1983ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஈழத்தமிழர் ஆதரவு இன்று தமிழ்நாட்டில் மீண்டும் உணர்ச்சி வெள்ளமாய் ஓடிவருவதைக் காண்கின்றோம். அனைத்துக் கட்சியினரும், பொதுமக்களும் இன்று தங்களின் ஈழ ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, மாணவர்களின் போராட்டம் இங்கு பேரலையாய் எழுந்துள்ளது.

fe_2003_mn_02_cnil_360_copy

ஒரே ஒரு வேறுபாடு.அன்றைய தினம்,மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் தலைமையில் இயங்கிய இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியும்,ஈழப் போராட் டத்திற்கு ஆதரவாய் இருந்தது. இன்றோ, திருச்சிப் பகுதியில், காங்கிரஸ்முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகரன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர், உருட்டுக் கட்டை களால் நம் மாணவர் களைத் தாக்குகின்ற அளவுக்குத் தமிழினப் பகைவர்களாக மாறிவிட்டனர்.காங்கிரஸ் கட்சியைத் தவிர,பிற கட்சிகள் அனைத்தும்,ஈழ ஆதரவுப் போராட்டத்தில் தங்களை முழு மையாக இணைத்துக் கொண்டுள்ளன என்றும் அவசரப்பட்டுச் சொல்லிவிட முடியாது. அ.தி.மு.க., பா.ஜ.க., முதலான கட்சிகள் போடும் இரட்டை வேடம் வெளிப் படையாகவே தெரிகின்றது.

தி.மு.கழகம் சார்பில்,டி.ஆர்.பாலு கொண்டுவந்த ஈழ ஆதரவுத் தீர்மானத்தை, 07.03.2013 அன்று, இந்திய நாடாளுமன்றத்தில், திரிணாமூல் காங்கிரஸ் தவிர பிற கட்சிகள் அனைத்தும் ஆதரித்துப் பேசின.திரிணாமூல் கட்சியின் இன்னொரு உறுப்பினர்,நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஆதரித்துப் பேசினார்.ஆக,தி.மு.க.கொண்டு வந்த தீர்மானம்,இந்திய நாடாளுமன் றத்தையே நான்கு மணி நேரம் கட்டிப்போட்டு வைத்திருந்தது.தமிழ்நாட்டில் மட்டுமே பேசப் பட்டுக் கொண்டிருந்த ஈழத்தமிழர் சிக்கலை, இந்தியா முழுவதும் பேச வைத்த கட்சி,தி.மு.க.தான் என்பதை இனி எவரும் மறுக்க முடியாது.ஆனால் அன்று ஆதரித்துப் பேசிய அனைத்துக் கட்சிகளும்,அதே நிலைப்பாட்டில் தொடர்கின்றன என்று கூறிவிட முடியாது.

சுதந்திரமான பன்னாட்டுப் புலனாய்வு தேவை என்பதையும்,ஈழத்தில் நடைபெற்றது இனப்படுகொலை என்பதையும் உள்ளடக்கிய, வலிமையான திருத்தங்களை அமெரிக்கத் தீர்மானத்தில் இணைக்க வேண்டுமென, இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து, அதனை அமெரிக்காவிடமும், இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று, 18.03.2013 அன்று சென்னைக்கு வந்து தங்களைச் சந்தித்த நடுவண் அமைச்சர்கள் மூவரிடமும் தி.மு.க.தலைமை அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்தது.அவற்றை ஏற்காவிடில், அமைச்சரவையிலிருந்தும், ஐ.மு.கூட்டணியில் இருந்தும் தி.மு.க. வெளியேறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

தி.மு.க.வின் அழுத்தத்தால் ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து, இந்திய அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி,தி.மு.க.வின் கோரிக்கையை முன்வைத்தது.7ஆம் தேதி, நாடாளுமன்றத்தில் தி.மு.க.தீர்மானத்தை ஆதரித்துப் பேசிய பா.ஜ.க.,இந்தியப் பொதுவுடைமைக் கட்சி ஆகியன அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதனை எதிர்த்தன.

நாடாளுமன்றத்தில்,பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களுள் ஒருவரான யஷ்வந்த் சின்ஹா, ஈழத்தை ஆதரித்துப் பேசினார். ஆனால், அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், ‘இனப்படுகொலை’ என்பதை இணைக்க மறுப்புத் தெரிவித் தார். அவ்வாறே, இந்தியப் பொதுவுடை மைக் கட்சி சார்பில்,நாடாளுமன்றத்தில் அக்கட்சி உறுப்பினர் லிங்கம் ஆதரித்துப் பேச, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், அக்கட்சியின் சார்பில் பங்கேற்ற குருதாஸ் தாஸ் குப்தா எதிர்த்து உரையாற்றினார்.“இது தி.மு.க.விற்கும், காங்கிரசுக்கும் இடையிலான பிரச்சினை.இதனை ஏன் நாடாளுமன்றத் தீர்மானமாய்க் கொண்டு வர வேண்டும்?” என்று கேட்டார்.

பாருங்கள்...ஈழத்தமிழர் சிக்கலை, மிக எளிதாக, தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிச் சிக்கலாக ஆக்கிவிட்டனர். மாணவர்களிடையே பேசும்போது, ஈழத்தமிழர்களுக்காகப் பொங்கி எழுந்து பேசுகின்றார் ராஜா(சி.பி.ஐ),ஆனால் அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தில் அடக்கி ஒடுக்கி பேசுகின்றார், அதே கட்சியைச் சேர்ந்த குருதாஸ் குப்தா.

இந்திய அளவில் இந்தக் கட்சிகள் போடும் அதே இரட்டை வேடத்தைத் தான்,தமிழக அளவில் அ.தி.மு.க. செய்கின்றது.

நாடாளுமன்ற அவைகளில் ஈழத்திற்கு ஆதரவாக அ.தி.மு.க.உறுப்பி னர்கள் உரையாற்றினர்.ஆனால்,இனப்படுகொலை குறித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும் என்று தி.மு.க. கோரியபோது, அதனை ஜெயலலிதா தன் அறிக்கையில் ஏளனம் செய்தார். ‘பாராளு மன்றத் தீர்மானம் பயன ளிக்கக் கூடியது அல்ல’ என்றார். மார்ச் 20ஆம் நாள் நாளேடுகளில் வெளியாகியிருந்த அவருடைய அறிக்கையின் ஒரு பகுதி,

“கருணாநிதி,இந்திய நாடாளுமன்றத்தில் இதைப்போன்ற ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று சொல்லியுள்ளார்.....இலங்கைக்கு எதிராக இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது என்பது தற்போதைய சூழலில் உறுதியான பயன் அளிக்கக் கூடியது அல்ல. மாறாக, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் தான் தீர்மானங்களுக்குத் திருத்தங் கள் கொண்டுவரப்பட வேண்டும்.அதுவும் உடனடியாகக் கொண்டு வரப்பட வேண்டும். அவ்வாறு செய்யாமல், இந்திய அரசைக் காலம் கடக்க வைத்து, இலங்கைத் தமிழர்கள் முதுகில் குத்தும் நடவடிக்கையாகவே தி.மு.க.தலைவர் கருணாநிதியின்இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.”(தினத்தந்தி-20.03.2013-பக்.2)என்று கூறுகிறது.

64392_558896004131710_18701_350பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது பயனற்றது,இலங்கைத் தமிழர்கள் முதுகில் குத்தும்நடவடிக்கை என்று அறிக்கைவிட்ட ஜெயலலிதா ,பத்தே நாள்களுக்குள்தமிழ்நாடு சட்டமன்றத்தில்தீர்மானம் நிறைவேற்றுகின்றார். இது என்ன முரண்? பாராளுமன்றத் தீர்மானமே பயனற்றது என்றால்,சட்ட மன்றத் தீர்மானம் எப்படிப் பயனுள்ளதாக இருக்கும்?ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைக் குழுவில்,திருத்தங்களுடன் தீர்மானம் கொண்டு வருவதுதான் பயன்தரும் என்கிறார் ஜெயலலிதா.அதற்காக ஜெயலலிதா ஏதேனும் ஒரு முயற்சியை முன் எடுத்துள்ளாரா?ஒரு துரும்பை யாவது கிள்ளிப் போட்டுள்ளாரா?அதற்கான அனைத்து முயற்சி களையும்,தி.மு.க.வும்,டெசோ அமைப்பும்தானே முன்னெடுத்துள்ளன? ஐக்கிய நாடுகள் அவை மனித உரிமைக் குழுவில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளின் தூதுவர்களையும், தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில், டெசோ உறுப்பினர்களும், தி.மு.கழக நாடாளுமன்ற உறுப்பினர் களும்தானே சென்று சந்தித்தனர்?

செயத்தக்க எவற்றையும் செய்யாமல், டெசோ மாநாட்டிலும், டெசோ கூட்டங்களிலும் நிறைவேற்றப் பட்ட அதே தீர்மானங்களைச் சட்ட மன்றத்தில் முன்மொழிந்து நிறைவேற்றி விட்டு,ஈழ மக்களுக்குத் தான் மட்டுமே பாடுபடுவதாகக் காட்டிக் கொள்ள முயற்சி செய்கிறார் ஜெயலலிதா.

அந்தத் தீர்மானங்கள் நிறைவேற்றப் படும் போது, தி.மு.க. உறுப்பினர்கள் திட்டமிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். தீர்மானங்களை விளக்கிப் பேசாமல், தி.மு.க.வையும், தலைவர் கலைஞரையும் தேவையில்லாமல் தாக்கிப் பேசிவேண்டுமென்றே அவையில் ஒரு சலசலப்பை உருவாக்கியுள்ளார்.அவற்றைத் தி.மு.க.உறுப்பினர்கள் எதிர்த்தபோது, காவலர்களைக் கொண்டு வெளியேற்றி உள்ளார். ஈழத்தமிழருக்கு ஆதரவான தீர்மானங்கள் நிறைவேற்றப் படும்போது,தி.மு.க.வினர் அவையில் இல்லை என்னும் நிலையை உருவாக்கவே இச்சதி நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

இவை குறித்தெல்லாம்,பெரும்பான் மையான ஊடகங்கள் ‘அலசல்’கட்டுரைகளை/ செய்திகளை வெளியிடுவ தில்லை.தி.மு.க.விற்குள் இல்லாத சண்டைகளை எல்லாம் இருப்பது போல் காட்டுவதற்கு மட்டும் படாத பாடுபடுகின்றன.

நாடே இருண்டு கிடக்கிறது. விலைவாசி உயர்ந்து கொண்டே போகிறது. கொலை, கொள்ளை நடைபெறாத நாளே இல்லை.இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் கடுமையான தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட உள்ளது. இவை அனைத்திலிருந்தும் மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியில்தான், ஜெயலலிதாவின் செயல்பாடுகள் உள்ளன என்பதை அரசியல் அறிந்தோர் அறிவார்கள்.


தமிழ்நாடு போக்குவரத்துத் துறையில்,200கோடி ரூபாய் ஊழல் செய்யப்பட்டுள்ளது குறித்துச் சான்றுகளுடன்,பேச முனையும் தளபதி ஸ்டாலினுக்கு அனுமதி மறுக்கப்படுகின்றது. அது குறித்து ஊடகங்களும் கவலைப்படவில்லை.

தி.மு.க. ஆட்சியில் ஊழல், ஊழல் என்று உரத்துப் பேசிய ‘சுத்தமான’ காந்தியவாதிகள் எல்லாம் இப்போது வாய்மூடிக் கிடக்கின்றனர். மாநிலங்களவையில் தனக்கு ஓர் இடத்தை அம்மா ஒதுக்கிக் கொடுத்துவிட மாட்டாரா என்ற நப்பாசையில் ஒரு சிவப்புத் துண்டுத் தலைவர், ஜெயலலிதாவை வானுயரப் பாராட்டுகின்றார்.


வறுமையில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர்.அவர்களின் பிணங்களை அடுக்கி மேடையாக்கி, அந்த மேடையில் ஜெயலலிதாவுக்குப் பாராட்டு விழா நடக்கிறது.
சிலரைச் சில காலம் ஏமாற்றலாம்.எல்லோரையும்,எல்லா நேரத்திலும் ஏமாற்றிவிட முடியாது.

Pin It