயனங்கள் மற்றும் வாயுக்களுடன் வேலை செய்யும் பொழுது கருவுற்றால், இந்த நச்சுத் தாக்கம் சிசுவை பாதித்து கருச்சிதைவு ஏற்படுகிறது. ஆண்களும் இம் மாதிரி சூழலில் வேலை செய்யும் பொழுது, அவர்களுடைய விந்தணுக்கள் பாதிக்கப்படுகிறது. புகைபிடித்தல், மது அருந்துதல், போதை மருந்துக்கு அடிமை போன்றவைகளும் இதற்கு விதிவிலக்கல்ல.

9. உணர்ச்சிகளால் ஏற்படும் பாதிப்புகளின் காரணமாகவும் கருச்சிதைவு ஏற்படலாம். தாயானவள் துக்கம், வேதனை, தனிமை, மனச்சோர்வு போன்ற பல்வேறு உணர்ச்சிகளால் பாதிக்கப்படும்போது பாதிப்பின் தன்மைக்கேற்ப கருச்சிதைவு ஏற்படுகிறது.

கருச்சிதைவை தடுக்கும் சில ஹோமியோ மருந்துகள்.

அகோனைட், அபிஸ் மெல், ஆரம் மெட்., பெல்லடோனா, போரக்ஸ், பிரையோனியா, கல்கேரியா கார்ப், காந்தாரிஸ், சைக்ள மென், டிஜிடாலிஸ், டல்கமரா, யுபடோரியம் பர்பலேட், பெர்ரம் மெட், ஜெலுசிமியம், காலோ பைலம், காஸ்டிகம், சிமிசிப்யுகா, சாமோமில்லா, கோனியம், ஹாமாமெலிஸ், இக்னேசியா, அயோடம், அயிரிஸ் வெர்சிகுலர், காலிகார்ப், லாச்சஸிஸ், மெர்க் சொல், நக்ஸமோ, ஒபியம், பிளாட்டினா, போடோபைலம், பல்சடில்லா, ரூட்டா, சபினா, சீகேல் கார்னோட்டம், செபியா, சைலீஷியா, ஸ்ட்ராமோனியம், சிபிலினம், தூஜா, உஸ்டிலாகோ மற்றும் ஜிங்கம் மெட்டாலிகம்.

Pin It

வியர்வை குறித்து கலை இலக்கியவாதிகளும், தத்துவ ஞானிகளும், அறிஞர் பெருமக்களும் எண்ணற்ற கருத்துக்களைக் கூறியுள்ளனர்.

நெற்றி வியர்வை சிந்தினோமே முத்து முத்தாக,..

அது நெல் மணியாய் விளைஞ்சிருக்கு கொத்து கொத்தாக...!

என்றொரு பழைய திரைப்பாடலின் வரிகளில் வியர்வை பெருமைபடுத்தப்படுகிறது.

என் ஒரு துளி வியர்வைக்கு,

ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்தது தமிழல்லவா!

என்று பிரபல திரைக் கதாநாயகன் பாடலின் கருத்தின் மூலம், மக்களின் வியர்வை சிந்தி உழைத்த பணம் ஒரு துளி வியர்வை கூட சிந்தாதவர்களின் பைகளில் தங்கக் காசுகளாக சேர்வதை அறிய முடிகிறது.

உழைப்பவனின் வியர்வை ஈரம் காயும் முன்பே, உழைப்பிற்கான ஊதியத்தைக் கொடுத்து விட வேண்டும் என்கிறார் முகமது நபிகள். மாவீரன் நெப்போலியன் தன் காதலி யோசப்பினுக்கு எழுதிய கடிதத்தில் அன்பே உன் இயற்கையான வியர்வை மணத்தில் மகிழ்ச்சி அடைகிறேன். நாளைக் காலை பாரிசுக்கு வருகிறேன். தயவு செய்து உன் உடம்பை அதற்குள் கழுவி விடாதே என்று குறிப்பிட்டுள்ளார்.

இத்தகு பெருமை மிக்க வியர்வையின் இயற்கைப் பலன்கள்-

தோலில் உள்ள வியர்வைச் சுரப்பிகள் (சுடோரிபெரஸ் கிளான்ட்ஸ்) வியர்வை திரவத்தை கசிந்து வெளியேற்றுகின்றன. உடலின் உஷ்ண நிலையை சீராக வைத்துக் கொள்ள வியர்த்தல் உதவுகிறது. தோல் மென்மையானதாகவும், ஈரப்பதமாகவும் அமைவதற்கு இதுவே காரணமாகும். வெயிற் காலங்களிலோ, அல்லது உடலில் உஷ்ணம் மேலோங்கிய நிலையிலோ வியர்வைச் சுரப்பிகளால் சுரக்கப்படும் வியர்வை காரணமாகவே உடல் இதமாக பாதுகாக்கப்படுகிறது. தோலில் இருந்து வியர்வை ஆவியாகி மறையும் போது உடலில் குளிர்ச்சியை உணர முடிகிறது.

அதிக வியர்வைக்கு காரணங்கள் என்ன?

வியர்வை அதிகரிப்பதற்கு உடல் வெப்ப அதிகரிப்பும் ஓர் காரணம். எனினும் உடலின் சில பாகங்களில் குறிப்பாக அக்குள் பகுதியிலும், அடிப் பாதங்களிலும், உள்ளங்கையிலும், நெற்றியிலும், வியர்வைச் சுரப்பிகள் அதிகளவு வியர்வையை சுரக்கக்கூடும். மத்திய நரம்புத் தூண்டப்பட்டு கை, கால் வியர்வைச் சுரப்பிகள் அதிகளவு வியர்வையை சுரக்கக்கூடும். பெண்களை விட ஆண்களுக்கே அதிக வியர்வை சுரப்பதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

சில பல தூண்டல்களால் உடலில் அதி வியர்வை ஏற்படலாம். வெப்பம், வலி, பயம், பதட்டம், உடலுழைப்பு, குமட்டல், வாந்தி போன்ற காரணங்களால் வியர்வை அதிகரிக்கலாம். சிலவகை ஆங்கில மருந்துகள் வியர்வையை அதிகரிக்கச் செய்யலாம். தாளம்மை, நிமோனியா, ஆஸ்த்துமா, காசம், டைபாய்டு சுரம், இதய நோய் போன்ற கடுமையான நோய் தாக்குதல்களுக்குப் பின்னர் வியர்வை அதிகரிக்கலாம். தினமும் மாலை அல்லது இரவு லேசான சுரத்துடன் உடலில் வியர்க்கவும் செய்தால் காசநோய்க்கான அறிகுறியாகக் கொள்ளலாம்.

உழைப்பே இல்லாதவர்களை விட உழைப்பவர்களுக்கும், நல்ல உடல் ஆரோக்கியம் உள்ளவர்களுக்கும் இரண்டு மடங்கு வியர்வை வெளியேறுகிறது. விளையாட்டு வீரர்களுக்கு ஒவ்வொரு நாளும் 5 லிட்டர் அளவுக்கு வியர்வை வெளியேற்றப்படுகிறது.

அதி வியர்வை அவதியே!

இயல்பாகவே வியர்வை வெளியேறினால் உடல் உஷ்ணம் சீராகப் பராமரிக்கப்படுகிறது. இரத்த சுத்திகரிப்பு, மென்மையான தோல் அமைப்பு போன்ற நன்மைகள் கிடைக்கின்றன. மாறாக அதிகளவு வியர்த்தல் காரணமாக உடலிலும், மனதிலும் அசௌகரியங்கள் ஏற்படுகின்றன. உலகில் மில்லியன் கணக்கானோர் அதிவியர்வை பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். உலக மக்கள் தொகையில் 3 சதவீதம் பேர்களுக்கு அதிவியர்வை பிரச்சனை உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இயல்பான வியர்வையோ, அதிக வியர்வையோ அது வெளியேறும் சமயத்தில் வாசனை எதுவும் இருப்பதில்லை. இரத்தத்தில் உள்ள வெளியேற்றப்பட வேண்டிய பொட்டாசியமும், உப்பும் நுண் கிருமிகளுடன் கூட்டணி ஏற்படுத்தி துர்நாற்றம் உண்டாகிறது. உடல் வியர்வை குளிப்பதன் மூலம் மற்றும் கழுவுவதன் மூலம் முறையாக அகற்றப்படாவிட்டால் துர்நாற்றம் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

காற்றோட்டமான சூழலிலும் கூட, குளிர் காலத்திலும் கூட, வேலையற்று ஓய்வாக இருக்கும் போது கூட சிலருக்கு வியர்த்துக் கொட்டும். சிலரது உள்ளங்கை, உள்ளங்கால்களில் வியர்வையின் ஈரப் பிசுபிசுப்பு எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். இவர்களைப் போன்ற அதிவியர்வையாளர்கள் அவரவரின் அறிகுறிகள், தனித் தன்மைகளுக்கேற்ப ஹோமியோபதி மருந்துகளில் சிகிச்சை பெற்று முழு நலம் பெற முடியும்.

ஹைப்பர் ஹைடிரோசிஸ் எனப்படும் அதிவியர்வைப் பிரச்சினையைத் தீர்க்க உதவும் சில முக்கிய ஹோமியோ மருந்துகளையும், அவற்றிற்கான அறிகுறிகளையும் பார்ப்போம்.

கோனியம்: கண்களை மூடித் தூங்க ஆரம்பித்ததும் ஏராளமாக வியர்த்தல்.

சம்புகஸ்: தூங்கி விழிக்கும் போது முகத்திலும் பின்னர் உடல் முழுவதும் ஏராளமாக வியர்த்தல்.

ஜபராண்டி, பைலோகார்பஸ்: உடல் முழுவதும் அதிகளவு வியர்த்தல்.

கல்காரியா கார்ப்: தலை, மார்பு, கை-கால்கள், பிறப்புறுப்புப் பகுதிகளில் ஏராளமாக வியர்த்தல். பருத்த உடல் வாகு, கைகளிலும், பாதங்களிலும் எப்போதும் வியர்வைக் கசிவு, தலைப் பகுதியில் இரவில் தலையணை நனைந்து விடும் அளவு வியர்த்தல்.

சிலிகா: பாதங்களில் நாற்றமுள்ள வியர்வை கசிவு.

தூஜா & கலாடியம்: தேன் போன்ற வாசனையுடனும் இனிப்பாகவும் அதிகளவு வியர்த்தல்.

ஆர்ஸ்-அயோடு: இரவில் உடல் நனையுமளவு, உடலைப் பலவீனப் படுத்தும் அதிகளவிலான வியர்வை.

கார்போ அனிமாலிஸ்: இரவில் நாற்றமுள்ள அதிக வியர்வை.

அம்மோனியம் மூர்: இரவில் பாதங்களில் அதிகம் வியர்த்தல்.

ஆண்டிமோனியம் டார்ட்: அதிக மார்புச் சளியால் இருமலால் குளிர்ந்த வியர்வை.

பாஸ்பாரிக் ஆஸிட்: கடும் நோய், உயிர் திரவ இழப்பு, துக்கம் போன்ற குறிகளுடன் அதிக வியர்வை.

கார்போ வெஜ்: நோய்களுக்குப் பின் உயிர்நீர் இழப்பு காரணமாக அதி வியர்வை.

நேட்ரம் மூர்: ஒவ்வொரு சிறு உழைப்பிலும் கூட அதிகளவு வியர்த்தல்.

காலி கார்ப்: முதுகு வலி, இடுப்பு வலியுடன் அதிகளவு குளிர்ச்சியான வியர்வை. சிறிய உழைப்பினாலும் அதிகரிக்கும்.

செலினியம்: உப்புக் கரிப்பான மஞ்சளான அதிக வியர்வை, காலை நேரம் நோய் அதிகரிப்பு.

செபியா: அக்குளிலும், தொடை இடுக்கிலும் புளிப்பு நாற்றமுள்ள அதிக வியர்வை.

முக்கிய குறிப்புகள்;

1. நோயாளி விசாரணையில் அவரது நோய் வரலாற்றுத் தொகுப்பில் வியர்த்தல் குறித்த விபரம் அவசியம் இடம் பெற வேண்டிய முக்கிய குறியாகும்.

2. துர்நாற்றமுள்ள அதி வியர்வைப் பிரச்சினைக்கு: பாப்டீசியா, கல்கேரியா கார்ப், ஹீப்பர், மெர்க்சால், நைட்ரிக் ஆஸிட், நக்ஸ்வாம், பெட்ரோலியம், சிலிகா, சோரினம், சல்பர், தூஜா .

3. உள்ளங்கையில் அதி வியர்வைத் தொல்லையைத் தீர்க்க: பாரிடா கார்ப், கல்காரியா கார்ப், நேட்ரம் மூர், சோரினம், சிலிகா, நைட்ரிக் ஆஸிட் .

4. உள்ளங்கால்களில் அதி வியர்வைப் பிரச்சனைக்கு: அலுமினா, அம்மோனியம் மூர், பாரிடா கார்ப், கல்காரியா கார்ப், லைகோ, மெர்க் சால், நைட்ரிக் ஆஸிட், சோரினம், சானிகுலா, சிலிகா, டெல்லூரியம், ஜிங்கம் மெட்.

இவை தவிர அவரவர் தனித் தன்மைக்கு ஏற்ற சிறந்த ஹோமியோ மருந்துகள் ஏராளமாக உள்ளன.

-Dr.R.ஆவுடேஸ்வரி

Pin It

நெருப்பெனப் பரவும் நோய்:

இன்றைய உலகில் அதிவேகமாகப் பரவுவது தகவல் துறை சார்ந்த விஷயங்கள் மட்டுமல்ல....நோய்களும்தான். மனித குலம் சந்தித்த எண்ணற்ற இயற்கைச் சீற்றங்கள், நோய் தாக்குதகள் ஏராளம். அவற்றுள் ஒன்றுதான் சிக்குன்குனியா சுரம்.

பொதுவாக காய்ச்சலை நோயாகக் கருத வேண்டியது இல்லை. உடலின் உள்ளிருக்கும் நச்சுக்களை வெளியேற்ற நோயெதிர்ப்பு ஆற்றல் நடத்தும் போராட்டத்தின் வெளிப்பாடே உஷ்ண அதிகரிப்பு. காய்ச்சல் நமது நண்பனைப் போன்றது. சாதாரண சுர நிலைகளில் மருந்தில்லாமலேயே நலம் பெறலாம். அல்லது நோய் எதிர்ப்பு ஆற்றலுக்கு ஆதரவான எளிய ஹோமியோ சிகிச்சை மூலம் நலம் பெறலாம்.

சிக்குன் குனியா சுரம் போன்ற தொற்று நோய்சுரங்களில் மருந்தின்றி நலம் பெற வாய்ப்பில்லை. இந்நோயில் அலட்சியம் காரணமாக அல்லது ஆங்கில மருத்துவம் காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஏராளம்.

சிக்குன் குனியாவின் சரித்திரம்:

1952, 1953ஆம் ஆண்டுகளில் கிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள டான்சானியாவில் சிக்குன்குனியா முதன் முதலில் அடையாளம் காணப்பட்டது. டான்சானியா மொழியில் முன் வளையச் செய்யக்கூடிய, முடக்கிப் போடக் கூடிய என்ற பொருளில் இந்நோய் பேசப்பட்டு, இன்றைய மனிதனை குரங்கிலிருந்து தோன்றிய ஆதிமனிதன் போலக் கூனி நடக்கச் செய்கிற அல்லது நடக்கக் கூட முடியாமல் முடக்கிப் போடுகிற காய்ச்சல் என்பதால் இதனை முடக்குக் காய்ச்சல் எனலாம்.

1963ல் முதன் முதலில் இந்தியாவில், கல்கத்தாவில் சிக்குன் குனியா பரவியது. பின்னர் 121 மாவட்டங்களில் பரவி பல லட்சம் மக்களைத் தாக்கியது. 1964ல் சென்னையில் பரவிய போது சுமார் 4,00,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 1971ல் இந்தியாவில் மீண்டும் இந்நோய் வலம் வந்தது. 1973ல் மகாராஷ்டிர மாநிலத்தைக் கடுமையாகத் தாக்கியது. 2005ஆம் ஆண்டின் இறுதி மாதங்களிலும், 2006ம் ஆண்டு துவக்க மாதங்களிலும் இந்தியா முழுவதும் சிக்குன்குனியா ஆக்ரமித்தது. 2007-ல் வடக்கு இத்தாலி, சிங்கப்பூர், இந்தோனேசியா, தைவான் போன்ற நாடுகளில் சிக்குன் குனியாவின் தீவிரத் தாக்குதலால் பல்லாயிரக்கணக்கான மக்கள் நிலைகுலைந்து போயுள்ளனர்.

சிக்குன்குனியா இன்றைய முக்கியப் பொதுப் பிரச்சனை :

அரசியல் காரணங்களால் ஒரு கட்டம் வரை இது சிக்குன் குனியா இல்லை என்றும் சாதாரண பருவ மழைக்கால வைரஸ் சுரம் என்றும் கண்ணாமூச்சி விளையாட்டு நடத்துகின்றன அரசுகள். சாதாரண ஏழை எளிய மக்கள், சிக்குன்குனியா நோயின் அனைத்துக் குறிகளோடு பாதிக்கப் பட்டிருந்தாலும் அவரவர் சொந்தச் செலவில் இந்நோயினை உறுதி செய்து கொள்ளும் பரிசோதனை செய்து கொள்ள வசதியும், வழியுமில்லை. மேலும் ஆங்கில மருத்துவ சிகிச்சையில் பலன் இருக்கிறதோ இல்லையோ, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் முடக்குக் காய்ச்சல் நோயாளிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது. கடந்த 2006ம் ஆண்டு சிக்குன் குனியாவிற்கு ஆங்கிலச் சிகிச்சை பார்த்து....., அரைகுறையாய் நிவாரணம் பெற்று இப்போது மீண்டும் நோய் தொற்றி வேதனையோடு வருபவர்களும் இக் கூட்டத்தில் அடங்குவர்.

சிக்குன்குனியாவுக்கு காரணங்கள் என்ன?

இது ஒருவகை வைரஸ் சுரம் குறிப்பிட்ட காலம் இருந்த பின் தானாகவே குறைந்து மறைந்து விடும் நோய். மரணத்தை ஏற்படுத்தாது என்று இந்நோய் பற்றி விவரிக்கப்படுகிறது. இந்நோய் உண்டாக்கும் கிருமி ஆல்பா வைரஸ் அல்லது சிக் வைரஸ் என்றும் இதனைப் பரப்புவது இருவிதக் கொசுக்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. அவை 1. ஏடியஸ் ஏஜிப்டி ,2. ஏடியஸ்ஆல்போபிக்டி. இந்தக் கொசுக்களே, சிக்குன்குனியா மற்றும் டெங்கு, மஞ்சள் சுரம் போன்ற நோய்கள் பரவுவற்கு முக்கியக் கடத்திகளாகப் பணியாற்றுகின்றன.

கொசு ஒழிப்பின் பெயரால் நடந்தவை என்ன?

1950களில் நம் நாட்டில் மலேரியாக் காய்ச்சல் தீவிரமாகப் பரவி ஏராளமானோர் பலியானபோது கொசு ஒழிப்பு ஒன்றுதான் இறுதித் தீர்வாகக் கருதியது அரசு. தேசிய மலேரியா கட்டுப்பாட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டது. அது கொசுக்களுக்கு எதிரான யுத்தமாக பிரகடனப்படுத்தப்பட்டது. 1953ல் இந்த யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரே மருந்து டி.டி.டி. இம்மருந்து தொடர்ந்து 5 ஆண்டுகள் பயன்படுத்தப் பட்ட பின்னரும் முழுமை யான வெற்றி பெறமுடியவில்லை.

கொசுக்களின் மரபணு மாற்றம் காரணமாக டிடிடிக்கு எதிரான எதிர்ப்பாற்றல் பெருகி இம்மருந்து வீரியமற்றதாகி விட்டது. பின்பு 1958, 1977ம் ஆண்டுகளில் தேசிய மலேரியா கட்டுப்பாட்டுத் திட்டத்தில் இருமுறை மாற்றங்கள் செய்யப்பட்டன. லிண்டேன், மாலத்தியான் எனும் மருந்துகள் தெளிக்கப்பட்டன. அதுவும் தோல்வியைத் தழுவின. மேலும் பைரத்தின் என்ற புகை மருந்து, கொசு லார்வாக்களை அழிக்கும் அபேட் என்ற நுண்ணுயிரி மருந்தும் செயல்பாட்டுக்கு வந்தது. இதற்கு குறைவான நிதி ஒதுக்கீடு, ஊராட்சி, நகராட்சி நிர்வாக ஊழல்கள் போன்ற பல காரணங்களோடு இம்மருந்துகளின் பயனற்ற தன்மையும் இணைந்து கொசு ஒழிப்பில் பின்னடைவை ஏற்படுத்தியது.

சுற்றுச் சூழல் சீர்குலைவு:

கொசு ஒழிப்பிற்கான முயற்சிகளும், கருவிகளும், மருந்துகளும் மாறிக் கொண்டே வந்தாலும் கொசுக்களை ஒழிக்க முடியவில்லை. மாறாக இதற்கான அனைத்து மருந்துகளும் நீர், நிலம், காற்று, சூழல் அனைத்தையும் நச்சுப்படுத்துகின்றன. இந்தியாவில் பெருகிவரும் ஆஸ்த்துமா போன்ற நெஞ்சக நோய்களுக்கு கொசு ஒழிப்பு மருந்துகள் தான் காரணம் என ஓர் ஆய்வு தரும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது. எனவே சுற்றுச் சூழலை பாதிக்காத வண்ணம் உலகளவில் பயன்படுத்தப்படும் வேறு கருவிகள் மற்றும் நடைமுறைகளை அறிந்து இந்தியாவில் செயல்படுத்த வேண்டும்.

கொசு கடித்த பின் தோன்றும் முக்கிய அறிகுறிகள் சில:

ஏடியஸ் கொசு கடித்த 4 முதல் 7 நாட்களுக்குள் சில பல நோய்க்குறிகள் தோன்றுகின்றன. சிறு குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள் போன்றோரை இந்நோய் தாக்கினால் அதிகளவு சிக்கல்கள் ஏற்படுகின்றன.

பொதுவாக சிக்குன் குனியா சுரத்தில் காணப்படும் முக்கியக் குறிகள்:

1. கடுமையான காய்ச்சல். உடல் உஷ்ணம் திடீரென 102 -104 டிகிரி பாரன்ஹீட் வரை அதிகரிக்கிறது, இரண்டு முதல் ஏழு நாட்கள் நீடிக்கிறது.

2. கடுமையான தலைவலியும், உடல்வலியும் ஏற்படுகின்றன. உடல் வலிகள் தசைவலிகளாகவும், முதுகுவலிகளாகவும், மூட்டு வலிகளாகவும் அமைகின்றன.

3. அரிப்பும், எரிச்சலும், கொண்ட தோல் சினைப்புகள், நிற மாற்றங்கள் ஏற்படுகின்றன. மூக்கில் சிவப்புத் திட்டுகளும், உதட்டில் கருநிற புள்ளிகளும், முகம் மற்றும் வயிறு, கை கால்களில் கருநிறத் திட்டுகளும் ரத்தத் திட்டுகளும், சிறு பொருக்குகளும் தோன்றுகின்றன.

4. கண்படல அழற்சியும், சிறிது ஒளிக் கூச்சமும் ஏற்படுகின்றன.

5. குமட்டல், வாந்தி சில சமயம் சிலருக்கு வயிற்றுப் போக்கு

6. தூக்கமின்மை, அமைதியின்மை

7. சிலருக்கு இரத்தக் கசிவு அறிகுறிகள், குறிப்பாக மூக்கிலிருந்து, ஈறுகளில் இருந்து கசிவு. தொற்று காரணமாக (பிளாட்டிலெட்ஸ்) தட்டையணுக்கள் எண்ணிக்கை குறைவதால் இந்நிலை ஏற்படுகிறது.

8. தற்காலிக ஞாபக மறதி

9. கடும் சோர்வு, பலவீனம், களைப்பு

10. இந்நோயால் நேரடியான மரண பாதிப்பு இல்லை எனினும் ஏற்கனவே சிறுநீரக பாதிப்பு, கல்லீரல் பாதிப்புள்ளவர்களுக்கு சிக்குன்குனியா தாக்கினால் மரண ஆபத்து உண்டு. மேலும் இச்சுரத்தில் திடீர் உஷ்ண அதிகரிப்பில் நீரிழப்பு ஏற்பட்டு சிறுநீரகக் கோளாறுகளும், சீரண மண்டலக் கோளாறுகளும் ஏற்பட்டு மிகவும் ஆபத்தாக முடிகிறது. காய்ச்சலில் உடலின் நீர்ச்சத்து ஆவியாகி இழக்கப்படுவதால் சோடியம், பொட்டாசியம் இன்னும் பிற உப்பு அளவுகளிலும் மாறுபாடு ஏற்பட்டு உப்புச் சமன்பாடு சீர்குலைகிறது. இப்படி வேறு காரணங்களால் இரண்டாம் கட்ட சிக்கல்கள் (செகண்டரி காம்ப்ளிகேஷன்) ஏற்படுகிறது.

ஆங்கில மருத்துவத்தில் ஒருமுறை சிக்குன்குனியா தாக்கினால் உடலுக்குள் நோயெதிர்ப்பு பொருள் உண்டாகி, மீண்டும் அவருக்கு சிக்குன்குனியா வராது என்று விளக்கமளிக்கிறது. ஆனால் நடைமுறையில் கடந்த 2006ல் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்ட பலர் அந்நோய் பாதிப்பிலிருந்து முற்றிலும் விடுபடாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மீண்டும் தாக்காமல் தடுக்கவும் முடியவில்லை. இதனால் நோயெதிர்ப்பு பொருளான இம்மியுனோகுளோபிலின்-ஜி என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

சிக்குன்குனியாவிற்கு ஹோமியோபதியில் தீர்வு:

ஆங்கில மருத்துவத்தில் உருவாக்கப்படும் தடுப்பு மருந்துகள் கடுமையான உடலியல் சிக்கல்களை ஏற்படுத்தக் கூடியது. இது விவாதத்திற்கு உரியது.

ஹோமியோபதிக் கோட்பாட்டின்படி எந்த ஒரு நோய் அல்லது தொற்று நோய்க்கும் கிருமிகள் காரணம் என்று கூறுவதில்லை. அதனால் கிருமி ஒழிப்பு மட்டுமே பணியாகக் கொண்டவையல்ல ஹோமியோபதி மருந்துகள். ஹோமியோபதி தத்துவத்தின்படி தொற்றுநோய் பரவும் சூழ்நிலைகளில் ஒரு குறிப்பிட்ட பகுதி சார்ந்த நோய் தொற்றாத மக்களுக்கும், நோய் பாதிப்பு அடைந்தவர்களின் ஒரேமாதிரி அறிகுறிகளையும், ஒரே தனித்துவக் குறிகளையும், மேலோங்கிய குறிகளின் அடிப்படையிலும் மருந்து தேர்வு செய்து, அது தடுப்பு மருந்தாக அளிக்கப்படுகிறது.

வரலாறு நெடுகிலும், தொற்றுநோய் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு ஹோமியோபதி வெற்றிகரமாக உதவியுள்ளன. தற்போது தமிழகத்தில் பரவிவரும் சிக்குன்குனியாவிற்கும் ஹோமியோ மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலம் சிறந்த தடுப்பாற்றலைப் பெற முடியும்.

ஆர்ஸ்.ஆல்ப்., ரஸ்டாக்ஸ்., யூப.பெர்ப்., ஜெல்சி., ஆர்னிகா., ரூடா., கோல்சிகம்., பெல்., பிரையோ., சைனா., பாப்டீ., பைரோ., நக்ஸ்., லேடம்., பாலிபோரஸ்பினிகோலா., காலிமூர்., லெசிதின்., சீட்ரான்., இன்புளூய., அக்டியா ஸ்பிகேட்டா போன்ற பல ஹோமியோபதி மருந்துகள் மூலமாக மட்டுமே சிக்குன்குனியாவை முற்றிலும் முறியடித்து ஒட்டுமொத்த உடல் நலனையும் மேம்படுத்த முடியும்.

Pin It