“ED, IT ரெய்டு செய்த 30 நிறுவனங்கள் பாஜகவுக்கு 335 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்துள்ளதை ‘நியூஸ் லாண்டரி’ அம்பலப்படுத்தியுள்ளது. பாஜகவின் ஊழல்கள் பலவகை. அதில் இது ஒரு புதுவகை” என்று ‘நியூஸ் லாண்டரி’ கட்டுரையை மேற்கோள் காட்டித் தன் X பக்கத்தில் பதிவு போட்டிருக்கிறார் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி.jothimani tweetஏற்கனவே பாஜகவுக்கு நன்கொடை வழங்கி வந்த 6 நிறுவனங்கள் அமலாக்கம் மற்றும் வருமானவரித் துறை சோதனைகளுக்குப் பிறகு பாஜகவுக்கு அதிக அளவில் நன்கொடைகள் வழங்கியுள்ளன.

2018-19 மற்றும் ‘2022-23 நிதியாண்டுகளுக்கு இடையில், இத்தகைய சோதனைகள் நடைபெற்ற 30 நிறுவனங்கள், பாஜகவுக்கு 335 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்துள்ளது. இதே காலகட்டத்தில் பாஜகவுக்கு 187.58 கோடியை வழங்கிய 23 நிறுவனங்கள், பாஜக ஆட்சிக்கு வந்த 2014 முதல் சோதனை நடத்தப்பட்ட ஆண்டு வரை எந்த நன்கொடையும் வழங்கவில்லை.

மேலும், இவற்றில் குறைந்தது 4 நிறுவனங்களாவது சோதனை நடத்தப்பட்ட 4 மாதங்களுக்குள் பாஜகவுக்கு 9.05 கோடி நன்கொடை அளித்துள்ளன.

 ஏற்கனவே பாஜகவுக்கு நன்கொடை வழங்கி வந்த 6 நிறுவனங்கள் சோதனைக்குப் பிறகு பாஜகவுக்கு அதிக அளவில் நன்கொடைகள் வழங்கியுள்ளன.

அதே சமயம் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் பாஜகவுக்கு நன்கொடை அளித்த 6 நிறுவனங்கள், எதாவது ஒரு ஆண்டில் நன்கொடை அளிக்க தவறி விட்டால், அந்த ஆண்டே அந்நிறுவனங்களின் மீது அமலாக்கம்/ வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டுள்ளது என்றும் நியூஸ் லாண்டரி கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

 தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற தொகை ரூபாய் 16, 518 கோடி. இதில் பாஜக மட்டும் பெற்றிருக்கும் தொகை ரூபாய் 6,565 என்பது கவனிக்கத் தக்கது.

- எழில்

Pin It