அர்ப்பணிக்கிற மனமிருந்தால்
நிச்சயம் வரலாம்
நீங்கள் என் வீட்டிற்கு

என் குழந்தைகளோடு
அறைகளை கலைத்துப் போடலாம்

கரித்துண்டுகளால்
விரும்பு மட்டும்
சுவரோவியங்களை எழுப்பலாம்

புத்தகங்களை
மின் விசிறியின்
படபடப்புக்கு விட்டு விட்டு
பரந்த முற்றத்தில்
குட்டிக்கரணம் அடிக்கலாம்

உச்சபட்ச டெசிபலில்
ஹே வென கத்தலாம்

அழுது புரண்டு
சண்டையிட்டு
வேண்டிய பொருளை
கைக்கொள்ளலாம்

சூழலை மறந்த
உலகொன்றில்
கவலைகளற்று உலாவலாம்

நீங்களும்
குழந்தைகளாவீர்களெனில்
நிச்சயம் வரலாம்
நீங்கள்
என் வீட்டிற்கு

- விஜிநந்தன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.