(மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திருமதி மேதா பட்கர்தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் 8.2.2015 இல் ஆற்றிய உரை)

இயற்கை வளங்களையும் இம்மண்ணையும் பாது காக்கப் போராடி வரும் இளம் தோழர்களே, தலைவர் களே, நான் இன்று காலை சிதம்பரம் தொடங்கி திருவாரூர், மன்னார்குடி, அம்மாப்பேட்டை, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் வளர்ச்சி எனும் பெயரில் நடத்தப் பட்டுவரும் சுரண்டல்கள், பேரழிவுகளைக் கண்டு வந்தேன்.  வழி முழுதும் மக்கள் திரண்டு தமது வாழ்வா தாரங்கள் அழிக்கப்படுவதால் தமது வாழ்வு கேள்விக் குறியாக்கப்பட்டு வருவது பற்றிக் கூறுவதையும் கேட்டு வந்தேன்.

இலங்கைத் தமிழர்களின் வீரம் செறிந்த போராட்ட வரலாறு கூறும் இந்த முள்ளிவாய்க்கால் முற்றத்தைக் காண்பதிலும், இங்கு நடைபெறும் மக்களின் வாழ்வுரிமை மீட்பதற்கான மீத்தேன் எரிவாயு எதிர்ப்பு இயக்கத்தில் பங்கேற்பதிலும் பெருமிதம் கொள்கிறேன்.  போரின் போது இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப் பட்டதைக் கண்டிக்கிறோம். அவர்கள் தமது சொந்த இடங்களில் மீண்டும் விரைவில் குடியமர்த்த புதிய இலங்கை அரசு விரைந்து வழி வகுக்க வலியுறுத்துகிறோம். இலங்கையில் வாழும் தமிழர்கள் சம உரிமை பெறக் குரல் கொடுக்கிறோம்.

நாடு முழுவதும் ஏழை, எளிய மனிதர்களின் வாழ் வாதாரங்கள் வளர்ச்சி எனும் பெயரில் சிலரது இலாபத்திற்காக அழிக்கப்படுகின்றன.  கடலை நம்பி வாழும் மீனவர்கள், காடுகள்- _ மலைகளில் வாழும் பழங்குடி மக்கள், விவசாயிகளின் வாழ்வாதாரங்கள் பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளின் நலனுக்காகப் பலியிடப்பட்டு வருகின்றன. எனவே மக்களின் அடிப்படைத் தேவைகளான நீர், நிலம், காடுகள், காற்று ஆகியனவற்றைக் காப்பது நமது கடமையாகிறது. 

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் இவற்றைக் காப்பதற்காகப் போராடினார். தஞ்சை மண்ணை அழிக்கவரும் மீத்தேன் எடுப்புத் திட்டத்தை எதிர்த்த போராட்டத்தில் தன் இறுதி மூச்சு வரைப் பங்கேற் றார்.  அவரது வழியில் அவரது இலட்சியத்தைக் காக் கும் போராட்டத்தில் முன்னிற்பது நமது கடமை

வளர்ச்சி எனும் பெயரில் மத்திய - மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் திட்டங்கள் மக்கள் நலனுக் கும் அரசியல் சாசன உறுதிமொழிக் கும் எதிரானவை.  அரசியல் வாதிகள், ஆட்சியாளர்கள் தமது குறுகிய நலனுக்காக நாட்டின் வளங்களைத் தாரை வார்த்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 150 இலட்சம் ஹெக்டேர் நிலம் உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகளின் நலனுக்காக மக்களிடமிருந்து பறிக்கப் பட்டுள்ளது. வளர்ச்சி என்ற ஏமாற்று முழக்கத்துடன் ஏழை மக்களின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்படுகின்றன. 

methane assembly 600

மக்களின் கருத்தும் சனநாயகத் திட்டமிடலும் புறக்கணிக்கப்படுகிறது. திட்டங்கள் மக்கள் நலனுக்கு எதிராக மக்கள் மீது திணிக்கப்படு கின்றன. இத்தகைய மக்கள் விரோதத் திட்டங்கள் தஞ்சையில் மட்டு மல்ல நாடு முழுவதும் நிறை வேற்றப்பட்டு வருகின்றன.  ஒரிசாவின் போஸ்கோ, கர்னாடகா - சத்திஷ்கரில் நிலக்கரிச் சுரங்கங் கள், நந்திகிராமம், சிங்கூரில் டாடா வின் கார் கம்பெனி, கிருஷ்ணா பள்ளத்தாக்கில் அம்பானியின் எண்ணெய்க்  கிணறுகள் என நாடு முழுவதும் ஏழை மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு பெரு முதலாளிகளுக்கு அள்ளி வழங்கப் படுகின்றன. 

அரசு வன்முறையுடன் மக்களிட மிருந்து நிலம் பறிப்பதை நாம் எதிர்த்துப் போராட வேண்டும். நாம், தொழிற்சாலைகள் வேண் டாம், அணைகள் வேண்டாம், முன்னேற்றம் வேண்டாம் என மறுப்பவர்கள் அல்லர்.  மக்கள் நல னுக்கான, மக்கள் மையத் தொழில் கள், வளர்ச்சிகள், திட்டமிடல் வேண்டுமென்கிறோம்.  பாரம்பரிய மாக மீன் பிடித்து வாழ்ந்துவரும் இலட்சக்கணக்கான மீனவர்களின் உரிமைகளைப் பலியிடும் வகையில் பெரும் ட்ராலர்கள் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு அனுமதிக்கப்படுகின்றன. வளர்ச்சித் திட்டங் களின் கழிவுகளால், அணு உலை களால் கடல் வளம் பாதிக்கப்படு கிறது.

மோடி தனது 100 நாட்கள் ஆட்சியில், நாடு நாடாக ஓடி, நாட் டைப் பன்னாட்டு முதலாளிகளுக்கு விற்று வருகிறார்.  எவரும் தொழில் தொடங்கலாம்.  தேவையான நிலங் களை மக்களிடமிருந்து பறிக்கவும் காடுகளைத் தாரை வார்க்கவும் சட்டங்களை மாற்றுகிறார்கள்.  ‘புல்லட் ட்ரெயின்’ 330 கிலோ மீட்டர் தொலைவு அமைக்க சர்வ தேசக் கம்பெனியுடன் ஒப்பந்தம் போடுகிறார். இரயில் பாதையின் இருபுறமும் பல கிலோ மீட்டர்கள் நிலங்களையும் அவர்களுக்கு வழங்க முன் வருகிறார். நோம் சாம்ஸ்கி சொல்வதுபோல் இயற்கையைப் பணயம் வைத்து லாபம் பெறுகிறது முதலாளித்துவம் எனச் சாடுகிறார்.

தஞ்சை மண்ணின் வளமான விளைநிலங்கள் மீத்தேன் எரிவாயு எடுக்கக் கையகப்படுத்தப்படுவது பற்றி  மக்கள் கூறினர்.  இயற்கைக் குப் பாதிப்பில்லாத நீரியல் விரிசல் மூலம் மீத்தேன் வாயு எடுக்கப்படும், என்கின்றனர் அதிகாரிகள். ஆனால் உண்மையில் இது இயற் கையை முடமாக்கும் திட் டமே. மிக அதிகமான நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்து, பல இரசாயனங்களை மனித உடலில் ஊசி போடுவது போலப் பாறைகளிடையே செலுத் தப் போகிறார்கள்.  இது விஷ ஊசி போடுவதற்குச் சமமானது.

பல இடங்களில் மாசுபட்ட நீரைக் குட்டைகள் போல் தேக்கி வைத்துள்ளனர். அதைக் குடித்தால் கால்நடைகள் இறக்கும்.  அதைப் பரிசோதனை செய்ய எடுக்க முயன்றதையும் தடுக்கப் பார்த்தனர். அதையும் மீறி ஒரு பாட்டிலில் அந்தத் தண்ணீரை எடுத்துள் ளோம். அதை ஆய்வுக்கு அனுப்பு வோம்.  அந்த நீர் பாய்ச்சப் பட் டால் விளைச்சல் அழிந்து நிலம் பாழாகும்.

2,000 மீட்டர் வரைத் துளையிடுவோம் எனும் ஓ.என்.ஜி.சி. அதி காரிகள் 4,000 மீட்டர் வரைத் துளையிடுவதைக் கண்டோம்.  பொதுத்துறை நாட்டு நலனுக்குச் செயல்படுவதை நாம் எதிர்க்க வில்லை.  ஆனால்  ஓ.என்.ஜி.சி. தனியார் கம்பெனியுடன் திருவாரூ ரில் ஒப்பந்த மிட்டுள்ளதன் பதிவு களைக் கண்டபோதும், அதிகா ரிகள் அதை மறுத்தனர்.

மீத்தேன் எடுப்பின் பாதிப்பு களை நியூயார்க் பகுதியில் அனுபவித்ததால், அமெரிக்காவில் அதற்குத் தடை விதித்துள்ளார்கள்.  ஆக்டோபஸ் போல நச்சுப்பற் களை நாற்புறமும் விரிந்து விளை நிலங்களை விழுங்கத் தனியார் கம்பெனிகள் அனுமதிக்கப்படுவதை நாம் எதிர்ப்போம்.  நம்மாழ்வார் தனது இறுதி மூச்சு வரை இந்த  நச்சுவாயு எடுப்பை எதிர்த்துப் போராடினார். பெண்கள் சக்தி மாபெரும் சக்தி. எனவே பெண்கள் இயற்கையைக் காக்கும் இப் போராட்டத்தில் முன்னிற்க வேண்டும்.

பல இடங்களில் எடுக்கும் பணியிடங்களுக்கு அருகிலிருந்த பல நூற்றாண்டுகள் தொன்மை வாய்ந்த வரலாற்றுச் சின்னங்களும், கோவில்களும் கடுமையான பாதிப் புக்குள்ளாகி வருவதைக் கண் டோம்.  இது ஒரு பண்பாட்டு அழிப்புமாகும்.  நேற்று ப. சிதம்பரம் செய்ததை இன்று அருண் ஜெட்லி செய்கிறார்.  இவர்களிடையே எவ்வித  வேற்றுமையும் இல்லை.

பல இடங்களில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அனு மதியின்றி எண்ணெய் உறிஞ்சும் பணிகள் நடந்து வருகின்றன.  வேறொரு இடத்திற்குப் பெறப் பட்ட அனுமதியை அதிகாரிகள் எங்களிடம் காட்டினர். அதைக் கேள்வி கேட்டபோது  விழித்தனர்.  வேறு சில இடங்களில் காலா வதியான அனுமதிகளை வைத்துக் கொண்டே இப்போதும் இப்பணிகள் நடப்பதையும் கண்டோம்.  தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இத்தகைய சட்டமீறலுக்குத் துணை போகிறது. 

பழைய பாளை யத்தில் துரப்பணப் பணிக்கான முழுமையான ஆய்வு நடத்தப் படவில்லை. மக்கள் கருத்துக் கேட்பு என்பதும் பெயரளவில் போலியாகவே நடத்தப் படுகிறது.  மக்களின் எதிர்ப்பு பதிவு செய்யப் படுவதில்லை.  அலட்சியப்படுத்தப் படுகிறது.  இது சனநாயகத்திற்கும் அறிவியலுக்கும் எதிரான அரசு அராசகமே. சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடுகள் சரிவர மேற்கொள்ளப் படவில்லை. 

பஞ்சாயத்து உரிமைச் சட்டத் தின்படி எந்த ஒரு இடத்திலும் எந்தப் பணியைத் தொடங்கவும், அந்தப் பஞ்சாயத்து, கிராம சபை யின் ஒப்புதல் பெற வேண்டு மென் பது மதிக்கப்படவில்லை. தஞ்சை மண்ணின் விவசாயம் காக்கப்பட வேண்டும். முல்லைப் பெரியாற்றில் தமிழக விவசாயிகள் நீர் உரிமை காக்கப்பட வேண்டும். 

ஆனால் அதே வேளையில் இங்குள்ள நிலத் தடி நீர் வீணாக உறிஞ்சி எடுக்கப் படுவதையும் இரசாயனங்களால் மாசுபடுத்தப் படுவதையும் நாம் எப்படி அனுமதிக்க முடியும்? திட்டத்திற்கான ஒப்பந்த காலம் (3.1.2015 அன்று) முடிந்த பின்னும் அனுமதி நீட்டிப்புப் பெறாமல் பணிகள் நடந்து வருவது, சட்ட அவமதிப்பாகும்.  இதை எதிர்த்து மக்கள் தொடர்ந்து போராட்டங் களில் ஈடுபட்டு வருகின்றனர். 

மக்களின் வாழ்வுரிமையை, வாழ் வாதாரங்களைத் தனியார் இலாபத் திற்காகத் திறந்துவிட மத்திய அரசு பல புதிய சட்டங்களை நாடாளு மன்றத்திற்கு வெளியே அறிவித்து வருகிறது.  இதை எதிர்த்து மதச் சார்பற்ற, சோசலிச அரசியல் கட்சி கள் ஒன்றுபட்டுப் போராடுவது இன்றைய தேவை.  பன்னாட்டு முதலாளிகளின் வளர்ச்சிக்கான, ஆனால்  மக்களுக்கு எதிரான சட்டங்கள் தடுக்கப்பட வேண்டும்.  நமது வாக்குகளால் தேர்ந்தெடுக்கப் பட்ட சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் நலனுக்காகவும் உரிமைகளுக்காகவும் துணைநிற்க வற்புறுத்தி அவர் களின் ஒப்புதல் கையெழுத்தை மக்கள் வாங்க வேண்டும்.  சிறு விவசாயிகளைப் பாதுகாக்கவும் நிலமற்ற விவசாயக் கூலிகளுக்கு நிலம் வழங்கவுமான நிலச் சீர்திருத் தம் அமுலாக்கப்பட வேண்டும்.

பெரு முதலாளிகளுக்குச் சாதகமான மக்களின் நிலங்களை வன்முறையால் அரசே கையகப் படுத்தி வழங்குவது, காடுகளையும், அரசு நிலங்களையும் பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளுக்குத் தாரை வார்ப்பது போன்ற மக்க ளுக்கு எதிரான தேச விரோதப் போக்கை மோடி அரசு கைவிட வேண்டுமென வலியுறுத்தும் விவசாயிகள் தொழிலாளர்கள் சமூக ஆர்வலர்கள் ஆகியோரைக் கொண்ட மாபெரும் ஆர்ப்பாட்டம் தலைநகர் டெல்லியில் பிப்ரவரி 24 அன்று நடைபெற உள்ளது. அதில் மீத்தேன் எதிர்ப்புப் போராட்டம் நடத்திவரும் குழுக்களையும் தலைவர்களையும் பங்கேற்க வேண்டுகிறேன்.

இந்தியா முழுவதும் வளர்ச்சி என்ற பெயரில் அரசு நிலங்களைத் தனியாருக்கு வழங்கும் அரசின் தவறான வளர்ச்சிக் கொள்கையை எதிர்த்துப் போராடத் திட்டமிட்டு வருகிறோம். விவசாய நிலத்தைப் பலியிடும் வளர்ச்சி வேண்டாமென நீங்கள் நடத்திவரும் 1 கோடிக் கையெழுத்து இயக்கத்திற்கு  மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்ட மைப்பு ((NAPM  முழுமையான ஆதரவு வழங்குகிறது. 

நாட்டின் வளர்ச்சிக்குத் தொழில்களும் அவற்றிற்கான மின்னாற்றலும் தவிர்க்க முடியாத தேவைகளே. அவற்றிற்காக ஏழை எளிய மக்களின் நலன்களை அரசு பலியிடக் கூடாது. மாற்று மின் னாற்றல் உற்பத்திக்கான ஆய்வுகள் முயற்சிகள் தேவை. காற்று, கதிரவன் ஒளி, கடலலை போன்ற வற்றின் மூலமான புதுப்பிக்கும் திறன் கொண்ட ஆற்றல் உற்பத் திக்கு முதலிடம் தர வேண்டும்.

நர்மதா பள்ளத்தாக்கை நீரில் மூழ்கடிக்கும் பெரிய அணைகளின் கட்டுமானப் பணி பல ஆயிரம் கோடிகள் செலவு செய்தும் திட்டமிட்ட காலத்திற்குப் பின்னும் தொடர்கிறது. மக்களை வாழ்விடங்களிலிருந்து விரட்டி சொந்த நாட்டிலேயே அகதி களாக்கும் போக்கு நாடு முழுவதும் நடக்கிறது.  மீனவர்களின் வாழ்வுரி மையைப் பறிக்கும் கூடங்குளம் அணு உலையை எதிர்த்துவரும் மீனவ மக்களின் போராட்டத்தை நாம் வெற்றி பெறச் செய்ய வேண் டும்.

ஈரோடு மாவட்டம், பெருந் துறை சிப்காட் வளாகத்தில் கொக் கோ கோலா கம்பெனி மென்பான ஆலை அமைக்க 75 ஏக்கர் நிலத் தைக் கையகப் படுத்துவதை ஏரி, குளங்களைத் தூர்த்து நில வணிகம் செய்வதை எதிர்த்து மக்கள் நடத்தி வரும் போராட்டங்களை நாம் ஆதரிக்க வேண்டும்.

நீர், நிலம், காற்று, காடுகள் யாவும் மக்களுக்கு உரிமையான மக்கள் உடமைகள். அவற்றைத் தனியார் நலனுக்காகப் பலியிடும் திட்டங்களை வளர்ச்சி எனும் போர்வையில் அரசுகள் திணிக் கின்றன.  இந்த வளர்ச்சி வாத நடவடிக்கைகளைத் தடுக்கவும் மக்கள் உடமைகளை, உரிமை களைப் பாதுகாக்கவும் தொடர்ந்து உறுதியுடன் ஒன்றுபட்டுப் போரா டுவோம்.  போராடுவோம் வெற்றி பெறும் வரை போராடுவோம்.!

Pin It