மூத்த பத்திரிகையாளர் இரா.ஜவஹர் ‡ பேராசிரியர் சி.பூரணம் இணையரின் மகன்  பாலு, இ.தாமோதரன் ‡ த.தனலட்சுமி இணையரின் மகள் ரம்யா ஆகியோரின் திருமணம், சென்னை பெரியார் திடலில், 06.02.2011 அன்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது. இந்திய பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு தலைமையில், மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் அ.சவுந்தரராசன், கவிஞர் இளவேனில், தேசிய முரசு ஆசிரியர் கோபண்ணா, பேரா.சுப.வீரபாண்டியன், நக்கீரன் கோபால், பத்திரிகையாளர் காமராஜ், ரா.கண்ணன், வழக்.பொற்கொடி உள்ளிட்ட பலரும் மணமக்களை வாழ்த்திப் பேசினர். எந்தவித சடங்குகளும் இன்றி, தாலி இல்லாமல் கொளுத்த ராகுகாலத்தில் மணமக்கள் மாலை மாற்றிக் கொண்டு, உறுதி ஏற்று, கையயாப்பம் இட்டதுடன் திருமண நிகழ்வுகள் முடிந்தன. நூற்றுக்கு நூறு முழுமையான, சாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணமாக நடைபெற்ற இந்த மணவிழா, பெரியார் திடலில், நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்றது மிகவும் பொருத்தமானது என்று வாழ்த்திப் பேசிய அனைவரும் குறிப்பிட்டனர். அனைவரையும் தோழமைக் குடும்பத்தினரும், மதுரை  எஸ்.கண்ணனும் வரவேற்றனர். இறுதியாக மணமக்கள் ஏற்புரை ஆற்றினர்.

Pin It