ஓடும் பஸ் ஓட
சாதா பஸ் வரும் வரை
வாடி நின்றனர் மக்கள்

கடைத் தெருவில்
மூச்சு வாங்கினேன்
எதையும் வாங்க முடியாமல்!

வேண்டியது வரவில்லை
வேண்டாதது வருகிறது
குழாயடிச் சண்டை

இருவருக்குள் தெருச்சண்டை
மரங்களாய்
மனிதர்கள்

பிக்பாக்கெட் அடித்ததில்
பாதியை அடித்தது
போலீஸ்.

- எஸ்.குழந்தைசாமி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.