பயணம் முடிந்த இடம் நிற்கிறேன் -எதிரே
பாழ்வெளி கிடந்து சிரிக்குதடி -மேலும்
எட்டியோர் அடிவைக்க நிலம் இல்லை
இலக்கோ இதுவரை கண்ணில் படவில்லை
ஒருநாள் இருநாள் விரயம் ஜீரணம் செய்யலாம்-இங்கு
வாழ்வே விரயம்! - என்ன கணக்கடி சிங்கி

பயணம் முடிந்த இடத்திலொரு கொடியை நடு-சிங்கா
பயணமே வெற்றிதான்! கொண்டாடு!
நடக்கப்பயந்து இருந்தவர் மட்டும்தான் -என்றும்
வாழ்வைத்தொலைத்தவர் தோழா!

-ஜெயந்தன் எழுதிய கவிதை

சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் ஜெயந்தனுக்கு அஞ்சலி செலுத்தி  அவர் எழுதிய கவிதையை  இங்கு தருகிறோம்.

Pin It