ஈகோ

சில சமயங்களில்,

பேசுவதற்கு விஷயமில்லாவிட்டாலும்

பேசிக்கொண்டே இருப்போம்

மணிக்கணக்கில்....

பல சமயங்களில்

பேசுவதற்கு விஷயமிருந்தும்

பேசாமலே இருப்போம்

நாட்கணக்கில்!

பேசுவதும், பேசாததும்

எங்களுக்குள் பிரச்சனையில்லை.

யார் முதலில் பேசுவதென்பதே

எங்களுக்குள் எப்போதும் பிரச்சனை!

 

முரண்

எல்லாப் பொருட்களும்

வீதியோரத்து விளம்பரப் போர்டுகளில்

பளிச்சென்று மின்னுகின்றன

வெளிச்சத்தில்!

வீடுகளில்...

இருக்கிற பொருட்களின்

இடம் தெரியாமல்

தடவிக் கொண்டிருக்கிறோம்

இருளில்!

-இரா.ஜோதிராம்.

 

Pin It