lovee 350

கொஞ்சம் சோறு
கொஞ்சம் பழங்கள்
நிறைந்து விட்டது வயிறு!

கொஞ்சம் தண்ணீர்
கொஞ்சம் தேநீர்
தணிந்துவிட்டது தாகம்!

கொஞ்சம் உறக்கம்
கொஞ்சம் ஓய்வு
கலைந்துவிட்டது
களைப்பு!

நிறையப் பார்த்தும்
நிறையப் பேசியும்
நிறையவில்லையே
மனது!

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.