சல்லிக்கட்டு வீரவிளையாட்டு என்று பலரும் கூறிவருகின்றனர். சல்லிக்கட்டு வீரவிலையாட்டு மட்டுமல்ல, வேளான் தொழிலுக்கான பயிற்ச்சிக்களமுமாகும்.

எல்லோரும் ஜல்லிக்கட்டு என்று கூறுகின்றனர். ஒரு தமிழறிஞரான க.ப.அறவாணன் அவர்களே சந்தொலைக்காட்சித் தருக்க மேடையில் ஜல்லிக்கட்டு தமிழ்ச் சொல்லில்லை, வட மொழிச் சொல் வீரத்தைக் காட்ட வேண்டும்மென்றால் சிங்கத்துடன் மோத வேண்டியது தானே என்று குதர்க்கம் பேசுகிறார். சல்லிக்கட்டின் தோற்ற மூலமும் அவர் அறியவில்லையென்பது வியப்பைத் தருகிறது.

jallikattu 359சல்லம் என்றல் நார் என்று பொருள். கற்றழையிலிருந்து எடுக்கப்படும் நாருக்சேல்லி நார் என்று பெயர். வேளாண்குடி மக்கள் இந்த நாரைக் கொண்டு மாடுகளுக்கான மூக்குக் கயிறு கழுத்துக் கயிறு, பிடிகயிறு , தாம்புக் கயிறு எனப்பல கயிறுகளித் தயாரித்துப் பயன்படுத்தி வருகின்றனர்.

பொங்கல் விழாவில் மாட்டுப் பொங்கலன்று இந்த நாளைக் கொண்டு ஒரு சன்னமான மணிக்கயிறு செய்து அதில் நாரைவரிசையாகத் தொங்கல் பின்னிகாளையின் கழுத்தில் கட்டுவர். ஏறுதழுவல் அன்று காளையைத் தொழுவில் விடுவர். ஏறுதழுவும் வீர்ர்கள் காளையத் தழுவி அதை அடக்கியதற்கு அடையாளமாக காளையின் கழுத்தில் கட்டியிருக்கும் சல்லித் தொங்கலை அவிழ்த்து விட வேண்டும். ஏறு தழுவும் விழாவில் இந்தச் சல்லி வெற்றியின் சின்னமாக விளங்குவதால் தழுவும் விழாவில் இந்தச் சல்லி வெற்றியின் சின்னமாக விளங்குவதுல் இதற்கு சல்லிக் கட்டு என்னும் பெயர் வழங்கலாயிற்று.

நெசவுத்த்றியில் நீளமாகத் தயாரிக்கும் பாவிலிருந்து உடுத்தும் அளவிற்கு வெட்டியெடுப்பது வெட்டியாகும். வழக்கு நடையில் இது நீட்டல்விகாரம் பெற்று வேட்டி என்றயிற்று அதைப் போல சிறுதாக துண்டிக்கப்படுவது துண்டானது, துணிக்கப்படுவது துணியானது துணி, துண்டு, வேட்டி, எல்லாமே காரணப் பெயர்களாகும். நல்ல தமிழ்ச் சொற்களாகும்.

தமிழில் வடசொல்லைக் கலந்து பேசுவதை தமிழ்ச்சொல்லில் வடவெழுத்தைக் கலந்து பேசுவதை உயர்வாக எண்ணுபவர்கள் வேட்டி என்னும் சொல்லில் வடஎழுத்துன(ஷ்) சேர்ந்து வேஷ்ட்டி என்கின்றனர். அதைப் போல சல்லிக்கட்டு என்னும் நல்லதமிழ்ச் சொல்லிலுள்ள முதலெழுத்தை நீக்கி விட்டு வடவெழுத்தான ஜவைச் சேர்த்து ஜல்லிக்கட்டு என்கின்றர். அது தவறு. சல்லிக்கட்டு என்பது தான் சரியாகும்.

இனிவேளாண் தொழிலில் விலங்குகளின் பயன்பாடுவந்த வழி முறையினைப்பார்ப் போம். ஒருநிலத்தைச் சமன்படுத்தி புல் பூண்டுகளை அகற்றி நிலதில் புழுதியெடுத்தோ, சேறெடுத்தோ பயிர் செய்ய ஏற்றப் பக்குவத்திற்குக் கொண்டுவா, ஆள் உழைப்பு அதிகம் கால விரையமும் அதிகமாவதை உணர்ந்தமனிதன் விலங்குகளில் பசுவினத்தையும், எருமையினதையும் தேர்ந்த் தெடுத்தான். தன்னிலும் பத்து மடங்கு வலிமையும் உடற்பருமனுங் கொண்ட விலங்கைப் பயன் படுத்தினால் பத்து பேர் சேர்ந்து செய்யக் கூடிய வேலையை, நேரத்தை ஒருவிலங்கைக் கொண்டு முடித்து விடலா என்ற முடிவிற்குவந்தான். இது அன்றைய மனிதன் அன்றைய அறிவியல் கண்டுபிடிப்பாகும்.

Pin It