மகிழ்ச்சியை நோக்கித்தான் மனிதர்களால் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. ஆனால் அந்த விழாக்களுக்குள்ளும் அரசியல் ஒளிந்தே கிடக்கிறது.

அரசியலுக்கும் விழாக்களுக்கும் என்ன தொடர்பு என்று கருதி விடக்கூடாது. உண்ணும் உணவில், உடுத்தும் உடையில், விளையாடும் விளையாட்டில் என்று எல்லாவற்றிலுமே அரசியல் உள்ளது. விழாவில் மட்டும் இல்லா மலா போய்விடும்?

village cultureஎழுபது ஆண்டு களுக்கு முன்னால் விழாக்கள் குறித்த எந்தக் கேள்வியும் பொது மேடை களில் எழுந்ததில்லை. பல்வேறு விதமான விழாக்கள் உண்டெ னினும், அவற்றுள் மிகப் பெரும்பான்மையானவை மதச் சார்புடையனவே. இந்துக்களுக்குத் தீபாவளி, கிறித்தவர்களுக்கு கிறிஸ் மஸ், இசுலாமியர்களுக்கு ரம்ஜான் முதலானவை குறிப்பிடத்தக்க விழாக் களாக இருந்தன. எல்லோ ருக்கும் பொதுவான விழா என்று பெரிதாக ஒன்றுமில்லை.

தீபாவளி, ஆயுத பூஜை, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட மதம் சார்ந்த விழாக்கள் அனைத்தின் மீதும் திராவிட இயக்கம்தான் முதன் முதலாகக் கேள்விகளைத் தொடுத்தது. இவை தமிழர்களின் விழா இல்லை என்று அறிவித்தது. அறிவுக்கும், தமிழ்ப்பண்பாட்டிற்கும் ஏற்பில்லாத இவ்விழாக்கள் எப்படித் தமிழருக்கு உரியன ஆகும் என்னும் கேள்வி எழுப்பப்பட்டது.

பருவ மாற்றங்களை வரவேற்கும் விழாக்களே பண்டையத் தமிழர்களால் கொண்டாடப்பட்டன. மனிதர்கள் வாழ்விலும், காலப் போக்கிலும் காணப்படும் பருவ மாற்றங்களைத் தமிழர்கள் வரவேற் றனர். சிறுவயது, விடலை, இளமை, முதுமை என மனித வாழ்வில் பல்வேறு பருவங்கள் வருகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்புடையவை. அவ்வாறே கோடை, கார், கூதிர், இளவேனில் என வரும் பருவங்களில் சிறப்பில்லாதவை எவையுமில்லை. இளவேனிலையே எல்லோரும் விரும்புவர் என்றாலும், மற்ற பருவங்களையும் வரவேற்றுப் பழகிக்கொள்ள வேண்டும் என்னும் நோக்கத்தில்தான் அந்தப் பருவங்களை வரவேற்றும் விழாக்கள் நடத்தப்பட்டன.

தை முதல்நாள் தமிழர் புத்தாண்டாகவும், இளவேனிலின் தொடக்கமாகவும் எண்ணி மகிழ்ந்து கொண்டாடப்பட்டது. சித்திரையின் கோடையை வெறுக்காமல், இந்திர விழாவாய்ச் சிறப் பித்துக் கொண்டாடினோம். புது வெள்ளம் ஓடி வரும் ஆடி 18, கார் காலத்தின் தொடக்கம். மழை முடிந்து பனி தொடங்கும் காலத்தில், கவியும் இருள் நீக்க, கார்த்திகை விளக்குகள் ஏற்றிக்கொண்டாட்டம்.

நாயக்கர்களின் ஆட்சிக் காலத்தில் வடநாட்டில் இருந்து வந்து சேர்ந்தது தீபாவளி. நம்முடைய கார்த்திகை விழாவை ஒட்டியதுதான் அது. தீப ஒளி என்பதே தீபாவளி. வடநாட்டில், மழைக்காலம் நமக்கு முன்பாகவே முடிந்து போய்விடும். எனவே அவர்கள் தீப வரிசையில் மகிழ்ந்து தீபாவளி என்னும் விழாவைக் கொண்டாடி னார்கள். தேவையற்றும், பொருத்த மற்றும் அவ்விழா தமிழ்நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்டது. விழா வோடு சேர்த்து, அறிவுக்குப் பொருந் தாத கதையன்றும் இறக்குமதி ஆயிற்று. இறுதியில் எல்லா விழாக் களும் நம்மீது தொடுக்கப்பட்ட பண் பாட்டுப் படையெடுப்புகளாக ஆகிவிட்டன.

ஒரு தேசத்தை அடிமையாக்க வேண்டுமானால், அத்தேச மக்களின் பண்பாட்டை முதலில் சிதைத்து விட வேண்டும் என்பார்கள். மறைமுகமாக நம் பண்பாட்டுச் சிதைவுக்கு வழிவகுத்தது தீபாவளி. மற்ற விழாக்களும் அந்த வரிசையில் தொடர்ந்தன. இந்த உண்மையைக் கண்டுபிடித்து, அவ்விழாக்களுக்கு எதிராகத் திராவிட இயக்கம் குரல் கொடுத்தது. இவை நம் விழாக்கள் இல்லை என்று முரசறைந்தது. திராவிட இயக்கத் தோழர்களின் வீடுகளில் தீபாவளி முதலான மதம் சார்ந்த விழாக்கள் நிறுத்தப்பட்டன. பொங்கல் விழாவே அனைத்துக்குமான மாற்றாக முன்நிறுத்தப்பட்டது.

பொங்கல் விழா என்பது மத எல்லைகளைத் தாண்டியது. உழைத்துக் கொடுத்த மக்களுக்கும், நெல் மணிகளை விளைத்துக் கொடுத்த நிலத்துக்கும் நன்றி சொல்லுகின்ற நல்ல விழாவாக அது அமைந்தது. கதிரவன், மழை உள்ளிட்ட இயற்கையைப் போற்றும் விழாவாகவும் அது கொண்டாடப் பட்டது. சாதி, மதங்களைக் கடந்து தமிழர்கள் அனைவருக்கும் பொதுவான விழா பொங்கல் என்று திராவிட இயக்கத் தலைவர்கள் அன்று அறிவித்தார்கள்.

பொங்கல் விழாவிற்கு இன்னொரு முதன்மையைத் தமிழ் அறிஞர்கள் கொண்டு வந்தனர். ஒரு காலத்தில் ஆவணி மாதமே தமிழர்களின் முதல் மாதமாய் இருந்தது. ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் சித்திரையே புத்தாண்டு என்று அறிவிக்கப்பட்டது. 1921லும், 1937லும் கூடிய தமிழ் அறிஞர்கள், தை மாதம்தான் தமிழர்களின் புத்தாண்டு என்பதை மீண்டும் நிறுவினர். அது கலைஞர் ஆட்சியில் நடைமுறைக்கும் வந்தது. ஆகவே பொங்கல் விழா மற்றொரு சிறப்பையும் பெற்றது.

இப்படி விழாக்களுக்குள் ஒளிந்திருக்கும் அரசியலைப் புரிந்து கொள்வதன் மூலம் தமிழர்தம் பண்பாட்டையும் நாம் விளங்கிக் கொள்ள முடியும். இப்போது மீண்டும் சித்திரைதான் புத்தாண்டு என்று கூறுகின்றவர்களின் அரசியல் எது என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

Pin It