ஐரோப்பியர்கள் அமெரிக்கக் கண்டத்தை அறிந்தபின், அதைக் கைப்பற்ற, அங்கு வாழ்ந்த தொல்குடிமக்களை என்னென்ன கொடுமைகள் செய்ணிது அழித்தார்களோ, அதைவிடப் பன்மடங்குக் கொடுமைகள் செய்து ஈழத்தமிழர்களை அழித்து ஈழ மண்ணைக் கைப்பற்றி வருகிறார்கள் சிங்களர்கள்.

தமிழினத்தின் தாயகத்தை வன்கவர்தல் செளிணிய சிங்கள இனம் நடத்திய போரில் அந்த இனம் இப்பொழுது வெற்றியடைந்துள்ளது. அந்த வெற்றியை நிரந்தரமாக்கிக் கொள்ள,தமிழினத்தின் மக்கள் தொகையைப் பெருமளவில் குறைப்பது, தமிழர் தாயகப் பகுதிகளை சிங்களர்களிடம் ஒப்படைப்பது என்ற நிகழ்ச்சிநிரல் தீட்டிச் செயல்படுகிறது இலங்கை அரசு.

இதற்கான வேலைத்திட்டம் பீக்கான் திட்டம் என்ற பெயரில் 2005 - ஆம் ஆண்டு நார்வே தலைநகர் ஆஸ்லோவில் 20 நாட்டுப் பேராளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் தீட்டப்பட்டது. அது 2011 - வரைக்கான வேலைத்திட்டம். 2009 மே மாதத்துடன் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவடைந்துவிட்டதாக சிங்கள அரசு அறிவித்தாலும் பீக்கான் திட்டப்படி “துடைத்தழிக்கும்” வேலைத்திட்டம் இப்பொழுது தொடர்கிறது. அது 2011 வரை செயல்படும். பீக்கான் திட்டப்படி போர்க்காலம் 2006 முதல் 2009 வ¬ர் ஈழத்தமிழரைத் துடைத்தழிக்கும் நடவடிக்கைக் காலம் 2009 -2011.]

ஈழத்தில் எவ்வளவு மனித உரிமை பறிப்பு நடந்தாலும் உலகம் அதிராது. காரணம் உலகக் கருத்தினை உருவாக்கும் முகாமையான நாடுகள் பல பீக்கான் திட்டம் வரையப்பட்டபோது அதில் பங்கெடுத்தவை. அப்படியே இலங்கையின் மனித உரிமைப்பறிப்பை எதிர்த்தாலும், அது வலிக்காமல் கடிப்பதாகவே இருக்கும். அல்லது இலங்கை மீது ஆதிக்கம் செலுத்துவதில், பீக்கான் திட்ட நாடுகளுக்குள் உள்ள போட்டி, அது தொடர்பாக இலங்கை அரசு மீது ஏற்படும் எரிச்சல் ஆகியவை காரணமாக வரம்புக்குட்பட்டதாக இருக்கும்.

அண்மையில் சிங்களப் படையாட்கள் தமிழ் இளைஞர்கள் 9 பேரை எப்படிச் சுட்டுக் கொல்கிறார்கள் என்ற காணொளிப்படத்தை பிரிட்டன் 4-ஆம் அலைவரிசைத் தொலைக்காட்சி காட்டியது. அது 25.08.2009 அன்று இணைய தளங்களில் வெளியிடப்பட்டது.

அக்காட்சியைப் பார்க்கும்போது நெஞ்சம் பதறுகிறது. அக்காட்சி தாங்கமுடியா மனவலியையும், சொல்லொணா மானக்கேட்டையும் நமக்குத் தருகிறது. கடந்த சனவரி மாதம் சிங்களப்படை தமிழ் இளைஞர்களைப் பிடித்திருக்கிறது. அவர்கள் விடுதலைப் புலிகளா, இல்லையா என்ற வேறுபாடு சிங்களப்படைக்கு எப்போதுமே இருந்ததில்லை. அவர்களைப் பொறுத்தவரை தமிழ் இளைஞர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளே!

பிடிபட்ட இளைஞர்களை என்னென்ன வகைகளில் சித்திரவதை செய்திருப்பார்கள் என்பதை அவர்கள் சுட்டுக்கொன்ற முறை நம்மை ஊகிக்கவைக்கிறது. முழு அம்மணமாக்கி, முதுகுப்பக்கம் இழுத்துக் கைகளைக் கட்டி, பூட்ஸ் காலால் உதைத்து, ஒரு பொட்டல் வெளியில் உட்காரவைத்து, சிங்களத்தில் இழிசொற்கள் பேசி, அவர்களின் முதுகுக்குப் பின்னாலிருந்து எந்திரத்துப்பாக்கியால் சுடுகிறார்கள். ஒன்பது முறை துப்பாக்கி ஓசை கேட்கிறது. ஒவ்வொரு ஓசையின்போதும் ஒரு தமிழ் இளைஞன் பின்புறமாகச் சாளிணிகிறான்; அந்தப் பொட்டல் வெளியில் பிணங்கள் இறைந்து கிடக்கின்றன.  இதுதான் காணொளிக்காட்சி.

இந்தக் காட்சியை வெளியிட்டது இலண்டன் தொலைக்காட்சி. இருந்தும் உலகம் அதிரவில்லை. நாடுகளின் நாக்குகள் ஊமையாகிவிட்டன. ஏன்? அமெரிக்க ஆக்கிரமிப்புப் படையினரை, எதிர்த்துப் போராடிய ஈராக்கியர்களை அமெரிக்கப்படை சிறைப்பிடித்து அபுகிரைப் சிறையில் அடைத்தது. அமெரிக்கப் பெண் காவலர் ஒருவர், ஒரு கைதியை நிர்வாணமாக்கி சங்கிலி போட்டு இழுத்துச் செல்வதும், அடிப்பதும் படமெடுக்கப்பட்டு வெளிவந்தது. நாகரிக உலகம் அதிர்ந்தது. மனித உரிமைக்குரல் ஓங்கி ஒலித்தது. நிலக்கோளமெங்கும் பரவிக்கிடக்கும் தமிழர்களும், அந்தக்காட்டு மிராண்டித்தனத்தைக் கண்டித்தனர்.

ஆனால் சிங்கள ஆக்கிரமிப்புப் படை தமிழ் இளைஞர்களை  சட்ட நெறிகளுக்குப் புறம்பாக இவ்வளவு கேவலமாக இழிவுப்படுத்தி, சுட்டுக்கொல்வதை அபுகிரைப் சிறைக்கொடுமை அளவுக்கு உலகம் கண்டிக்காதது ஏன்?

ஆக்கிரமிக்கப்பட்டபோதும் கூட ஈராக்கைத் தனிநாடாக அமெரிக்கா அங்கீகரித்தது. ஈராக்கியர்களைக் கொண்ட ஒரு பொம்மை அரசை நிறுவிக்கொண்டது. அரபுகளுக்கு நாடுகள்  பல இருக்கின்றன. அவற்றிலிருந்து கண்டனக்குரல் எழுகிறது. அவற்றோடு உறவுவைத்துள்ள மற்ற நாடுகள் கண்டனக்குரல் எழுப்புகின்றன. இந்தப் பின்னணியில் மனித உரிமை அமைப்புகளின் குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன.

பத்துக்கோடித் தமிழர்கள் உலகில் வாழ்ந்தும் நமக்கொரு நாடில்லை; ஓர் அரசு இல்லை. தமிழினத்தின் தலைமைத் தாயகமாக உள்ள தமிழ்நாடோ இந்தியாவில் காலனியாக இருக்கிறது. தமிழ்நாட்டு மீனவர்கள் 450 பேரை நமது கடற்பரப்பில் வந்து சிங்களப்படை அவ்வப்போது சுட்டுக்கொன்ற போதும் உலகம் இந்த மனித அவலத்தைக் கண்டுகொள்ளவே இல்லை. காரணம் நாம் அடிமை, நமக்கொரு நாடில்லை. தமிழக எல்லைதாண்டி நமது கூக்குரல் வெளியே கேட்காது.

சிங்கள அரசு ஈழத்தில் வைத்துள்ள அகதி முகாம்களில் 3 லட்சம் தமிழ் மக்கள் இருப்பதாகச் சொன்னார்கள். இப்பொழுது 2,80,000 பேர் இருப்பதாகச் சொல்கிறார்கள்; எஞ்சியோர் என்ன ஆனார்கள்? எப்படிச் செத்தார்கள்?  ஐ.நா. மன்றமோ, உலக நாடுகளோ இதுபற்றி கேட்கின்றனவா? இந்த மனித உரிமைச்சிக்கலில் இவை தலையிடுகின்றனவா? இல்லை.

சிங்களவெறி அரசு, கேள்வி கேட்பாரற்று, உலகச் சட்ட நெறிகளுக்கும் நீதிமுறைகளுக்கும் புறம்பாக மனிதக் கொலைகளையும், மனித உரிமைப்பறிப்புகளையும் அன்றாடம் கட்டவிழ்த்து விடுகிறது. வதை முகாம்கள் குறித்து வரும் செளிணிதிகள், நெஞ்சத்தில் நெருப்பை அள்ளிக் கொட்டுகின்றன. சிங்களர்களிலும் மிகச் சிலராக மனித நேயர்கள் உள்ளனர்; அவர்கள் உயர்ந்த பீடங்களிலும் இருக்கிறார்கள். தமிழ் மக்களுக்கு இழைக்கும் கொடுமைகளைப் பார்த்து, அவர்களும் கவலைப்படுகிறார்கள் ஒன்றும் செளிணியமுடியாமல் கைபிசைந்து நிற்கிறார்கள்.

அந்நாட்டின் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சரத் என் சில்வா தம் பதவிக்காலத்தின் இறுதி நாட்களில் 2009 சூன் மாதம் ஈழத்தமிழர் வதை முகாம்களைப் போளிணிப்பார்த்து விட்டுக் கண்ணீர் அறிக்கை வெளியிட்டார். “அந்த முகாம்களில் உள்ள கொடுமைகளை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அவ்வளவு கொடுமை. இலங்கையில் பெரும்பான்மை இனம் சிறுபான்மை இனம் என்று இரு இனங்கள் கிடையாது. ஒரே இனம் தான் இருக்கிறது என்று கூறுவது பச்சைப் பொய்” என்று குறிப்பிட்டார். இலங்கையில் ஒரே இனம்தான் இருக்கிறது, பெரும்பான்மை சிறுபான்மை இனம் கிடையாது. எல்லோரும் இலங்கைக் குடிமக்கள் என்று ராசபட்சே பேசியதில் உள்ள மோசடியை அம்பலப்படுத்தும் வகையில் நீதிபதி இவ்வாறு கூறினார். முகாமில் நடப்பது இன ஒடுக்குமுறைதான் என்பதை உறுதிப்படுத்தினார்.

கடந்த 13.08.2009 அன்று மதுரை, வந்த இலங்கை மனித உரிமைப் போராளியும் சிங்கள இனத்தவருமான திரு நிமல்கா பெர்ணாண்டோ அம்மையார் நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டுக்குக் கொடுத்த செவ்வியில் கூறியவை, கூரீட்டியாக நெஞ்சைக் குத்துகின்றது. “மனித நாகரிகம் அங்கு கிழிக்கப்பட்டுள்ளது. இளம்பெண்கள், அவர்களின் குடும்பத்தார் அல்லாத வேறு ஆண்களுடன் கூடாரங்களில் தங்கும்படி கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இவ்வாறு கூறுவது இலங்கையின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் (அட்டர்னி ஜெனரல்) சித்த ரஞ்சன் டி சில்வா. “மக்கள் திரள் மீது குண்டுபோட்டு பலரைக் கொன்று மற்றவர்களை அடைக்கலமுகாம் நோக்கி வலுவந்தமாக விரட்டி வந்தது இலங்கைப் படை. அப்படி வந்தவர்கள் அப்போது போட்டிருந்த அதே உடைகளைத் தான்  இப்போதும் போட்டுக்கொண்டுள்ளார்கள். மாற்றுத் துணி கிடையாது. பற்பசையும் பிரசும் கூட அவர்களுக்கு அரிய பொருட்களாகிவிட்டன. தஞ்சமடைந்த மக்களை அகதிகளாக நடத்தவில்லை. போர்க் குற்றவாளிகளாகவு நடத்துகிறார்கள். மக்களின் கதியே இது வென்றால் அங்கு கொண்டுவரப்பட்ட போராளிகளின் கதியைக் கற்பனை செளிணிது பார்க்கவேண்டும்.”

“அந்த மக்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பாமல் அடைத்து வைத்திருப்பதற்கு கேலிக்குரிய காரணமொன்றைச் சொல்கிறார்கள். விடுதலைப் புலிகள் நிலத்தில் வெடிக்காத கண்ணி வெடிகள், அதே பாதையில் திரும்பிப் போகும்போது மட்டும் வெடிக்குமா?” - நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் 14.08.2009.

இவையெல்லாம் சிங்கள நாட்டின் மனித உரிமைப் போராளி நிமல்கா அம்மையார் கூறியவை. ஆனால் ஆரியச் செல்வன் இந்து என். ராம் திராவிடவேள் முதலமைச்சர் கருணாநிதியும் இலங்கையில் சுமுக நிலை திரும்பிவிட்டது என்று கூறுகிறார்கள். மேலைநாட்டு மனித உரிமை அமைப்புகளைக் கூட அனுமதிக்காத ராசபட்சே இந்து என். ராமை வதைமுகாம்களைப் பார்க்க அனுமதித்தார். அவர் தமது ஏட்டில் இந்த வதை முகாம்களில் எல்லா வசதிகளும் இருப்பதாகவும் தமிழ் நாட்டு அகதிமுகாம்களை விட மேலான தன்மையில் அவை நடத்தப்படுவதாகவும் எழுதினார்.

சென்னையில் சர்வக்ஞர் சிலை திறப்பு விழாவில் பேசிய முதலமைச்சர் கருணாநிதி இலங்கையில் “எல்லாம் சுமுகமாக முடிந்துவிட்ட பின் தமிழ்நாட்டில் மீண்டும் மீண்டும் சிலர் அப்பிரச்சினையைக் கிளப்புகிறார்கள்” என்று குற்றம் சாட்டினார்.

இந்த வதைமுகாம்களில் இளைஞர்களை விசாரணைக்கென்று அழைத்துச்சென்று சுட்டுக் கொல்கிறார்கள். மருந்தும் மருத்துவ சிகிச்சையும் இன்றி அன்றாடம் பலர் சாகிறார்கள். காலில் செருப்பணிய அனுமதிப்பதில்லை. தமிழ் மக்கள் காகித அட்டைகளையும், பிளாஸ்டிக் தாள்களையும் காலில் செருப்பாக கற்றிக்கொண்டு நடமாடுகிறார்கள். காலரா, பொக்குளிப்பான் போன்ற தொற்று நோளிணிகளும் மஞ்சள்காமாலை போன்ற கொடிய நோளிணிகளும் மக்களையும் குறிப்பாக குழந்தைகளையும் தாக்கி அன்றாடம் பலர் சாகிறார்கள். அந்த வதைமுகாம்களில் ஆண்களும் பெண்களும் திறந்தவெளி யில்தான் குளிக்க வேண்டும். பெண்கள் சேலைகளைக் கட்டி மறைவை உண்டாக்கிக் கொண்டால் அந்த சேலைகளை அகற்றிவிடுகிறார்கள் சிங்களப் படையாட்கள். இளம் பெண்கள் திறந்த வெளியில் குளிக்கும்போது

அவர்களைக் காமக்கண்கொண்டு பார்கிறார்கள் அவர்கள் இதனால் பல பெண்கள் குளிப்பதில்லை. அந்தக் காவல் படையாட்கள் உணவருந்தப் போகும் வேளை பார்த்து பெண்கள் குளிக்கிறார்கள்.

போராளிகளுக்கான முகாம்  என்ற இடத்தில் 9000 இளைஞர்களையும் 2000 இளம் பெண்களையும் வைத்துள்ளார்கள். அனைவரும் விடுதலைப்புலிகள் என்ற கணக்கில் வைத்து, இவர்களை மிக மோசமாக நடத்துகிறார்கள்.

இலங்கையில் எல்லாம் சுமுகமாக முடிந்துவிட்டது என்று கூறும் கருணாநிதி தமிழ்நாட்டிலிருந்து மனித உரிமைப் போராளிகள் குழு ஒன்றை அந்த முகாம்களைப் பார்வையிட்டு வர ஏற்பாடு செளிணிய வேண்டும். இந்த மனித வதை அனைத்திற்கும் இந்தியா, சீனா ஆகிய நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு இலங்கைக்குத் துணை நிற்கின்றன. இந்தியா தனது படையை ஈழத்திற்கு அனுப்பியுள்ளது. கண்ணி வெடிகளை அகற்றுவதற்காக என்ற போர்வையில் படை அனுப்பியுள்ளது.

முகாம்களில் அடைபட்டுள்ள தமிழர்களின் ஊர்களில் 500 சிங்களக் குடும்பங்களை இலங்கை அரசு குடியமர்த்தியுள்ளது. ஒரு குடும்பத்திற்கு ஐந்து லட்ச ரூபாளிணி உதவித்தொகையும் அரசு தந்துள்ளது. இதுபோல் உதவிகளைப் பெற்றுக்கொண்டு ஈழ மண்ணில் குடியேற வருமாறு சிங்களர்களை இலங்கை அரசு அழைக்கிறது. அப்படிக் குடியேறும் சிங்களர்கள் தமிழர்களின் நிலங்களை எத்தனை ஏக்கர் வேண்டுமானாலும் வளைத்து வேளாண்மை செய்யலாம்.

வேளாண் தொழில்நுட்ப வல்லுனர்களை இந்தியா அனுப்பிவைக்கிறது. முகாம்களில் உள்ள ஆண்களும் பெண்களும் அந்நிலங்களில் கூலி வேலை செளிணிய அனுமதிக்கப் படுவார்கள். தங்கள் சொந்த நிலத்தில் சிங்களனுக்குக் கூலியாட்களாகத் தமிழ்மக்கள்!

இவ்வாறு நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் புதிய வேளாண் பண்ணைகள் சிங்களர்களால் உருவாக்கப்படுகின்றன. வேளாண் பண்ணை அமைக்கத் தமிழ்நாட்டிலிருந்தும் சிலரை இலங்கை அரசு அனுமதித்து உள்ளதாகச் செய்திகள் வருகின்றன. ஈழக்கடல் பகுதியில் பரம்பரையாக மீன்பிடிக்கும் தமிழர்களை அனுமதிக்காமல் சிங்கள மீனவர்களை அனுமதிக்கிறார்கள்.

அவர்களுக்கு 1200 மீன் பிடிப்படகுகளை இலவசமாக இலங்கை அரசு வழங்கியுள்ளது. இந்தியா உட்பட வெளிநாடுகள் ஈழத்தமிழ் அகதிகள் மேம்பாட்டுக்காக என்று கொடுக்கும் நிதி  இந்தவகையில் தான் செலவழிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இன உணர்ச்சி வளர்ந்து வருவதை மடைமாற்றவும் முறியடிக்கவும் இருவகை உத்திகளை இந்தியா வகுத்துள்ளது.

ஒன்று விடுதலைப்புலிகள் ஆதரவு, தமிழின உணர்ச்சி ஆகியவற்றைக் கொண்டுள்ள  அமைப்புகளிடையே பிளவுகளை உண்டாக்குவது. இன உணர்ச்சியைத் தேர்தல் அரசியலுடன் இணைத்து விடுவது இதே நோக்கில் புதிய குழுக்கள் பலவற்றை உருவாக்குவது.

இரண்டாவது வெளிமாநிலத் தவர்களைப் பெருவாரியாகத் தமிழகத்தின் கல்வி, வேலை, தொழில், வணிகம் ஆகியவற்றில் திணித்து தமிழ்நாட்டுக் குடிமக்களாக அவர்களை மாற்றி விடுவது. தமிழக மக்கள் தொகையில் இப்பொழுது சற்றொப்ப தமிழர்கள் 85 விழுக்காடு உள்ளனர். இந்த விகிதத்தை 50 விழுக்காடு தமிழர்கள் 50 விழுக்காடு வெளியார் என்று மாற்றி கலப்பின மாநிலமாக தமிழ் நாட்டை ஆக்குவது. இந்த இருபெரும் உத்திகளை இப்போதைக்கு வகுத்துள்ளார்கள்.

அடுத்து தமிழின உணர்வு அமைப்புகள் மீது கைது உள்ளிட்ட அடக்குமுறைகளை ஏவிவிடுவது. தமிழின உணர்வாளர் களிடையேயும் தமிழ் மக்களிடையேயும் கருத்தியல் குழப்பங்களை ஏற்படுத்துவதற்காக போலித் தமிழ்த் தேசிய அமைப்புகளையும், போலி இடதுசாரி அமைப்புகளையும் இறக்கிவிடுவது. தமிழ்நாட்டில் இவற்றையெல்லாம் எதிர்கொண்டுதான் தமிழ்த் தேசியப்புரட்சி வளரும்!

ஈழத்தைப் பொறுத்தவரை, மறுபடியும் போராளிகள் வருவார்கள் . அவர்கள் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் போல் பெருந்தன்மையுடனும், கருணையுடனும் நடந்து  கொள்ள மாட்டார்கள். தமிழ்ப் பொதுமக்கள் சிங்களரால் தாக்கப்பட்டால், அதற்கு ஈடாகவோ அல்லது அதைவிடக் கூடுதலாகவோ சிங்களப் பொதுமக்களுக்கு சேதத்தை உண்டாக்குவார்கள். இதை நாம் விரும்பவில்லை. ஆனால் இத்திசையைத்தான் ஈழ விடுதலைக்கு எதிர்காலம் விட்டுவைத்துள்ளது. இதற்கு இன்னும் சிறிதுகாலம் பிடிக்கும். இலங்கைக்கு எந்தெந்த நாடுகள் உதவுகின்றனவோ அந்தந்த நாட்டுக்கும் எதிராக உள்ள நாடுகளிடம் ஈழ விடுதலைப் போராளிகள் உறவு வைப்பார்கள். ஈழ விடுதலைப் போராட்டம் அப்போது தனிமைப்பட்டிருக்காது.

இலங்கையில் சிங்களக் கட்சிகளிடையே முரண்பாடுகள் முற்றி மோதல்கள் அதிகரிக்கும். போர்ப் பொருளாதாரத்தில் திவாலாகிப் போன இலங்கை அரசை எதிர்த்து மக்கள் கலகம் செளிணிவார்கள். சிங்கள இனம் தனக்குத்தானே முரண்பட்டு சீரழியும். வரலாறு கொடுக்கும் வாளிணிப்பைப் பயன்படுத்தி, சிங்கள இனவெறியை எதிர்த்து ஈழம், சிங்களம் என்ற இரு தேசத்தை ஏற்றுச் செயல்படக்கூடிய புதிய அரசியல் தலைமை சிங்களர்களிடையே செல்வாக்குப் பெற்றால் சிங்கள இனத்திற்கும் எதிர்காலம் இருக்கும்!.

இரட்டை வேடதாரிகள்

இன அழித்தலுக்கு எதிரான இந்தியர்கள் என்ற அமைப்பின் சார்பில் ஜெகத் கஸ்பர் ஆகஸ்ட் 28 அன்று சென்னையில் செளிணிதியாளர் கூட்டம் நடத்தினார். அதில் தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களுக்கு முறையே தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் செளிணிதிக் குறிப்புகள் தரப்பட்டன.

ஆங்கிலத்தில் தரப்பட்ட குறிப்பில்  Independent Enquiry into the War Crimes committed by Both the Parties of the Conflict (இலங்கையில் மோதலில் ஈடுபட்ட இருதரப்பினரும் இழைத்த போர்க்குற்றங்கள் மீது விசாரணை வேண்டும்) என்று புலிகளையும் விசாரணைக்குட்படுத்தும் கோரிக்கையை வைத்தனர். ஆனால், தமிழில் அது இல்லை. இன்னொருபுறம், தமிழ்க் குறிப்புகளில் இலங்கையில் தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ள முகாம்களைப் பார்வையிட இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவை இந்திய அரசு அனுப்ப வேண்டும் என்று இருந்தது. அது ஆங்கிலத்தில் இல்லை.

ஆனால், இரு மொழிக் குறிப்புகளிலும் பிரதமருக்குக் கடிதம் எழுதிய கலைஞரை பாராட்டத் தவறவில்லை. தில்லிக்கு ஒரு முகமும், தமிழருக்கு ஒரு முகமும் காட்டுகிறார் ஜெகத் கஸ்பர்.

நிர்வாணக் கொலைகளை சிங்கள இராணுவம் நிகழ்த்தியிருப்பது படங்களோடு வெளியானதைத் தொடர்ந்து தமிழகத்தில் மீண்டும் எழுந்து வரும் கொந்தளிப்பை மட்டுப்படுத்தவும் மடை மாற்றவும் இந்திய அரசின், கருணாநிதி ஆட்சியின் கையாளாக ஜெகத் கஸ்பர் செயல்படுவது தெளிவாகிறது. இவரது இரட்டை வேடத்தை தமிழின உணர்வாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

Pin It